Friday, April 01, 2005

ஆத்மாநாம் நடத்திய 'ழ' கவிதை இதழைப்பற்றி நண்பர்கள் கேட்டிருக்கலாம். என்னிடம் பழைய இதழ்கள் சில தப்பித்து மீதமிருக்கின்றன.
அதிலிருந்த்து ஒரு கவிதை:


உடன்பாட்டின் நிதரிசனம்
-------------------------------------------

பேச்சின் உக்கிரத்தினால் உருகும்
பனியை கையைமடக்கிக் குவித்து
ஏந்த முயன்றாலும்
மாடிப்படியிலும் வரப்பிலும்
காட்டும் ஜாக்கிரதை
மறையும் சூரியனைக்கண்டு
தூரத்து இருட்டில் ஒளிந்து கொள்ளும்
மணிக்கட்டிற்க்குப் பயப்படும் கோழையாய்
வேகமாக ஸைக்கிளை மிதிக்கும்
கெஞ்சும் கால்களை மறுத்து
அனாதையாய் ஒதுங்கி
முன்நீளும் நிழலை
மனதிற் குறியாய்க் கொண்டு
புகையாய் மறையும் நேரத்தை
சபித்துக் கொண்டேன்
பாறையின் இடுக்குகளில்
ஒளிசிந்தும் மின்மினிகளுக்கும்
எதிரியின் கொண்டாட்டம்
ஒரு சோகமே


-- சத்யன்.
(ழ, செப்-நவம், 1979)

1 comment:

சுரேஷ் கண்ணன் said...

அன்பு அருள்செல்வன்,

இயலுமாயின் 'ழ' சிற்றிதழைப் பற்றி ஒரு கட்டுரை எழுதுங்களேன். படிக்க ஆவலாயிருக்கிறேன்.