Tuesday, May 17, 2005

**/**/87 (2)

என்றென்றும்
-------------------

எவரும் வருக
உறைந்த கள்ளி நிழல்
அலையும் காற்றின் மினுப்பு
விரைத்த சாம்பல் வானம்
திக்குகளின் வேட்டொலி
சூழ்ந்ததென் குகை

புல்நுனி கல்முனை
சிறுநீர் மணமாய்
மிருகத்தின் எல்லைகள்
மார்பெலும்பின் மிச்சக்
கூர்நுனி கிழித்த
பாதங்களின் பதிவு தாண்டி
சிதறிய இறைச்சியில் உயிர்த்த
பூக்களின் பரப்பு தாண்டி

நாற்புறமும் என்
கடவுளரை எரித்த
சிதை புகைய
பற்களைத்தீட்டி
காத்திருக்கிறேன். வருக.

10 comments:

Thangamani said...

எனக்கு கவிதைக்கான காரணம் (இருந்தால்) புரியவில்லை. ஆனால் கடவுளை எரித்துவிட்டால் அப்புறம் மிருகமும் இருக்காதே!

-/பெயரிலி. said...

/ஆனால் கடவுளை எரித்துவிட்டால் அப்புறம் மிருகமும் இருக்காதே! /
;-)

விரைத்த??

arulselvan said...

>>>
ஆனால் கடவுளை எரித்துவிட்டால் அப்புறம் மிருகமும் இருக்காதே!
----------------------
ஏம்பா மெக்காலே படிப்புத்தானே படிப்பிச்சாங்க. அது ஏன் எப்பவுமே லோகத்த
பவுத்தமாவோ, இல்ல அதன் பாப்புலர் வர்ஷன் அத்வத்யமாவோ தான் பாப்பீங்களா? என்ன தியாலஜியோ போங்கப்பா. :-)
அருள்

Thangamani said...

//மெக்காலே படிப்புத்தானே படிப்பிச்சாங்க//
மெக்காலேக்கும் கூட கடவுளும் மிருகமும் (சைத்தானும்) ஒரே இடத்துலேர்ந்துதானே வந்தாங்க.

;))

arulselvan said...

போச்! மெள்ள, மெள்ள்ள. இத்தனை ஸ்பீடிலே போனா ஏதாவது 'ஸர்வம் ஏகத்வம் சத்' அப்பிடீன்னு டமால்ன்னு சடோரியா தெரியப்போகுது. அத்தோட போச்சு பன்முகத்தன்மையெல்லாம் ... வெரி வெரி டேஞ்சரஸ் தீஸ் மிஸ்டீ மவுண்டன்ஸ் .....:-)

arulselvan said...

கொஞ்ச நாள் போகட்டும். மீண்டும் இந்தக் கேள்விக்கு வரலாம். அவ்வளவு எளிதானதல்ல இந்த evil என்பது.

Thangamani said...

'ஏகம் சத் விப்ர பகுதா வதந்தி' இல்லையா? பன்முகத்தன்மை எனக்கு இதனால் தான் முக்கியமாகவே தோன்றுகிறது. ;)

Jayaprakash Sampath said...

அருள் மற்றும் நண்பர்களுக்கு...இதல்லாம் ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ஓவர்... இந்தப் பாட்டை அல்லது இந்தப் பாடலைக்கேட்டு ஒரிஜினல் மனநிலைக்குத் திரும்பவும்

arulselvan said...

பிரகாஷ், அப்ப்ப்பா, நன்றி. இப்பத்தான் மூச்சு வந்தது. நீங்க சுட்டுன ரெண்டு பாட்டும்,
'ஆகாஷதிந்த்தா தரகிளித ரம்பே ...' யும் கேட்டுட்டு வோட்ஹவுஸ் புத்தகத்த நோண்டிட்டு இருக்கேன். பின்ன என்னங்க, கடவுள் பாதி மிருகம் பாதின்னு நாம பாத்தா, கடவுள் = மிருகம் அப்பிடீன்னு அபேதவாதம் பண்றாங்க. விடலாமா... சரி, சரி, சந்தனத கொம்பே -யப் பத்தி கஸ்ஸி பின்க்நாட்டில் என்ன நினைக்கிறார்ன்னு பாக்கலாம்.

அருள்

Jayaprakash Sampath said...

//'ஆகாஷதிந்த்தா தரகிளித ரம்பே ...' யும் கேட்டுட்டு வோட்ஹவுஸ் புத்தகத்த நோண்டிட்டு இருக்கேன். பின்ன என்னங்க, கடவுள் பாதி மிருகம் பாதின்னு நாம பாத்தா, கடவுள் = மிருகம் அப்பிடீன்னு அபேதவாதம் பண்றாங்க. விடலாமா... சரி, சரி, சந்தனத கொம்பே -யப் பத்தி கஸ்ஸி பின்க்நாட்டில் என்ன நினைக்கிறார்ன்னு பாக்கலாம்.//

ஒரு வாட்டி ரங்கஷங்கரா பக்கம் போனப்ப, சாங்கிலியானா ஐபிஎஸ்லேந்து, சப்தபதிவரைன்னு, சங்கர்நாக் பத்தி ஒரு டாகுமெண்டரி பண்ணலாம்னு ஒரு ஐடியா இருந்த்துச்சு ஒரு காலத்துலே. [மன்சன் அல்பாயுசுலே பூட்டானே (:-]அதுக்கு நான் மொதல்ல டிஸ்ரப் பண்ண வேண்டிய ஆள் ஆருன்னு தெரிஞ்சு போச்சு :-) ஜொதெயலி...ஜொத ஜொதெயலி......