( 'மொழியின் அடுக்குகளும் அர்த்தப் பாழியும்' தொகுப்பிலிருந்து - ஞானாதித்தன் )
Thursday, July 14, 2005
வெறும் தள உயரம்
வெறும் தள உயரம் மட்டும் எந்த ஒரு பார்வை வீரியத்தையும் படைப்பாளிக்கு அளித்துவிடுவதில்லை.
வெகுநேர்த்தியான சொல்திறனும், வரைதிறனும், குரல் பயிற்சியும் கலையை வெளிக்காட்டும் ஒரு திறனாளியின் மயக்கும் 'சிருஷ்டி' யுக்திகள் மட்டும் தான் என்பதை எளிதில் கண்டுகொள்ளலாம். எதையும் தாமே படைத்தோம் என்றே இவர்கள் தாமும் மயங்கி வாசகன் போன்ற பயனுறுபவர்களையும் திகைப்பூட்டுகிறார்கள். கலை ஒரு கண்டுபிடிக்கும் சாதனம் மட்டும் தான் என்று அறியும் ஒரு நிலை வருமானால் படைப்பாளியின் ஆணிவேர் செலுத்தி ஆண்டாண்டுகாலமாய் நட்டு வளர்ந்த மாபெரும் புனித விருட்சம் வீழ்ந்த்துவிடும். அதை தடுக்க ஆயிரம் சித்தாந்தச் சரடுகளை செயற்கை விழுதுகளாய்த் தொங்க விட்டிருப்பது படைப்போன் - விமரிசகன் - ரசனை மிக்க நுகர்வோன் என்ற ஒரு அடையாள ஆதிக்க மைய்யம். இதிலிருந்து பெறும் விடுதலை ...
( 'மொழியின் அடுக்குகளும் அர்த்தப் பாழியும்' தொகுப்பிலிருந்து - ஞானாதித்தன் )
( 'மொழியின் அடுக்குகளும் அர்த்தப் பாழியும்' தொகுப்பிலிருந்து - ஞானாதித்தன் )
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
படம் நல்லாருக்கு!
Post a Comment