பிரிந்து போனவர்களின் கதி எனக்கும் தெரியும்
தோல் ஆடைகளை முதுகில் சுமத்தவர்கள்
சுழல் வாகனங்களின் விஷயம் தெரிந்தவர்கள்
மின்கற்றை துப்பும் வெடிப்பிகள் பதுக்கியவர்கள்
அனைவரும் சென்ற வழிகளைத் தவிர்த்து
கல் கவண்களைச் சுழற்சி
மயிற்பீலிகளைத் தலையில் தரித்து
அகன்று சென்றவர்கள் இடையில் பிறந்த
என்தோழன் சொல்கிறான்:
"இன்று பிரிந்தவர்களின் குழந்தைநான்
அவர்களின் பாறை எண்ணையை தடவிவளர்ந்த
மினுக்கும் என்கூந்தலின் இடையில்
வைத்துள்ளேன் என் குழுவின் ரகசியங்கள்
ஒவ்வொரு நரை முடிக்கும் ஒன்றாக
நான் மறக்கும் எம்குழுவின் வார்த்தைகளை
என்தலையை கத்தரிக்கும்முன் உம்மிடம் சொல்கிறேன்
உமக்கோ எம் வார்த்தைகள் புரியாது
உமக்கோ எம் பழங்கள் செரிக்காதவை
எம் சிறுத்தைகளின் நகக் கூர்மையில்
செதுக்கிய என் முதுகில் பாருங்கள்
எம் குழுவின் வரலாற்றை
எம் மக்களின் விருப்பம் மறந்த
கடவுளைப் பதித்துள்ளேன்
என் ஒவ்வொரு பொய்ப்பல்லின் கீழும்
தாடைகளை உடைத்து என் பற்களைத்துப்ப நீங்கள்
உதைத்த உதையின் இறுமாப்பு போன்றவை
எமது கழுதைகளின் பிளிரல்கள்
ஈக்களின் சுவாசம் போன்று
இலக்கே இல்லாத உம் கேள்விகள்
எம் முன்னோரின் வாடைகலந்த
காற்று அலையும் சமவெளிகளில்
மூக்கு துடிக்க வரும் நாய்களின் நரம்புகளை
உலர்த்தி அணிகிறோம் அரஞாண் கயிறுகளாக ..."
சகோதரனின் வாளிலிருந்து வீழும்
எரிகற்களை சேகரிக்கும் நண்ப அறிந்துகொள்
3 comments:
அருள் வாசிக்க நன்றாக இருக்கின்றது; **/**/87 என்பதுதான் கவிதைக்குத் தலைப்பா, அல்லது அஃது எழுதப்பட்ட நாளா?
87 - ஆண்டுதான். 85-87 ஆண்டுகளில் கணினிதுப்பும் நீண்ட தாள்களின் பின்புறத்தில் இப்படி எழுதிய பல வரிகள், படங்கள் இவற்றைக்கொண்ட பழைய பைல் ஒன்று கிடைத்தது. ஒரு scratch pad போல உபயோகப் படுத்திய அதிலிருந்து கிடைத்ததை பதிக்கிறேன். சில அபத்தமானதும் வரும் என்று நினைக்கிறேன் :-).
அருள்
அருள், வாசிக்க சுகமாயிருக்கு... ஏன் தேதி மாசத்தை மறைச்சுட்டீங்கன்னு புரியலை.
ஒருக்கால் உங்க டி-டே அன்னிக்கு எழுதின கவிதையோ :-)
Post a Comment