Saturday, July 31, 2010

ரோபோட் பாடல் - kraftwerk

எல்லோரும் புதுப்பாடல்களில் கதிகலங்கி இருக்கும் போது பழைய நினைவுகள் வருவதைத் தவிர்க்க இயலவில்லை.
1977 ஆம் ஆண்டு வெளிவந்த 'வீ ஆர் த ரோபோட்ஸ்'. (சுட்டியில் இருப்பது ஆங்கில வடிவம்)
அதன் ஜெர்மன் வடிவம் இங்கே




அப்போதைய மேற்கு ஜெர்மனியின் டூஸொல்டோர்ஃப் பைச் சார்ந்த 'க்ராஃப்ட் வெர்க்' (kraftwerk) எனும் குழுவினரின் இந்தப்பாடல் சில ஆண்டுகள் கழித்து பொறியியல் கற்க பெங்களூர் வந்த எங்கள் வருட மாணவர்களுக்கு ஒரு தேசிய கீதமாகவே இருந்தது. எங்கள் கல்விச்சாலையின் இசை அறையில் ஒரு பாடலுக்கு ஐந்து பைசா கொடுத்து ஒரு தடிப் புத்தகத்தில் பதித்து வைத்துவிட்டு சோபாக்களில் நீட்டிச் சாய்ந்து கொண்டு நண்பர்களுடன் இரவு உணவுக்குப் பின் நள்ளிரவுவரை கேட்டு மகிழ்ந்த பாடல்களில் பல. இப்பாடலைப் போலவே இன்னொரு பாடலான 'மாடல்' எனக்கு பிடித்த பாடல். மாடல் கீழே.



க்ராஃப்ட் வெர்க் இசையாக்கம் செய்த அனைத்துப் பாடல்களும் அநேகமாக முழுவதும் செயற்கையாக வனையப்பட்ட இசையாகும். அனைத்து இசைத்துணுக்குகளும் இலந்திர நுணுக்கங்களால் அலைமாற்றப்பட்டவை. அந்த விதத்தில் இலந்திர இசைக்கு முன்னோடிக்குழு க்ராப்ட் வெர்க் தான்.


--

2 comments:

ஹைப்பர்லிங்க் சிந்தனைகள் said...

திரையரங்குகளில் பள பள திரை வண்ண விளக்குகளோடு மேலே எழும்பும் அற்புதகணங்களின் பின்னணி இசையாக இருக்கும் (We are the robots) !!

மதுரை சரவணன் said...

பகிர்வுக்கு நன்றி. வாழ்த்துக்கள்