Friday, July 01, 2005

இதி. 44

Image hosted by Photobucket.com(http://www.expressindia.com/)

" ஹென்றி, நீ இன்னான்றே. உண்டிவில்லால அடிக்கலையின்னா இந்த சூனியக்காரி வளிக்கு வரமாட்டா போலிருக்கே ..."

" நீ போடு ரிச்சர்ட், இந்த **%$@#* பசங்கெல்லாம் நாம எறியற கோதுமைத் துன்னூட்டு நம்மையே எதுக்குறாங்க,,,"

23 comments:

Anonymous said...

E-tamil வலைப்பதிவு வழியாக பிபிசியிலும் இதே செய்தியைப் படித்தேன்! வெளிநாட்டுத் தலைவர்களைக் கொல்வதற்கான தடையை அமெரிக்க காங்கிரஸ் குறுக்கில் வந்து போடவேண்டியதாயிருந்திருக்கிறது! இதில் 'தலைவர்' என்பதும் தான் நிர்ணயிப்பது என்றாகிப் போய்விட்டபின்பு என்னத்தைச் சொல்வது!

-/பெயரிலி. said...

"He is not a crook.....................
............................... He was" ;-)

Jayaprakash Sampath said...

இதை இன்னும் யாரும் டச் பண்ணலியேன்னு யோசிச்சிட்டு இருந்தேன்...

SnackDragon said...

/இதில் 'தலைவர்' என்பதும் தான் நிர்ணயிப்பது என்றாகிப் போய்விட்டபின்பு என்னத்தைச் சொல்வது!/

அதே.

-/சுடலை மாடன்/- said...

//இதில் 'தலைவர்' என்பதும் தான் நிர்ணயிப்பது என்றாகிப் போய்விட்டபின்பு என்னத்தைச் சொல்வது!//

இதை வெறும் அமெரிக்கத் திமிர் என்று மட்டும் பார்க்க முடியவில்லை. வலிய நிலையில் உள்ள அரசுகளும், ஆள்வோரும் வலிமையில்லா மக்களையும், அரசுகளையும் கைக்குள் அடக்கிப் பார்க்கும் மனோநிலை. இதில் ஜனநாயக அரசு, சர்வாதிகார அரசு என்றெல்லாம் வேறுபாடு இல்லை.

இராஜீவ் காந்தியும், இரமேஷ் பண்டாரியும் ஈழப்போராளிகளை திம்புவில் பேச்சு வார்த்தைக்கு அழைத்து இதே போன்ற மனநிலையையும், வார்த்தைகளையும் ஈழப் போராளிகளுக்கும், ஈழ மக்களுக்கும் எதிராகப் பயன் படுத்தினர்.

வலைப் பதிவு உலகத்தில் கூட ஈழத்தமிழர்களுக்கு எதிரான இந்த மன நிலையைக் காண முடிகிறது. நம்மிடம் உணவுப் பொட்டலம் வாங்கிச் சாப்பிட்டு, நாம் சொல்வதைக் கேட்க வேண்டும், நாம் சொல்பவர்களைத் தலைவர்களாக ஏற்க வேண்டும் என்ற ஜனநாயகப் பண்பை என்ன சொல்வது?

என்னைப் போட்டுத் தாக்குபவர்கள் ஆரம்பியுங்கள் வேலையை, அருள் என்னை மன்னிப்பாராக.

நன்றி - சொ. சங்கரபாண்டி

arulselvan said...

இந்திராவைப் பற்றி நாங்கள் நண்பர்கள் நிறையத் திட்டி இருக்கிறோம். ஆனால் அவர் கொலையுண்ட நாளில் ஒரு நாள் முழுக்க நண்பர்களோடு கபடேரியாவில் விவாதம் செய்தது மறக்காதது. எழுபதுகளில் இந்தியா உலக அரங்கில் தன்மானத்துடன் நடைபோட முக்கியமாக பங்களித்த ஒருவர் என்றால் அது இந்திராதான். உணவுக்கொள்கை, பாதுகாப்பு, வானியல், எரிசக்தி போன்ற பல துறைகளிலும் அன்று இந்தியா தவழும் நிலையிலிருந்து எழுந்து நடக்க ஆரம்பித்தது. நான் காங்கிரஸ்காரன் அல்ல. ஆனால் நேருவும் இந்திராவும் இல்லாமல் வேறு எந்த அரசியல் தலைவர்கள் இந்த நாட்டை ஒன்றாக வைத்திருக்கக் கூடிய மாயவித்தை தெரிந்திருந்தார்கள் என்று எண்ணாமல் இருக்க முடிவதில்லை. - முக்கியமாக இந்தியாவைச் சுற்றியுள்ள நாடுகளைப் பார்க்கும் போது. நிக்ஸனும் கிஸ்ஸிங்கரும் உலகம் முழுவதும் செய்த அழிவினைகளுக்கு மன்னிப்பெல்லாம் அவர்கள் மதங்களிலேயே கிடையாது. பதர்கள்.

Jayaprakash Sampath said...

//எழுபதுகளில் இந்தியா உலக அரங்கில் தன்மானத்துடன் நடைபோட முக்கியமாக பங்களித்த ஒருவர் என்றால் அது இந்திராதான். //

//நேருவும் இந்திராவும் இல்லாமல் வேறு எந்த அரசியல் தலைவர்கள் இந்த நாட்டை ஒன்றாக வைத்திருக்கக் கூடிய மாயவித்தை தெரிந்திருந்தார்கள் என்று எண்ணாமல் இருக்க முடிவதில்லை//


மிக மிகச் சரி...

சன்னாசி said...

மேலும்

-/பெயரிலி. said...

/மேலும்/
யார் கண்டது? கிஸிஞ்சருக்கு அலன் டே குறித்தும் சிறந்த அரசியற்றலைவர் என்ற அன்றைய அமெரிக்க அரசின் வெளியுறவுக்கொள்கையைப் பிரதிபலிக்காத கருத்து இருக்கக்கூடும் ;-)

சன்னாசி said...

//கிஸிஞ்சருக்கு அலன் டே குறித்தும்//
எல்லாம் அரசியல்தான் போல! இசபெல் அயெண்டே (Isabel Allende) கூட, சந்தர்ப்பம் வாய்க்கும்போதெல்லாம் நான் சால்வடார் அயெண்டேயின் சொந்தம் என்று சொல்லி ஒரு சின்ன இலக்கிய mileage பெறவும் தவறுவதில்லை! உண்மைதான், நீங்கள் சொன்னமாதிரித்தான்: 'சவக்குழி ஞானோதயம்' அல்லது pseudo-சவக்குழி ஞானோதயம் :-)

-/பெயரிலி. said...

/இசபெல் அயெண்டே (Isabel Allende) கூட, சந்தர்ப்பம் வாய்க்கும்போதெல்லாம் நான் சால்வடார் அயெண்டேயின் சொந்தம் என்று சொல்லி ஒரு சின்ன இலக்கிய mileage பெறவும் தவறுவதில்லை/
சின்ன மைலேஜா? சமயங்களின் அது பெரிய அறுவை!! (குறிப்பாக, ஒரு மணிநேரச்செவ்வி நிகழ்வுகளில்)

arulselvan said...

மாண்ட்றீசார், ரமணி:
z, missing பற்றியெல்லாம் இன்னும் யாரும் வலைப்பதிக்க வில்லை என நினைக்கிறேன். சமீபத்தில் வழக்குத் தீர்ப்பாகிய, mississippi burning பற்றியும். கவனித்து ஆவன செய்யவும்.:-)

சன்னாசி said...

Z - Peyarili's review

era.murukan said...

/எழுபதுகளில் இந்தியா உலக அரங்கில் தன்மானத்துடன் நடைபோட முக்கியமாக பங்களித்த ஒருவர் என்றால் அது இந்திராதான்/

நீங்களுமா அருள்?!

1975-ல் நெருக்கடிநிலை பிரகடனம் செய்து சனநாயகத்தைக் காலில் போட்டு மிதித்தவர் யார்? பழைய தில்லி துருக்மான் கேட்டும் கோழிக்கோடு பொறியியல் கல்லூரி மாணவர் ராசன் வதமும் இன்னும் பிற நெருக்கடி நிலைக் கொடுமைகளும் மறந்து விட்டனவா?

arulselvan said...

அன்புள்ள இரா.மு.
கொஞ்ச நாளாகவே இந்திராவைப் பற்றி எழுதிவேண்டும் என்றே நினைத்திருந்தேன். இது ஒரு சந்தர்ப்பம்.
நெருக்கடி நிலையை நான் நிச்சயம் மறந்து விடவில்லை.
நமது நாட்டு ஆளும் வர்க்கம் மிக வினோதமான ஒரு கலவை மனப்பான்மை கொண்டது. உள்நாட்டில் எவ்வளவுக்கெவ்வளவு எதாச்சாதிகரமாகவும், ஆணவத்துடனும் நடக்க இந்திராவின் மனஆளுமை காரணமோ, அதே ஆளுமை உலக அரங்கில் ஒரு ஏறக்குறைய கஞ்சிக்கில்லாத நாடு படைபலம், பணபலம் மற்றும் ஆள்பலம் இன்றி உள்குழப்பங்களுக்கிடையிலும் வெளி நாட்டின் அச்சுறுத்தல்களுக்கு அடிபணியாமல் செயல்பட வைத்தது. அகில உலக அரங்கில் காஸ்ற்றோ, மண்டேலா, அராபத் என போராட்டங்களை அங்கீகரித்து பரப்புரையும் செய்த அதே இந்திய ஆளும் அமைப்பு உள்நாட்டில் சகலவித உரிமைகோரும் இயக்கங்களையும் அடக்கியதும் நடந்தது; நடக்கிறது. (டேனியல் ஆர்டெகா அரசு விருந்தினராக ஐஐஎஸ்ஸி கூட வந்தார்! ). இந்த பிளவுண்ட செயல்பாடு எப்போதும் தொடர்ந்த விமரிசனத்துக்கு உட்பட்டே வந்திருக்கிறது. இந்தியா ஒரே நாடாக இருப்பதே நல்லது என்று நாம் நினைக்கும்போது இந்த பிளவாளுமை பெரும் கருத்துலக குழப்பங்களுக்கும் சிக்கல்களுக்கும் வழிவகுக்கிறது. நோம் சோம்ஸ்கிக்கு இந்தியாவில் வரவேற்பு கொடுத்து இழைந்து இணைசெல்வது யார்? இந்து பத்திரிக்கை. அவரோ சென்னைக்கு வந்து ம்யூசிக் அகதமியில் பேசிப்போகிறார். அவர் எங்கே எப்போது தமிழில் நடக்கும் எதிர்ச்சொல்லாடல் களத்தைச் சந்திக்கப்போகிறார்? அகில உலக சிந்தனைத் தளத்தை இந்தியாவின் மேல்தள சிந்தனை சார்ந்த செயல்பாட்டு அமைப்புகளும், ஆட்களுமே முற்றிலுமாக ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும் போது, இந்தியா என்ற ஒரு நாட்டிற்கு (அதன் பெரும்பான்மை மக்களுக்கு) பிரதிநிதித்துவ சிந்தனைக்களம் அவர்களாலேயே அமைக்கப்படுகிறது. தென்னாப்பிரிக்காவில் தலித் பிரதிநிதிகள் ஓரங்கட்டப்பட்டது நினைவிருக்கலாம்.
நமக்கு இப்போது இரு குறிக்கோள்கள் உள்ளன. ஒன்று நாட்டில் வளமையை அதிகரித்து அனைவருக்கும் ஒரு தன்மானமுள்ள வாழ்கையையும் அதற்கு உழைக்க வாய்ப்பையும் கொடுத்தல். இதற்கு சிறிதேனும் வழிவகை செய்ய முயற்சித்தால் எந்த மூன்றாந்தர அரசியல்வாதியாக இருந்த்தாலும் அதற்காக அவருக்கு வாழ்த்துக்களும், மரியாதையும் கொடுத்தல். இரண்டாவது, மேற்கண்ட செயல்முறையில் பாதிப்புக்குள்ளாகும் கருத்துக்களத்தில் பிரதிநிதித்துவம் இல்லாத மக்களுக்கு ஆதரவாக கருத்துகளை மற்றவர்களுக்கு அறியச்செய்தல். இதில் ஒன்றுக்கொன்று முரண்படும் கருத்துவெளியில் நாம் அலைமோதிக்கொண்டிருக்கிறோம் என்பதுதான் நான் புரிந்தது. நாம் எல்லோரும் இந்திய ஆளும் வர்க்கம் எனும் முன்முடிபில் இதைச் சொல்லுகிறேன். (இதெல்லாம் சரியான குட்டி பூர்ஷுவா சிந்தனை என இடதுசாரி நண்பர்கள் கூறலாம். அது அப்படியே.)
நல்ல வேளை எச்சரிக்கை செய்தீர்கள். இல்லாவிட்டால் நான் இதை எழுதி இருக்க மாட்டேன்.
மேலே சொன்ன படங்களுடன் 'அம்ம அறியான்' விமரிசனமும் சேர்த்துக்கொள்ள வேண்டும். மூன்றுமுறை பார்த்தபடம். ஆனால் அதற்கு விமரிசனம் எழுத நான் சரியான ஆள் இல்லை.
அருள்

-/பெயரிலி. said...

I will post on missing & mississippi burning (there are number of films on this, though this is the well known one) soon.

arulselvan said...

சங்கரபாண்டி:
உங்கள் முதல் பத்தியுடன் ஒத்துப் போகிறேன். ஆனால் நம்மைப் பொருத்தவரை ஈழப்பிரச்சனையானது ஒரு பெரிய extended family இல் நடக்கும் பல தலைமுறை வன்மச்சிக்கலாக தொடர்ந்து கொண்டிருக்கிறது. இப்படி ஒரு பெரும் குடும்பச்சண்டை நடக்கும்போது, அனைவரும் உரக்க கத்திக்கொண்டிருக்கும் போது குடும்ப அங்கத்தினரில் சிலர் மட்டும் மௌனமாக இருப்பார்கள். அந்த மௌனமே ஒரு உரத்து மொழிதல் என்பதால்.

மாண்ரீஸர்:
நன்றி. இதை நான் கவனித்திருக்கவில்லை.

ரமணி:
எதிர்பார்த்திருப்பேன்.

- அருள்

பத்மா அர்விந்த் said...
This comment has been removed by a blog administrator.
சன்னாசி said...
This comment has been removed by a blog administrator.
சன்னாசி said...
This comment has been removed by a blog administrator.
மு. சுந்தரமூர்த்தி said...

அருள்,
இரா.மு வுக்கு பதிலளிக்கும் முகமாக எழுதியுள்ள கருத்துக்களோடு ஒத்துப்போக முடிகிறது. ஆனால் முதலில் எழுதிய பதிலில் முழுதாக ஒத்துப்போக முடிவதில்லை.

//ஆனால் நேருவும் இந்திராவும் இல்லாமல் வேறு எந்த அரசியல் தலைவர்கள் இந்த நாட்டை ஒன்றாக வைத்திருக்கக் கூடிய மாயவித்தை தெரிந்திருந்தார்கள் என்று எண்ணாமல் இருக்க முடிவதில்லை. - முக்கியமாக இந்தியாவைச் சுற்றியுள்ள நாடுகளைப் பார்க்கும் போது.//

இது sweeping statement ஆகத் தெரிகிறது. நேருவும், இந்திராவும் பல ஆண்டுகள் ஆண்டவர்கள் என்பதால் இவர்களைப் பற்றிய இப்படியான எண்ணம் வருவது தவிர்க்கவியலாது. ஆனால் இவர்களைத் தவிர வேறு யாரும் அதைச் செய்திருக்க முடியாது என்பதற்கான முகாந்திரம் இருப்பதாகத் தெரியவில்லை. இவர்கள் ஆண்ட காலங்களுக்கிடையே சாஸ்திரி, தேசாய், பிறகு வி.பி. சிங் ஆகியோரின் 'ஒன்றரையாண்டு' ஆட்சிக் காலங்களில் தேசவொற்றுமைக்கு பெரிதாக குந்தகம் நேர்ந்ததாக தெரியவில்லை. அதேபோல கடந்த சில ஆண்டுகளாக நடந்துவரும் 'கூட்டு' ஆட்சிகளாலும் நேரு, இந்திரா காலங்களில் நடக்காத அளவு தேச ஒற்றுமைக்கு அச்சுறுத்தல் வருவதாக சொல்லவியலாது.

இந்தியாவைச் சுற்றியுள்ள நாடுகளோடு ஒப்பிட முடியாது. இந்தியா போன்ற பல்தேசிய, பலகலாச்சார பெருநாடாக ஒன்றுமில்லை. பன்முகக் கலாச்சாரமும், அளவில் பெரிதாக இருப்பதுமே ஜனநாயகத்தையும், மதசார்பின்மையையும், சிவில் அரசியலில் மூக்கை நுழைக்காத இராணுவத்தையும் பேணக்கூடிய வசதியை அளித்துள்ளது. அளவில் பெரிதாக இருப்பதால் பாதிக்கும் மேற்பட்டோர் கல்வியறிவும், ஏழ்மையில் இருக்கும் சூழ்நிலையிலும் அபரிமிதமான பணத்தை அணுசக்தி/ஆய்தம், ஏவுகணை, விண்வெளி ஆராய்ச்சியில் கொட்ட முடிந்துள்ளது. இந்த சூழ்நிலையோ, வசதியோ அண்டை நாடுகளுக்கு இருந்ததில்லை. இந்நாடுகளிலெல்லாம் ஏதாவது ஒரு இன/மதக் குழு பெரும்பான்மையாக இருப்பதால் 'ஜனநாயகம்' என்ற கருத்தாக்கம் 'பெரும்பான்மை இனத்தின் அராஜகமாக' அர்த்தப்படுத்திக்கொள்ளப்பட்டுள்ளது. நேருவும், இந்திராவும் 'இந்தியை' வைத்து இந்த 'ஒற்றைப் பரிமாண' விளையாட்டில் இறங்கினார்கள். அந்த பப்பு வேகாது என்று இப்போது எல்லோரும் புரிந்திருக்கிறார்கள். நேருவும், இந்திராவும் உயிரோடு இருந்தாலும் கூட அவர்களுக்கும் இந்த புரிதல் கிடைத்திருக்கும்.

Anonymous said...

கோதுமை சிரிப்பு ஜோக்கில் உண்டிவில்லுன்னா என்ன அண்ணாச்சி....??
http://www.geocities.com/shafihitayetullah/a1.html

Mookku Sundar said...

அருள்,

முழுமையாக அனுபவித்துப் படித்தேன். அருமை.