சந்தையை உருவாக்குவதோ, வகைமாதிரிகளைப் புனைவுசெய்து முன்னிறுத்துவதோ ஆழ்ந்த அறிவுப்புலம் தோய்ந்த ஆய்வுக்கட்டுரைகளை பல்கலைக் கழகங்களின் துறை சார்ந்து கற்பிக்க இயலுவதோ போன்ற முழுவதும் நிறுவனமாக்கப் பட்ட அமைப்புகளின் கோழிப் பண்ணைப் படைப்புலகம் விரிந்து உலகமயமாக்கப்பட்டுள்ளது. வியாபாரக் கண்டெடுப்புகளின் கிளர்ச்சிக் கூறுகள் என்ன விதமான சமுதாய நிலக்குலுக்கல்களை ஏற்படுத்தி விடமுடியும்? ஓவியம் மக்களிடமிருந்து அகன்று கண்ணாடிச் சட்டங்களின் பின்னால் பதுங்கும் துயரச் சாகசத்தின் கதை இது. விலைமதிப்பில்லாதது என்பதற்கு இன்றைய சொல்சிதைவுப் பரிணாம வழக்கில் நீங்கள் எளிதில் காணமுடியாத குளிர் அறைகளில் உறைந்தது என்றே பாடம். நடுச் சந்தியின் நிழலற்ற பரப்பில் ...
( 'மொழியின் அடுக்குகளும் அர்த்தப் பாழியும்' தொகுப்பிலிருந்து - ஞானாதித்தன் )
No comments:
Post a Comment