Friday, February 25, 2005

குடிமக்களும் தம் கொடியும்

நாராயண் கார்திகேயன் F1 கார்ப் பந்தயத்தின் போது அணியும் ஹெல்மெட்டில் இந்தியக் கொடியை வரையக்கூடாது என்று நமது அரசாங்கம் அறிவித்து விட்டது. இப்படி ஒரு அபத்தமான நிலைபாட்டை இந்தியா தவிர வேறேதாவது நாடு எடுத்திருக்கும் என்று நினைக்கவே முடியவில்லை.

எத்தனை மில்லியன் மக்கள் அகில உலகத்திலும் பார்க்கும் போட்டி இது. நாட்டின் பெயருக்கும் ஒரு சின்னத்திற்கும் எத்தனை இலவச விளம்பரம். இந்திய அரசு எத்தனை வர்த்தக கண்காட்சிகளையும் (Trade Fair) வேறு விளம்பரப் படையெடுப்புகளையும் நடத்தி இந்த அளவு 'இந்தியா' என்ர பிராண்டை பிரபல்யம் ஆக்க முடியும். யாராவது Brand Building ஆட்கள் இந்த மட இந்திய அரசுக்கு காதில் உரக்க கூவுவார்களா என்று தெரியவில்லை. வர்த்தக அமைச்சு இந்திய ஏற்றுமதிக்கு மாடாய் உழைப்பது இருக்க இப்படி இலவசமாய் வருவதையும் வேண்டாம் என்பதை என்னவென்று சொல்வது?
தன் தேசியக்கொடியை ஒரு குடிமகன் பெருமையுடன் ஹெல்மெட்டில் போட்டால் அதற்கு அவமதிப்பா? வெள்ளைக்காரன் ஆட்சிபோல இருக்கிறது. ஆமாம் ஜிம்மி ஹெண்றிக்ஸ், வுட் ஸ்டாக்கில் ஸ்டார் ஸ்பாங்கிள்ட் பேனர் வாசித்த மாதிரி இங்கே யாராவது செய்தால் அரசு என்ன செய்யும்? போடா அல்லது வாடா என்று சட்டம் சொல்லி ஜெயிலில் பிடித்து போட்டு விடுவார்களா?

(நாராயண் புகைப்படம் : நன்றி: (http://www.narainracing.com))

12 comments:

Thangamani said...

:)

-/பெயரிலி. said...

/ஸ்டார் ஸ்பாங்கிள்ட் பேனர்/
what about underwears in usa? ;-)

Narain Rajagopalan said...

இது மடத்தனம். சச்சின் டெண்டுல்கரின் ஹெல்மட்டில் இந்திய கொடி இருக்கிறதே ? இதற்கும் அரசாங்கம் தடை விதிக்குமா என்ன...பார்க்க: http://www.htcricket.com/news/specials/natwest/images/sachin1.jpg
ஹெல்மட்டின் முகப்பில் உள்ள சக்கரத்திற்கு கீழே பாருங்கள், இந்திய கொடி தெரியும். இந்திய அரசாங்கம் எதெதற்கெல்லாம் இரண்டைநிலை எடுக்கவேண்டும் என்கிற கட்டுப்பாடு இல்லையா?

arulselvan said...

நாராயண்:
ஆமா. இந்தனை வருஷம் கோடிக்கணக்கான இந்தியர்கள் கிரிக்கட் வீரர்கள் பனியனிலும், தலையிலும், காலிலும் பார்த்து வராத இழுக்கு இப்போது நம் கொடிக்கு வந்துவிட்டது. கார்திகேயன் ஜாலியாக "வேண்டான்னா விடுங்கள். உங்களுக்குத் தான் நஷ்டம். நான் ஸ்பான்ஸர் ஸ்டிக்கர் ஒட்டி காசு சம்பாதிக்கிறேன்" ன்னு சொல்லிவிட்டார்.
ரமணி:
அது சரி. அந்த அளவுக்கு இங்கே போகமாட்டார்கள். ஆமா கொடி யாருது?

Narain Rajagopalan said...

அருள்,
இதைத்தான் எங்க ஊர்ல, "சுய புத்தியும் கிடையாது. சொல் புத்தியும் கிடையாது" னு சொல்வாங்க. உலகமுழுக்க பாக்கற ஒரு விளையாட்டுல ப்ராண்டை வளர்க்காம, அரசாங்க துட்டை செலவு பண்ணிட்டு, இந்திய கலைவிழா எடுப்பாங்க!! போங்கய்யா நீங்களும், உங்க சமத்துவமும்!

Anonymous said...

அதென்னமோ கிரிகெட் விளையாட்டிற்கு பின்னாடி ஹிட்டன் அஜென்டா ஒண்ணு இருக்கு. :)
அப்படி இல்லாம அதில் கொடியெல்லாம் காட்டுவாங்களா?.
அது என்னான்னு சுந்தரரு ஒருமுறை சொன்னார். இப்போ அரசாங்கமே ஆமாங்குது. அவ்வளோதான் மேட்டரு.

இராதாகிருஷ்ணன் said...

மடத்தனமா இருக்கே! அப்படிக் கொடியைத் தலைக்கவசத்தில் போடக்கூடாதுங்கறதுக்கு என்ன காரணம் சொல்றாங்க?

-/பெயரிலி. said...

/அது சரி. அந்த அளவுக்கு இங்கே போகமாட்டார்கள். ஆமா கொடி யாருது?/
usa

arulselvan said...

ராதாகிருஷ்ணன்:

தேசியக் கொடியை 'சிதைக்கக்' கூடாது என்பது இதன் பொருள் என்று நினைக்கிறேன். ஒரு விதத்தில் சரிதான் என்று தோன்றினாலும் மக்கள் அது தமது என்று நினைக்கும் ஒரு உரிமை கொஞ்சமாவது வரவேண்டுமானால் கண்டும் காணாமலும் இருப்பது நல்லது

பாலாஜி:

இன்று அரசாங்கம் கிரிக்கட் வீரர்கள் மூவண்ணத்தை 'அசோக சக்கரம்' இல்லாமல் அணிந்து எதிர்வரும் பாகிஸ்தானுடன் நடக்கும் போட்டித்தொடரில் ஆடலாம் என்று அறிவித்திருக்கிறது. முடிபிளக்கும் வாதங்களுக்கும், நியாயப்படுத்துதல்களுக்கும் நம் அரசு இயந்திரத்துக்கு சொல்லித்தரவா வேண்டும்

ரமணி:

நான் கேட்டது வேறே. கொடி யாருடையது? அரசாங்கத்தினதா அல்லது நாட்டு மக்களுடையதா - என்ற அர்த்தத்தில். கொஞ்ச நாள் முன்னல் ஒருவர் கோர்ட்டில் கேஸ் போட்டு ஒரு குடிமகனாக நான் எங்கும் எப்போதும் கொடியை பறக்க விடுவேன் என்று கூறி வென்றார். என்ன ஒரு நிலை!

மு. சுந்தரமூர்த்தி said...

அருள்:
நம் காலத்து பாடநூலில் தேசியக்கொடியைப் பற்றி படித்த பாடம் நினைவில்லையா? 'கொடியை மேசைவிரிப்பாகவோ, அலங்காரப் பொருளாகவோ பயன்படுத்தக்கூடாது. சூரிய உதயத்திற்கு பிறகு ஏற்றி சூரியன் மறைவதற்கு முன் இறக்கிவிடவேண்டும்.அதை இப்படியிப்படி மடிக்கவேண்டும். கதர் துணியில் தான் செய்திருக்கவேண்டும் (இருந்தாலும் நாமெல்லாம் பட்டொளி வீசிப் பறக்கிறது என்று தான் சொல்லவேண்டும்)' என்று விலாவரியாக சொல்லியிருப்பார்கள். கொடிச் சட்டத் சீர்த்திருத்தம் வரப்போவதாக அண்மையில் எங்கோ படித்ததாக நினைவு.

மேலைக் கலாச்சாரத்தில் இவையெல்லாம் சின்னங்கள். நம் கலாச்சாரத்தில் இதுபோன்ற சின்னங்கள் எல்லாம் புனிதமானவை. புனிதத்தன்மைக் கெடாமல் பாதுகாக்கவேண்டும். பெயரிலி குறிப்பிட்டதைப் போல இங்கு கொடியை எதற்கெல்லாம் பயன்படுத்தமுடியுமோ அதற்கெல்லாம் பயன்படுத்துகிறார்கள் (இன்னும் டாய்லெட் காகிதம் தான் பாக்கி). இவை எல்லாமே சீனாவில் தயாராகி வருவிக்கப்படுகிறது என்பதும் இன்னொரு வித்தியாசம்.

சுந்து

-/பெயரிலி. said...

இது என்ன கேள்வி? நாட்டு மக்களுடையதே

arulselvan said...

சுந்து:
கிரிக்கட் போட்டிகளின் போது மக்கள் முகப் பூசுததிலும், அட்டைகளில் கிறுக்குவதிலும் மற்ற எல்லா வண்ணம் ஏற்கும் தளங்களிலும் வரைந்து களித்தலிலும் இந்த புனிதத்தை அரசு கண்டுகொள்வதில்லை. போரிலும் அதன் பதிலியான நவீன விளையாட்டிலும் இத்தகைய தேசிய புனித சின்னங்கள் வேறு வகைகளில் உணர்வூட்டத்தானே பயன்படுத்தப் படுகின்றன. இதை அங்கீகரித்தே அனைத்து நாடுகளும் இப்போதெல்லாம் செயல்படுகின்றன. தேசீய வெறியை ஆதரித்துப் பேசவில்லை. ஆனால் ஒரு நியாயமான எல்லைக்குள் தேசீயத்தின் பாதுகாப்பு உணர்வும் ஒரு விளையாட்டு வீரனுக்கு குடிமகன் என்ற முறையில் தேவையாக இருக்கும்போது அரசு ஏன் இப்படி பிணக்குகிறது என்று தெரியவில்லை. தேசியம் ஒரு kitsch ஆக மாறுவதற்கு உள் உடை உதாரணம். அத்துமீறிய அடையாள பேரதிகாரத்துக்கு எச்சரிக்கை செய்ய ஜிமி.
ரமணி: சும்மா அது rhetorical கேள்வி. உங்களைக் கேட்கவில்லை. :-)

அருள்