Wednesday, July 25, 2007

பாடு -> பொருள்

-


கற்றதனாலாய பயனென்? கொல்
கொல் என ஆயுதம் செய்தலா
வெற்றிநம் குழுகூட்டம் முழக்கு
தட்டிப் பேரண்டம் கொய்தலா
ஆங்கோரேழைக்கு எழுத்தரைவைத்து
விண்ணப்பம் நிரப்பலா.

என்கொணர்ந்தாய் பாணாநீ
எனக்கேட்டால் நம்கவிதை
எட்டுத்திக்கும் சென்றிங்கு கொணர்ந்து
சேர்த்த மட்டிலாக் கடவுளர்
றாழ் தொழார் எனின் ஆமழல்
எங்கே பிறந்தாலும் என்?

இங்கே வெந்து தணிந்தது
மழையில் நனைத்த தார் ரோடு


-

3 comments:

செல்வராஜ் (R.Selvaraj) said...

கலக்கறீங்களா இல்லை கலங்கிக் கெடக்கறீங்களான்னு தெரியல்லியே :-)

-/பெயரிலி. said...

அருள் மிகு 'கொல்' என்று கவிதை போட்டபின்னும் வந்து :-) போடும் செல்வராஜ் அவர்களைப் பாராட்டி கொல்லைக்கொன்றகொற்றவர் என்ற பட்டத்தை மூணாம் வட்டம் சார்பிலே எட்டி நின்று வழங்குகிறோம்.
:-)
[அருளரே அண்டை அயலிலிருந்து காணாமற்போனோர் பட்டியலிலிருந்து தூக்கிடலாமா? இல்லை திரும்ப, எங்கேயாவது எதேஷ்டம் பரதேசமென்று காணாமற்போய்டுவீங்களா?]

அருள் செல்வன் கந்தசுவாமி said...

செல்வராஜ்,
நாந்தாங்க கலங்கிப் போயிருக்கேனாட்டம் இருக்குதுங்க. செவ்வியல் தரவுங்களைக் கலைச்சு மீளுருவாக்கி ... வேணாங்க நாம எதுனாச்சும் சொல்லப்போனா பொல்லாப்பு.

ரமணி
பட்டியலை அப்படியே வச்சிருங்கோ. ரெண்டு மூணு நாளிலெ திரும்பவும் பரதேசம்தான். வேல முறிக்குது.
அருள்