Friday, July 29, 2005

அயற் படுகை -2

Image hosted by Photobucket.com
குழந்தைகளை கிவிரா சென்று அடைந்தபோது அவர்கள் தூங்கிப் போயிருந்தார்கள். பெரோ கூப்பிடுவதாகத் தெரியவில்லை. நிகழ்கலன் தொடர்பு முற்றுமாக அற்றுவிட்டது. போர்க்காலத்தில் இதற்குமேலும் நிலத்தின் மீதிருப்பதில் நம்பிக்கையில்லை. துளைவியின் சக்தியை சரிபார்த்துக் கொண்டாள். குழந்தைகளை பின்னால் படுக்கவைத்து கட்டினாள். இரண்டு நாளுக்கான உணவை திணித்தாள். துளைவியை மித வேகத்தில் செலுத்தினாள். அது சற்று தூரம் நெளிந்து சென்றதும் புல்புதர்களுக்குள் புகுந்தது. அருகிலிருந்த வளையை உடனே கண்டுபிடித்து உள்ளே துழாவி இறங்கியது. முற்றிலும் வளையினுள் மறையுமுன் மனிதப் பொறிகள் மேலே வானத்தில் அலைவதைக் கண்டாள். துளைவி வளையினுள் விரைந்தது.

"பெரோ..?"
"பெரோ எங்களுடன் இல்லை மனோ. நான் நிலைத்தளம் நான்கின் அருகில் இருக்கிறேன். பெரோ படுகையில் குறிப்பிகளைச் செப்பனிடப் போனான்."
"தெரியும் கிவிரா. தொடர்பு கொண்டால் சொல். அவன் நிகழ்கலன் இயங்குவதாகத் தெரியவில்லை. கவலைப் படாதே. பிறகு அழைக்கிறேன்"

தளம் நான்கில் அப்பாவை பார்க்கமுடியுமா தெரியவில்லை. மிதவைகளில் ஒன்றைக் காணவில்லை என்று நேற்றே அழைத்துச் சென்றுவிட்டனர். இருக்கும் நிலையில் மிதவைகளை இழந்தால் மனிதர் ஓரிரு நாட்களில் நம்மை எலிகளைப்போல வளைகளை விட்டு கிளப்பி வேட்டையாடித் தீர்த்து விடுவார்கள் என்று அப்பா அம்மாவிடம் பயமுறுத்திக் கொண்டிருப்பார்.
இப்போது ஒரு மிதவையை மனிதர் பிடித்து விட்டால் ...

Image hosted by Photobucket.com


"கிவிரா..? அப்பா"
"நல்ல வேளை. நானே கூப்பிட இருந்தேன். நாலில்தானே"
"இல்லை. ஒன்றில்"
கிவிராவின் முகம் வெளிறியது
"ஒன்றிலா... அப்பா."
குழந்தைகளை ஒருகணம் பார்த்துக்கொண்டாள்.
"கிவிரா பயப்படாதே. மூன்று பேர் செல்கிறோம். இரண்டே பரப்பிகள் மேலே உருவுகுண்டுகளை இடையின்றி வெடித்துக் கொண்டிருக்கிறார்கள். அணைத்து விட்டு வருகிறோம்"
"அப்பா. பார்த்து"
" ......"

நாலில் பத்து பதினைந்தே குடும்பங்கள் இருந்தனர். சக்திப் பெருப்பிகள் இன்னும் இயங்கிக் கொண்டுதான் இருந்தன. துளைவி கூட்டில் அடைந்ததும் குழந்தைகளைத் தூக்கிக் கொண்டு குதித்தாள். நீரமா இரண்டு குறுநாய்களோடு நின்று கொண்டிருந்த்தாள்.
"கிவிரா. விரைந்து வா. ஏழுக்கு எல்லோரையும் கொண்டு சொல்ல முழுக்கள் காத்திருக்கின்றன".

Thursday, July 28, 2005

அயற் படுகை

Image hosted by Photobucket.com மிதவைகள் ஒவ்வொன்றாக இறங்கிக் கொண்டிருந்தன. மறையும் சூரியனின் இள நீலக்கதிர்களில் குறிப்பிகளின் திசைகளைச் சரியமைத்துக் கொண்டிருந்தான். திரும்ப கிவிரா வருவாளா எனத் தெரியவில்லை. எதை விட்டுக் கொடுத்தும் அவளுடன் வாழ இனிமேல் முடியாது என
தெளிவாகி விட்டது. இன முட்டைகளை விற்றாவது வாங்கக் கூடிய பொருள் ஒன்று இருப்பதாக அவளுக்குத் தோன்றியதை நம்பவே
முடியவில்லை. சம்பவங்கள் அடுத்தடுத்து யாரோ திட்டமிட்டதைப் போல் நடந்து விட்டன. கையின் பிசுக்குகளை பஞ்சுத் திரட்டில் துடைத்து
எழுந்தான். குறிப்பிகள் சரியாக இயங்காமல் இரு மிதவைகள் ஏறக்குறைய இடித்துச் சிதறும் நிலையில் நேற்று கடந்தன. மீகாமர் கழகம் அச்சுறுத்தும் தகவலறிக்கை ஒன்றை பணிமனைக்கு அனுப்பியது. வயதானாலும் தானே வரவேண்டியது என்ன விதி என்று நினைத்துக் கொண்டான்.

"நகரங்களில் போர் தொடர்கிறது. உணர்விகளை முற்றிலும் செயலிழக்கச் செய்த பெய்கதிர் வளையம் இன்னும் நீக்கப் படவில்லை. நாளை நிலமை தெளிவாகும் என காப்பமைச்சர் உதவியாளர் தெரிவித்தார் ".

வானொலியை அணைத்துப் பையில் போட்டுக் கொண்டான். நிகழ்கலனில் கிவிராவின் அலைவரிசையை சோதித்தான். கர்கர்ரென்று வெள்ளை இரைச்சல்தான் கேட்டது. மூன்று மணி நேரம் குறிப்பிகளுடன் போராடிய வலி கால்களில் உறைத்தது. ரத்தம் பாய்வதற்காக இருமுறை காற்றில் உதைத்தான். காலங்கியின் பையிலிருந்து கீழே விழுந்து காசு ஒன்று உருண்டோடியது. மன்னனின் தலை பதித்த தங்கக் காசு.

பிடிக்கத் தாவினான். நிகழ்கலன்தொடர்புக்கு அலறியது. காசில் பார்வையை வைத்துக்கொண்டே கலனை அமுக்கினான்.

"பெரோ?"
"ஆம்"
"உடனடியாக அங்கிருந்து விலகு. மிதவைகள் அனைத்தும் இறங்கியாயிற்றா?"
"எல்லாம் இறங்கி விட்டன. என்ன ஆச்சு மனோ"
"அகன்று விடு பெரோ. இது ஆணை."
Image hosted by Photobucket.com
தொடர்பு உடனடியாகத் துண்டிக்கப்பட்டது. சாதனங்களைத் திரட்டி அடப்பத்தில் அடைத்தான். நிகழ்கலனின் மின்தொடர்பை நீக்கினான். அடப்பத்தை முதுகில் மாட்டி இறுக்கினான். இடமிருந்த பாறையைக் குதித்துக் கடக்கத் தாவும் தாவலில் காசை கைப்பற்றினான். வளையை அடைய இன்னும் இருநூறு அடிகளே இருந்தன. மனிதர்களின் விரைப்பறப்பிகள் நான்கு தலைக்குமேல் அவனைச் சூழ்ந்தன. அவைகளின் வெடிப்பிகள் எளிதில் அவனைஉணர்ந்து குறிவைத்து இயங்கின. கலன்களை இறக்கி மனிதர் நால்வர் வெளிப்பட்டு பெரோவின் மிச்சங்களையும் அடப்பத்தையும் பற்றித் திரும்பினர்.
...

Tuesday, July 26, 2005

POP - ஒரு கலந்துரையாடல்

Image hosted by Photobucket.com

Image hosted by Photobucket.com

Image hosted by Photobucket.com

Image hosted by Photobucket.com

Image hosted by Photobucket.com

Image hosted by Photobucket.com


"விடுத்த சரம் வென்றவியும்
தொடுத்த நிணக்குருதி போல்
பரத்துப் படர்ந்தலையும் இப்பேராறு
பெய் மழையின் நிலம் பறிக்குமமிலக்
குழைபற்றி யெழுகடற் புட்கள் ...."

வந்து வீட்டு முற்றத்தில் நெல் கொத்தும் போதே நினைத்துக் கொண்டான். இன்றாவது முறத்தில் சரியாக ஓட்டை போட்டுக் கொடுத்து விட்டால், பையனே பிடித்து விடுவான்.

Thursday, July 21, 2005

இ.தி- 45

Image hosted by Photobucket.com


" மாண்டீ ஒளிஞ்சிருந்த வளையைக் கண்டுபிடிச்சாச்சு. ஓடிவாங்க".


Bye, bye and thanks for everything Monti. Take care. Be back when you feel like.

Monday, July 18, 2005

புத்தி இல்லாமல் ஒரு பதிவு

Image hosted by Photobucket.com நேற்று வாங்கியதிலிருந்து கேட்டுக்கொண்டே இருக்கிறேன். பல இடங்களில் கண்ணில் நீர் வரச்செய்த இசைத்தட்டு. மாணிக்கவாசகர் ஒருபுறம். இசை ஒரு புறம். அப்பனைப் பாடியாச்சு. இனி ஒரு சுப்பன் இருக்கிறான். ஆயிரம் பாட்டோடோடு அருணகிரி இருக்கிறான். அய்யா, ராசய்யா எப்ப ஆரம்பம்.

Thursday, July 14, 2005

இத்தகைய கொள்கைப் பிரகடனங்க

இத்தகைய கொள்கைப் பிரகடனங்களற்ற ஓவியர்கள் அருகிப் போனது விமரிசகர்களுக்கும் ஓவிய முதலீட்டார்களுக்கும் பெரும் வசதியாக ஆனது.
Image hosted by Photobucket.com
சந்தையை உருவாக்குவதோ, வகைமாதிரிகளைப் புனைவுசெய்து முன்னிறுத்துவதோ ஆழ்ந்த அறிவுப்புலம் தோய்ந்த ஆய்வுக்கட்டுரைகளை பல்கலைக் கழகங்களின் துறை சார்ந்து கற்பிக்க இயலுவதோ போன்ற முழுவதும் நிறுவனமாக்கப் பட்ட அமைப்புகளின் கோழிப் பண்ணைப் படைப்புலகம் விரிந்து உலகமயமாக்கப்பட்டுள்ளது. வியாபாரக் கண்டெடுப்புகளின் கிளர்ச்சிக் கூறுகள் என்ன விதமான சமுதாய நிலக்குலுக்கல்களை ஏற்படுத்தி விடமுடியும்? ஓவியம் மக்களிடமிருந்து அகன்று கண்ணாடிச் சட்டங்களின் பின்னால் பதுங்கும் துயரச் சாகசத்தின் கதை இது. விலைமதிப்பில்லாதது என்பதற்கு இன்றைய சொல்சிதைவுப் பரிணாம வழக்கில் நீங்கள் எளிதில் காணமுடியாத குளிர் அறைகளில் உறைந்தது என்றே பாடம். நடுச் சந்தியின் நிழலற்ற பரப்பில் ...( 'மொழியின் அடுக்குகளும் அர்த்தப் பாழியும்' தொகுப்பிலிருந்து - ஞானாதித்தன் )

வெறும் தள உயரம்

வெறும் தள உயரம் மட்டும் எந்த ஒரு பார்வை வீரியத்தையும் படைப்பாளிக்கு அளித்துவிடுவதில்லை. Image hosted by Photobucket.com வெகுநேர்த்தியான சொல்திறனும், வரைதிறனும், குரல் பயிற்சியும் கலையை வெளிக்காட்டும் ஒரு திறனாளியின் மயக்கும் 'சிருஷ்டி' யுக்திகள் மட்டும் தான் என்பதை எளிதில் கண்டுகொள்ளலாம். எதையும் தாமே படைத்தோம் என்றே இவர்கள் தாமும் மயங்கி வாசகன் போன்ற பயனுறுபவர்களையும் திகைப்பூட்டுகிறார்கள். கலை ஒரு கண்டுபிடிக்கும் சாதனம் மட்டும் தான் என்று அறியும் ஒரு நிலை வருமானால் படைப்பாளியின் ஆணிவேர் செலுத்தி ஆண்டாண்டுகாலமாய் நட்டு வளர்ந்த மாபெரும் புனித விருட்சம் வீழ்ந்த்துவிடும். அதை தடுக்க ஆயிரம் சித்தாந்தச் சரடுகளை செயற்கை விழுதுகளாய்த் தொங்க விட்டிருப்பது படைப்போன் - விமரிசகன் - ரசனை மிக்க நுகர்வோன் என்ற ஒரு அடையாள ஆதிக்க மைய்யம். இதிலிருந்து பெறும் விடுதலை ...( 'மொழியின் அடுக்குகளும் அர்த்தப் பாழியும்' தொகுப்பிலிருந்து - ஞானாதித்தன் )

Wednesday, July 13, 2005

பாயிண்டலிஸத்தின் எதிர்காலம் பற்றி

பாயிண்டலிஸத்தின் எதிர்காலம் பற்றி ஓவியர்களிடையே தோன்றிய பயம் ஒரு காரணமுமின்றி எழுந்தது என்று உணரத்தொடங்கி அரை நூற்றாண்டு ஆகிவிட்டது. Image hosted by Photobucket.com
ஆனாலும் தமிழக ஓவியச்சூழல் இதை பொதுமக்களுக்கு அறியத்தரத் தக்கதாக அமையவில்லை. பல காரணிகளை இதற்குக் காட்டலாமென்றாலும் நாட்டின் பெருவாரியான மக்களுக்கு கணினிப் பயன்பாடு எட்டாக்கனியாகவே இன்னும் இருக்கிறது என்பதும் இதனின் முதன்மையானதாகக் கருத இடமுண்டு. புகைப்படக் கலையிலேயே பாயிண்டலிஸத்தின் உள்நாடியான பொருகுத்தனமை உணரப்பட்டது. ஆனால் ஒரு சித்தாந்தரீதியாக இதை விமரிசகர்கள் கட்டமைக்காததால் ஓவியத்திற்கு ஒரு மாற்றுக் குறைவானதாகவே புகைப்படக்கலை அறியப்பட்டது. இதை நிவர்த்திக்கும் முனைப்பாக புகைப்படக் கலையினரும் தம் படங்களைச்`சிதைத்தும் கலைத்தும் நவ ஓவியத்தின் மருண்மையை அவற்றில் சிருஷ்டிகளாகக் காட்ட முற்பட்டனர். ஓவியமே இயல்வடிவத்தை மறுத்து எதைக்காண முயன்றது எனக் .....

( 'மொழியின் அடுக்குகளும் அர்த்தப் பாழியும்' தொகுப்பிலிருந்து - ஞானாதித்தன் )

எழுதும் போது சொற்களைத்

எழுதும் போது சொற்களைத் தவிர்க்க முடிவதில்லை. சொற்களின் கூட்டம்தான் எழுத்து என்று நம்மை பலகாலம் நம்பவைத்து விட்டார்கள். சொல்லுக்கும் எழுத்துக்கும் சம்பந்தமே கிடையாது என்பதே தற்கால கணியறிஞர்களின் தீர்வு.
Image hosted by Photobucket.com சொற்கள் இன்றி எப்படி எழுதுதல் சாத்தியமில்லை என்று நம்பப்படுகிறதோ அதேபோல் உடல் இன்றி உயிர் தரிக்காது என்றும் பின்னால் வந்தவர்கள் புனைந்து விட்டார்கள். ஒரு விதத்தில் பார்த்தால் எழுத்து உயிர் போன்றது என்பதன் அர்த்தம் இதன் மூலம் தெளிவாகிறது.

படைத்தல் என்பது எழுத்தின் மூலம் சாத்தியப்படும்போது, எழுத்து என்பது மொழியின்றி இருப்பதில்லை என்பதையும் நாம் அறியலாம். மொழி-சொற்கள்-எழுத்து என்று இவை ஒரு சிக்கலான வலைப்பின்னலாக உருக்கொண்டு நம் உயிரின் இருப்பைத் தக்க வைக்கின்றன. இப்பின்னலின் மூலம் கண்டு தெளிவதே அநுபூதி நிலை எனும் அர்த்தமற்ற பெருவெளி உணர்வதாகும். மொழியின், எழுத்தின், சொற்களின் வலிமை உணர்ந்தவர் இதனை அறிவார்கள். முன்பே சொன்னதுபோல் உயிருக்கு நிகர் இவை. அதை வாங்கவும் கூடும் என்றும் உணரவேண்டும். இந்த நூற்றாண்டின் முதல் ஐந்து தமிழ் நாவல்களை பட்டியலிட்டால் அவற்றில் ஒன்றுகூட கவிதையாக இருக்காது என்பதிலிருந்த்து கவிதைக்கும் உரைநடைக்கும் இருக்கும் தூரத்தை வரும் காலத்திலும் கடப்பது என்பது சாத்தியமில்லை என்றே கருதலாம்.

( 'மொழியின் அடுக்குகளும் அர்த்தப் பாழியும்' தொகுப்பிலிருந்து - ஞானாதித்தன் )

Tuesday, July 12, 2005

87

மர்மக்கதை எழுத்தாளர் எட் மக்பெயின் (Ed McBain) சென்ற வாரம் தம் 78ம் வயதில் காலமானார். சுமார் ஐம்பதாண்டு காலம் மர்மக்கதைகள், திரைக்கதைகள், நாடகங்கள் என எழுதியவர். ஆனால் 87 வது காவல் சரக (87 Precinct ) கதைகள்தான் அவருக்கு பெரும் புகழ் வாங்கிக் கொடுத்தன.
Image hosted by Photobucket.com கொலைத்துப்பறியும் கதைகளில் காவலர் பணியில் எதிர்கொள்ளும் நீள்கால நடவடிக்கைகள், அலுக்கும் விதிகள் காட்டும் செயல்பாடுகள், எரிச்சல், கோபம் என அன்றாட வாழ்வை உள்ளடக்கிய "காவலர் வழிமுறை" (police procedural ) கதைகளை வகைமாதிரியாக எழுதியவர் அவர். ஒரு புனைவு நகரத்தில் நடப்பதாக (நியூயார்க் என ஊகிக்கமுடிந்தாலும்) ஒரு காவல் நிலையத்தைச் சுற்றிய அக்கதைகள் படிக்க படு சுவாரசியமானவை. மர்மக்கதைகளை முதலில் இலக்கியம் என ஏற்றுக்கொள்ளப் படாவிட்டாலும் (யார் இப்படி ஏற்றுக்கொள்ளவேடும்?) பின்னர் விமரிசனம் 'வளர்ந்து' , ஐயா, மாடர்னிஸ்ட் உலக நோக்கின் எபிஸ்டமோலஜியைக் சிருஷ்டிப்பதே இவர்கள்தான் என்று ஒரேபோடாகப் போட, ஒரு வ்ழியாக கல்விக்கூடங்களில் கொலைக்கதைகளையும் 'கற்பிக்க' ஆரம்பித்தார்கள். எனக்கு மிகவும் பிடித்த எழுத்தாளர்களில் மர்மக்கதை எழுதுபவர்கள் எனப்பார்த்தால், ரேமண்ட் சாண்ட்லர், எட் மெக்பெயின், ஜான் லெகார்ரே, ஜான் மெக்டோனால்ட் (இவரின் படகுநாயகனை கணேஷ் ஆக்கிய .....கிர்ர்ர்) எனப் பலரும் உள்ளனர்.
ஹிட்ச்காக்கின் பேர்ட்ஸ் படத்துக்கு இவர்தான் திரைக்கதை எழுதியவர் என்பது இன்னொரு செய்தி. அமெரிக்க எழுத்தாளராக புகழ் பெற வேண்டுமானால் ஆங்கிலோ சாக்ஸன் பெயர் வேண்டும் எனத் தன் இத்தாலியப் பெயரான சால்வதோர் லோம்பினோவை மாற்றி எட் மக்பெயின் உட்பட ஆறு விதமான புனைப்பெயர்களில் எழுதினார். ஐம்பதாண்டுக்கு முன்கூட காணப்பட்ட, அமெரிக்க உருக்கும் வாணலியின் கரிபடர்ந்த முகம் அது.

Monday, July 11, 2005

ஒரு ரெட்ரோ காதல் கவிதை 2

(தமிழ்மணம் தமிழ் இல்லை என்று ஒதுக்கி விட்டதால் இந்த வரி....)

Image hosted by Photobucket.com

(03/1985)

Friday, July 08, 2005

கருத்துக் கணிப்பு

கருத்துக் கணிப்பு - பதில்கள். (07 ஜூலை, 2005)
--------------------------------------------------------------------------------------------------------------


1.
" நிச்சயமா சொல்ல முடியாதுங்க. டி.வீ.ல அப்பிடித்தான் சொல்றாங்க"
- குடும்பத்தலைவி

"அவனுகளேதான். எந்த நாட்டை விட்டு வச்சாங்க" - துணிக்கடை சேட்டு முதலாளி

" அது பிறப்பிலேயே கர்மாப்படி தீர்மானமாயிடுதே. நாம மாத்தறதுக்கு ஒண்ணும் இல்லை " - கோயில் ஜோசியர்

2.
" என்ன பண்றது. வீட்டுக்குளேயே உக்காந்து பேப்பர் படிக்க வேண்டியதுதான் "
- வங்கி ஊழியர்

" இதுக்கெல்லாம் பயந்தா முடியுங்களா. நேரில வந்தா இந்த திருப்புளியிலேயே வகுந்து போடுவேன்" - பைப் ரிப்பேர்க் காரர்

" எப்பிடியோ கணக்கு மிஸ்ஸை மூணு நாளைக்கு பாக்க வேண்டியதில்லை. போகோ சேனல் பாக்கலாம் " - ஐந்தாம் வகுப்பு மாணவி

3.

" ஏம்பா தாயா புள்ளயா பழகிட்டு, இன்னிக்கி எங்கெ போறது சொல்லுங்க"
- கோலப்பொடி விற்கும் கிழவி

" இது ஒத்து வராது சார். நாமளும் இனிமே அனுசரிக்க முடியாதுன்னு சொல்லிடணும். அவங்கவங்க பொழக்கற வழியப் பாக்குறதுதான் நல்லது " - அகில இந்திய ரசிகர் மன்ற நகரச் செயலாளர்

" புறநகர்ப் பகுதியில் அனைத்து வசதிகளும் செய்யப் பட்டுள்ளன " - அரசு சார்ப்பில் அறிக்கை தரவல்ல அலுவலர்

4.
" கிடையாது" - உள்ளூர் எம் எல் ஏ
" அப்படியெல்லாம் எங்களுக்குத் தெரிஞ்சு ஒண்ணும் இல்லை" - போலீஸ் அதிகாரி
" எல்லா நாட்டிலேயும் நடக்கிறதுதான் சார். நம்ம ஊர்ல ஒருமாதிரி. இன்னோரெடத்தில ஒரு மாதிரி. ஆயிரங்காலத்து பிரச்சினை" - கல்லூரி பேராசிரியர்

5.
" 2020" - பொறியியல் மாணவர்
" 3000 " - சினிமா நகைச்சுவை ட்ராக் எழுத்தாளர்
" 2040 " - பலூன் விற்பவர்

Friday, July 01, 2005

இதி. 44

Image hosted by Photobucket.com(http://www.expressindia.com/)

" ஹென்றி, நீ இன்னான்றே. உண்டிவில்லால அடிக்கலையின்னா இந்த சூனியக்காரி வளிக்கு வரமாட்டா போலிருக்கே ..."

" நீ போடு ரிச்சர்ட், இந்த **%$@#* பசங்கெல்லாம் நாம எறியற கோதுமைத் துன்னூட்டு நம்மையே எதுக்குறாங்க,,,"