Saturday, March 05, 2005

0503

0503
-----------
முடிவு எடுப்பதும், மறுப்பதும்
மேசையில் கோளமாய் உறங்கும்
காலத்தை எழுப்பின பின்.
ஒன்றொன்றாய்த் தொங்கும் சட்டைகளைக்
கலைத்துத் தேடி அடைந்தேன் வாக்குறுதியை.
மின்சரடுகளூடே அலையும் சிலந்தியைத் தவிர்த்து
அமிழ்த்த, அறையைப் பொய்யால் நிரப்புகிறது
வெளிச்சம். மற்றவர் நிர்ணயித்த வடிவங்களில்
சதுர ரொட்டிகளைச் சாப்பிடுவது போதாதா.
புகைதான் எரிகிறது போல் காட்டும் சூரியனை
அறைந்து மூடினேன். திருப்பத் திருப்ப எதிர்க்காமல்
சுழலும் நீர்க்குழாயின் இணக்கக் குமிழ்.
கடமையைச் செய்கிறதா அது. இல்லை
சவரக் கத்திபோல் தன்முழு பலமறியாது
முடி கொய்கிறதா. எவர் கொடுக்கும் தைரியத்தில்
நிற்கிறது இந்த வாசற் கதவு. வியந்துகொண்டே
நடந்தேன். சுண்ட மறுத்த நாணயங்களால்
படர்ந்திருக்கிறது நான் வந்த வழி.

2 comments:

-/பெயரிலி. said...

/மற்றவர் நிர்ணயித்த வடிவங்களில்
சதுர ரொட்டிகளைச் சாப்பிடுவது போதாதா?/
nice

/சுண்ட மறுத்த நாணயங்களால்
படர்ந்திருக்கிறது நான் வந்த வழி./
or dice (6-choices instead of two ;-))

அருள் செல்வன் கந்தசுவாமி said...

தாயக்கட்டைகளையும் ... 12. :-)