இன்றைய முக்கிய செய்தியாக:
அமெரிக்க அரசாங்கம் குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடிக்கு டிப்ளொமாட்டிக் விசா மறுத்திருக்கிறது. முன்பே அளித்திருந்த சுற்றுலா, வணிக விசாவையும் திரும்பப் பெற்றிருக்கிறது.
"மத சுதந்திரத்திற்கு எதிரான செயல்களுக்காக" இந்த நிலை எடுக்கப்பட்டிருக்கிறது.
5 comments:
If so, President Bush cannot be given visa to any country for all what he is dooing for the 'good' of other countries.
r.Pathmanaba Iyer
"தேசத்துக்கே இழுக்கு!" என்று பி.ஜே.பி அலறுகிறதே, அப்படியா?:))
அய்யர்,
சரிதான். அப்படிப் பார்த்தால் எந்த அமெரிக்க அதிபர்தான் வெளியே செல்ல முடியும்? இதுவே ஜெனரல் பினொசே கேட்டால் உள்ளே விடாமலா இருப்பார்கள்? வல்லரசு என்றால் அப்படித்தான். கொஞ்சம் அப்படி இப்படி.
சுந்தரவடிவேல்:
பிஜேபி அலறிக்கொண்டுதான் இருக்கிறது. ஆனால் இந்து மதவாதிகளுக்கு கிறுத்துவ மதவாதிகளிடம் பண்டமாற்றாக என்ன இருக்கமுடியும் - பணத்தத் தவிர? அதை அரசில் இருக்கும்போதுதான் செய்யமுடியும். பிஜெபி அரசில் இருந்தால் இந்த விசா மறுக்கப்பட்டிருக்குமா என்பதும் சந்தேகம்தான்.
அய்யர்:
//If so, President Bush cannot be given visa to any country for all what he is dooing for the 'good' of other countries.//
அதிகாரம் படைத்தவர்கள் செய்யும் எல்லா அட்டூழியங்களுக்கும் நீதி கிடைக்கவேண்டுமென்று விரும்பினாலும் கிடைத்துவிடுவதில்லை. அதற்காக ஒன்றுக்கு நீதி கிடைக்கும் வரை இன்னொன்றுக்கும் நீதி வேண்டாம் என்றா சொல்லமுடியும்? எப்போதாவது கிடைக்கும் ஓரிரண்டு சிறு வெற்றிகளை கொண்டாடுவதில் தப்பொன்றுமில்லையே.
மோடிக்கு விசா மறுக்கப்பட்டதில் சில NGO க்களின் பங்கு முக்கியமானது. அந்த வகையில் புஷ்ஷின் ஐரோப்பிய பயணத்தின்போது பொதுமக்கள் காட்டிய எதிர்ப்பையும் கணக்கில் கொள்ளவேண்டும்.
இது இந்தியாவுக்கே அவமானம் என்று சொல்கிறார்கள். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு முதலமைச்சருக்கு எந்த ஒரு நாடும் 'உள்ளே வராதே' என்று சொல்லுவது அவமானம் தான்.
ஆனால் மோடி எப்படி த்தேர்ந்தெடுக்கப்பட்டார்?- ஆயிரக்கணக்கில் மக்களை கொன்று குவித்தும் இலட்சக்கணக்கில் அகதிகளாக்கியும் கோடிக்கணக்கில் பயத்தை விதைத்தும் தானே......?. (எல்லாவற்றையும் demo-crazy பெயரால் சகித்துக்கொள்வது தான் நம்முடைய பலவீனமோ?) ஒரு நரக அசுரனை முதலமைச்சராக கொண்டு வந்ததும் தக்க வைத்துக்கொண்டிருப்பதும் ஒரு மதச்சார்பற்ற நாட்டுக்கு அவமானமாக இல்லாதப்போது விசா மறுக்கப்பட்டது மட்டும் எப்படி அவமானமாகும்?
ஆனால் ஒரு விஷயம் - இப்படி விரட்டி அடிக்கப்படவேண்டியவர்கள் பட்டியலில் புஷ்ஷுக்கு த்தான் முதலிடம் தர வேண்டும்.
Post a Comment