போப் இறந்ததற்கு, இந்திய அரசு அரசுமுறை மூன்று நாட்கள் துக்கம் காக்கிறது.
புதிரான செய்தி இது. எதற்காக நமது நாடு அரசுமுறையில் துக்கம் காக்க வேண்டும்? அவர் ஒரு மதத்தலைவர் மற்றும் ஒரு நாட்டின் தலைவர் என்பது இருந்தாலும் அதற்கும் நமது இந்திய அரசுக்கும் என்ன சம்பந்தம். இது தேவையில்லாத ஒன்று என்பதே என் கருத்து. எந்த மதத் தலைவரும் ஜனநாயக முறைப்படி தெரிவு செய்யப் படுவதில்லை. அவரகள் இறந்தால் ஜனநாயக, மதச்சார்பற்ற அரசுகள் ஏன் துக்கம் காக்கவேண்டும்? அவர் நம் நாட்டைச் சேர்ந்தவர் என்ற ஒரு சாக்கு கூட இல்லை.
11 comments:
அரசுமுறை துக்கம்,
வாழை இலையெடுக்க ஜெயிலில் ஒரு ஆபிஸர், நாயகத்துக்கு பிறந்த நாள் லீவு
இதெல்லாம் இல்லாம ஜனநாயகமா?
ட்சுனாமியினை தேசிய துயரமாக அறிவிக்காததும், அதற்கு தேசிய துக்கநாளாய் விடுமுறை விடாததுமான இந்திய அரசு, கடைந்தெடுத்த அடிப்படைவாத கிறிஸ்துவத்தை முன்னெடுத்து செல்லும் அமெரிக்க அரசாங்கத்திற்கு ஜால்ரா போடுவதை தவிர வேறென்ன செய்யும் (அது சரி, இத்தாலியிலிருந்து வாடிகன் பக்கம் தானே ;-))
நாம் இதில் குற்றம் காணவில்லை.
இது ஒரு துன்பியல் நிகழ்வு; உலகெங்கும் உள்ள RC கிறித்தவர்களின் துக்கம்.
அந்த அளவில் மட்டுமே இதை இந்திய அரசாங்கம் கருதி, இந்தியாவில் உள்ள கிறித்தவர்களின் துக்கத்தில் பங்கெடுத்துக் கொள்கிறது.
நாம் இதில் குற்றம் காணவில்லை.
ஜெயலலிதா இரங்கல் அறிவிக்கவில்லை, அதிலும் நாம் குற்றம் காணவில்லை.
http://lldasu.blogspot.com/2005/04/blog-post.html
மக்கள் வரிப் பணத்திலும்-அமெரிக்க-ஐரோப்பிய நிதிகளிலும் தின்றுகொழுத்த போப்புக்கு இந்தியா துக்கம் தெரிவிப்பது அமெரிக்காவையும்-அம்மணி சோனியா அவர்களையும் தாஜா செய்யவே!84 வயது வரை வாழ்ந்த மக்களைக் கொல்ல உடந்தையா இருந்த மனிதர் செத்தது துன்பியல் நிகழ்வு?
சும்மா அறுக்காதே நண்ப!
ப.வி.ஸ்ரீரங்கன்
ஆமாம் இத்தாலி க்கு வாடிகன் பக்கம் தான்.இந்து க்கு ஆதரவாக செயல்பட்டால் அது மதச்சார்புடைய அரசு.கிறிஸ்தவனுக்கு எனில் அது மதச்சார்பின்மையை காக்கும் அரசு.
போப் மதத்தலைவர் மட்டுமல்ல, வாட்டிகன் எனும் தனி இராச்சியத்தின் ஆளுனரும் கூட. பிற நாடுகளின் ஜனாதிபதிகள்/ஆளுனர்கள் இறக்கும்போது இந்தியா துக்கம் அனுஷ்டிக்கிறது. உதாரணத்துக்கு சமீப காலத்தில் இறந்த அமீரகத்தின் பிரெசிடெண்டுக்காக இந்தியா மூன்று நாள் துக்கம் அனுஷ்டித்தது.
புரோட்டோகால் படி இந்திய அரசும், பிற நாட்டு அரசுகளும் சில காரியங்களைச் செய்ய வேண்டும். அதில் தவறேதும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.
அவரு ஒரு நாட்டோட தலைவரு . ஒரு நாட்டு தலைவரு செத்தா அரை கம்பத்துல கொடிய பறக்கவிடுறது ஒரு etiquette . ஜியா–உல்ஹக் செத்ததுக்கே நம்ம நாட்டுல செஞ்சான்க . இது தெரியாம ஒரு அறிவுஜீவி , இத்தாலிக்கு பக்கத்துல(?) தானே வாடிகன் இருக்குன்னு கேட்குறார் …அடப்பாவிகளா???
Das
There is nothing wrong in what narain said.
Indian people attach too much importance to 'power' & hype.
Vatican is just center of power and control.
Many of christian friends here in US are protestants and many group don't even accpet Catholics as christians to them they just pagans. Gapsa Gopalu
அன்னையின் காலை நக்க ஆளும் கட்சியினர்க்கு கிடைத்த பொன்னான வாய்ப்பை நன்றாகப் பயன்படுத்தினார்கள்.
மூன்று நாள் துக்க அனுசரிப்பின்போது, நடுவில் ஒரு நாள் இடைவேளை விட்டதை, எதிர்க்கட்சிகள் ஏளனம் செய்தாலும்.
"21ஆம் நூற்றாண்டில் நாம் ஆசியாவில் தீவிர #உள்ள அறுவடை# செய்யவேண்டும்" என்று சொன்ன மதவாதிக்கு சிறந்த அஞ்சலிதான்.
Post a Comment