ஹிட்ச்காக்கின் பேர்ட்ஸ் படத்துக்கு இவர்தான் திரைக்கதை எழுதியவர் என்பது இன்னொரு செய்தி. அமெரிக்க எழுத்தாளராக புகழ் பெற வேண்டுமானால் ஆங்கிலோ சாக்ஸன் பெயர் வேண்டும் எனத் தன் இத்தாலியப் பெயரான சால்வதோர் லோம்பினோவை மாற்றி எட் மக்பெயின் உட்பட ஆறு விதமான புனைப்பெயர்களில் எழுதினார். ஐம்பதாண்டுக்கு முன்கூட காணப்பட்ட, அமெரிக்க உருக்கும் வாணலியின் கரிபடர்ந்த முகம் அது.
Tuesday, July 12, 2005
87
மர்மக்கதை எழுத்தாளர் எட் மக்பெயின் (Ed McBain) சென்ற வாரம் தம் 78ம் வயதில் காலமானார். சுமார் ஐம்பதாண்டு காலம் மர்மக்கதைகள், திரைக்கதைகள், நாடகங்கள் என எழுதியவர். ஆனால் 87 வது காவல் சரக (87 Precinct ) கதைகள்தான் அவருக்கு பெரும் புகழ் வாங்கிக் கொடுத்தன.
கொலைத்துப்பறியும் கதைகளில் காவலர் பணியில் எதிர்கொள்ளும் நீள்கால நடவடிக்கைகள், அலுக்கும் விதிகள் காட்டும் செயல்பாடுகள், எரிச்சல், கோபம் என அன்றாட வாழ்வை உள்ளடக்கிய "காவலர் வழிமுறை" (police procedural ) கதைகளை வகைமாதிரியாக எழுதியவர் அவர். ஒரு புனைவு நகரத்தில் நடப்பதாக (நியூயார்க் என ஊகிக்கமுடிந்தாலும்) ஒரு காவல் நிலையத்தைச் சுற்றிய அக்கதைகள் படிக்க படு சுவாரசியமானவை. மர்மக்கதைகளை முதலில் இலக்கியம் என ஏற்றுக்கொள்ளப் படாவிட்டாலும் (யார் இப்படி ஏற்றுக்கொள்ளவேடும்?) பின்னர் விமரிசனம் 'வளர்ந்து' , ஐயா, மாடர்னிஸ்ட் உலக நோக்கின் எபிஸ்டமோலஜியைக் சிருஷ்டிப்பதே இவர்கள்தான் என்று ஒரேபோடாகப் போட, ஒரு வ்ழியாக கல்விக்கூடங்களில் கொலைக்கதைகளையும் 'கற்பிக்க' ஆரம்பித்தார்கள். எனக்கு மிகவும் பிடித்த எழுத்தாளர்களில் மர்மக்கதை எழுதுபவர்கள் எனப்பார்த்தால், ரேமண்ட் சாண்ட்லர், எட் மெக்பெயின், ஜான் லெகார்ரே, ஜான் மெக்டோனால்ட் (இவரின் படகுநாயகனை கணேஷ் ஆக்கிய .....கிர்ர்ர்) எனப் பலரும் உள்ளனர்.
ஹிட்ச்காக்கின் பேர்ட்ஸ் படத்துக்கு இவர்தான் திரைக்கதை எழுதியவர் என்பது இன்னொரு செய்தி. அமெரிக்க எழுத்தாளராக புகழ் பெற வேண்டுமானால் ஆங்கிலோ சாக்ஸன் பெயர் வேண்டும் எனத் தன் இத்தாலியப் பெயரான சால்வதோர் லோம்பினோவை மாற்றி எட் மக்பெயின் உட்பட ஆறு விதமான புனைப்பெயர்களில் எழுதினார். ஐம்பதாண்டுக்கு முன்கூட காணப்பட்ட, அமெரிக்க உருக்கும் வாணலியின் கரிபடர்ந்த முகம் அது.
ஹிட்ச்காக்கின் பேர்ட்ஸ் படத்துக்கு இவர்தான் திரைக்கதை எழுதியவர் என்பது இன்னொரு செய்தி. அமெரிக்க எழுத்தாளராக புகழ் பெற வேண்டுமானால் ஆங்கிலோ சாக்ஸன் பெயர் வேண்டும் எனத் தன் இத்தாலியப் பெயரான சால்வதோர் லோம்பினோவை மாற்றி எட் மக்பெயின் உட்பட ஆறு விதமான புனைப்பெயர்களில் எழுதினார். ஐம்பதாண்டுக்கு முன்கூட காணப்பட்ட, அமெரிக்க உருக்கும் வாணலியின் கரிபடர்ந்த முகம் அது.
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
//ஜான் மெக்டோனால்ட் (இவரின் படகுநாயகனை கணேஷ் ஆக்கிய .....கிர்ர்ர்) //
ஓஹோ... அப்படியா....?
Post a Comment