Friday, June 04, 2004

முன்னோட்டம் வழங்கு

நிரல்தரு மதலையோரே, நண்பர் பாரா வலைப்பதிவு கண்டு இவண்வந்து தெளிவீர்.
நாள்செயல் தொகுப்பின் முன்னோட்டம்:

( (திங்கள் நம்மவன் நண்பன் துணைவன் எதிரி ஏய்ப்பன் வஞ்சன் வாய்மையன் கொஞ்சன் கெஞ்சன் )
(செவ்வாய் கலை எழுத்து கொலை கோப்பு வலை உலை உழவு களவு விலை )
(புதன் கத்தரித்துஒட்டு கருத்துப்பொறுக்கு வெல்லும்வழிசேர் வெருட்டிப்பிழை
அண்டிச்சமன்செய் ஆதரவுதவிர் பயன்பலகூறு இயல்மனம்மற ஈகைகாட்டிவை )
(வியாழன் அறிவியல் துறவியல் கரவியல் தெருவியல் விதியியல் சதியியல் மதியியல் ரதியியல் கதியியல்)
(வெள்ளி அறியாதவைபேசு அறிந்தவைகூசு மறந்தவைபோல்வாழ் மாற்றோர்வழிஇகழ் தெளிந்தவைமறை
தேறாதனபரப்பு எளியோர்வழக்கழி ஏனையோர்வினைசெய் அயல்கிளைசேர் )
(சனி தேசம்சுரண்டு தெற்கிருந்துவாழ் நடிகர்மனம்பயில் நாடுதாவிஆள் கொடிகொண்டுதட்டு
கோடிகள்பதுக்கு சுற்றம்உயர்த்து சூழல்நசி செப்புவதுசெயல்மற)
)

நிரல்தரு மதலையர் மேற்புகன்ற சொற்றொடர் அஃதுபோன்றே கம்பைல் செயும்வித்தை கற்றறிந்தீராயின் தனிமடல்

தொடர்பேற்று சர்வர்சைடு பணியொன்று வழங்குவன் அடியேன்.

4 comments:

Muthu said...

அருள் ..
உங்கள் நடை மிக அழகாக இருக்கிறது ..
தொடரட்டும் உங்கள் சேவை ...
பாராட்டுக்கள் மற்றும் நன்றிகள்

icarus prakash said...

ஆமா இன்னாதா நடக்குது இங்கே? :-) ஒண்ணுமே பிரியிலியே?

அருள் செல்வன் கந்தசுவாமி said...

நன்றி முத்து.
ப்ரகாஷ், நம் பாராவின் எதிர்வரும் வராந்திர வலையேற்பை எளிதாக்க, அதை தானியக்கப்படுத்த (automate) அடியேனின் சிறுமுயற்சி. தற்கால நிரல்தரு மதலையர் சீ++,சீ#,ஜாவா மட்டுமே அறிசிறுவர். இம்முதுமொழி அறியமட்டாரென்பதால் கடைவரி எழுதவேண்டியாயிற்று. :-)

writerpara said...

;-)