Wednesday, January 05, 2005

நேர்வழியின் பயங்கள்

நான் தவறு செய்யவில்லை
என்கின்றன என் புத்தகங்கள்
தவறவில்லை என்கின்றனர் நண்பர்கள்
தவறேதும் நான் அறியேன்
அரசாங்கம் சொல்கிறது தினமும்
டீவீயும் ரேடியோவும்
திரைப்படங்களும் சுவரொட்டிகளும்
உறுதிப்படுத்துகின்றன
நான் தவறு செய்யவில்லை
மதம் சொல்கிறது
செய்தித் தாள்கள் முதல்பக்கத்தில்
கட்டமிட்டு அறிவிக்கின்றன
பிழைஅறியாதவன் நான்
சுற்றமும் கடைவீதியில்
கற்ற விளம்பரமும்
தலைவனும் தனித்த ஒவ்வொருவனும்
அமைதிப் படுத்துகின்றனர்
தவறு செய்யவில்லை நான்
தனிமையில் புல்தளிர்களினூடே
கால்நிரவிப் போகையில்
ஆம் ஆம் ஆம் என
நம்பத் தவிக்குது மனம்

(மார்ச், 1985)

2 comments:

இரா. செல்வராசு (R.Selvaraj) said...

அருள், என்னவோ நல்லா இருக்குற மாதிரி தான் இருக்கு. ஆனா, சரியாப் புரியல்லியே. எதச் சொல்ல வர்றீங்க?

arulselvan said...

:-) அப்பெல்லாம் சின்ன வயசா. நாம செய்யரது சரியா தப்பான்னு ஒரு பதைப்பு இருக்கும். இப்ப?