Monday, August 30, 2010

அடையாளம், அரசியல்

அடையாள அரசியல்
-----------------------------

இந்த ஆரிய, திராவிட,தமிழ், சமஸ்கிருத சண்டைகளை ஓயாமல் நடப்பதால் இங்கே சில முக்கியக் கூறுகளைத் தொகுத்துக் கொள்கிறேன்.

அரசியல் நிலைபாடுகள்:
-------------------------
இந்துத்துவவாதிகள்:
1. சிந்து சமவெளி: சமஸ்கிருத நாகரிகம்
2. ஆரியர், திராவிடர் ஒரே இனம்;பிரிவினையே இல்லை
3. இந்து என்பது ஒரு தனி தேசியம்
4. தமிழ் சமஸ்கிருதம் இவை இரண்டும் (மற்ற இந்திய மொழிகளோடு) ஒரே மொழிக்குடும்பத்தைச் சேர்ந்தவை.

தமிழ்த்தேசியவாதிகள்:
1. சிந்து சமவெளி: திராவிட அல்லது தமிழ் நாகரிகம்;
2. ஆரியர்-திராவிட இவை வேறு வேறு இனங்கள்;
3. தமிழ் என்பது தனி தேசியம்;
4. தமிழ்-சமஸ்கிருதம் இவை வேறு மொழிக்குடும்பங்களைச் சேர்ந்த மொழிகள்.

அறிவியல் (தற்போதைய) நிலைபாடு:
-------------------------------------------
1. மொழி,இடம்(நிலம்)சார்ந்த அடையாளங்கள் பருண்மையானவை.இனம் சார்ந்த அடையாளங்களுக்கு அறிவியல் ஆதரவு இல்லை.மத அடையாளம் பருண்மையானதல்ல.
2. திராவிட எனும் அடையாளம் மொழிக்குடும்பம் சார்ந்ததெனில் பருண்மையானது.இனம் சார்ந்ததெனில் பொய்யானது.ஆரியர் அடையாளமும் அவ்வாறே.
3. படையெடுத்துவந்து ஆரிய இனம் திராவிட இனத்தை வென்றது என்பதற்கான ஆதாரம் எதையும் காணோம்.
4. ப்ரோடோ-திராவிட மொழிக் கட்டு இல்லாமல் தமிழை மட்டும் வைத்து சிந்து நாகரிகத்தை அறியமுடியாது. அங்கு வாழ்ந்தவர் தமிழர் என்பற்கும் முடிபான ஆதாரம் இல்லை.
5. திராவிட மொழிகள் அனைத்திற்கும் (மலையாளம் தவிர்த்து) தனித்த பழமையான பண்பாட்டு வரலாறு உண்டு. தனி அடையாளமும் உண்டு.
6. சிந்து சமவெளி நாகரிகம்: திராவிட நாகரிகமாக இருக்கலாம்.சமஸ்கிருதம் ,தமிழ் வேற்று மொழிக்குடும்பங்கள்.


-

4 comments:

ராம்ஜி_யாஹூ said...

ஆரியர் = பார்ப்பனர், திராவிடர் = பார்ப்பனர் அல்லாதோர், என்ற அடிப்படை நடைமுறை கொள்கையை நீங்கள் எழுத விட்டு விட்டீர்கள்

Anonymous said...

In these issues like decoding scripts and symbols found in excavations there are many hypotheses of which some may be more acceptable than others on account of their capacity to provide coherent 'reading' and linking that with other evidences. Aryan invasion theory has been negated and now there is only a talk of aryan migration but here aryan is a group not a race.Similarly languages are classified into groups and all languages that come under the category of dravidian may not be spoken in India or in South India.
Telugu and Kannada cannot be considered as languages that arose from Tamil or Sanskrit.
But these are irrelevant for those who want to score brownie points by citing some experts without trying to understand the broad picture or the fact that experts often talk in terms of hypotheses and not in terms of confirmed truths.Science has rejected the concept of race long ago but today also it is fashionable to use that
as aryan race vs. dravidian race.
Scholars in lingustics are not fanatics and do not talk in terms
of sanskrit as villian and tamil as victim or viceversa.About the pseudo-scholars that are dime a dozen in Tamil the less said the better it is.

அருள் செல்வன் கந்தசுவாமி said...

ராம்ஜி-யாஹூ:
யாருடைய நடைமுறை? அர்த்தமில்லாத நடைமுறைகளை மேலே கண்ட மூன்றில் எந்தப் பிரிவிலும் சேர்க்க முடியாது.
அருள்

அருள் செல்வன் கந்தசுவாமி said...

அனானி,
பெரும்பாலும் நான் தமிழில் சொன்னதை நீங்கள் ஆங்கிலத்தில் சொல்கிறீர்கள்.
(இது தேவையற்ற இருமை என்றாலும்) அதேபோல் சமஸ்கிருதத்தை அர்த்தமின்றி உயர்த்திப் பிடிப்பவர்களையும் மறக்கலாகாது. one feeds the other.
அருள்.