Saturday, May 07, 2005

இ.தி-40

Image hosted by Photobucket.com" உங்கள் விழுமியங்கள் உங்களுக்கு. என் விழுமியம் எனக்கு.
நான் இனி மரக்கறிதான் சாப்பிடுவேன்."

"என்னத்த வேணும்னாலும் சாப்பிடு. விழுமியம் கிழுமியம்ன்னு உளர்ரத நிறுத்தலேன்னா இனிமே வீட்டுக்கு வெளியிலேதான் சாப்பாடு. "

BBC :
Killer dino 'turned vegetarian'

26 comments:

-/பெயரிலி. said...

/Killer dino 'turned vegetarian'/
அப்ப அதுதான் இந்தக் கருத்துப்படத்துக்குக் காரணமென்கிறீர்கள்? ;-)

arulselvan said...

ரமணி
நிசமாவே அதுக்குத்தான் படம் போட்டேன். உடனே மீள்வாசிப்பு செய்து ஒரு படைப்பாளியை ஒதுக்கிவிடாதீர்கள். :-)
அருள்

Anonymous said...

:-))

இரா. செல்வராசு (R.Selvaraj) said...

நான் கூட இன்னிக்கு நினைச்சேன். இந்த விழுமியம் பாடாய்ப் படுகிறதே என்று :-). அருமையான படம் போட்டிருக்கீங்க. எப்படிங்க !

jeevagv said...

சயன்ஸ் சேனலில் சொன்னார்கள் - இந்த டினோ உருவான காலகட்டத்தில் தாவரங்கள் புதிதாக வந்திருக்க வேண்டும், அவற்றிற்கு மாமிசத்தைக் காட்டிலும் தாவரங்கள் பிடித்துப் போனதால் தாவர உண்ணிகளாக ஆகியிருக்கக்கூடும் என்று.

டினோக்கள்கூட மாறின, மனிதன்
இன்னமும் முழுதாய் மாறவில்லை.

-/பெயரிலி. said...

/டினோக்கள்கூட மாறின, மனிதன்
இன்னமும் முழுதாய் மாறவில்லை./

பாரதிதாசன் ஒரு முறை ஓரூருக்குக் கூட்டத்துக்குப் போயிருந்தார். கூட்டம் முடிந்ததும் விருந்து; விருந்திலே முழுக்க முழுக்க முழுக்க மரக்கறி; மரைக்கறியைக் காணோம். பாரதிதாசனுக்கு ஆத்திரம் வந்துவிட்டது. உபசரித்தவர்களே என்ற நன்றிகூட இல்லாமல் "இந்தக் இலைகுழையை எவன் தின்னுவான்?" என்று பாய்ந்திருக்கிறார். விருந்தோம்பியர்கள் தயங்கிக்கொண்டு இழுத்திருக்கின்றார்கள், "ஐயா, நீங்கள் பாரதியின் தாசன் என்பதாலே, அசைவம் உண்ணமாட்டீர்கள் என...." ஆத்திரத்தின் உச்சியிலே பாவேந்தர் கத்தினாராம், "ஆடு மாடு குரங்கு திங்கிற இலை குழையை எந்த மனுசன் திம்பான்?"

இக்கதை/நிகழ்வு எந்த அளவுக்கு உண்மையென்று தெரியாது; ஆனால், இந்தக் கதையிலேயேயும் ஒரு பாயிண்ட் இருக்கு, " உங்கள் விழுமியங்கள் உங்களுக்கு. என் விழுமியம் எனக்கு."

நீங்க என்ன சொல்றீங்க அருள், "மனுசன் எலை கொலையெல்லாம் சாப்டாத்தான் அரவிந்தர், நீட்ஷே சொல்ற சூப்பர்மான், ஸ்ரொய்க் நாட்ஸி எல்லாம் உருவாகுவாங்களா?"

:-))

Thangamani said...

அடுத்த தட்டில் கைவைத்து நமதுவிழுமியங்களை நிறுவும்போதே பிரச்சனை வருகிறது. ஆனால் ஒரு நம்பிக்கையாளனுக்கு தன்னுடைய நம்பிக்கைகளை அதிகம் பேர் பின்பற்றினால் தான் அவனுடையே நம்பிக்கையே வலுப்படும் என்பதாலும், சுரண்டல் சாத்தியமாக்கும் என்பதாலுமே இந்த விழுமிய தாக்குதல் நடக்கிறது.

என்னவோ, நான் மீள்வாசிப்பு நிகழ்த்தவில்லை :))

நல்ல பதிவு. எனக்கெல்லாம் புரியறமாதிரி இருக்கு.

//முழுக்க முழுக்க மரக்கறி; மரைக்கறியைக் காணோம்.//

பெயரிலி, உங்கள் சாய்ஸ் எதுவோ?

-/பெயரிலி. said...

/அடுத்த தட்டில் கைவைத்து நமதுவிழுமியங்களை நிறுவும்போதே பிரச்சனை வருகிறது. ஆனால் ஒரு நம்பிக்கையாளனுக்கு தன்னுடைய நம்பிக்கைகளை அதிகம் பேர் பின்பற்றினால் தான் அவனுடையே நம்பிக்கையே வலுப்படும் என்பதாலும், சுரண்டல் சாத்தியமாக்கும் என்பதாலுமே இந்த விழுமிய தாக்குதல் நடக்கிறது./

தங்கமணீ, அப்ப என்னதான் சொல்ல வாறியள்? டைனோ மாறினாலும்,... காசி.. அடச்சீ! இது வேற தலைப்பெல்லோ.. மனிசன் மாறத்தேவையில்லை எண்டோ? ;-)

/
//முழுக்க முழுக்க மரக்கறி; மரைக்கறியைக் காணோம்.//

பெயரிலி, உங்கள் சாய்ஸ் எதுவோ? /

அன்றும் பெப்ஸி இல்லை; இன்றும் பெப்ஸி இல்லை; என்றும் பொப்ஸிக்கலே ;-)

மரை, மரம், மரை, மரம் எண்டே விக்கிரமாதித்த மந்தி மாதிரி ஆறு மாசம் ஆறுமாசம் மாத்தி மாத்தி தாவிக்கொண்டிருக்கிறேன் :-) நீங்கள்தான் வேங்கைமரமெண்டே பற்றிப்பிடிச்சுத் திண்டு கொண்டிருக்கிறியள் ;-)

Kasi Arumugam said...

என்னை ஏன் வம்புக்கு இழுக்கணும் பெயரிலி... நானே மரைக்கறி எல்லாம் சாப்பிட்டு வெறுத்துப்போய் இப்போது மரக்கறியில் ஐக்கியமாகிவிட்டவன். யாரோட அருள் காரணமாகவோ அருள் போட்ட படம் புரிஞ்சுபோச்சுன்னு ஆனந்தமா இருக்கேன். இப்படி எல்லாருக்கும் புரிஞ்சமாதிரி அவர் படம் போட்டா எவ்வளவு நல்லா இருக்குது?
('மரை'ன்னா மான் தானே? ஏன்னா அதுவும் சாப்பிட்டிருக்கிறேன், அதான். எம் தமிழ்ப்புலமை அனைவருக்கும் தெரிந்ததுதானே!)

arulselvan said...

ரமணி, தங்கமணி,

மரைக்கறி, உடும்புக்கறி, முயல்கறி எல்லாம் எப்பவோ சாப்பிட்டது. ஆனா 5 ஆம் வகுப்பு படிக்கும்போது மனம் திருந்திய மைந்தன் ஆகி எல்லாம் விட்டுட்டேன். இப்ப ருசியே மறந்து போச்சு. வீட்டிலே எல்லாம் அசைவம்தான். நானே நல்லா கோழி சமைப்பேன். சாப்பிடாமே எப்படீங்கறீங்களா? வாசனையிலேயே உப்பு காரம் எல்லாம் கண்டுபிடிச்சுடலாமே. சமையல் பெரிய வித்தையா என்ன :-). அரவிந்தோ- நீட்ஷேயோபனிஷத் சாரம் முழுங்கினாலும் நல்ல வேளையா சூப்பர் மேனோ டூப்பர் மேனோ ஆகாம தப்பிச்சேன். எப்போதாவது படுக்கையிலே மயிலிறகு மாதிரி ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டும். அப்பத் தெரியும் சாப்பிட்ட சாரம் செரித்ததா இல்லை ஸ்ரொய்க் நாஸியாவா என்று.
என் சாய்ஸ் சுவைக்கு எப்போதும் மரைக்கறி தான். :-).
விழுமியத்துக்கு? அது கிடக்கு.

arulselvan said...

காசீஈஈ...
இப்படி வாரரீங்களே. ஏதோ மௌஸ் போன போக்கிலே மனம் போகலாமா என்று கிறுக்கிப் போட்டால் மாடர்ன் ஆர்ட் மாதிரி அர்த்தம் தேடரீங்களே. நியாயமா.

"
தேடாதே
தேடினால் காணாமல் போவாய்
வழிகள் மாற்றிவைக்கப் பட்டுள்ளன "

அப்பிடீன்னு வானம்பாடிக் காலத்து கவிதை ஒன்று இருக்குதுங்க. இந்தக்காலத்து நவகவிஞர்கள் வானம்பாடியா, சே பிரச்சாரம்ன்னு சொல்லிடுவாங்க. சே யும் பிரச்சாரம் பண்ணினார்னா என்ன சொல்லுவாங்களோ. :-)

-/பெயரிலி. said...

/என்னை ஏன் வம்புக்கு இழுக்கணும் பெயரிலி.../

ஹி ஹி ஹி! எல்லாம் ஆறு நித்திரையா முழிப்பா என்று தெரிஞ்சு கொள்ளத்தான்... அப்ப ஊரிலைதான் இருக்கிறீங்களா? ஊருக்குப் போய்றீங்க எண்டு உங்கட அஸிஸ்ரண்ட் பிழையான வதந்தியொண்டை விட்டுக்கொண்டிருக்கிறா. ;-)

Thangamani said...

அருள் நான் 10 ஆம் வகுப்பு முடிந்தவுடன் மரை தின்பதை உயிர்க்கொலை, பாவம், புண்ணியம், ஆரோக்கியம் என்றெல்லாம் படிச்சு வாந்தியெடுத்து கடுமையாக மறுத்து, போராடி விட்டேன். விட்டதற்கான காரணங்கள் இன்று செல்லாததாகிவிட்டாலும், வேறு சில அனுபவங்களினால் மரத்தையே தொங்கிக்கொண்டிருக்கிறேன் (பெயரிலி, இதுவும் தெரிந்துவிட்டதா?) ஆனால் சுவைக்கு எனக்கு மரமே போதுமென்றாலும் கடல் உணவுகள் நன்றாயிருக்கும் என்பதும் உண்மைதான்.

ஆனால் இதையெல்லாம் அடுத்தவர் தட்டில் போடமாட்டேன்.

பெயரிலி, ஆறு முழிச்சுருக்கான்னு இரண்டாவது தடவை பார்க்கமுடியுமா?

மு. சுந்தரமூர்த்தி said...

இங்கு இரண்டு விஷயங்கள் புரியவில்லை.
1. மரை என்றால் என்ன?
2. எதுக்கு ஆளாளுக்கு ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்?

பாலும், தயிரும் என்ன கறியாம்?

முன்பொருமுறை வேறிடத்தில் விடுத்த பின்னூட்டம்:

கன்றுக்கு மறுக்கப்பட்டு பசுவிடமிருந்து திருடிய பாலைக் கொண்டு காளையின் சிலையைக் குளிப்பாட்டுவது ஒரு முரண்நகை. இது குறித்து பலர் எழுதிவிட்டதால் நான் புதிதாக எதுவும் எழுதுவதற்கில்லை. ஆனால் என் பின்னூட்டம் இது தொடர்பான ஒரு சுவாரசியமான விவாதம் பற்றியது.

சில வாரங்களுக்கு முன் இங்கு (டென்னிசி) சில பால்பண்ணைக்காரர்கள் பச்சைப் பாலை விற்க அனுமதிக்க வேண்டுமெனக் கோரியதாக டென்னிசியன் செய்தித்தாள் ஒரு செய்தி வெளியிட்டது. உடனே அடுத்த சில நாட்களுக்கு பச்சைப் பால் ஆதரவாளர்கள் vs. பதப்படுத்தப்பட்ட (Pasteurized) பால் ஆதரவாளர்கள் என்று இரு குழுக்களாக பிரிந்து வாசகர்கள் கடிதம் எழுதி இரண்டின் நன்மை, தீமைகளை காரசாரமாக விவாதித்துக்கொண்டிருந்தார்கள். அப்போது இடையில் புகுந்து ஒரு அம்மையார் இவ்வாறு எழுதினார்:

"இந்த விவாதமே அர்த்தமில்லாதது. மனிதர்களைத் தவிர வேறெந்த பாலுட்டிகளும் பிறந்ததிலிருந்து சாகும் வரை பால் குடித்துக்கொண்டிருப்பதில்லை. எந்த விலங்குக்கும் பால் மறக்கடிக்கப்பட்டவுடன் மீண்டும் பால் குடிக்க வைப்பது மிகவும் கடினம். அதேபோல மனிதர்களும் பால் குடிக்காமலேயே ஆரோக்கியமாக இருக்கமுடியும். எனக்கு தெரிந்து நிறையபேர் அப்படி இருக்கிறார்கள். குழவிப் பருவத்தில் விலங்குகள் குடிப்பது கூட தாய்ப்பாலை மட்டும்தான். பசுவின் பால் பசுவின் கன்றுக்கு, சிங்கத்தின் பால் சிங்கக் குருளைக்கு என்பது தான் இயற்கையின் நியதி. உண்மையிலேயே சில மனிதர்கள் பாலிலிருந்து மட்டும்தான் ஊட்டச்சத்து பெற முடியுமென்றால் அவர்கள் குடிக்கவேண்டியது மனிதப் பால் தான். நான் இப்படி சொல்வது பலருக்கு அருவருப்பாக இருக்கும். ஆனால் அருவருப்படைய வேண்டியது பிற விலங்குகளின் பாலைக் குடிப்பதற்குத் தான். ஆகவே அரசாங்கம் யோசிக்க வேண்டியது மனிதப் பால் விற்க அனுமதிப்பது பற்றி தான்".

அதற்கு பிறகு செய்தித்தாளில் பால் விவாதம் நின்றுவிட்டது. இதை எழுதிய அம்மையார் vegan ஆக இருக்கக்கூடும். நம்மூர் lactovegetarianகள் இதைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்று அறிய ஆவல்.

-/பெயரிலி. said...

/மரை என்றால் என்ன?/
உருவிலும் ஓட்டத்திலும் மான்போல இருக்கும் ஒரு மிருகம். இலங்கையிலே, இதன் இறைச்சியும் விற்பனைக்குத் தடையாக நாங்கள் சின்னப்பிள்ளைகளாக இருந்த காலத்திலே இருந்தது. ஆனால், வேட்டைக்குப் போகிற ஓரிருவரிடம் சொல்லி வைத்து வாங்கிக் -கொல்லத்தேவையில்லை :-) - கொள்ளலாம். ஆங்கிலப்பெயர் என்னவென அறியேன் (எனக்குச் சப்பிச் சாப்பிடத்தான் தெரியும்; சரியாய்ப் பெயர் தெரியாதே :-))

/எதுக்கு ஆளாளுக்கு ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்?/
நியாயமான கேள்வி. தான் மரக்கறிக்காரன் என்றாலும், மரைக்கறிக்காரன் குறித்து, "உங்கள் விழுமியங்கள் உங்களுக்கு. என் விழுமியம் எனக்கு." என்பதுதான் தன் நிலைப்பாடு என்று சொல்வதற்காக என்றே படுகிறது.

SnackDragon said...

என்ன பெரிசிலி டென்ட்(கொட்டாய் ) இங்க போட்டாச்சா? வீக்கென்டு வில்லங்கம் வீட்டிலேயே போல.

நான் முக்கியமான கடவுள் தொழுகை காலத்தில் , இறால், மீனும், ஆட்டுக்கறியும் எடுத்துக்கொள்வதுண்டு. மத்தபடி இலை தழை தண்ணீர் தான்.அப்படித்தான் கோவிலுக்கும் போவது.
மரை எப்படி இருக்கும் 4 காலா ?

மு. சுந்தரமூர்த்தி said...

நான்:
//எதுக்கு ஆளாளுக்கு ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்?//

பெயரிலி:
/நியாயமான கேள்வி. தான் மரக்கறிக்காரன் என்றாலும், மரைக்கறிக்காரன் குறித்து, "உங்கள் விழுமியங்கள் உங்களுக்கு. என் விழுமியம் எனக்கு." என்பதுதான் தன் நிலைப்பாடு என்று சொல்வதற்காக என்றே படுகிறது./

மீண்டும் நான்:
இந்த பெருந்தன்மை ஏன் எந்த மரைக்கறிக்காரனுக்கு வந்துத் தொலையமாட்டேன்கிறது? :-}
சரி, போனால் போகிறதென்று நானாவது சொல்லிவிடுகிறேன்: "நான் மாடு முதல் மரம் வரையிலான கறிக்காரன். விடுவதாயில்லை. உங்கள் விழுமியங்கள் உங்களுக்கு. என் விழுமியம் எனக்கு"

SnackDragon said...

//உங்கள் விழுமியங்கள் உங்களுக்கு. என் விழுமியம் எனக்கு//
சு.மு.
இது சரிப்படாது எனக்கு,
உங்கள் விழுமியம் உங்களுக்கு; உங்கள் விழுமியமும் என் விழுமியமும் சேர்த்து எனக்கு.
உங்க பணம் என் பணம் மாதிரி; என் பணமும் என் பணம் மாதிரி :P

-/பெயரிலி. said...

/மரை எப்படி இருக்கும் 4 காலா ?/
மரைக்குக் கால் இல்லை; மானுக்குத்தான் கால் இருக்கும். வடிவாக எழுத்துக்கூட்டி வாசித்துப் பாரு ஸ்மார்ட் செர்ரீ.

/என்ன பெரிசிலி டென்ட்(கொட்டாய் ) இங்க போட்டாச்சா? வீக்கென்டு வில்லங்கம் வீட்டிலேயே போல./
அய்ய்ய்யோ!.. நித்திலன் கொஞ்சம் நேரத்துக்கு நித்திரன். குழப்பாதை தம்பீ. போன ஒரு கிழமையாகவே, பொழுது கிடைக்காமல், வெறும் படம்போட்டு, "டேய் வெத்துவேட்டு! இதுவாடா தமிழு?" என்று வாங்கிக்கட்டி இப்போதுதான் ஓர் அரைமணிநேரம் கிடைத்திருக்கிறது. பிடிக்காதே உங்களுக்கு.

/சரி, போனால் போகிறதென்று நானாவது சொல்லிவிடுகிறேன்: "நான் மாடு முதல் மரம் வரையிலான கறிக்காரன். விடுவதாயில்லை. உங்கள் விழுமியங்கள் உங்களுக்கு. என் விழுமியம் எனக்கு"/
என் நல்லவாக்கு & கள்ளவாக்கு எப்போதுமே உங்களுக்கே. நான் உங்கள் கட்சி இல்லை... இல்லை இல்லை.. நீங்கள் என் கட்சி.

SnackDragon said...

காலில்லாமலே கொம்பிருக்குதே வித்தியாசமான விலங்குதான். :-)
எனக்கு தன் விழுமியத்திலிருந்து மாற்றிகொள்ளாதவர்களைவிட , மாற்றிக்கொள்பவர்களைத்தான் பிடிக்கும் என்ற என் விழுமியத்திலிருந்து நான் மாறுவதாக இல்லை...
சித்திரம் பேசுதடி என் சிந்தை மயங்குதடி இ இ ஈஈஈ

/கள்ளவாக்கு/
என்ன் டகுல் வுட்றீங்க. நானும் தமிழ்மணத்தில முயற்சி பண்ணினே போடவே முடியல்லை.

நாளை சுபக் காலை வேளை வருகிறேன்.

SnackDragon said...

// மாறினாலும்,... காசி.. அடச்சீ! இது வேற தலைப்பெல்லோ.. //
காசி புரியாத மாதிரி நடிக்கிறார் கவனிச்சீங்களா.. நம்ம உஷாராச்சே..hi ..hi..

ஈழநாதன்(Eelanathan) said...

எல்லாரும் இங்கையோ இருக்கிறியள்.நான் யார் கட்சி என்ரை வையிறு எனக்கு உன்ரை வயிறு உனக்கு கட்சி. பசிச்சா எது வேண்டுமானாலும் சாப்பிடும் கட்சி.அது தெரியாமலா எண்சாண் உடம்புக்கும் வயிறே பிரதானமெண்டு முன்னோர்கள் சொல்லி வைச்சார்கள்

ரவி ஸ்ரீநிவாஸ் said...

நல்ல கருத்துப்படம். பால் மரக்கறி அல்லது சைவம் இல்லை என்று கருதும் ஒரு கூட்டம் இருக்கிறது.மீனும் மரக்கறிதான் என்று கூறும் கூட்டமும் இருக்கிறது.எனவேதான் தெளிவாக பயணங்களின் போது, உணவு விடுதிகளிலும் மீன்,முட்டை,மாமிசம் தவிர்ப்பேன், பால், தயிர் உண்பேன் என்று சொல்லிவிடுவதுண்டு.விழுமியம் அப்படின்னா என்னங்க,அதுவும் மரக்க்றியா
இல்லை அமரக்கறியா,இல்லை வாழைப்பழம் போல் ஒரு பழமா
put smiley here

ரவி ஸ்ரீநிவாஸ் said...

ஆகவே அரசாங்கம் யோசிக்க வேண்டியது மனிதப் பால் விற்க அனுமதிப்பது பற்றி தான்
is that vegan or vegetarian or
non vegetarian

arulselvan said...

>>
விழுமியம் அப்படின்னா என்னங்க,அதுவும் மரக்க்றியா
இல்லை அமரக்கறியா,இல்லை வாழைப்பழம் போல் ஒரு பழமா
-----------
ரவி, சொல்லும்போதே வாயிலே இப்படி வழுக்குதே, வாழ்க்கை பூரா கெட்டியா பிடிச்சு வாழ எத்தனை கஷ்டம். அதனால்தான் அப்பிடி ஒரு சொல்லை பெரியவங்க தந்திருக்கிறார்கள்.

ஆமா வெள்ளைக்காரன் ஊர்லே இவ்வளவு வருஷமா மக்குடொனால்ட்ஸு மாட்டுக் கொழுப்பிலெ தானே உருளைக்கிழங்கு கூட வறுத்துப் போட்டான். கடந்த நாப்பது வருஷமா புலம் பெயர்த் தமிழர்கள் எப்படித்தான் சமாளிச்சார்களோ நான் அறியேன் !

சுந்து
>>
1. மரை என்றால் என்ன?

அடுத்த பதிவில் ...

2. எதுக்கு ஆளாளுக்கு ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்?

:-)

மு. சுந்தரமூர்த்தி said...

//உங்க பணம் என் பணம் மாதிரி; என் பணமும் என் பணம் மாதிரி :P//

கார்த்திக்:
ரொம்ப மகிழ்ச்சி :-) இப்போ என் கணக்கு சிகப்பில். கரையேத்த உங்கள் மாதிரி வள்ளல் முன்வந்தா வேண்டாம்ணா சொல்லமுடியும். பிறகு காவியம் பாடவேண்டுமென எதிர்பார்க்க மாட்டீர்களே!

ரவி,
அந்தம்மா மனிதப்பால் விற்கச் சொன்னது கிண்டலுக்காக! அதுதான் பாலே குடிக்காமல் ஆரோக்கியமாக இருக்கலாம் என்று சொல்லிவிட்டாரே. Vegan ஆக இருப்பார் என்பது என் ஊகம்.