Wednesday, June 29, 2005

அ.தி.

மனேகா காந்தி அமைச்சராகும் முன்புவரை ஒரு பச்சை மனிதனாகத்தான் நான் என்னைக் கருதிக்கொண்டிருந்தேன். அப்போது எழுதிய சில விபரீத வரிகள் கீழே. அவர் அமைச்சரானவுடன் இனிமேலும் இத்தகைய லுட்டைட்டுகளை நாடு தாங்க முடியாது என எண்ணி, முழுவதும் அணுசக்தி மூலம் மின்சாரம், கிரைப் வாட்டரைக் கூட முயல்குட்டி கண்ணில் ஊற்றி செய்யும் சோதனைகள், சைலண்ட் வேலியில் சரக்கு ரயில் பாதை என கண்டதையும் ஆதரிக்க முடிவு செய்துவிட்டேன்.

green rhymes for the grown ups
-----------------------------------------------

1. poultry hen
-----------------------
cute round bird
with two holes and feathers
feeds thro' one
lays thro' the other
works quite fine
why you guys bother

2.
dont cut the rain forest
it gives us oxygen you know
if you care, for economy's sake
take some opium to sow


3.
green house green house
co2 is here
yes sir yes sir
how to start a fire

4.
ants are ancient
'roaches came soon after
man arrived just in time
to drain the underground water

இன்னும் இருப்பதை இங்கே போடமாட்டேன். ரீசைக்கிளி ஜோசியம் பலித்துவிடும்.

Wednesday, June 15, 2005

ஒவ்வொண்ணும் போன பாதை

தாம் செல்ல சுகத்தோடே
வண்டி குலுங்கா ராஜபாட்டை
காளை நுரையணைக்க
வீசும் நிழல் ரெண்டுபக்கம்
போகப் போக தினம்
போகப் போக சுகம்

கார்போகும் தேர்போகும்
கனம் கனமாய் லாரிபோகும்
நீர் ஊறும் அக்கம்பக்கம்
நீங்கள் பசியணைக்க
ஊர்போகும் பண்டிகைக்கு
உரிமைக்குரல் பக்கத்தூரில்

உல்லாசமேஏஏ டட்டட்டா
எல்லோர்க்குமே சச்சச்சா

வெள்ளைக்காரன்
போட்ட ரோடு தாத்தாவுக்கு
அப்பாவுக்கோ
பெருஞ்சேரலாதன்
நண்பர்க்கும் நமக்கும்
H^|D கல்லு நாலு

முடிவென்பது புகையாய்ப்போச்சு
பாதைகிடக்குது காலடியில்


(அக்டோபர்,83)

Wednesday, June 08, 2005

சி.வி. ராமன், மஹாத்மா காந்தி, டாக்டர். ரம்: ஒரு உரையாடல்

மே, 1936ஆம் ஆண்டு, பெங்களூர் அருகிலிருந்த நந்தி குன்றுகளுக்கு வந்திருந்த காந்தியைச் சந்திக்க சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த உயிரியலாளரும் ஒரு மதகுருவுமான டாக்டர்.ரம்மை (Dr.Rahm) ராமன் அழைத்துச் சென்றிருந்தார். அப்போது நடந்த உரையாடலின் ஒரு பகுதி:

ரம்:" உலகில் இத்தனை மதச் சண்டைகள் நடப்பது எனக்கு பெரும் குழப்பத்தையே அளிக்கிறது. இப்பூசல்களை முடிவுக்குக் கொண்டுவரவே இயலாதா".

காந்தி: "அது கிருத்துவர்களின் செயல்களைப் பொருத்தது. அவர்கள் மட்டும் மற்றவர்களுடன் சேர்ந்து வாழ மனம் வைத்தால்..! ஆனால் அவர்களுடைய தீர்வோ, கிருத்துவ மததை உலகில் அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதுதான்."

டாக்டர் ரம் இந்த பதிலை காந்தியிடம் இருந்து எதிர்பார்க்கவில்லை. இதற்கு அவர் பதிலுரைக்கவில்லை. இன்னொரு கேள்வியை ரம் பதிலாகக் கேட்டார்:
"சரி நாம் ஒன்று சேரத்தான் முடியாது. இப்போது வளர்ந்துவரும் நாத்திகத்தையாவது ஒன்றாகச் சேர்ந்து எதிர்த்துப் போராடலாம் இல்லையா? "

அப்போது சி.வி.ராமன் இடையில் புகுந்தார்: உங்கள் கேள்விக்கு நான் விடை அளிக்கிறேன்.
"கடவுள் என்று இருந்தால் நாம் நிச்சயமாக இவ்வண்டத்தில் அவரைத்தேட வேண்டும். கடவுள் இல்லை என்றால் தேடுவது வெறும் வீண்வேலை. பலரும் என்னை நாத்திகன் என்றே நினைக்கிறார்கள். நான் அப்படி இல்லை. வானவியலிலும், இயல்பியலிலும் இப்போது தொடர்ந்து வரும் கண்டுபிடிப்புகள் கடவுளைப்பற்றிய தோற்றங்களாகவே எனக்குப் படுகின்றன. மஹாத்மாஜி, மதம் மனிதர்களை ஒன்று சேர்க்காது. அறிவியல் அப்படி அனைவரையும் முழுமையாக ஒன்று சேர்க்க ஒரு வாய்ப்பை அளிக்கிறது. அறிவியலாளர்கள் அனைவரும் சகோதரர்கள்."

காந்தி: "அப்போது அதற்கு எதிர்மறை என்ன? அறிவியலாளர் அல்லாதோர் அனைவரும் சகோதரர்கள் அல்லர் என்பதா?"

ராமனுக்கு இந்த நகைச்சுவை புரிந்துவிட்டது. அவர் சொன்னார்:

" அனைத்து மனிதர்களும் அறிவியலாளர் ஆகலாம், மகாத்மாஜி".

(மஹாத்மா காந்தியின் தொகுப்பிலிருந்து)