நேற்றிலிருந்து இருக்கும் செயலற்ற இந்த மனநிலையில், நாட்டை இன்றைய
நிலைக்குத் தூக்கி நிறுத்திய சில சாதனையாளர்களைப் பற்றி எழுதுகிறேன்.
அப்படித்தான் ஒவ்வொருமுறையும் எழவேண்டியிருக்கிறது. நாடு சுதந்திரமடைந்து சுமார் இருபது
இருபத்தைந்து ஆண்டுகள் மிகப் பெரும் தடைகளைக் கடக்க வேண்டியிருந்தது.
அவற்றுள் மிக முக்கியமான ஒன்று மக்களுக்கு போதிய உணவு இல்லாமை. உணவு
கிட்டாமை அல்ல. உணவு இல்லாமை. இதன் முக்கியத்துவத்தை உணர்ந்து முதல்
ஐந்தாண்டுத் திட்டதிலேயே பன்னோக்கு அணைகள் கட்டுதல் போன்ற திட்டங்களை
நடுவண் அரசு செயல் படுத்தத் தொடங்கியது. ஆனாலும் 60 களின் இறுதிவரை
கடுமையான பஞ்சங்கள் ஏற்பட்டன. பஞ்சங்கள் என்றால் உணவு கையிருப்பில்
இல்லாத நிலை. எத்தனை காசு கொடுத்தாலும் உணவு கிடையாது. உணவுக்கிடங்குகள்
காலி. சில பதுக்கல் காரரைத் தவிர்த்து ந்டுவண் அரசே நினைத்தாலும் உணவை
எங்கிருந்தும் கொணர முடியாது. PL480 போன்ற உதவித்திட்டங்கள் மூலம் அரசு
அமெரிக்காவிலிருந்து கோதுமை இறக்குமதி செய்தது. தமிழ்நாட்டின் மதிய உணவுத்
திட்டத்திற்கும் உடைத்த கோதுமை, சோயா எண்ணெய், CornMaizeSoya கலந்த
சத்துப் பொடி என மூட்டை மூட்டையாக வரும். இதைக்கொண்டு உப்புமா போல் ஏதோ
கிளறி பள்ளிச் சிறார்களுக்கு மதியஉணவாக அளிக்கப் படும். பல கிராமங்களில்
சத்தான உணவு என்று ஒரு வேளையாவது சாப்பிட்டவர்கள் இப்பள்ளிச்
சிறார்கள்தாம். இந்தக் கையறு நிலையிலிருந்து நாட்டை வெளிக்கொணர முதலில்
அப்போதைய பிரதமராயிருந்த லால் பகதூர் ஸாஸ்திரியும், அவரின் அகால
மரணத்திற்குப் பின் வந்த இந்திரா காந்தியும் முழு மனதோடு செயல் பட்டனர்.
அதனை செயல் படுத்தியவர்களில் முக்கியமானவர்கள் அரசியல்வாதியான
சி. சுப்ரமணியமும், அறிவியலாளரான எம். எஸ். ஸ்வாமினாதனும்.
எத்தனையோ இகழ்ச்சிகளையும், சந்தேகங்களையும் மீறி அவர்களின் சேர்ந்த
நடவடிக்கைகள் நாட்டின் பசுமைப் புரட்சிக்கு அடிகோலின. ஐந்து வருடங்களில்
தொடங்கி, எழுபதுகளின் முடிவுக்குள் இந்நாட்டின் விவசாயிகள்
தொடர்ந்து பம்பர் ஹார்வெஸ்ட் என்று குவித்தார்கள். அதற்குப் பின் நாட்டில்
ஏதாவது ஒரு பகுதியில் உணவு இல்லை என்றால் அது அரசின் தவறு மட்டுமே, உணவு
கையிருப்பில் இல்லாததால் அல்ல என்ற நிலைமை வந்தது. இது ஒரு மாபெரும் சாதனை என்றே சொல்லவேண்டும். உயர் அறிவியலும், சரியான அரசியலும், மக்களின் அயராத உழைப்பும் சேர்ந்து சாதித்தது இது.
எத்தனை நாடுகள் இப்படி வெற்றி கண்டுள்ளன என்பதை நாம் எண்ணிப் பார்க்கலாம்.
உணவுத்துறையில் அடுத்த சாதனை இதற்குச் சற்றேனும் சளைக்காத வெண்மைப்
புரட்சி. மீண்டும் 60 கள். பால் வேண்டுமென்றால், தன் சொந்த மாட்டில்
பால்காரர் கறந்து கொணர்ந்து தருவதுதான். கிராமத்துக் கால்நடை வளர்ப்போர்
ஏதோ படிக்கு 20 பைசா என்றவகையில் நகரத்து வியாபாரிகளுக்கு விற்றுக்
கொண்டிருந்தனர். நகரங்களுக்கும் உறுதிசொல்லப்பட்ட வினியோக முறைகள்
கிடையாது. இந்த சந்தர்ப்பத்தில், விவசாயிகள், கிராமப் பெண்கள் இவர்களுடைய
உழைப்பில் வரும் பாலுக்கு சரியான விலைகிடைக்கவும், நகரமக்களுக்கு சரியாக
தவறாமல் பால் கிடைக்கவும் வழிகாணவேண்டுமென வந்த ஒரு அரச அதிகாரிதான்
வர்கீஸ் குரியன்.
குஜராத்தில் அமுல் என்னும் கூட்டுறவுப் பால் பண்ணையை ஆரம்பித்து, அவர்
நடத்திய புரட்சி ஈடு இணை இல்லாதது. அன்றைக்கு பன்னாட்டு நிறுவனமான நெஸ்லே
எப்படி பிரதமர் வரை லாபி செய்து ஐரோப்பிய, நியூசீலாந்து பால்ப் பொடி
இறக்குமதிக்காக வக்காலத்து வாங்கி, இந்தியாவால் தனக்கு தேவையான பால்
உற்பத்தி செய்ய இயலாது என்றெல்லாம் நிரூபிக்க பாடுபட்டது, அதை எப்படி
அமுல் முறியடித்தது என்பதெல்லாம் பெரும் கதை. இன்று இந்தியா உலகின் பால்
உற்பத்தி செய்யும் நாடுகளின் வரிசையில் எங்கிருக்கிறது தெரியுமா? இதுவும் ஒரு அறிவியல் + அரசியல் + உழைக்கும் மக்கள் பெற்ற வெற்றிதான்.
அடுத்தது எண்பதுகள். நாட்டில போதுமான அளவு உணவு தானியங்கள் விளைகின்றன. தேவையான அளவு பால் உற்பத்தியாகிறது. ஆனால் எல்லோருக்கும் தேவையான அளவு புரதம் கிடைக்கிறதா? மீண்டும் ஒரு அறிவியலாளர். டாக்டர். பி.வி. ராவ்.
இப்போது துறை: கோழி வளர்ப்பு. பத்தே வருடங்கள். நாட்டில் முட்டை உற்பத்தி இருபது
மடங்கு கூடுகிறது. உலகின் மிகச் சிறந்த பண்ணைகளும், கோழி இன தலைமுறைத்
தொடர்களும் இந்தியாவில். உலகின் இரண்டாவது (அல்லது ஒன்றாவதா?) இடத்தில்
இந்தியா. இவை அனைத்தும் இந்தியர்களால் திட்டமிடப் பட்டு, மிகுந்த
எதிர்ப்புகளுக்கிடையில் நவீன அறிவியலின் உதவியுடன் தன்முனைப்புடைய சிலரால்
மக்களின் உழைப்போடு பன்னாட்டு சந்தைகளுடன் போட்டியிட்டு இந்தியர்கள்
செய்து காட்டிய சாதனைகள். இது ஒரு புறம்தான். இன்று இந்தியா முற்றிலும்
இருண்ட கண்டமாக இல்லாமல் ஏதோ பிரகாசமாக சிலருக்கும் மங்கலாக பலருக்குமம்
ஒளிர்கிறது என்றால் அதற்கு காரணமாக இருந்தவர்களுள் இவர்கள் ஒரு சிலர்.
இன்றைக்கு நாமெல்லாம் புட் கோர்ட்களுக்குப் போய் டீப் பேன் பீட்ஸா
சாப்பிடும் போது ஒருமுறை மனதிற்குள்ளே நினைவுகூறத்தக்கவர்கள்
இவர்கள்.
10 comments:
«ýÒûÇ «Õû,
ÌõÀ§¸¡½õ Å¢¨Çò¾ Á¢Ìó¾ ÁÉò ÐÂÃò¨¾î ÍÁóЦ¸¡ñÎ ¦ºý¨É ÅóÐ, ¾Á¢ú ŨÄò¾Çí¸¨Ç Å¢Ê¸¡¨Ä¢ĢÕóÐ ¦ÅÚ¨ÁÂ¡É Áɧ¾¡Î ²§¾¡ ÀÊòÐì ¦¸¡ñÊÕìÌõ§À¡Ð, ¯í¸û À¾¢× ÁÉÐìÌ þ¾Á¡¸ þÕ츢ÈÐ.
þôÀÊî ¦º¡øÅÐ ´Õ ±Š§¸À¢…Á¡ ±ýÚ ±ÉìÌò ¦¾Ã¢ÂÅ¢ø¨Ä. ¬É¡ø ¯í¸û ¦º¡ü¸Ç¢ø ¯ûÇ ¬úó¾ ¿õÀ¢ì¨¸Ôõ, ºò¾¢Âò¾¢ý ¸ÉÓõ þó¾¢Â¡ - ¾Á¢Æ¸õ ÓÂýÈ¡ø ÌõÀ§¸¡½í¸û ¯ÕÅ¡¸¡Áø ¯¼§É ¾ÎòÐ ¿¢Úò¾ ÅÆ¢¦ºö ÓÊÔõ ±ýÚ §¾¡ýÚ¸¢ÈÐ.
±Ð×õ ¦ºö ÓÊ¡¾ þÂÄ¡¨Á¢ø ¦¿ð¨¼ ÁæÁÉ ¿¢ýÚ ÒÄõÀ¢ì ¦¸¡ñÊÕ츢§Èý - µ÷ ±Øò¾¡ÇÉ¡¸, ´Õ ºã¸ «í¸ò¾¢ÉÉ¡¸ ±ýÉ¡ø «ó¾ò ¦¾¡ñßÚ À¢ï͸Ǣø ´ý¨Èìܼ ¯Â¢÷À¢¨Æì¸ ¨Åì¸ ÓÊÂÅ¢ø¨Ä. ¿øÄ §¿¡ì¸òмý ¦ÀÕó¾¨ÄÅ÷ ¸¡Áሠ¦¾¡¼í¸¢ ¨ÅòÐ, Áì¸Ç¢ý «ýÒò ¾¨ÄÅÉ¡¸ þÕó¾ ±õ.ƒ¢.¬÷ ±øÄ¡Å¢¾ °ì¸Óõ ¦¸¡ÎòÐò ¾Á¢Æ¸ô ÀûÇ¢¸Ç¢ø ¿¢¸úò¾¢Â ºã¸ «ì¸¨È º¡÷ó¾ «üÒ¾Á¡É þÄź Á¾¢Â ¯½×ò ¾¢ð¼õ þó¾ì ÌõÀ§¸¡½ Á¸¡Å¢ÀòÐìÌ Å¢òРި¾ò¾¢Õ츢ÈÐ ±ýÀ¨¾ò ¾¡í¸¢ì ¦¸¡ûǧŠÓÊÂÅ¢ø¨Ä.
¾Á¢Æ¸, þó¾¢Â ÀøÐ¨È «È¢»÷¸û ÀͨÁô ÒÃðº¢ìÌõ, ¦Åñ¨Áô ÒÃðº¢ìÌõ ÅÆ¢¦º¡øÄ¢ÂÐ §À¡ø þí§¸ þÃñÎ §Å¨Çî º¡ôÀ¡ðμý À¡Ð¸¡ôÀ¡¸ ±Øò¾È¢Å¢òÐ «Îò¾ ¾¨ÄӨȨ ¯ÕÅ¡ì¸ò ¾¢ð¼í¸û ¾£ð¼ §ÅñÎõ.
þÅü¨Èì ̨Èó¾ Àðºõ þô§À¡¾¢Õó§¾ þ¨½Âò¾¢ø Ţš¾¢òÐ ´Õ ºð¼¸ò¨¾ ¯ÕÅ¡ì¸, ¿£í¸Ùõ, áÁ.¸¢ ³Â¡, ¦Åí¸ð, Àòâ, ¼¡ì¼÷ ¦ƒÂÀ¡Ã¾¢, ÃÁ½£¾Ãý þýÛõ ¿¡ý ¯¼§É ¦ÀÂ÷ Íð¼ ÁÈóЧÀ¡É ÅøÖÉ÷¸Ùõ Óý¨¸ ±Îì¸ §ÅñÎõ. ±ý §À¡ýÈÅ÷¸û ¯í¸ÙìÌ ¯ÚШ½Â¡¸ þÕô§À¡õ. ¯¾Å¢ò ¦¾¡¨¸ ÅÆíÌŨ¾Å¢¼, þôÀÊÂ¡É ¦ºÂøÀ¡Î¸û þýÛõ º¢ÈôÀ¡¸ þÕìÌõ. Government buy-in ¿¡õ ±ø§Ä¡Õõ ´Õ ÌÃÄ¡¸ þÐ ÌÈ¢òÐô §Àº¢É¡ø ¿¢¸Øõ.
Áɾ¢ý À¡Ãõ ¿£í¸¡Á§Ä§Â
þá.ÓÕ¸ý
«ýÒûÇ «Õû,
±ýɧÁ¡ ¯í¸û ŨÄ¢øÄòÐìÌò ¾¢ÕõÀ×õ ÅóÐ ¯¨Ã¡Ê즸¡ñÊÕì¸ §ÅñÎõ ±ýÚ §¾¡ýÚ¸¢ÈÐ.
¼¡ì¼÷ ¦Å÷¸£Š ÌâÂÉ¢ý ¦Åñ¨Áô ÒÃ𺢠ÌÈ¢òÐ þýÛõ Å¢ÅÃÁ¡¸ô À¾¢Ôí¸û. „¢Â¡õ ¦Àɸ¡ø «ó¾ ¿¢¸úÅ¡ø ®÷ì¸ôÀðÎ «¾ý «ÊôÀ¨¼Â¢ø 'Áó¾ý' (¸¨¼¾ø ±ýÚ ¦À¡ÕÇøÄÅ¡ þ¾üÌ) ¸¨ÄôÀ¼ò¨¾ò ¾Â¡Ã¢ò¾Ðõ, «¾ü¸¡É ¾Â¡Ã¢ôÒî ¦ºÄ¨Å À¡ø Àñ¨½Â¢ý ¯ÚôÀ¢É÷¸Ç¡É ²¨Æ ±Ç¢Â Ţź¡Â¢¸§Ç áÚ åÀ¡ö, þÕáÚ åÀ¡ö ±ýÚ ÅÆí¸¢ÂÐõ, À¼õ ¦ÅÇ¢Â¡É ¾¢Éò¾¢ø «ó¾ò '¾¢¨ÃôÀ¼ò ¾Â¡Ã¢ôÀ¡Ç÷¸û' ±ø§Ä¡Õõ Êáì¼÷¸Ç¢Öõ, §ÀÕóиǢÖõ Üð¼õ Üð¼Á¡¸ò ¾¢¨ÃôÀ¼ «ÃíÌìÌô À¼õ À¡÷ì¸ô §À¡ÉÐõ ÁÈì¸ì ÜÊ ¦ºö¾¢¸Ç¡ ±ýÉ?
À¢.Å¢.áŢý Á¡¨Äì ¸¡øÅ¡ö ¾¢ð¼õ ÀüÈ¢Ôõ ±Ø¾ì §¸¡Õ¸¢§Èý.
þá.Ó
ÌõÀ§¸¡½õ ÐÂÃò¾¢ý Å¢¨ÇÅ¡¸, ¾Á¢Æ¸ô ÀûÇ¢¸Ç¢ø µ¨Äì ܨȸ¨Ç «¸üÈ ¿¼ÅÊ쨸 ±Îì¸ôÀΞ¡¸î ºüÚÓý ÀÊò§¾ý. þÐ ±ùÅÇ× àÃõ ¿ý¨Á ÀÂìÌõ ±Éò ¦¾Ã¢ÂÅ¢ø¨Ä.
ÁÃÀ¡÷ó¾ ¾Á¢úì ¸ðʼ «¨ÁôÀ¢ø ¦¾ý§É¡¨ÄÔõ, §¸ÃÇì ¸ðʼ «¨ÁôÀ¢ø ÁÃÓõ º¢ÈôÀ¡É þ¼ò¨¾ô ¦ÀÈì ¸¡Ã½õ þó¾ Á¡¿¢Äí¸Ç¢ø þùÅ¢Âü¨¸ô ¦À¡Õð¸û ±Ç¢ÂÅ÷¸ÙìÌì ¸¢ðÎõ Å¢¾ò¾¢ø ÁĢš¸×õ ¿¢¨ÈÅ¡¸×õ ¸¢¨¼ôÀ§¾. þÃñΧÁ ¾£ôÀ¢Êì¸ ÅÆ¢¦ºöÔõ ±ýÀ¾ü¸¡¸, «Š¦Àм¡¨…§Â¡, ¾¸Ãì ¦¸¡ð¼¨¸¨Â§Â¡ ÌʨºÂ¢Öõ, «õÀÄò¾¢Öõ §À¡¼ì ÜÎÁ¡? «Ð×õ «Š¦Àм¡Š .. ¾É¢Â¡¸ «¾ý ¾¢ý¨Á¨Âô ÀüÈ¢î ¦º¡øÄ §Åñʾ¢ø¨Ä. þó¾ò ¾£ ¯¼§É ¦¸¡ýȦ¾ýÈ¡ø «Š¦Àм¡Š ¿¢ýÚ ¦¸¡øÖõ.
¾£ ÅÇ÷ìÌõ «ÎÁ¨É¨Â ÀûÇ¢ì ¸ðʼí¸ÙìÌû þøÄ¡Áø ÀûÇ¢ ÅÇ¡¸ò¾¢ø ´Õ ¾É¢Â¢¼ò¾¢ø ¨ÅòÐ (ÀÄ ÀûÇ¢¸ÙìÌ ÅÇ¡¸§Á þøÄ¡¾Ð À¢ÃÉ) µ¨Äò ¾¡úÅ¡Ãí¸¨Ç «ôÀʧ þÕì¸ Å¢¼Ä¡§Á?
§¸¡¨¼Â¢ø, Á¢ýÅ¢º¢È¢ þøÄ¡¾ ¬Š¦Àм¡Š ܨÃìÌì ¸£ú ÌÆó¨¾¸û Å¢Â÷òРŢÚÅ¢ÚòÐì ¸¨ÇòÐ ¯¼ø¿Ä¨ÉÔõ §¸¼¡ì¸¢ì ¦¸¡ñÎ ¸øÅ¢ À¢øÅ¨¾Å¢¼ ¸Õí¸ø, ¦ºí¸ø ¸ðʼí¸û §ÁġɨÅ. þÂü¨¸ «Ç¢ìÌõ ¿¢ÆÖõ, ¦ÅôÀò ¾½¢ôÒõ ¾Õõ µ¨Ä¨Â ¦ÅÚòÐ ´ÐìÌžüÌ Óý «¾üÌ ¸¢Ã¡Áô ¦À¡ÕÇ¡¾¡Ã - ºã¸ ¿¢¨Ä «ÊôÀ¨¼Â¢ø Á¡üÚ ¸ñÎÀ¢Êì¸ðÎõ.
«ýÒ¼ý,
þá.Ó
அன்புள்ள முருகன்!
எத்தனை நாளாயிற்று உங்கள் எழுத்தைப் பார்த்து!. நல்லாயிருக்கீங்களா? இரண்டு நாளாக ஒன்றும் செய்ய முடியவில்லை. வீட்டில் TV இல்லாததால் கொஞ்சம் பரவாயில்லை. நேற்று ஹிண்டுவின் முதல் பக்கத்தை எடுத்து மடித்து பையன் கையில் கிடைக்காமல் தூரப் போட்டு விட்டேன். ஏதோதோ நினைவுகள் வந்து சென்றுகொண்டு இருக்கின்றன. எப்படி எப்படியோ கஷ்டப் பட்டு உருவாக்கிய நாடு இது. இன்னும் எவ்வளவோ நன்றாக இருக்கலாம். இன்றைய கஷ்டங்களுக்கு வெறும் அரசியல் வாதிகள் மட்டும் காரணமல்ல. ஆனால் அப்படி காண்பித்து விட்டு ஊடகங்களும் அறிவுஜீவிகளும் நழுவிவிடுகிறார்கள். அதுதான் இப்படி எழுதி பாரத்தைப் போக்கலாம் என்று நினைத்தேன். நேற்றைக்கு சி. சுப்ரமணியத்தின் வாழ்க்கைப் புத்தகத்தை தேடி எடுத்து கொஞ்சநேரம் படித்தேன். அவருடைய கிராமத்திற்கு மூன்று கல் தொலைவில் தான் நான் வளர்ந்த கிராமம். அவர்தோட்டத்திற்கு வெளியில்தான் பொள்ளாச்சி-திருப்பூர் பஸ் நிற்கும். வர்கீஸ் குரியன் ப்ரிதீஷ் நந்திக்கு இல்லஸ்றேட்டட் வீக்லியில் கொடுத்த பேட்டி ஞாபகம் வந்தது. 'மன்தன்', ஐஐஎஸ்ஸியில் நண்பர்களோடு பார்த்து விட்டு கூட்டுறவு இயக்கங்கள் தான் நாட்டை முன்னேற்றும் என்று இரவெல்லாம் ஹாஸ்டலில் சண்டையிட்டுக் கொண்டிருந்தோம். இப்போது சொன்னால் இளைஞர்கள் சிரிப்பார்கள். இப்படி ஒரே பழைய எண்ணங்கள் வந்து தாக்கியபோது இரவில் எழுதினேன். நீங்கள் வலைப் பதிவெல்லாம் படிப்பீர்கள் என்று தெரியாது. திண்ணையிலாவது நிறைய எழுதுங்கள் முருகன்.
அன்புடன்
அருள்
முருகன், நீங்கள் ஓலைக்கூரையப் பற்றி சொன்னது மிக்கச் சரியானது. இணைய நண்பர்கள் நிலைமையின் தீவிரத்திலிருந்து இன்னும் விடுபடாமல் நல்லது என்று தோன்றியதை எழுதிக்கொண்டு இருக்கிறார்கள். கிராமத்துப் பள்ளிகளில் ஓலைக்கூரையை எடுத்து விட்டு ஆஸ்பெஸ்டாஸ் எல்லாம் சரியான தீர்வே அல்ல. ஓலைக்கூறையின் மீதே noncombustible spray அடித்து கொஞ்சம் பாதுகாப்பாக வைக்க முடியும். இதை எந்த பணியாளரும் செய்யலாம். இன்னும் எவ்வளவோ. -அருள்
அருள்,
இந்தக் குறிப்பின்மீது கருத்து எழுதத் தொடங்கின்னேன். அது நீண்டு கொண்டே போக, ப்ளாக்ஸ்பாட் அனுமதிக்குமோ என்று தெரியாமல் அதை என்னுடைய வலைக்குறிப்பிலேயே போட்டுவிட்டேன்.
http://www.tamillinux.org/venkat/myblog/archives/000360.html
வெங்கட்
முருகன், பேராசைகளற்ற சமூகத்திற்குக் குளிர்ச்சியையும், நிழலையும் தந்துகொண்டிருந்த கூரைகளின் காலம் இப்பொழுது கிட்டத்தட்ட முடிந்துபோய்விட்டது. ஆனால் அதற்கு அஸ்பெஸ்டாஸ், அல்லது தகரக் கொட்டகைகள்தான் மாற்று என்பதில்லை. சோகத்தைப் படித்தவுடனேயே எனக்கு knee-jerk reaction ஆகத் தோன்றிய பாலிமர் கூரைகளும், அலுமினியத்தடுப்புகளும் நிதானமாகச் சிந்தித்துப் பார்க்கும்பொழுதும் பொருத்தமானவையாகப் படுகின்றன. பாலிமர்களில் மெல்லிய உலோக இழைகளை உள்ளிடுவதன்மூலம் அவற்றின் தீப்பிடிக்காத தன்மையை உயர்த்தமுடியும். அதேபோல அவற்றில் சில கலப்பு மூலக்கூறுகளை உள்ளிட்டு அவற்றை நிழல்தரும், ஒளிபுகா தகடுகளாக வடிக்கமுடியும். தடுப்புச் சுவருக்கு அலுமினியம் சட்டகங்களையும், அவற்றில் மரக்கூழ் அட்டைகளைக் கொண்ட சுவற்றையும் பொருத்தலாம். (இப்பொழுது எளிதில் தீப்பிடிகாத மரக்கூழ் அட்டைகள் கிடைக்கின்றன). இவை எளிமையான, மலிவான மாற்றுகளாக அமையலாம். ஜப்பானில் பெரும்பாலான வீடுகள் இப்படி அலுமினியச் சட்டகங்களையும், மர அட்டைகளையும் கொண்டு கட்டப்படுகின்றன. நிலநடுக்கத்தால் அழிவு உண்டாகும் பொழுது இவை எளிதில் தீப்பிடிக்காது என்று சொல்கிறார்கள். அதேபோல் விபத்து நேரிடும் சமயங்களில் இவற்றை எளிதாகத் தகர்த்து உள்ளே புகுந்து காப்பாற்றமுடியும்.
அருள், உங்கள் இந்தப் பதிவு மிக முக்கியமானதும், நம்பிக்கையளிப்பதுமாகும். தற்போது நிகழ வேண்டிய புரட்சியாக நான் கருதுவது கல்விப் புரட்சி. அவர்களுக்கு மிக அவசியமான தேவை, உண்மையான கல்வி. அவர்களது உரிமைகளை, இந்த நாட்டில் அவர்களது சரியான இடத்தை அவர்களுக்கு உணர்த்தும் கல்வி. அவர்களது வாழ்வு அவர்களுக்கு அளிக்கப்பட்ட சலுகையல்ல அது அவர்களது உரிமை என்று அவர்களுக்கு உணர்த்தும் கல்வி. இவ்விதமான கல்வி முறையினை சுதந்திரத்திற்குப் பிறகு முழு அளவில் அவர்களிடம் கொண்டுசெல்ல நமது கல்வியாளர்கள் மறந்ததன் விளைவே நாம் சந்தித்துவரும் சகல சீரழிவுக்கும் காரணமென்பேன். பாரதியின் தேசியக்கல்வி பற்றிய கல்வித்திட்டமொன்றைப்பற்றிய அக்கறைக்குப் பிறகு அத்தகைய உண்மையான முயற்சிகளை நான் அறியவில்லை. மக்களுக்கான கல்வி, அவர்களது அரசு அமைப்பு, அதன் செயல்படும் விதம், அதில் அவர்களது உரிமை, பங்களிப்பு இவைகளை சந்தேகத்துக்கிடமில்லாமல் சொல்வதாக இருக்கவேண்டும். அது மக்களை, அவர்களது நடைமுறை அறிவை, தலைமுறை தலைமுறையாக சேகரித்து செழுமைப்படுத்தி வந்த சில அறிவுத்துறைகளை ஓரே நாளில் ஏளனம் செய்து உதறச் செய்து அவர்களை தாழ்வுமனப்பான்மையும், பயமும் கொள்ளச் செய்யாமல் அந்த பாரம்பரிய உன்னதங்களை பயன்படுத்திக்கொள்வதாய், நவீனப்படுத்துவதாய், பரவலாக்குவதாய் இருக்க வேண்டும். இந்த கும்பகோணம் விபத்து மறுபடி சொல்லிகிற முக்கியமான விசயமாக நான் இதைத்தான் நினைக்கிறேன். இன்னும் மக்களை வெறும் அடிமைகளைபோல கருதி அவர்களுக்கு உதவித் தொகை வழங்குவதையும், அனுதாபம் காட்டுவதையும், சில புதிய விதிகளை (சட்டங்களை) உண்டாக்கி மேலும் சில ஊழல் ஊற்றுக்கண்களை திறப்பதையும் வழமை போல விபத்து நிவாரணப் பணியாக செய்வதை அரசும், அமைப்பும் உடனே நிறுத்தவேண்டும். மாறாக தற்காலிக உதவியோடு கூட மக்களுக்கு கல்வி பற்றிய புரிதலை, தகுந்த கல்விமுறையினை தேர்ந்தெடுக்கத் தேவையான தகவலகளை. சரியான பள்ளிச் சூழல் பற்றிய விழிப்புணர்வை, அதைக்கோரிப்பெறுவதற்கு அவர்களுக்குள்ள உரிமையினை ஒரு போர்க்கால வேகத்தோடு மக்களிடம் கொண்டு செல்லவேண்டும். அனுதாபம் காட்டுவதும், பெறுவதும் எல்லோருக்கும் இதமானது; எல்லோருக்கும் உடனடி பயனளிக்கக் கூடியது. ஆனால் இது மக்களை ஏமாற்றுவதும் ஆகும். உண்மையான உரிமைகளை அவர்களை அறியச்செய்வது அரசுக்கும் அமைப்புக்கும் மிக ஆபத்தானது. அதனால்தான் இந்த விசயத்தில் எல்லா அரசியல்வாதிகளும் ஒரேபோல அனுதாபத்தையும் கண்ணீரையும் தருவதில் குறியாய் இருக்கின்றனர். தமிழக (இந்திய) கல்வியாளர்கள், அறிஞர்கள் யாரும் உண்மையான தீர்வுகுறித்து பேசாதது எனக்கு வியப்பையே அளிக்கிறது. வெறும் கூரையையும், அடுப்பையும், சில சத்துணவு பணியாளர்களையும், சில பள்ளி நிர்வாகிகளையும் விபத்தின் காரணமாய் காண்பிப்பது மிக ஏமாற்றமளிக்கிறது. இதனால் நாம் இன்னொரு விபத்திற்கான வழியை திறந்தே வைத்திருப்பதுடன், இந்த விபத்து காட்டுகிற முக்கியமான படிப்பினையான மக்களை அவர்கள் உரிமைகள், பொறுப்புகள், வாழ்க்கையைப்பற்றிய மதிப்பீடுகள் பற்றி அறிவுறுத்துகிற வேலையை செய்யாமல் இருப்பது இந்த விபத்தைவிட மோசமானது என்றே நான் கருதுகிறேன்.
சென்ற பதிவுக்கும் எனது பின்னூட்டம் உள்ளது. நன்றி.
அந்த அந்த காலகட்டங்களின் தேவைக்கு ஏற்ப,
மீதமிருக்கும் ஒன்றிரண்டு நல்ல அரசியல்வாதிகளும் ஆட்சியாளர்களும் அவசிய தொலைநோக்குத் திட்டங்களை செய்து கொண்டுதான் இருக்கிறார்கள்.
அந்தவகையில், 90 களில் நடந்த தகவல் தொடர்பு வளர்ச்சியும், தற்போது நடைபெறும் தரைவழித் தொடர்பு வளர்ச்சியும் குறிப்பிடத்தக்கவை. ராஜிவ் காந்தியும் வாஜ்பாயும் அதனாலேயே போற்றுதலுக்கு உரியவர்கள் வரிசையில் இடம் பிடிக்கிறார்கள்.
இதன் தொடர்ச்சியாக நதிநீர் இணைப்போ அன்றி வேறுவழிகள் மூலமோ குடிநீர் வசதிகளைத் தங்குதடையின்றி செய்ய முன் வரும் அரசியல்வாதிகளும் ஆட்சியாளர்களும் நம் HALL OF FAME -ல் நிச்சயம் இடம் பிடிப்பார்கள்.
அருள், இந்தப் பதிவின் தாக்கம் ஆழமானது, இதன் தொடர்ச்சியை கண்டிப்பாக நீங்கள் எழுத வேண்டும் என விழைகிறேன்.
-Srinivas Venkat
இன்னும் கொஞ்சம் விரிவாக இங்கு எழுதியுள்ளேன்.
http://ntmani.blogspot.com/2004/07/blog-post_21.html
Post a Comment