அருள்: இது யார், மதுரை கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனா? பாண்டிய நாட்டுக்காரன் போலிச் சான்றிதழ் காட்டி சோழ நாட்டுத் தேர்தலில் போட்டியிடுவதாக யாராவது வழக்கு தொடரப்போகிறார்கள். அப்படியே வாக்குச் சாவடிக்குப் பக்கத்தில் புகார் நகரின் சதுக்கபூதத்தை நிறுத்துங்கள். கள்ள வாக்குகளைத் தடுக்க அதுதான் சிறந்த வழி.
இதோ இன்னொரு வழக்கு. இறந்தவர் (பரிமேற் துஞ்சிய வாணவராயர்) எப்படி தேர்தலில் போட்டியிடலாம்? ஆகவே பழயாறை நந்தன் 'அன்னபோஸ்ட்டில்' தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கவேண்டும்.
சுந்தரமூர்த்தி சொன்னது தவிர, இந்தப் பானைகளின் அளவு ஒரே மாதிரியில்லயே, சாதி அடிப்படையில் இருக்கிறதா? செத்துப்போனவர்கள், ஒட்டுப்போட வருவார்கள், தேர்தலிலும் நின்றார்களா? :)
சுந்து ... நம் வாணவாரையர் போர்க்களத்தில் பரியின் மீது சும்மா ஒரு குட்டித் தூக்கம்தான் போட்டார். அதுக்கே இப்பிடி ஒரு பெயர். ஒரு குறுங்காவியம் அப்புறமா பாடலாம்னு இருக்கேன்.
துஞ்சிய=தூங்கியதானே முதல் அர்த்தம்
தங்கமணி: சரிதான்!.. ஒரு சத்திரியன், ஒரு வைசியன்,.......
ரமணி ... இருக்கலாம். பிராமணக்குடிகளுக்கு மட்டும் என படித்ததாக நினைவில்லை. ஆனால் அம்முறை சில உயர்குடிகளுக்கேயானது எனப் படித்தது நினைவிருக்கிறது. காலச்சுவட்டில் அல்ல. வேறெங்கோ ஆங்கிலத்தில். நாளை தேடிப்பார்க்கிறேன் அருள்
அருள்: முதல் கருத்து எழுதும்போது நானும் அவரை சரியான தூங்குமூஞ்சி ஆசாமி என்று தான் விட்டுவிட்டேன். பிறகு நந்தன் சார்பில் ஒரு விண்ணப்பம் போட்டுத்தான் பார்க்கலாமே என்று தோன்றியது. போர்க்களத்தில் குதிரை மீதமர்ந்தே குட்டித் தூக்கம் போட்டவரைத் தேர்ந்தெடுத்து ஊர்ச்சபையில் உட்காரவைத்தால் என்ன செய்வார்? துணைக்கு பக்கத்துப் பாக்கத்திலிருந்து முரசு கட்டிலில் உறங்கிய மோசிகீரனையும் தேர்ந்தெடுத்து அனுப்பலாம். மன்னர் வந்து இருவருக்கும் சேர்த்து சாமரம் வீசினாலும் வீசுவார்.
தங்கமணி: Perspective view வில் அருகில் உள்ள குடம் பெரிதாகவும், தொலைவில் உள்ளது சின்னதாகவும் தெரிவது இயற்கை. மற்றபடி எல்லாமே ஒரே அச்சில் வார்க்கப்பட்ட குடங்கள் தாம் என்று தேர்தல் ஆணையம் உறுதியுடன் கூறுகிறது.
அதுசரி, குடவோலை முறை என்பது வாக்களிக்கும் முறையா? லாட்டரிமுறை இல்லையா? பலபெயர்களை ஓலைகளில் எழுதி குடத்தில் போட்டு கைவிட்டுத் துழாவி திருவுளச்சீட்டு எடுப்பது போல தேர்ந்தெடுப்பது என்கிற மாதிரி தான் மு.வ. வின் நூலொன்றில் படித்ததாக நினைவு. பணம், அடிதடி போன்றவை நிறைந்துள்ள இப்போதுள்ள முறையைவிட random choice குடவோலை முறையே சாலச் சிறந்தது என்று வாதிட்டிருந்தார்.
காவலாளியும் கத்தியும் நந்தனின் பானைக்குப் பக்கத்தில் இருக்க வைத்திருப்பது "எவன் இதுல போடுறீங்கன்னு பாக்குறேன்" விதமான பயமுறுத்தல் அந்தக் காலத்திலும் இருந்திருக்கிறதைச் சொல்கிறதோ?!
13 comments:
சூப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்பபபபர்ர்ர்ர்ர்ர்ர்ர்!!
அருள்:
இது யார், மதுரை கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனா? பாண்டிய நாட்டுக்காரன் போலிச் சான்றிதழ் காட்டி சோழ நாட்டுத் தேர்தலில் போட்டியிடுவதாக யாராவது வழக்கு தொடரப்போகிறார்கள். அப்படியே வாக்குச் சாவடிக்குப் பக்கத்தில் புகார் நகரின் சதுக்கபூதத்தை நிறுத்துங்கள். கள்ள வாக்குகளைத் தடுக்க அதுதான் சிறந்த வழி.
இதோ இன்னொரு வழக்கு. இறந்தவர் (பரிமேற் துஞ்சிய வாணவராயர்) எப்படி தேர்தலில் போட்டியிடலாம்?
ஆகவே பழயாறை நந்தன் 'அன்னபோஸ்ட்டில்' தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கவேண்டும்.
vaakku seettukalutan oru paanai kaaviri aaththoram kidakkam.
visaaranai comission vaikka vendum.
Padam Super.
சுந்தரமூர்த்தி சொன்னது தவிர, இந்தப் பானைகளின் அளவு ஒரே மாதிரியில்லயே, சாதி அடிப்படையில் இருக்கிறதா? செத்துப்போனவர்கள், ஒட்டுப்போட வருவார்கள், தேர்தலிலும் நின்றார்களா? :)
ஆனால் படம் அருமையாக வந்திருக்கிறது!
சுந்து ...
நம் வாணவாரையர் போர்க்களத்தில் பரியின் மீது சும்மா ஒரு குட்டித் தூக்கம்தான் போட்டார். அதுக்கே இப்பிடி ஒரு பெயர். ஒரு குறுங்காவியம் அப்புறமா பாடலாம்னு இருக்கேன்.
துஞ்சிய=தூங்கியதானே முதல் அர்த்தம்
தங்கமணி:
சரிதான்!.. ஒரு சத்திரியன், ஒரு வைசியன்,.......
ஆதிரை,பரி: நன்றி. enjoy!
அருள்
அருள், அருமையான சாதிசார் வாக்காளர் பற்றிய கருத்து. ஆனால், அண்மையிலே காலச்சுவட்டிலே சுப்பராயலு கொடுத்திருக்கும் செவ்வியின்படி, இந்தச் சோழர்காலக்குடவோலைமுறை ஆக, பிராமணக்குடிகளுள்ளேயே அடங்கியிருந்ததாகச் சொல்கிறார்; எல்லாச்சமூகத்துக்கும் பரந்தல்ல. ஆனால், அதுவல்ல முக்கியமிங்கு; நீங்கள் கல்தோன்றிமண்தோன்றாக்காலத்துக்குடியின் வாக்கிடுவழமையைப் பொருத்தியவிதந்தான். அருமை.
ரமணி ...
இருக்கலாம். பிராமணக்குடிகளுக்கு மட்டும் என படித்ததாக நினைவில்லை. ஆனால் அம்முறை சில உயர்குடிகளுக்கேயானது எனப் படித்தது நினைவிருக்கிறது. காலச்சுவட்டில் அல்ல. வேறெங்கோ ஆங்கிலத்தில். நாளை தேடிப்பார்க்கிறேன்
அருள்
அருள்:
முதல் கருத்து எழுதும்போது நானும் அவரை சரியான தூங்குமூஞ்சி ஆசாமி என்று தான் விட்டுவிட்டேன். பிறகு நந்தன் சார்பில் ஒரு விண்ணப்பம் போட்டுத்தான் பார்க்கலாமே என்று தோன்றியது. போர்க்களத்தில் குதிரை மீதமர்ந்தே குட்டித் தூக்கம் போட்டவரைத் தேர்ந்தெடுத்து ஊர்ச்சபையில் உட்காரவைத்தால் என்ன செய்வார்? துணைக்கு பக்கத்துப் பாக்கத்திலிருந்து முரசு கட்டிலில் உறங்கிய மோசிகீரனையும் தேர்ந்தெடுத்து அனுப்பலாம். மன்னர் வந்து இருவருக்கும் சேர்த்து சாமரம் வீசினாலும் வீசுவார்.
தங்கமணி:
Perspective view வில் அருகில் உள்ள குடம் பெரிதாகவும், தொலைவில் உள்ளது சின்னதாகவும் தெரிவது இயற்கை. மற்றபடி எல்லாமே ஒரே அச்சில் வார்க்கப்பட்ட குடங்கள் தாம் என்று தேர்தல் ஆணையம் உறுதியுடன் கூறுகிறது.
அதுசரி, குடவோலை முறை என்பது வாக்களிக்கும் முறையா? லாட்டரிமுறை இல்லையா? பலபெயர்களை ஓலைகளில் எழுதி குடத்தில் போட்டு கைவிட்டுத் துழாவி திருவுளச்சீட்டு எடுப்பது போல தேர்ந்தெடுப்பது என்கிற மாதிரி தான் மு.வ. வின் நூலொன்றில் படித்ததாக நினைவு. பணம், அடிதடி போன்றவை நிறைந்துள்ள இப்போதுள்ள முறையைவிட random choice குடவோலை முறையே சாலச் சிறந்தது என்று வாதிட்டிருந்தார்.
சுந்து
காவலாளியும் கத்தியும் நந்தனின் பானைக்குப் பக்கத்தில் இருக்க வைத்திருப்பது "எவன் இதுல போடுறீங்கன்னு பாக்குறேன்" விதமான பயமுறுத்தல் அந்தக் காலத்திலும் இருந்திருக்கிறதைச் சொல்கிறதோ?!
/துஞ்சிய=தூங்கியதானே முதல் அர்த்தம்/
cemtary vote?
சோழர்காலத்து குடவோலை முறை தேர்தல் சாவடி
ஒரு ஒவியம் ஆயிரம் வார்த்தைகளுக்கு சமம்
Post a Comment