இது கூகுள் இலவசமாகத் தரும் எழுதுநிரலான ரைட்லி (www.writely.com ) கொண்டு எழுதிப்பார்த்தது.
1. வலையிலேயே இருக்கும் நிரலியாதலால, வலையிலேயே முழு வடிவமைப்புக்கான இடைமுகம் இருக்கிறது.
எழுதும் எதையும் பக்க வடிவமைப்பு செய்து கொள்ள முடிகிறது.
2. மைக்ரோசாப்ட்-இன் வேர்ட் போன்ற செயலிகள் தேவையில்லை. அனைத்து வசதிகளும் இதிலேயே உள்ளன.
3. நேரடியாக இ-கலப்பைகொண்டு உலவியிலேயே தட்டச்சலாம்.
4. எளிதாக வலைப்பதிய நேரடியாக ப்ளாகர் கணக்குடன் இணைந்திருக்கிறது. அதைத்தான் முயற்சித்துக்கொண்டிருக்கிறேன்.
5. குறிச்சொற்கள் வசதி, பிடிஎஃப் சேமிப்பு வசதி என பல விதமான வசதிகள்.
6. எளிதாக எங்கிருந்தும் வலைப்பதிவிட வசதி.
7. எங்கோ இருக்கும் மற்றவரோடு இணைந்து சேர்ந்து உருவாக்கும் (collaboration) வசதி.
8. பல படிகளை சேமித்து ஒத்து நோக்கும் வசதி என பல உண்டு.
9. தேடு-மாற்றுச்சொல் இடு (search-replace) வேலை செய்கிறது.
முயற்சி செய்து பாருங்கள்.
No comments:
Post a Comment