Friday, October 22, 2004

நிரலாளர்களின் ஜெ ...

J எனும் நிரல்மொழியை யாத்த கென் ஐவெர்சன் ஒக்டோபர் 19 ம் நாள் (செவ்வாய்) மதியம் தன் கம்யூட்டரில் புது J lab ஒன்றிற்காக வேலை செய்து கொண்டிருக்கும் போது மாரடைப்பு ஏற்பட்டது. அவருக்கு வயது 83. மூன்று நாள் கழித்து நேற்று இறந்தார். J பற்றி : இது பழைய APL மொழியின் உருமாற்ற வளர்நிலை மொழி. ( இதன் பைனரிகள் வேண்டுவோர் இதன் இணையத்தளத்திலிருந்து இலிருந்து பெறலாம் - அனைத்து தள அமைப்புகளுக்கும் கிடைக்கும்). மிக அடர்த்தியான மொழி. சி வழிவந்த மொழிகளில் முப்பது நாற்பது நிரல் வாக்கியங்கள் செய்யும் வேலையை ஜே யில் ஒரே வரியில் செய்து விடலாம்.
சற்றே கணிதப் பயிற்சி உள்ளவர்களும் நிரல் எழுதுவது எவ்வளவு எளிதானது என்பதை உணரலாம்.
இன்றைய நிரலாளர்களில் எல்லோரும் பொதுவாக அறிந்த சி, சி++, ஜாவா போன்ற மொழிகளைத்தவிர இன்னும் மிக சக்தியும் வீச்சும் கொண்ட சில மொழிகள் உள்ளன. சில பெரும் நிறுவனங்களில் தம் உள்பயனுக்காக எழுதப்படும் மிக சிக்கலான, பெரிய அளவிலான நிரல்க்கட்டுகளை அவை இம்மொழிகளில் தம் பணியாட்களைக் கொண்டு தாமே உருவாக்கிக்கொள்கின்றன. நூற்றுக்கணக்கில் (இங்கே இந்தியாவில் அயிரக்கணக்கில்) பணியாளர்களைக் கொண்ட மென்பொருள் நிறுவனக்களில் இம்மொழிகளைக் காண்பது அரிது. லிஸ்ப், ஸ்மால்டாக், ஜே போன்றவை இத்தகைய 'ரகசிய' மொழிகளில் அடங்கும். இவற்றில் ஜே முக்கியமாக பங்குச்சந்தை கணிப்பிலும், ஆக்சுவரீஸ் போன்ற துறைகளிலும் உபயோகமாகிறது. இது வரிசை(array) களினூடே இயங்கும் மொழியாதலால் மிகப்பெரிய அணி (matrix) களை உள்ளிட்ட கணிப்புகளை விரைவில் செயலாக்க ஏதுவாகிறது. ஒரு உதாரணமாக நிலத்தரவு நிரல்களில் (GIS) அதிகப்படியாக உபயோகப்படுத்தும் ரேஸ்டர் டேடா உள்ளிட்ட கணிப்புகளுக்கு பெரும் அணிகளை தன்னிச்சையாக பயன்படுத்தும் மொழி உள்கட்டுகள் மிகவும் உதவியாக இருக்கும்.

சும்மா ஒரு ஜாலிக்கு இதை 'இறக்கி' பயன்படுத்திப் பாருங்கள். போதுமான செயல்பாட்டுக் குறிப்புகளும், பயிற்சிகளும் இணைத்தளத்திலேயே உள்ளன.

8 comments:

Jayaprakash Sampath said...

அ.செ: இதை பொட்டி தட்டுபவர்கள் கவனித்துக் கொள்வார்கள். captive consumption க்கு தமிழ் வார்த்தை தேடிக் கொண்டிருந்தேன். கிடைத்தது. நன்றி

Anonymous said...

Dear Arul,


Interesting posting indeed.Thanks.

Curious to know anyone still using AWK, a C like programming language in the Unix environment, more terse and extremely powerful. I had used it for writing complex routine jobs - accomplishing with a few lines of AWK code what three times more lines in C would normally take to complete. Good old days, those were :-)

rgds,
era.mu

arulselvan said...

thanks eramu. ofcourse unix guys do still use awk but all of them must be above 40. :-) . kids dont learn beauties like that no more. if they pickup a phython or a ruby these days, ok, there is still hope. good old times indeed.

-arul

Badri Seshadri said...

அருள், இரா.மு: இன்றும் கூட யூனி*ஸ் இயங்குதள நிர்வாகிகள் sed, awk பயன்படுத்துகிறார்கள். நான் கூட (:-) சில சமயங்களில் செய்கிறேன். இதற்காக python, perl என்று போகத் தேவையில்லை. முக்கியமாக பல apache_access_stats கோப்புகளை வைத்துக்கொண்டு அதிலிருந்து சில தேவையான விஷயங்களை வேகமாக உருவ இவற்றைத்தான் (sed, awk) கமாண்ட் லைனிலிருந்து தட்டுகிறோம். grep மற்றுமொரு உருப்படியான கட்டளை.

Anonymous said...

Aha! Grep, egrep .. `ËÀý ¦ÀÃ𼡠(±ýÉ ¦ÀÂ÷!) À «ð¨¼ô Òò¾¸ò¨¾ ±ôÀÊ ÁÈì¸ ÓÊÔõ?

era.mu

Venkat said...

பத்ரி, இரா.மு, அருள் - sed, awk, grep ம்ம்ம்... Nostalgia is not what it used to be!

grep - என்ன ஒரு மந்திரம். பெரியவங்க தெரியாமயா சொன்னாங்க - "you can't grep a dead tree"

Anonymous said...

Nice to see you back Venkat. Welcome.

I'm sure you would have savoured that treasure - 'Pointers in C' by Yashwant Kanitkar. Pointers, pointers to pointers, pointers to pointers to pointers, manipulating structs. A typical code fragment would look like a mytholgical battlefield with lots and lots of arrows -> (struct pointer reference)

Somehow I am vastly infulenced by these Marathas - Kanitkar, Kolatkar :-)

rgds,
era.mu

arulselvan said...

sed and awk : yes i know a guy who formatted his whole thesis with just these. lot of 'kutti' formatting like html, xml formatting as usual is pretty well accomplished with least fuss with these tools. the majority of windows guys dont use small tools and it looks like a culture thing. the windows scripting facility is quite powerful enough but i really need to beg our sysadmin to use it for some automation. they spend days searching news groups to findout which button to click in which window to do some admin job. well these mscs .... aaaarrrgh.

arul