Friday, February 09, 2007

கோவை படங்கள் ...
ஊருக்குப் போன போது எடுத்த இன்னும் சில படங்கள்:

3.சற்றே தொலைவில் மருத மலைக் கோவில்
2.ஊர் போற வழி


1." மூக்குத்திப் பூ மேலே காத்து உக்காந்து பேசுதையா "

(படங்களைப் பெரிதாய்க் காண அவற்றின்மீது சொடுக்கவும்)

.

21 comments:

சிவபாலன் said...

அருள் செல்வன் கந்தசுவாமி,

படங்கள் அருமை!

நீங்க கோவையில் எந்த ஊர்?

நானும் கோவைதான்.. வடவள்ளி..

தற்பொழுது பிழைப்புக்காக .. சிகாகோ

அகில் பூங்குன்றன் said...

செம்போத்து பறவை பத்தி எழுதி இருக்கும் போதே மைல்டா ஒரு டப்வுட் வந்துச்சு.
கோவை பக்கமாத்தான் இருப்பீங்கன்னு.

நானும் கோவை. இராமநாதபுரம்.

தற்பொழுது ஹாரிஸ்பர்க். பென்சில்வேனியா.

படங்கள் நன்றாக உள்ளன.

- Baranee said...

மூன்றாவது படம் மருதமலை - கல்வீரம் பாளையம் பகுதியில் இருந்து எடுத்திருக்கீங்க, இரண்டாவது தொண்டாமுத்தூர் போகும் வ்ழிங்களா ?

We The People said...

அடடே இத்தனை கோவை மக்களா?? அட நானும் கோவை தாங்க! பஞ்சம் பொழைக்க சென்னையில் இருக்கேன் :)))

அருள் செல்வன் கந்தசுவாமி கோவையில் எந்த பகுதி??

அகில் பூங்குன்றன் நீங்க ராமநாதபுரமா? நானும் தான்!!! என் வீடு பாலாஜி காலனியில் உள்ளது! உங்களுக்கு எங்க??

அட சாமீ! சந்தோஷமாருக்கு கோவை படங்களை பார்க்கறதுக்கே!! சென்ட்ரலைஸ்ட் ஏஸி ஊரிலிருந்து சென்ட்ரலைஸ்ட் ஹீட்டர் ஊரில் வாழும் அப்பாவி கோவை தம்பி!!!

அன்புடன்,

ஜெயசங்கர் நா

செல்வநாயகி said...

படங்கள் அருமை.

பெருசு said...

ஊருக்கு போனப்போ மருதமலை போகணும்ன்னு நெனச்சு, வடவள்ளி வரைக்கும் போயிட்டு வந்தேன்,இங்க குளு குளுன்னு படம் காட்டிட்டீங்க.

நன்றி

Samudra said...

நமக்கு ஏர்-போர்ட்டுக்கு பக்கமுங்க.


ஊரை விட்டு பரதேசம் வந்து பத்து நாள் ஆயிடுச்சுங்க.

அருள் செல்வன் கந்தசுவாமி said...

ஊர்க்காரத் தம்பிகளா, நாம பீளமேடுங்க. ஆனா ஊரே நம்ம சொந்தம்தான்னு வெச்சுக்கோங்க.
அருள்

அருட்பெருங்கோ said...

என்னது பீளமேடா?

அஞ்சு வருசம் அங்கதாங்க குப்ப கொட்டினேன்...

நாமக்கல் சிபி said...

நானும் கோயமுத்தூர்தானுங்கோவ். கோவைக்கு வந்து ஒரு வருஷத்துக்கு மேல ஆகுது.

மங்கை said...

ஆஹா நம்ம ஊர்காரங்க இத்தன பேர் இருக்காங்களா..சந்தோஷம்..

அதில சமுத்ரா ரொம்ப பக்கத்தில இருக்கீங்க

//அட சாமீ! சந்தோஷமாருக்கு கோவை படங்களை பார்க்கறதுக்கே!! சென்ட்ரலைஸ்ட் ஏஸி ஊரிலிருந்து சென்ட்ரலைஸ்ட் ஹீட்டர் ஊரில் வாழும் அப்பாவி கோவை தம்பி!//

:-))


படங்கள் அருமையா இருக்கு...

பத்மா அர்விந்த் said...

அருள்
நான் கூட உங்க ஊர்தான். எல்லா ஊரும் எனது ஊர்தானே. படங்கள் ஊரின் அழகை சொல்கின்றன.

முத்தமிழ் குமரன் said...

அய்யா ராசா!!!!ஊருக்காரங்கள்ளாம் ஒன்னு கூடீட்டீங்களா!!!!

படங்கள் எல்லாம் நல்ல இருக்குங்க...

ஹி ஹி ஹி நானும் ஈச்சனாரி பக்கந்தேன்

குமரன்@muthamilmantram.com

நாமக்கல் சிபி said...

நானும் கோயமுத்தூருதானுங்கோவ்!

சாய்பாபா காலணி!

rajavanaj said...

அருள்,

நம்மூரு படத்த பாக்கவே சந்தோஷமா இருக்குங்க.

சிவபாலன் வடவள்ளியா?? நான் படிச்சது அங்க தாங்க - சின்மையா வித்யாலையா.

நன்றி அருள்! இப்பொ நீங்க எந்த ஊர்ல இருக்கீங்க?

மதி கந்தசாமி (Mathy) said...

அருள்,

நானும் உங்க ஊர்ப்பக்கந்தான். ஒருதடவை வந்ததே இன்னமும் மறக்கமுடியாம இருக்கு. மத்தபடி யாதும் ஊரே யாவரும் கேளிர் தத்துவத்தின்படியும் என் ஊர்னு சொல்லிக்கலாம்.

இன்னொண்ணும் இருக்கு. வில்லங்கமான மேட்டர்.

உங்களுடைய அப்பாவின் பெயர் 'கந்தசுவாமி'யாகவும் என் அப்பாவின் பெயர் 'கந்தசாமி'யாகவும் இருக்கில்லையா. வலைப்பதிவு நண்பர்களில் ஒருவர் உங்களை என்னுடைய அண்ணன்னு நினைச்சாராம்! :Gasp: :அட கிரகச்சாரமே!: எல்லாம் உங்க ரியாக்ஷன்தான் நானே எடுத்துக்குடுத்திர்ரேன். ;)

அழகான படங்கள்.

-மதி

viji said...

ஐயா நானும் கோயம்புத்துர் பக்கந்தானுங்க , உடுமைலைப்பேட்டை. வலைப்பதிவுல இத்தன கொங்கு நாட்டு சிங்கங்கள பாக்க சந்தோசமா இருக்கு மக்களே. ஏனுங்கண்ணா கோயம்புதூர்கரவுக எல்லாம் சேந்து கொங்குதேசம்னு ஒரு கூட்டு பதிவு ஆரம்பிகலாமுங்களா?

அருள் செல்வன் கந்தசுவாமி said...

மங்கை,
இன்னும் நெரய ஊர்க்காரங்க இருக்காங்க.
பத்மா,
அப்பிடித்தான் ஆயிடுச்சு நமக்கெல்லாம். அங்கங்கே உறவுகள் துளிர்க்கின்றன.
முத்தமிழ்க்குமரன்,
ஈச்சனாரி எல்லாம் இப்ப 'பெரிய' இடம் ஆயிடுச்சே.
சிபி,
சாய்பாபா காலனியா. அப்புறம் ஏன் 'நாமக்கல்'?
ராஜாவனஜ்,
வருக. இப்ப பெங்களூரு.
மதி,
இதுலெ என்னங்க. எங்க ஊருலெ எல்லாம் அண்ணன் தம்பி, தங்கச்சி முறைதான். பேசும்போதே என்னங்க தம்பி, என்னம்மிணி என்றுதான் பேசுவார்கள். இப்பெல்லாம் மாறியிருக்குது. இதனாலேயே பெங்களூரைவிட மைசூர் எனக்கு பிடிக்கும். ஏறக்குறைய கோவை போலவே பேசுவார்கள். இப்ப போனால் தமிழ்க்காரன் என்று உதை விழும். ரெண்டுமூணு மாசம் போனால் சரியாகிவிடும்.
விஜி,
சரியாப் போச்சு. இருக்குற தேசம் போதாதுன்னு இதுவேறேயா. அப்புறம் பாலக்காட்டு கணவாயையே மூடிடுவாங்க. :-)

அருள்

நாமக்கல் சிபி said...

//ஏனுங்கண்ணா கோயம்புதூர்கரவுக எல்லாம் சேந்து கொங்குதேசம்னு ஒரு கூட்டு பதிவு ஆரம்பிகலாமுங்களா?
//

விஜி அவர்களே!

கொங்கு தேசம்ணு ஏற்கனவே ஒண்ணு இருக்கு!

Anonymous said...

hi
i am also from kovai.... ramananthapuram area - kongu nagar.. now i am in virginia , went to india last Aug.. the climate was awesome at that time in kovai.. visited the dhyanalinga temple ... the mountain views were great... ur fotos are splendid.. thanks for posting them ..


- Raj

அய்யனார் said...

/உங்களுடைய அப்பாவின் பெயர் 'கந்தசுவாமி'யாகவும் என் அப்பாவின் பெயர் 'கந்தசாமி'யாகவும் இருக்கில்லையா. வலைப்பதிவு நண்பர்களில் ஒருவர் உங்களை என்னுடைய அண்ணன்னு நினைச்சாராம்! /

me too nga :D