Friday, January 28, 2005

இ.தி -28

"Oh. no., The more you think about it the more freaky it gets ...."

[http://news.bbc.co.uk/2/hi/europe/4216431.stm]

Thursday, January 27, 2005

இ.தி-27"உமணன் முன்னிரவில் பொதியுடன் புறப்படு என்கிறான். நீ சேற்றில் இனிதுழன்று என்னை ஆம்பல் மலர் கொணரப் பணிக்கிறாய். இப்படியாயிற்று போத்தின் வாழ்வு"

Wednesday, January 26, 2005

இ.தி. -26
Lisp is the red pill. -- John Fraser, comp.lang.lisp" Choose wisely buddy. You are on your own"

" mumble...mumble...mumble... no seehash I presume..."

Monday, January 24, 2005

இ.தி- 25

"Look, I fought Tusken Raiders on Tatooine. You are from around here and how does one fight in these darned grasslands ..."
" Like it helps. I was drilling down subs filled with simbodies and these are commies in flesh..."

Sunday, January 23, 2005

பின்னால் வருபவர்கள்

நீண்ட வராண்டா
சுழலும் மாடிப்படி
தனித்த நெடும்பாதை
எங்கும் எப்பொழுதும்
பின்னால் வருபவர்கள்

முதுகின் பரப்பில்
உறுத்தும் பார்வைகள்
புறங்கழுத்தில்
காது மடல்படிப்பில்
சூழும் வார்த்தைகள்
உதிர்த்தபடி
என்றும் தொடர்ந்து
பின்னால் வருபவர்
ஒற்றைப்பனை
தொத்தி ஏற
பிருஷ்டத்தில் தலைஉரசி
உந்தி வருபவர்கள்
நீரில் பாய்ந்தால்
சுறாப்போல் முகர்ந்து
தடம்பற்றி வருவர்
பின்நெருங்கி

சிறகுவிரித்து புகைபீச்சி
உயரே விரைந்தால்
கண்ணெதிரில் திரையில்
புள்ளியாய்த்தோன்றி
பின்னர் விரிந்து
சிறகடியில் வெடிப்பவர்கள்
ஒவ்வொரு இலையிலும் நூறாய்த் தொங்கி
சாறு உறிஞ்சி சக்கை உதிர்ப்பர்
கூழாங்கல்லடியில் பதுங்கிக்காத்து
கால்பற்றி ஏறி தொடையைக் குத்றுவர்
விட்டுவரும் காலடிகளை
வெட்டி டப்பியில் அடைத்து
கண்ணாடி அறைபதுக்குவர்

ஓடத் துரத்தி
நிற்கக் காத்து
வீழ்கையில் சூழ்வர்
பின்னால் வருபவர்கள்


-ஜூலை, 84

Saturday, January 22, 2005

காமகுரா, ஜப்பான்

பதினைந்தாம் நூற்றாண்டில் வந்த ட்சுனாமியில் அடித்துச் செல்லப்பட்ட கோயிலில் இருந்த பெரும்புத்தர் (தைபுட்ஸு) சிலை -12ம் நூற்றாண்டில் வார்க்கப்பட்டது- இப்பொழுது வெளியில். காமகுரா, ஜப்பான்.

மற்றொரு கோணம்...

Friday, January 21, 2005

காட்சியும் சொல்லும்

சென்ற கார்ட்டூன் பதிவுக்குக்கான ஜெயஸ்ரீயின் பின்னூட்டம் சற்றே மனக்கசப்புடன் பதிக்கப்பட்டது தெரிகிறது. எழுத்துக்கள் ஆயிரம் வகை வந்தாலும் ஏதேனும் ஒரு காரணத்திற்காக அதே பொருளைப் பற்றிய ஒரு படம் ஒருவரை அதிகம் பாதிக்க வாய்ப்புள்ளது. இது ஏன் என்பது புதிர்தான். நடப்பு நிகழ்ச்சிகளைக் கொண்டு கார்ட்டூன் போடுவது இன்னும் அதிக மன வாட்டுதல்களை அளிக்கவும் கூடும். குறிப்பாக இறப்பு போன்ற மாற்றோரின் துயர்தோய்ந்த நிகழ்வுகளை அதிகவனமாகவே கையாளவேண்டியுள்ளது. நேரடியாக பிறர் துயரத்தை, செய்தியாகக் கையாள்வது எந்த நடப்பு ஊடகச் செயல்பாட்டிலும் பலகேள்விகளை எழுப்பக்கூடியதுதான். பிற மனிதனின் துக்கத்தை வார்த்தைக் கூட்டங்களிலோ, படவரைவுகளிலோ, புகைப்பட எழில்கோணங்களிலோ உடன் மாற்றிக்கொடுப்பது என்பது இன்றைய செய்தி ஊடகங்களின் தினசரிச் செயல்பாடுதான் என்றபோதிலும், ஒரு கொலையை எந்த வார்த்தைகளில் சொல்வது, எந்த கோணத்தில் படம் பிடிப்பது, எந்தக் கீற்றில் கார்ட்டூன் போடுவது? இதில் துறைச் செயல்திறமை ஒருபக்கம் இருந்தாலும் சகமானுடன் ஒருவனின் தகைமை பற்றிய மதிப்பின் செயலாகவும் இது உள்ளது. இதில் எனக்கென்று முழுமையான விடைகள் இல்லாவிட்டாலும் I would rather decontextualise than dehumanise. எடுத்துக்காட்டாக முந்தைய பதிவு. காஞ்சியில் இன்னொரு வைணவ மட அதிகாரி படுகொலை என்ற செய்தியைப் படித்தவுடன் ஏதாவது எழுதலாம் என்றே நினைத்தேன். ஆனால் எழுத்து இயல்பாக வருவதில்லை .தமிழ் தட்டச்சும் அறியாதது. அரைப்பக்க விடயம் எழுத அரை அல்லது முக்கால் மணிநேரம் ஆகிவிடும். அதே பெயின்ட் பிரஷ்ஷில் ஐந்து நிமிடத்தில் கார்ட்டூன், இரண்டு நிமிடத்தில் வலையேற்றம் என சடுதியில் வேறுவேலை பார்க்கப் போய்விடலாம். கார்ட்டூன் போட ஆரம்பித்தால் முதலில் தோன்றியது நான்கைந்து வைணவர்கள் ஊரைவிட்டு வெளியே ஓடுவது போன்ற ஒரு படிமம். தோன்றின உடனே அது சரியல்ல இன்னும் விலக வேண்டும் என எண்ணி, இரண்டொரு மிருகங்கள் திருமண்ணோடு ஓடுவது போலவும் பிற மிருகங்கள் நகைப்பது போலவும் தோன்றிற்று. அதுவும் மிக தாழ் உணர்சியானதாய்ப்பட்டதால் சரி, இயல்பிலும் புராணத்திலும் நாமதாரியான அணில் நினைவுக்கு வந்தது. அதையே வரைந்தேன். ஆனால் இந்த நிகழ்வுக்கான சுட்டியையோ, இணைச்செய்திகளையோ கூறத்தேவையில்லை என்றே நான் நினைத்தேன். அப்படியே இதற்கு முன்னும் பலமுறை செய்துள்ளேன். அதற்கு முக்கிய காரணம் decontexualisation தான். ஆனால் இதுவே ஒரு தேவையில்லாத மருண்மைக்கும் இட்டுச்சொல்கிறதோ என சந்தேகமாக இருக்கிறது. கார்ட்டூன்களின் subversive செயல்திறம் பற்றிச் சொல்லவேண்டியதில்லை. பேட் ஓலிபாந்த், கேரி த்ரூதோ போன்றோர் இந்த புஷ் மந்தியின் பாட்டனான ரீகனைக் காய்ச்சிய காய்ச்சை மறக்க முடியுமா. எமர்ஜென்ஸியின் போது தணிக்கை செய்யப்பட்ட அபு அபிரகாமின் பல வெள்ளைச் செவ்வகங்களை எவ்வளவு முறை கண்டோம். எண்பதுகளில், பம்பாயிலிருந்து வந்த ஸண்டே அப்சர்வரில் அன்றைய மஞ்சுளா பத்மனாபனும், ரவிகுமாரும் இளமையின் துடிப்பில் எவ்வளவு வரைந்து குவித்தார்கள். ஆனால் இன்றைக்கு கார்ட்டூன்கள் இந்தியாவில் சொல்லுந்தரமாக இல்லை. ஒரு பத்து ஆண்டுகள் ஸண்டே அப்சர்வர்-இல்லஸ்ட்ற்றேட்டட் வீக்லி-டெபொனேர் கொடுத்த படிப்பவனின் அறிவைக்குறைத்து மதிப்பிடாமல் எழுதிய எழுத்துக்களை பின்வந்த எப்பத்திரிக்கைகளிலும் காணமுடிவதில்லை. இப்படி அணில் ஆனை போடுவதற்கே இன்றைக்கு இணையத்தில் இந்தப்பாடு. கார்ட்டூன்களைப் பற்றிப் பேசினால் நேரம் போதாது. ஆனால் அந்தோனியோ போஹியாஸை காப்பியடித்து விகடனில் வரும் வேட்டி கரை வேட்டியை எனக்கு சுத்தமாகப் பிடிக்கவில்ல என்பதை மீண்டும் சொல்லியே ஆகவேண்டும் (முதலிலேயே சொல்லவில்லையா. பரவாயில்லை). எங்கோ துவங்கியது இங்கே வந்துவிட்டது.

Thursday, January 20, 2005

இ.தி.-24
" ஊருக்குள்ளே நாமதாரிங்க இருக்க முடியாத நிலைமை ஆயிருச்சே. அதுதான் கொஞ்ச நாள் இப்பிடி வெளியே இருந்துட்டுப் போலாம்னு வந்தேன் ..."

Sunday, January 16, 2005

புத்தகக் கண்காட்சி

இந்தவருட புத்தகக் கண்காட்சியில் நல்ல புத்தகங்கள் பல வாங்க முடிந்தது. படைப்பிலக்கியம் அல்லாதவைதான் நிறைய.
வாங்கியதில் முக்கியமானவை:

1. அறிவியல் தமிழறிஞர் பெ. நா. அப்புசுவாமி
(தமிழில் அறிவியலைப் பற்றி பொதுமக்களுக்கு எழுதியவர்களுள் முக்கியமானவரான அப்புசுவாமி பற்றிய 16 கட்டுரைகள்),
பதிப்பாசிரியர்: கிருட்டினமூர்த்தி, வளர்மதி, தசரதன்,
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், 2003.
2. பிரமாண்டமும் ஒச்சமும்
(சி.சு செல்லப்பாவின் படைப்புகள் பற்றி 8 கட்டுரைகள்),
தொகுப்பு: பெருமாள் முருகன்,
காலச்சுவடு வெளியீடு, 2004.
3. தொல்லியல் நோக்கில் சங்க காலம், கா.ராஜன், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், 2004.
4. சிரவையாதீனப் பதிப்புகள், (கோவையருகிலுள்ள கொளமார மடத்தின் பதிப்புகளைப்பற்றியது ), ப.வெ. நாகராஜன், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், 2004.
5. பண்டைத் தமிழக வரைவுகளும் குறியீடுகளும், இராசு. பவுன்துரை, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், 2004.
6. போகர் நிகண்டு, தாமரை நூலகம், 1998.
7. காகபுசுண்டர் பெருங்காவியம் 1000, தாமரை நூலகம், 1999.
8. இயல்பியல், வேதியியல், கணிதவியல் கலைச்சொற்கள், இராம. சுந்தரம், தமிழ்ப் பல்கலைக்கழகம், 1997.
9. கண்டதைச் சொல்லுகிறேன், ஞானி, விழிகள், 2004
10. இரவுக்கு முன்பு வருவது மாலை, ஆதவன், கிழக்கு பதிப்பகம், 2004
11. அரசூர் வம்சம், இரா.முருகன், கிழக்கு பதிப்பகம், 2004.
12. தமிழகத்தில் ஆசீவகர்கள், ரா. விஜயலட்சுமி, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், 1998.

இன்னும் சில தத்துவயியல் பற்றிய ஆங்கில புத்தகங்கள் வாங்கினேன்.

இதற்குமேல் வீட்டில் வெளியே விரட்டிவிடுவார்கள் என்பதால் நிறுத்திக்கொண்டேன். பையன் அப்பா அடுத்தது என் சுற்று என்று கிளம்பியிருக்கிறான். பார்போம். காட்சியில் அகப்பட்ட சிலருடைய படங்கள். நீங்களே அடையாளம் கண்டுபிடிக்க.

Wednesday, January 12, 2005

இ.தி- 23" ஆமாங்க, போலீசுக்கு ஒண்ணும் புரியல்ல. நீங்கதான் குற்றவாளின்னு கண்டுபிடிக்கற வரைக்கும் இங்க தான் இருக்கணும்..."

Friday, January 07, 2005

இ.தி.22

"BSOD is our IP. And I intend to keep it that way. The commies are welcome to have a RedSOD if they feel like it "

BillG

Wednesday, January 05, 2005

நேர்வழியின் பயங்கள்

நான் தவறு செய்யவில்லை
என்கின்றன என் புத்தகங்கள்
தவறவில்லை என்கின்றனர் நண்பர்கள்
தவறேதும் நான் அறியேன்
அரசாங்கம் சொல்கிறது தினமும்
டீவீயும் ரேடியோவும்
திரைப்படங்களும் சுவரொட்டிகளும்
உறுதிப்படுத்துகின்றன
நான் தவறு செய்யவில்லை
மதம் சொல்கிறது
செய்தித் தாள்கள் முதல்பக்கத்தில்
கட்டமிட்டு அறிவிக்கின்றன
பிழைஅறியாதவன் நான்
சுற்றமும் கடைவீதியில்
கற்ற விளம்பரமும்
தலைவனும் தனித்த ஒவ்வொருவனும்
அமைதிப் படுத்துகின்றனர்
தவறு செய்யவில்லை நான்
தனிமையில் புல்தளிர்களினூடே
கால்நிரவிப் போகையில்
ஆம் ஆம் ஆம் என
நம்பத் தவிக்குது மனம்

(மார்ச், 1985)

Monday, January 03, 2005

ஆய்வுக்கூடத்தின் இழுப்பறைகள்

சீசாக்களில் அடைத்து அடுக்கடுக்காய்த் தேவதைகள்
குளிர் அறைகளின் சுவர்களெங்கும்
இவையன்றோ கோடிகோடி மனிதர்க்கு உணவளித்தன
இவையன்றோ குழந்தைகளின் ஆரோக்கியம் கொடுத்தன
இவையன்றோ மூச்சுக்காற்றையும் எரிபொருளையும்
தீப்பற்றா வீடுகளையும் தந்தன
ஆயினும் ஒரு அதிகாலையில் கண்டேன்
அவற்றின் பற்களில் மனித ரத்தத்தை
அவற்றின் நகங்களூடே மனித தசைத்துணுக்குகளை
அவற்றின் சட்டைப்பைகளில் மனித எலும்பு உதிரிகளை
குளிர் அறையின் மென்மையான சிலுசிலுப்பில்
தேவதைகளின் இளந்தூக்கப்பொழுதில்
நான் பிடுங்கினேன் அவற்றின் பற்களை நகங்களை ஆடைகளை
சீசாக்களை உடைத்து எறியும்முன்
மூடிகளைப் பதுக்கிக்கொண்டேன்
வரும்சீசாக்களுக்கும் பொருந்துகின்றன இதே மூடிகள்

(ஜூலை, 1986)