
" கிக்கீகுக்கீகுக்கீகூ கக்கீகூகக்க்காகுயீ ..."
" இந்த லூசுப்பய லூகாஸுக்குத் தெரிஞ்சா என்னாகுமா?
தெரிஞ்சா தெரிஞ்சுட்டுப் போகுது. முப்பது வருசமா மனுசுக்குள்ள பூட்டி வச்சிருக்கிறத சொல்லிடறேன் கேளு. நான் தான் திரைக்கதையில எல்லா அத்தியாயத்தையும் மாத்தி மாத்தி வச்சு தைச்சிட்டேன்... "
5 comments:
:))
அருள்,
கார்ட்டூனுக்கும் இந்த கட்டுரைக்கும் (Robotics: Self-reproducing machines ) ஏதேனும் தொடர்பு உண்டா?
மதி,
எதுக்கு சிரிக்கிறீங்கன்னு சொல்லிட்டு சிரிங்க.
சுந்து...
இங்க ஒரு நடை போயிட்டதெல்லாம் வாங்க:
http://www.starwars.com/
ஹிப்பி முடி வளத்தி பெல்பாட்டம் போட்டூட்டு நாங்க பாத்த படம். இப்பத்தான் கதையை முடிக்கிறானுங்க! இது சினிமா. :-) மித்ததெல்லாம் பிலிம். :-)))
(மக்கள்ஸ் கொதித்து எழ வேண்டாம். இது வேறே த்லைமுறை சமாச்சாரம். பின்னால் எப்பவாவது எழுதறேன். )
அருள்
புரிந்தது. ஏதோ இதோடு நிறுத்துகிறார்களே, பேரக்குழந்தைகள் காலம் வரை போகாமல்.
இன்று வெளியான Nature இல் தானாக மறுஉற்பத்தி செய்யக்கூடிய ரோபோவைப் பற்றி சின்னதாக ஒரு கட்டுரை வந்தது. அதைப் பற்றி ரேடியோவில் வேறு பேசிக்கொண்டிருந்தார்கள். நம்மூரிலும் அது செய்தியாகிவிட்டதோ என்று நினைத்தேன்.
அதொண்ணுமில்ல சுந்தரமூர்த்தி, 1,2,3னு வரிசையாகப் பார்க்க முயன்று முடியைப் பிச்சுக்கிட்டது ஞாபகம் வந்தது.
இதோடு, சிரிக்க வைத்த வி்ஷயங்கள்
1. ஸ்டார் வார்ஸ்'ஐ வைத்து வரும் M&M மிட்டாய் விளம்பரம்.
2. இங்கே, முன்கூட்டியே அனுமதிச்சீட்டு வாங்கும் மக்கள்
3. லாஸ் ஏஞ்சலஸில், 30 வருடங்களுக்கு முன்பு திரையான அதே திரையரங்கில் இந்தக் கடைசிப்படமும் திரையிடப் படவேண்டும் என்று திரையரங்கிற்கு வெளியே மாதக்கணக்கில்/வார்க்கணக்கில் நிற்கும் மக்கள்.
4. என்னதான் மில்லியன்/பில்லியன் கணக்கில் வசூல்ப் படமென்றாலும் நேற்று முளைத்த காளான் தொலைக் காட்சித் தொடர் 'O.C.'இல் Season Finale'இல் கௌரவமாகத் தோன்றவேண்டிய கட்டாயம் ஜோர்ஜ் லூகாஸுக்கு.
அதான் சிரிப்பூ! ;)
===
சரி, யாராவது எந்தப் படத்தை முதலில் பார்க்கணும்னு ஒரு பட்டியல் குடுங்கப்பா.
நன்றி
-மதி
Post a Comment