Monday, February 07, 2005

ஐன்ஸ்டைன், அறிவியல் ...

(இதைப்பற்றி விரிவாக எழுத ஆரம்பித்தேன். ஆனால் இப்போதைக்கு நேரம் காரணமாக இதுதான். மன்னிக்கவும். பின்னால் தொடர்கிறேன்)


பத்ரி, வெங்கட் இவர்களின் பதிவுகளின் தொடராக:


பத்திரிக்கைக் கட்டுரைகளைப் பற்றி சில பொதுவான குறிப்புகள்:
----------------------------------------------------------------------------------
பொதுவாக பத்திரிக்கைக் கட்டுரைகள் எடுக்கும் நிலைகள் பற்றி.

1, 'ஐன்ஸ்டைனுக்கு சரியாக கணிதம் தெரியாது'. இதைவிட மகத்தான ஒரு நகைச்சுவை இருக்கமுடியாது. அந்தக் காலத்தில் தேவைக்குப் போதுமான அளவுக்கு மேலேயே அவருக்கு கணிதம் தெரிந்தே இருந்தது. கணிதம் தெரிவது வேறு, கணிதவியலாளராக இருப்பது வேறு. அந்த வித்தியாசத்தை பத்திரிக்கைக் கட்டுரைகள் சரியாக வெளிக்கொணர்வதில்லை.

2.' ஐன்ஸ்டைன் ஒருவரே தனிச்சார்நிலைக் கோட்பாட்டையும், பொதுச் சார்நிலைக்கோட்பாட்டையும் கண்டுபிடித்தார்'.
முக்கியமான ஒன்று அறிவியல் ஒரு ஊர்கூடித் தேர் இழுக்கும் கூட்டு முயற்சிதான் என்பதை மறவாமல் இருப்பது. ஆனால் உரியவர்களுக்கு சரியான அளவில் புகழ் என்பதும் அறிவியலின் எழுதாத விதி.
அறிவியல் அதிலும் முக்கியமாக தனிவேட்டைக்காரன் அல்லது மரத்தடி ஞானம்காணும் ரிஷி போன்ற பிம்பம் கொடுக்கும் இயல்பியல், கணிதம் போன்ற துறைகளைப் பற்றிய பொதுஜன பத்திரிக்கைக் கட்டுரைகளில் தென்படும் தொனி மிகவும் ஏமாற்றமளிப்பது. இதுபோன்ற மனைவியின் அறிவைத் திருடினார், நண்பனின் மூளையை தனதாக்கினார் எனும் நிலைகளை உண்மை என கருதும் முன் சம அறிவு, ஒரே துறை சார்ந்த இருவரிடையே கருத்துப் பரிமாற்றம் 'கொடுத்து எடுக்கும்' முறையில் தான் பெரிதும் நடைபெறுகிறது. இதை பத்திரிக்கையாளர்கள் சரியாக உணர்ந்ததாகத் தெரியவில்லை.

பொதுசார்நிலைக்கோட்பாடு
------------------------------------------
1. ஹில்பர்ட், ஐன்ஸ்டைனுக்கு "ஐந்து நாட்கள்" முன்பாகவே பொதுசார்நிலைக் கோட்பாட்டை முடித்ததாக நம்பப் படுகிறது
2. ஹில்பர்ட் அந்த கட்டுரையை கோட்டிங்கன் அகடமிக்கு அனுப்புவதற்கு முன்னரே ஐன்ஸ்டைன்னுக்கு அதை அனுப்பியதாக நம்பப்படுகிறது.
(என் கார்ட்டூனில் இருக்கும் வேரியேஷனல் டெரிவேட்டிவ் இதுசம்பந்தமானதுதான். ஆனால் அதை 1901 ல் அந்தப் பெண்கள் பையில் வைத்திருப்பதாக காட்டியிருக்கிறேன். அந்த anachronism மும் ஜோக்கின் ஒரு பகுதி என்பதைத் தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன். )
3. இந்த பொதுசார்னிலைக்கோட்பாட்டிந் கடைசிச் சட்டக அமைப்பில் ஐன்ஸ்டைன், க்ரோஸ்மான், ஹில்பர்ட் என மூன்று பெரும் அறிஞர்களின் பங்களிப்பும் இருப்பதாக பொதுவாக அனைவரும் கருதுகின்றனர்.

இந்த சர்ச்சையில் இம்மூவரில் எவருடைய புகழையோ, திறமையையோ எந்த அறிவியலாளரும் குறைத்து மதிப்பதாக தெரியவில்லை. முன்னர் கண்டுபிடித்தவருக்கு புகழ் சேரவேண்டும் என்பது அறிவியலின் எழுதாத செந்நெறிகளில் ஒன்றாக இருந்தாலும் பத்திரிக்கையாளர்கள் இதை ஏதோ சதிப் புலனாய்வு போல பார்க்கவும் எழுதவும் செய்கிறார்கள். சிலருக்கு வேலை வாய்ப்பாக இத்தகைய சதிகள் அமைந்தால் சரிதான்.

6 comments:

Balaji-Paari said...

appaadaa!!
Ithu Ithu thaan naan solla ninaithathu.
For example, There is a contraversy in the discovery of Raman effect. It is indeed independently discovered by a Russian too. I think in Russian literature (scietific research papers) still Raman effect is known by that Russian scientist's name. I will give the name of that russian scientist later.

Balaji-Paari said...

Name of the Russians who observed similar phenomeno(raman effect) in quartz are Landsberg and Mandelstam.

Note:
1.Though this could not be directly compared with the situation in which Einstein and Miliva worked, I just wanted to bring to notice the contraversies exist even in widly acclaimed discoveries.
2. Raman spectroscopy is now taking the nano world by its magic. It is one of the powerful non destructive tool to probe the nanostructured materials as the vibrations of the nano crystal is different as that of their bulk form....(may be i will write about that in ariviyal koottu pathivu)

arulselvan said...

ஆமாம் பரி. இந்த முன்னுரிமைப் போட்டி பனிப்போர் (cold war) காலங்களில் மிகவும் அதிகம். ஒவ்வொரு மேற்கத்திய அறிவியல் கருத்துக்கும் ஒரு hyphonated ரஷ்யப் பெயர் இருக்கும். ஒருவிதத்தில் மேற்கத்திய-சோவியத் அறிவியலாளர்களிடையே தொடர்பே இல்லாமல் அற்றுப் போனதே அதன் காரணம். நிலைமையை சரி செய்ய அமெரிக்க இயற்பிய கழகம் american physical society, american mathematical society போன்ற அமைப்புகள் மிகவும் முயற்சிகள் செய்தன என்பதையும் மறுக்க முடியாது. அது அமரிக்க அரசின் மடத்தனமான பல கொள்கைகளுக்கு முரணாகி அறிவியல் காரர்கள் தொல்லைக்கு ஆளானதும் உண்டு. அந்தப்பக்கத்தில் கேட்கவே வேண்டாம். கோர்பஷேவ்வுக்கு முன்னால் ஆன்றெய் ஷகாரவ் வுக்காக மேற்கத்திய உலகில் நடைபெற்ற அறிவியலாளரின் எதிர்ப்புகள் ஞாபகத்துக்கு வருகின்றன. இது ஒரு பெரிய கதை - இதோடு நிறுத்திக்கொள்வோம். ஒரே கேள்விதான் மிஞ்சி இருக்கிறது. மாஸ்கோ பல்கலைக்கழகம் இப்போதும் படைபடையாக கணிதத்திலும் இயல்பியல்-இயங்கியலிலும் ஆன சூப்பர் மனிதர்களை உற்பத்தி செய்கிறதா என்ன?
நிச்சயம் நேனோ அளவைகளில் பருண்மையைப் பற்றி எழுதுங்கள். முக்கியமான சுறுசுறுப்பான துறை அது.

-/பெயரிலி. said...

/கோர்பஷேவ்வுக்கு முன்னால் ஆன்றெய் ஷகாரவ் வுக்காக மேற்கத்திய உலகில் நடைபெற்ற அறிவியலாளரின் எதிர்ப்புகள் ஞாபகத்துக்கு வருகின்றன./

அவருக்காக மேற்குத்திசை கவலைப்பட்டது, அறிவியலை(மட்டும்) கருத்திலே கொண்டல்லவே?

arulselvan said...

ரமணி,

:-). அதுதான் பெருங்கதை என்று கூறிவிட்டேனே. இந்தக்கதையெல்லாம் இப்போது யார் கேட்பார்கள் சொல்லுங்கள். இருந்தாலும் இதுபோன்றவற்றை யாராவது நம்மாட்கள் தமிழில் ஒரு நாள் எழுதவேண்டும்.

அருள்

arulselvan said...

ரமணி,

:-). அதுதான் பெருங்கதை என்று கூறிவிட்டேனே. இந்தக்கதையெல்லாம் இப்போது யார் கேட்பார்கள் சொல்லுங்கள். இருந்தாலும் இதுபோன்றவற்றை யாராவது நம்மாட்கள் தமிழில் ஒரு நாள் எழுதவேண்டும்.

அருள்