Tuesday, October 04, 2011
சிய்யாங்கு
பதித்தவர்
arul selvan
இந்த இனிப்புக்குப் பெயர் எங்கள் வீட்டில் சிய்யாங்கு. உண்மையில் என்ன பெயரோ நான் அறியேன்.
(அ) தேவையான பொருட்கள்:
------------------------------------
1. கோதுமை மாவு - 1 கப்
2. வாழைப்பழம் - 1 (பெரிய்ய்யது) அல்லது 2 (நடுத்தரமானது)
3. வெல்லம் - 1/2 கப்
4. சிறிது வெண்ணெய் - ஒரு பெரு நெல்லிக்காய் அளவு
5. எலக்காய் - 1
6. நல்லெண்ணெய் /கடலை எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு.
(ஆ) செய்முறை:
கோதுமை மாவு, வாழைப்பழம், பொடித்தவெல்லம், வெண்ணெய் இவற்றை நன்கு பிசைந்து கொள்ளவும்.
நீர் விடக்கூடாது. பழம் நன்றாகக் கனிந்ததாக இருக்கவேண்டும். அப்பொழுதுதான் நன்றாக பிசையவரும். தோலில் கருப்புப்புள்ளிகள் வந்த பழங்கள் போதுமான அளவு கனிந்து இருக்கும்.
கடைசியில் ஏலப்பொடியை போட்டு பிசைந்து கொள்ளவும்.
எந்தப்பதத்தில் பிசைவது? வழியாத அளவு கெட்டியாக ஆனால் நன்றாக மெதுமெதுவென்று இருக்கும்படி.
எண்ணெய் காய்ந்தபிறகு சிறுதீயாக வைத்து உருண்டையாக போட்டு பொரித்து எடுக்கவும்.
(இ)
1. பழம் கனிந்து இருப்பது மிகமுக்கியம். ரோபஸ்டா/மோரீஸ் போன்ற ஹைபிரீட் வகைகளைப் பயன்படுத்தவும். அவை விரைவில் கனிந்து விடும். நம் நாட்டுப்பழங்க்அள் பூவன், ரஸ்தாளி போன்றவற்றில் மாவுச்சத்து அடர்வு அதிகம். கனிய நாளாகும். முழுவதாகவும் ஒரேயடியாக கனியாது.
2. கோதுமைமாவுதான். மைதா ஆகாது.
3. வெல்லத்திலும், பழத்திலும் நீரிருப்பதால் நீர்சேர்க்கத்தேவையில்லை. மிகவும் கட்டியாக இருந்தால் சற்றே தெளிக்கவும். ஊற்றக்கூடாது.
4. நம்நாட்டுப் பலகாரங்கள் செய்யும்போது நல்லெண்ணெய், கடலை எண்ணெய் பயன்படுத்துங்கள். வடிகட்டினவை (பில்டர்ட்) மட்டுமே. ரிபைண்ட்டு வகை அல்ல. மணமே இல்லாத சன்பிளவர், பாமாயில் போன்றவற்றைப் பயன்படுத்தாதீர்கள். ந.எ,க.எ எல்லாம் கெட்ட எண்ணெய்கள் அல்ல. எந்த டாக்டர் சொன்னாலும் நம்பாதீர்கள். தற்போதைய ஆராய்ச்சிமுடிவுகள் சன்பிளவர்தான் சிறந்தது என்றெல்லாம் சொல்லவில்லை.
பிகு. ஆமா நான் செய்ததுதான்.
Subscribe to:
Post Comments (Atom)

0 பின்னூட்டங்கள்:
Post a Comment