Wednesday, June 08, 2005

சி.வி. ராமன், மஹாத்மா காந்தி, டாக்டர். ரம்: ஒரு உரையாடல்

மே, 1936ஆம் ஆண்டு, பெங்களூர் அருகிலிருந்த நந்தி குன்றுகளுக்கு வந்திருந்த காந்தியைச் சந்திக்க சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த உயிரியலாளரும் ஒரு மதகுருவுமான டாக்டர்.ரம்மை (Dr.Rahm) ராமன் அழைத்துச் சென்றிருந்தார். அப்போது நடந்த உரையாடலின் ஒரு பகுதி:

ரம்:" உலகில் இத்தனை மதச் சண்டைகள் நடப்பது எனக்கு பெரும் குழப்பத்தையே அளிக்கிறது. இப்பூசல்களை முடிவுக்குக் கொண்டுவரவே இயலாதா".

காந்தி: "அது கிருத்துவர்களின் செயல்களைப் பொருத்தது. அவர்கள் மட்டும் மற்றவர்களுடன் சேர்ந்து வாழ மனம் வைத்தால்..! ஆனால் அவர்களுடைய தீர்வோ, கிருத்துவ மததை உலகில் அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதுதான்."

டாக்டர் ரம் இந்த பதிலை காந்தியிடம் இருந்து எதிர்பார்க்கவில்லை. இதற்கு அவர் பதிலுரைக்கவில்லை. இன்னொரு கேள்வியை ரம் பதிலாகக் கேட்டார்:
"சரி நாம் ஒன்று சேரத்தான் முடியாது. இப்போது வளர்ந்துவரும் நாத்திகத்தையாவது ஒன்றாகச் சேர்ந்து எதிர்த்துப் போராடலாம் இல்லையா? "

அப்போது சி.வி.ராமன் இடையில் புகுந்தார்: உங்கள் கேள்விக்கு நான் விடை அளிக்கிறேன்.
"கடவுள் என்று இருந்தால் நாம் நிச்சயமாக இவ்வண்டத்தில் அவரைத்தேட வேண்டும். கடவுள் இல்லை என்றால் தேடுவது வெறும் வீண்வேலை. பலரும் என்னை நாத்திகன் என்றே நினைக்கிறார்கள். நான் அப்படி இல்லை. வானவியலிலும், இயல்பியலிலும் இப்போது தொடர்ந்து வரும் கண்டுபிடிப்புகள் கடவுளைப்பற்றிய தோற்றங்களாகவே எனக்குப் படுகின்றன. மஹாத்மாஜி, மதம் மனிதர்களை ஒன்று சேர்க்காது. அறிவியல் அப்படி அனைவரையும் முழுமையாக ஒன்று சேர்க்க ஒரு வாய்ப்பை அளிக்கிறது. அறிவியலாளர்கள் அனைவரும் சகோதரர்கள்."

காந்தி: "அப்போது அதற்கு எதிர்மறை என்ன? அறிவியலாளர் அல்லாதோர் அனைவரும் சகோதரர்கள் அல்லர் என்பதா?"

ராமனுக்கு இந்த நகைச்சுவை புரிந்துவிட்டது. அவர் சொன்னார்:

" அனைத்து மனிதர்களும் அறிவியலாளர் ஆகலாம், மகாத்மாஜி".

(மஹாத்மா காந்தியின் தொகுப்பிலிருந்து)

9 comments:

-/பெயரிலி. said...

அருள், ஒன்றுக்கு மேற்பட்ட காரணங்களுக்காக இந்தச் சிறுபதிவு என்னுள்ளே மறவாதிருக்கும்.

நன்றி.

jeevagv said...

சுவையாகவும் வியப்பாகவும் இருந்தது அருள்!

Thangamani said...

//அருள், ஒன்றுக்கு மேற்பட்ட காரணங்களுக்காக இந்தச் சிறுபதிவு என்னுள்ளே மறவாதிருக்கும்.//

எனக்கும் தான் அருள். நன்றிகள்.

காந்தியும், பெரியாரும் சந்தித்து மேற்கொண்ட உரையாடல்களைப் படித்திருக்கிறீர்களா? இரண்டு முறை சந்தித்துக்கொண்டார்கள். உரையாடல் இருவரைப் பற்றியும் புரிந்துகொள்ள உதவும்.

arulselvan said...

ரமணி, ஜீவா, தங்கமணி:
நன்றி. இந்தியாவின் சுதந்திரப் போராட்டம் என்பது அரசியலில் மட்டுமல்லாமல், அறிவியலிலும் அதற்கேயான விதிகளுக்குட்பட்டு நடந்தது. ராமன் போன்றோருக்கு தம்மை மீட்டெடுக்க அதுவே வழியாக இருந்தது. ஒரு விதத்தில் சடங்குகளை மறுத்த, அறிவு ஒன்றையே குறியாகக் கொண்ட தேடுதலின் இயக்கம் பல நூற்றாண்டுகள் இடைவெளிக்குப் பின்பு இந்தியச் சிந்தனை மரபில் அப்போது இயங்கிய அறிவியலியலாளர்களாலேயே முன்னெடுக்கப்பட்டது. அதன் மிகச்சிறந்த உதாரணங்களாக ராமன், சாஹா, போஸ் போன்றோரைச் சொல்லலாம். அவர்கள் அமையப்போகும் நாட்டின் சிந்தனை வளர்சிக்கான கருவிகளை அமைத்துக்கொடுத்த, நிறுவனங்களை அமைத்துக்கொடுத்த முன்னோடிகளாவார்கள். அவர்களின் செயல்பாடுகளிலிருந்து நிறைய கற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது.
பெரியார்-காந்தி சந்திப்பு பற்றி: மேற்கோள்களைத்தான் படித்துள்ளேன். முழுதுமாகப் படிக்கவில்லை.
அருள்

ரவி ஸ்ரீநிவாஸ் said...

ஒரு காலத்தில் அறிவியல் மீது அபார நம்பிக்கை இருந்ததையே ராமன் பேச்சு காட்டுகிறது.ஆனால் இன்று அப்படி உறுதியாகக் கூற முடியுமா.அறிவியல் என்பது மனித செயல்பாடு, மனித அறிவின், படைப்பாற்றலில் வெளிப்பாடு. மனிதர்களை ஒன்றிணைக்க அது ஒரளவிற்கு உதவும்.ஆனால் அது ஒன்றே அதை சாத்தியமாக்கும் என்று கூற முடியாது

ரவி ஸ்ரீநிவாஸ் said...

you should read ashis nandy.you will understand the gandhian critique.

ரவி ஸ்ரீநிவாஸ் said...

there is a wonderful journal called zygon.if u have access to that read that.

arulselvan said...

ரவி.
---------------------------------------
>>> ஒரு காலத்தில் அறிவியல் மீது அபார நம்பிக்கை இருந்ததையே ராமன் பேச்சு காட்டுகிறது.ஆனால் இன்று அப்படி உறுதியாகக் கூற முடியுமா.அறிவியல் என்பது மனித செயல்பாடு, மனித அறிவின், படைப்பாற்றலில் வெளிப்பாடு. மனிதர்களை ஒன்றிணைக்க அது ஒரளவிற்கு உதவும்.ஆனால் அது ஒன்றே அதை சாத்தியமாக்கும் என்று கூற முடியாது
--------------------------------------

மிகச் சுருக்கமாக சொல்லவேண்டுமானால்: அறிவியல் நமக்கு கலாச்சாரம், நாடு, மொழி, மதம், இனம் போன்ற பந்தங்களின்றி எந்த ஒரு கேள்வியயும் 'திறந்த மனதுடன் ' அணுக வழிசெய்கிறது என்பதையே ராமன் இங்கு சுட்டுகிறார் என்று நினைக்கிறேன். இதுவே ஒரு 'naive view', என்பது 'sociology of science' மக்களின் அணுகுமுறை. இதைப்பற்றி நிறையப் பேசலாம்.
-----------------------------------
>>>
you should read ashis nandy.you will understand the gandhian critique.
------------------------------
I have read most of Nandy ie what he wrote till 90-s. Infact we had a study circle in IISc in 80-s discussing these issues when Nandy, Shiv Viswanathan, et al were just going full blast against the science establishment of that time. While many of the criticisms they raised about the state of science in our country at that time might have been a required reality check, the theorical / philosophical grounding was not very impressive. The whole noise about ' vivisection' and its ramnifications with modern science as the butcher blade was laughable then as it still is now. I stopped following these issues by around early 90-s but I am not convinced even now that the current state of Philosophy of science has the tools to deal with the questions science, esp physics and biology, is throwing up. Technolgy and its effect on human condition is a different matter and there, may be a lot of good work is already done and still more scope exists. We must be discussing these issues in Tamil Ravi, but time is a big constraint.
---------------------
>>>
there is a wonderful journal called zygon.
----------------------
Thanks for this ref. Will try to follow.

Arul

NambikkaiRAMA said...

அருள்! தற்போதுதான் இப்பக்கம் வந்தேன்..சுவைபட பலவிசயங்களைக் கண்டேன். ஓவியங்களும் அருமை. நன்றி! வாழ்த்துக்கள்.