Sunday, January 16, 2005

புத்தகக் கண்காட்சி

இந்தவருட புத்தகக் கண்காட்சியில் நல்ல புத்தகங்கள் பல வாங்க முடிந்தது. படைப்பிலக்கியம் அல்லாதவைதான் நிறைய.
வாங்கியதில் முக்கியமானவை:

1. அறிவியல் தமிழறிஞர் பெ. நா. அப்புசுவாமி
(தமிழில் அறிவியலைப் பற்றி பொதுமக்களுக்கு எழுதியவர்களுள் முக்கியமானவரான அப்புசுவாமி பற்றிய 16 கட்டுரைகள்),
பதிப்பாசிரியர்: கிருட்டினமூர்த்தி, வளர்மதி, தசரதன்,
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், 2003.
2. பிரமாண்டமும் ஒச்சமும்
(சி.சு செல்லப்பாவின் படைப்புகள் பற்றி 8 கட்டுரைகள்),
தொகுப்பு: பெருமாள் முருகன்,
காலச்சுவடு வெளியீடு, 2004.
3. தொல்லியல் நோக்கில் சங்க காலம், கா.ராஜன், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், 2004.
4. சிரவையாதீனப் பதிப்புகள், (கோவையருகிலுள்ள கொளமார மடத்தின் பதிப்புகளைப்பற்றியது ), ப.வெ. நாகராஜன், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், 2004.
5. பண்டைத் தமிழக வரைவுகளும் குறியீடுகளும், இராசு. பவுன்துரை, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், 2004.
6. போகர் நிகண்டு, தாமரை நூலகம், 1998.
7. காகபுசுண்டர் பெருங்காவியம் 1000, தாமரை நூலகம், 1999.
8. இயல்பியல், வேதியியல், கணிதவியல் கலைச்சொற்கள், இராம. சுந்தரம், தமிழ்ப் பல்கலைக்கழகம், 1997.
9. கண்டதைச் சொல்லுகிறேன், ஞானி, விழிகள், 2004
10. இரவுக்கு முன்பு வருவது மாலை, ஆதவன், கிழக்கு பதிப்பகம், 2004
11. அரசூர் வம்சம், இரா.முருகன், கிழக்கு பதிப்பகம், 2004.
12. தமிழகத்தில் ஆசீவகர்கள், ரா. விஜயலட்சுமி, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், 1998.

இன்னும் சில தத்துவயியல் பற்றிய ஆங்கில புத்தகங்கள் வாங்கினேன்.

இதற்குமேல் வீட்டில் வெளியே விரட்டிவிடுவார்கள் என்பதால் நிறுத்திக்கொண்டேன். பையன் அப்பா அடுத்தது என் சுற்று என்று கிளம்பியிருக்கிறான். பார்போம். காட்சியில் அகப்பட்ட சிலருடைய படங்கள். நீங்களே அடையாளம் கண்டுபிடிக்க.

7 comments:

இளங்கோ-டிசே said...

Do you have any photo of Maarimuthu (Yumaa Vasuki)? Just wondering after seeing the united-writers banner.

arulselvan said...

அன்பு டிசே,
யூமா வாசுகியை நான் பார்க்கவில்லை. நான் சென்றபோது எனக்குத்தெரிந்து இருந்த எழுத்தாளர்கள் இவர்கள்தான். எப்போதாவது அவரைப் பார்த்தால் கிளிக் செய்து போடுகிறேன்.
-அருள்

Venkat said...

அருள், அருள்... அவசரமா

இயல்பியல், வேதியியல், கணிதவியல் கலைச்சொற்கள், இராம. சுந்தரம், தமிழ்ப் பல்கலைக்கழகம், 1997.

எனக்கு ஒரு காப்பி வேணும். கொஞ்சம் வாங்கி பத்ரிகிட்ட கொடுத்துட்றீங்களா (நான் காமதேனு வழியா புத்தகம் ஆர்டர் செய்யும் பொழுது கூடப் போட்டு அனுப்புவார்).

arulselvan said...

வெங்கட்
ஒகே. நாளை செய்கிறேன்
அருள்

ராஜா said...

அருள். ஜெ.மோ போட்டோக்கு பின்னாடி ஒரு போட்டோ மறைந்திருக்கே.. அது யாருடையது?

Jayaprakash Sampath said...

ராஜா: அவர் பெயர் சோம.வள்ளியப்பன். கிழக்குப் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் அள்ள அள்ளப் பணம் என்ற நூலை எழுதியவர். தினமணியில் columnist. கல்கியில் சிறுகதைகள் எழுதியவர். சிறுகதை தொகுப்பு வெளியிட்டவர். இயக்குநர் வசந்தின் மூத்த சகோதரர்.

Kasi Arumugam said...

//இயக்குநர் வசந்தின் மூத்த சகோதரர்.//
இயக்குநர் வசந்தின் **அண்ணன்!**
இன்னொரு 'நீர்வீ்ழ்ச்சி'?
சும்மா வம்புக்கு,
-காசி