Monday, July 18, 2005

புத்தி இல்லாமல் ஒரு பதிவு

Image hosted by Photobucket.com நேற்று வாங்கியதிலிருந்து கேட்டுக்கொண்டே இருக்கிறேன். பல இடங்களில் கண்ணில் நீர் வரச்செய்த இசைத்தட்டு. மாணிக்கவாசகர் ஒருபுறம். இசை ஒரு புறம். அப்பனைப் பாடியாச்சு. இனி ஒரு சுப்பன் இருக்கிறான். ஆயிரம் பாட்டோடோடு அருணகிரி இருக்கிறான். அய்யா, ராசய்யா எப்ப ஆரம்பம்.

65 comments:

Narain Rajagopalan said...

அருள், திருவாசகத்தினை இன்னமும் முழுமையாக கேட்கவில்லை. ஆனால், இந்த பதிப்பு தீம்தரிகிடவில் ஞாநி பொங்கி தள்ளியிருக்கிறார். எனக்கென்னவோ அது கொஞ்சம் ஒவர் உளறலாகத் தோன்றுகிறது, வாசித்துவிட்டு சொல்லுங்கள்.

பிச்சைப்பாத்திரம் said...

நாராயண்,

ஞாநி எனன் சொல்லியிருக்கிறார் என்று சுருக்கமாக சொல்ல முடியுமா? எனக்கென்னமோ ராஜாவே பாடி தம்மை சிரமப்பட்டு அதில் பொருத்திக் கொண்டிருக்காமல் வேறு நல்ல பாடகரை பாட வைத்திருக்கலாம் என்று தோன்றுகிறது. அவருடைய 'ஆன்மிகம்' என்ன உணர்த்தியதோ?

goinchami-8A said...

கண்ணில் நீர் வரச்செய்த இசைத்தட்டு. மாணிக்கவாசகர் ஒருபுறம். இசை ஒரு புறம். அப்பனைப் பாடியாச்சு

கேட்டு விட்டு எனக்கும் அப்படித்தான் தோணியது... இன்னார் பாடியிருக்கலாம், குரல் நல்லால்லை, வேற யாராவது பாடியிருக்கலாம்னு சொல்றதல்லாம், பாயின்ட்டிலிஸத்தை கூகுள்ள தேடி அர்த்தம் கண்டுபிடிக்கறா போல கேனத்தனம்னு புரிஞ்சு போச்சு... அவையோர்களே...மொதல்ல, நல்ல ஒரு சவுண்ட் ஸிஸ்டத்துல எந்தத் தொந்தரவும் இல்லாம, அமைதியா உக்காந்து கேளுங்கய்யா... விமர்சன விவாதத்தை எல்லாம் அப்பால பாத்துக்கலாம்...

G.Ragavan said...

ஞாநி என்ன சொல்லீருக்காரு? அதுக்கு லிங்க்கு யாராவது குடுங்க.

நானுங்கூட அடுத்து இளையரஜா சுப்பனைப் பாடினால் நன்றாயிருக்குமென்று தோன்றியது. எனக்கும் நினைவுக்கு வந்தவர் அருணகிரிதான். ஆயிரக்கணக்கில் பாட்டிருக்கு. அதுக்குள்ளே நல்ல மெட்டிருக்கு. இளையராஜா மனசு வெக்கனுமே!

arulselvan said...

நேற்று மாலை வாங்கினேன். இரவு 3 மணிவரை. காலையில் முழுவதும். g - 8A சொல்வது சரிதான் நண்பர்களே, முதலில் அநுபவியுங்கள்.
நாராயணன், இன்னும் படிக்கவில்லை. அப்புறம்.

Badri Seshadri said...

நேற்றுதான் நானும் வாங்கினேன். முதல் இரண்டு பாடல்களை மட்டும்தான் கேட்டேன்.

என் மரமண்டைக்கு, விவரிக்கமுடியாத ஆனந்தம்தான் கிட்டியது.

ஞாநியில் கட்டுரை பற்றி பின்னர்தான் விரிவாக எழுதவேண்டும்.

பிச்சைப்பாத்திரம் said...

அன்புள்ள கோயிஞ்சாமி 8-A, :-)

தாம் தீவிரமாக நம்புகிற கருத்துக்கு எந்த மாற்றுக் கருத்து வந்தாலும் அது 'கேனத்தனமாகத்தான்' இருக்க வேண்டும் என்று முன்தீர்மானத்துடன் அணுகுகிறவர்களின் புரிதலைப் பற்றி என்ன சொல்ல? ராஜாவின் இசையை சர்ரவுண்டு சிஸ்டத்திலேயே கேட்டதில் எனக்குத் தோன்றியதைத்தான் எழுதியிருக்கிறேன். ராஜா சர்வதேச தரத்தில் உள்ள இசையமைப்பாளர்தான். அதில் சந்தேகமேயில்லை. திருவாசகத்தில் ஒலிக்கும் பின்னணி சிம்பொனி ஆரட்டோரியாவின் இசையின் ஒலிச்சேர்க்கை என்னை வசீகரித்தது. என்றாலும் நல்ல சாப்பாட்டை பரிமாறிவிட்டு கூடவே எதையோ வைத்தாற் போலத்தான் ராஜாவின் குரல் எனக்கு ஒலித்தது.

ராஜாவின் வெறியர்கள் இந்தக்கருத்துக்காக என்னை மன்னிக்கவும்.

goinchami-8A said...

ராஜாவின் வெறியர்கள் இந்தக்கருத்துக்காக என்னை மன்னிக்கவும்

மன்ச்சிட்டோமப்பூ...:-)

ரவி ஸ்ரீநிவாஸ் said...

ஓம் சிவமயம்

ஐயன்மீர், யாம் இன்னும் அவ்வொலிப்பேழையை வாங்கிட வில்லை, ஆகவே கேட்கவில்லை. அருணகிரியின் தமிழ் பல இடங்களில் பல்லுடைக்கும் தமிழ்.அதற்கு எத்தகைய இசை பொருத்தமோ யாம் அறியோம்.

தமிழ்க் குரலென்றால் அது சீர்காழி, டி.எம்.செளந்திரராஜன்,சிதம்பரம் ஜெயராமன் என்று கருதுவோர் உளர்.ராஜாவின் குரல் நல்ல குரல்தான்

அதை விட அவரது இசை இன்னும் வளமானது.திரைப்படங்களில் அவர் பாடியுள்ள பல பாடல்களைக் கேட்கும் போது இசை அமைத்திருந்தால் மட்டும் போதாதோ என்று தோன்றுகிறது.எம்மால் தற்சமயம் வேறெதும் கூற இயலவில்லை.

ஈசன் தாள் பணிந்து
அடியார்க்கு அடியார்

ROSAVASANTH said...

ஒரே ஒரு பாடலை(புற்றில் வாழ்..) மட்டும் தூள்.காம் தயவில் கேட்டேன். ராஜாவின் குரலை விட குறைந்த பட்சம் அதைப் போல் பொருந்தக்கூடிய வேறு குரல் எனக்கு தட்டுப்படவில்லை.

" என்றாலும் நல்ல சாப்பாட்டை பரிமாறிவிட்டு கூடவே எதையோ வைத்தாற் போலத்தான் ராஜாவின் குரல் எனக்கு ஒலித்தது." என்று சொல்வது சுரேஷ் கண்ணன் பற்றி சொல்கிறதேயன்றி ராஜாவை பற்றி யல்ல என்பது என் தாழ்மையான எண்ணம். இதை சொல்வதால் ராஜாவின் வெறியனாக மாட்டேன், சுரேஷிற்கு இருப்பது போல் இது இன்னொரு கருத்து மட்டுமே என்று திடமாய் நம்புகிறேன்.

ஞாநி என்ன ஒளரியிருப்பார் என்று அறிய பெரிய ஊகம் தேவையில்லை. அதை (ஞாநியின் மற்ற பங்களிப்புகளையும், நேர்மையையும் கணக்கில் கொண்டு) பொருட்படுத்த வேண்டியதில்லை என்று நினைக்கிறேன்.

G.Ragavan said...

எனக்கும் கூட சில பாடல்களை வேறு பாடகர்களைக் கொண்டு பாட வைத்திருக்கலாமோ என்று தோன்றியது உண்மைதான்.

அருணகிரியின் தமிழுக்கு எந்த இசையும் ஆகும் என்பது எனது கருத்து. இசையாளிகளுக்குத்தானே அதை நிரூபிக்கும் கடமை.

arulselvan said...

ராஜாவின் குரல் பற்றி. முதலில் இந்தப்பாடல்களையெல்லாம் பாட தமிழை தமிழாக உச்சரிக்க வேண்டும். சமஸ்கிருதம் போலவோ, தெலுங்கு போலவோ உச்சரித்தால் நான் கேட்கப்போவதில்லை. இளையராஜா போதும். அப்புறம் பாவம் வேண்டும். இது இரண்டிலும் மற்றவர்களுக்கு ராஜா எவ்வளவோ மேல். யாராவது ஓதுவார்கள் இன்னும் மிச்சம் இருந்தால் அவர்களும் சரியாக இருக்கலாம். மஹாராஜபுரம் சந்தானம் இருந்தால் அவர் வேண்டுமானால் பொருந்தலாம். மற்றவர்கள் மேல் எனக்கு நம்பிக்கையில்லை.
அப்புறம் ஸ்கேல், பிட்ச் எல்லாம் மேற்கத்திய சங்கீதத்துக்கு ரொம்ப அவசியம்தான். ஆனால் நம் கர்நாடக சங்கீதக்காரர்களுக்கு ஆர்க்கஸ்ற்றாவில் பாட தேவையான வாய்ஸ் கல்ச்சர் இருக்கிறதா? அவர்கள் நாட்டில் போய் தப்பான ஸ்கேலில் பாடி பாமரனாக காட்சியளிப்பதற்கு இளையராஜா முட்டாளா என்ன? மற்றவர்கள் பாடினால் பெரிதாக வித்தியாசம் இருக்காது என்றே அவர் நினைத்திருக்கலாம்.

ரவி: :-) . அருணகிரியின் பாடல்களின் 'இசை'த் தன்மையைப்பற்றி நானென்ன சொல்லுவது? வாரியாரைக் கேளுங்கள். வாய்விட்டுப் படித்துப்பாருங்கள். நமக்கே உள்ளிருக்கும் இயல்பான மொழியின் இசை புலப்படும். தமிழ்ப் பாடல்கள் எல்லாம் பாட எழுதியவைதான். 'கவிதைகள்' அல்ல. சரிதானே.

ROSAVASANTH said...

அருள், ராஜாவின் குரல் பற்றி எழுதியுள்ளது மிகவும் ஒப்புகொள்ள கூடியதாய் உள்ளது. தமிழுக்கும், மேற்கத்திய இசைக்கும் ஒரே நேரத்தில் பொருந்த கூடியதாகவே எனக்கு தோன்றுகிறது. (சீர்காழி போன்றதோ, எஸ்பிபி ஹரிஹரன் தொடங்கி இன்றைய பிரபலமோ, மகராஜபுரம் அல்லது வேறு கர்நாடக சங்கீத மேதைகளோ கூட பொருந்தும் என்று தோன்றவில்லை.)

மேலும் ஒரு விஷயம். ராஜாவின் குரலில் 90களின் இறுதியில், 2000 பிறந்த பிறகு பெரிய மாற்றம் வந்திருப்பதை காணமுடியும். 'தென்றல் வந்து தீண்டும் போது..'பாடலை அந்த நாட்டுபுற இசை மேற்கத்திய (பிரிக்க இயலாமல்)மயப்படுத்திய தன்மைக்கு ராஜாவின் குரலை தவிர வேறு பொருத்தமான குரல் தெரியவில்லை. அவர் 80களின் பாடி பல பாடல்களை கெடுத்தது வேறு விஷயம். அதிலிருந்து, அதனால் ஏற்பட்ட முன் அபிப்ராயத்திலிருந்து விடுபட்டு அவர் குரலில் -பாடும் விதத்தில் -வந்துள்ள ஒரு முதிர்ச்சியை கணக்கில் கொண்டு பார்க்க வேண்டும் என்றே தோன்றுகிரது.

Anonymous said...

Arul,

As you said Ilaiyaraja should been tried "Oduvargal" to sing this album. His master's voice (?) definitely not suited in this album. Moreover this album should have been done with "Tamizhsai" instruments, not with Symphony.

Ilaiyaraja made lot of publicity but disappointed.

- Balaji

Anonymous said...

Arul, although personally IR's voice didnt bother me as much as it did others, your point that apart from IR only "OdhuvArgaL" could have renedered this is disputable. When IR can make his daughter sing in this album he could make any decent singer(and there are plenty of them with good pronunciation, check out "muththu natramum" song #5)sing in this. I feel that he could have rendered Polla vinayen the main piece and left the other songs to other singers.

But still, I have been listening to Pooveru Konum repeatedly.

Badri Seshadri said...

S.Anand in Outlook on Ilayaraja

Anonymous said...

I'm very unhappy with the article of Mr.Stephen Anand in Outlook.

Why does he talk about caste background instead of the work of Ilayaraja? Where does caste come into picture here? Only music matters and Ilayaraja has proved that music is beyond things like religious,linguistic and geographical boundaries.Every religion during medeival times was monotheistic and tried to destroy other religions.

I heard one song from dhool.com and it was really good.Youth in TN should be exposed to such music instead of songs with vulgar lyrics demeaning women and vulgar postures common in Tamil film songs today.

இராதாகிருஷ்ணன் said...

'புற்றில் வாழ்' பாடலைமட்டும் தூள்.காமில் (சுட்டியமைக்கு ரோசாவசந்திற்கு நன்றி!) கேட்டேன், நன்றாக இருந்தது. இப்பாடலின் ஆரம்பத்தில் "அட இதுதான் சிம்பொனியா....." என்றும் தொடர்ந்து வரும் சில வசனங்களைத் தவிர்த்திருக்கலாம். (இது 'குணா' ஒலிப்பேழையில் ஒவ்வொரு பாடலிடையேயும் கொடுக்கப்பட்ட வசனம் நினைத்தை நினைவூட்டியது).

இளையராஜா இதுபோன்ற அரிய படைப்புகளை மேலும் இசை உலகிற்கு வழங்கவேண்டும்.

arulselvan said...

KANilakanta Sastri's observation (quoted by Anand) about christian influences in Manikkavachagar is an interesting one, but one is doubtful with lines like in pUvEru kOnum. (This is just from the Album. There more in TV proper). What kind of christianity talks about such a transcendence. Will Christians go past their revealed words ever? Here MK transcends every other godly notion and vedas too. Hardly christian stuff.
The references to IIlayaraaja's cast are sticking out in the write up. There is absolutely no coherence in the piece. Is this some new kind of journalism, or what?

goinchami-8A said...

There is absolutely no coherence in the piece. Is this some new kind of journalism, or what?

தங்களுக்கு வேண்டிய விஷயங்களை உள்ளே சொருகுவதற்கு வாகாக கட்டுரை எழுதுவதற்குப் பெயர் 'அரிசி உப்புமா ஜர்னலிஸம்" என்று எங்கள் தலைமை கோயிஞ்சமி ஒருமுறை சொன்னார்.

ROSAVASANTH said...

//The references to IIlayaraaja's cast are sticking out in the write up. //

ஆனந்த் மீது (அதுவும் அசோகமித்திரன் விவகாரம் மற்றும் அதே அவுட்லொக் இதழில் வந்த 'dalits reversed' கட்டுரைக்கு பிறகு) எந்த மரியாதையும் கிடையாது. ஆனால் அவர் சம்பந்தமில்லாமல் ஜாதி பற்றி எதுவும் எழுதியதாக படவில்லை(நான் சரியாக வாசித்திருக்கும் படசத்தில்).

இளயராஜா ஒரு தலித் என்ற தகவலை கண்டுகொள்ளவே கூடாது என்று சிலருக்கு தோன்றலாம். ஆனால் திருவாசகத்துக்கு ஒரு தலித் சிம்பனி இசையமைப்பதும், அதை அவரால் மட்டுமே தர இயன்றிருப்பது, இயலக்கூடியதாய் இருப்பதும் நிச்சயமாய் வறலாற்றில் பேசப்பட வேண்டியவையாகவே படுகிறது. ஆனால் ஆனந்த் அதை கூட பேசவில்லை என்றுதான் தோன்றுகிறது. 'இளையராஜா இந்த குப்பைகளுக்கு அப்பாற்பட்டவர்' என்ற மேற்கோளை கடைசியில் வைத்து, அதை முன்வைத்தே குணசேகரன் சொன்னது உட்பட(இன்னும் பாவலர் வரதாராஜன், கதார், பாப்மார்லேயையும் தொட்டு) சொல்லியிருப்பதாக படுகிறது. 'தலித்' என்ற வார்த்தை எங்காவது அகப்பாட்டாலே பலருக்கு obsessesionஆக இருக்கிறது. அந்த வார்த்தையை முன்வைத்து என்ன பேசப்படுகிறது என்பது கூட கணக்கில் இல்லை. இளையராஜா 'தலித் என்ற அடையாளத்திற்கு அப்பாற்பட்டவர்' என்று ஒருவர் சொன்னால் கூட, ஜாதி பேசுவதாக சிலருக்கு தோன்றுவதன் உளவியலை எப்படி புரிந்து கொள்வது என்று புரியவில்லை.

(நான் ஆனந்தின் கருத்துக்களை ஏற்றுகொள்ளவில்லை. ஒரு விஷயம் எப்படி பார்க்கபடுகிறது என்பது குறித்து மட்டுமே..)

ROSAVASANTH said...

//Mr.Stephen Anand //

Not stephen. He is Siriyavan Anand

ROSAVASANTH said...

சின்ன விளக்கம். "'தலித்' என்ற வார்த்தை எங்காவது அகப்பாட்டாலே பலருக்கு obsessesionஆக இருக்கிறது." என்று நான் சொன்னது அருளை அல்ல.

arulselvan said...

வசந்த்,
>>>
சின்ன விளக்கம். "'தலித்' என்ற வார்த்தை எங்காவது அகப்பாட்டாலே பலருக்கு obsessesionஆக இருக்கிறது." என்று நான் சொன்னது அருளை அல்ல.

:-).
நானும் அப்படி நினைக்கவில்லை. தமிழகத்தில் சைவ சமய இயக்கமும் அதன் தாக்கமும் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேற்பட்ட ஒரு கால கட்டத்தில் பல நிலைகளில் நடந்துள்ளது. அதன் வீச்சு, இறைக்கொள்கை மற்றும் தத்துவம் என்பதினின்றும் அதிகமாக சமுதாய அளவிலும் மிகப் பெரியது. சடங்குகளிலும், தனித்துவத்தைப் பேணுவதிலும், அரச இணக்க அதிகார செயல்பாட்டிலும் அது வைதீக மரபுக்கு ஈடாக ஒரு பெரும்கட்டமைப்பின் சிக்கலான தன்மையிலும், சமுதாய படித்தளங்களைக் கட்டும் குரூரத்தையும் தன்னுள்ளே கொண்டதும் ஆகும். இதையெல்லாம் பார்க்க இன்றைக்கு திருவாசகம் ஒரு தலித்தினால் இசைக்கோவையாக்கப்பட்டு, கிறுத்துவர்களால் முன்னிறுத்தப்படுகிறது என்பது ஒரு அரசியல் ஸ்டேட்மண்ட். இதை வாரப்பத்திரிக்கையில் ஒரு பக்கக் கட்டுரையில் ஒரு வரியில் ஏதாவது உளரலாக எழுதுவதன் மூலம் ஆனந்த் என்ன சொல்லவருகிறார். திருவாசகத்தை பற்றி எழுதவேண்டுமானால் அதைக் கொஞ்சமாவது படிக்கவேண்டும். நீலகண்ட சாஸ்திரியை மேற்கோள் காட்டி என்னத்தை நிறுவுகிறார்? காஸ்பரின் பங்களிப்பை நியாயப்படுத்தவா? இது அரசியல் கட்டுரையா, சமூக வாசிப்பா, அல்லது இசை விமரிசனமா. சும்மா journalistic blah blah வா? பாப் மோர்லேக்கும் இதற்கும் என்ன சம்பத்தம்? இது இளையராஜாவா, எரிக் க்ளாப்டனா?

Anonymous said...

||paN (precursors to ragas);
thiruvAsagam is a shaiva Siddhatha Text||
Even though I'm an illiterate considering Carnatic music & Siva Siddhatha, Anand's these two statements do not seem to correct. Can anyone elaborate to me?

Anonymous said...

Raga is the sanskritised name for of paN.
Manicka vasagar is considered among one of the "Great Four" , the others being Sampandhar,Appar and Sundarar.They were all devote worshippers of Shiva and hence it is considered as part of shaiva siddhantam.

தகடூர் கோபி(Gopi) said...

"நமச்சிவாய வாழ்க" என்று துவங்கி "சிவன் சேவடி போற்றி" என முடியும் சிவபுரானப் பாடலை "பொல்லா வினையேன்" எனத் தொடங்கி கொத்து புரோட்டா போல குதறி வைத்திருந்தாலும் உள்ளத்துள் சென்று என்னவோ செய்கிறதே!

பாடல் வரிகளாலா அல்லது இசையாலா.. தெரியவில்லை

arulselvan said...

------
>>>அது வைதீக மரபுக்கு ஈடாக ஒரு பெரும்கட்டமைப்பின் சிக்கலான
----------
"அது பிற வைதீக மரபுகளுக்கு ஈடாக ஒரு பெரும்கட்டமைப்பின் சிக்கலான....."

என்று வாசிக்கவும்.

ROSAVASANTH said...

அருள், ஆனந்த் என்ன சொல்ல வருகிறார், அல்லது ஏதாவது சொல்ல வந்தார் என்று நான் எதுவும் சொல்லவில்லை. அவர் சொல்வதும் தெளிவில்லாத வரிகள். ஆனால் இளையராஜா பற்றி பேசும்போது, தலித் என்ற விஷயத்தை பேசவே கூடாது என்ற குரலை மட்டுமே நான் எதிர்கிறேன். நீங்கள் அப்படி சொன்னதாக நான் புரிந்துகொள்ளவில்லை.

அது ஒரு அரசியல் வாக்கியமாய் இருந்தால் அதில் என்ன பிரச்சனை என்றும் புரியவில்லை. இளயராஜாவின் தலித் அடையாளம் அதை அவர் எதிர்கொள்வது, மற்றவர்கள் எதிர்கொள்வது போன்றவற்றை பேசுவது முக்கியம் என்று என்று நினைக்கிறேன், திருவாசகம் பற்றி பேசும்போது கூட. இப்போதைக்கு வேறு எதுவும் என்னால் சொல்ல இயலவில்லை.

Anonymous said...

|They were all devote worshippers of Shiva and hence it is considered as part of shaiva siddhantam.|
My point is, they are the devotees of Shiva alright, but what they preached was not Saiva SiththAn-tham. My understanding is, the school of philosophy that aruNan-th sivAsAriyAr, meykaNdathEvar and umApathisivAsAriyar put forward is Saiva SiththAn-tham. The Great Four's school is a sort of agamic braminsham.

Regarding paN, I also have the same impression. However Anand says, "paNs (are) precursors to ragas." That's what I got confused.

SnackDragon said...

இளையராஜா ஒன்னும் 78 சிம்பொனிகள் பண்ணி கிழிச்சுடவில்லை. அதனால் அவர் குரல் மட்டம் என்றோ , திருவாசகத்துக்கு எடுபடவில்லை என்றோ சொல்லவில்லை. முறையாக தமிழிசை(க்ளாச்சிகல் என்று வாசிக்கவும்) பயின்றவர்களால் இன்னும் சிறப்பாக பாடமுடியும். அதே போல்
ஒரு பெண் குரலில் இருக்கும் கவர்ச்சி இன்னும் இனிமை சேர்க்கும். இளையராஜா "சரணாகதி"ப்பாடல்களை மட்டும் பாடிவிட்டு பிற பக்திபாடல்களை பெண்குரலில் ஒலிக்கச் செய்திருக்கலாம். எனக்கும் ரவியை போல , இளையாரஜாவைத்தவிர வேறு யாராவது பாடியிருக்க்லாம் என்று பல திரைப்பாடல்களில் தோன்றியதுண்டு.
"உதாரணமாக " அக்னிநட்சத்திர "ராஜா ராஜாதிராஜனிந்த ராஜா" அவருடைய ஈகோவை நிரப்ப பயன்படுத்தப்பட்டதாக நினைப்பதை தவிர்க்க முடிவதில்லை.

அதுதவிர, ஆனந் கட்டுரையில் கடைசியில், இளையராஜா திருவாய்மலர்ந்தருளியதுதான் நகைச்சுவையானது.
நல்லவேளை "மடத்து நரி" கைதானது. இல்லையென்றால், ராஜா " ஜெயேந்திரரை வெளியீட்டுக்கு விழாவுக்கு
அழைத்திருப்பார். காச்பர் ராஜை, அவர் எவ்வளவுமுயற்சி (திட்டத்துக்காக)செய்திருந்தாலும், விழாவை விட்டு தள்ளி வைத்திருப்பார்கள்.

arulselvan said...

கார்த்திக்ராமாஸ்,
------------------------
>>>முறையாக தமிழிசை(க்ளாச்சிகல் என்று வாசிக்கவும்) பயின்றவர்களால் இன்னும் சிறப்பாக பாடமுடியும்
--------------------------------
நம்மில் யார் கேட்டாலும் (இசைப்பயிற்சி இல்லாத நான் உட்பட) எளிதாக கண்டுபிடிக்கக் கூடியது ராஜா குரல் பிசிறடிக்கிறது என்பதுதான். நமக்கு இது ரொம்ப காலமாத் தெரிந்தது தானே. அதையே முதல் குற்றமாக எல்லோரும் சொல்லிக்கொண்டிருப்பது இதற்கு மேல் சொல்ல ஒன்றும் இல்லை என்பதாலா? தமிழிசை பயின்றவர்களால் இதைவிட சிறப்பாக செய்யமுடியும் என்பதும் உண்மைதான். ஆனால் எவ்வளவு சிறப்பாக? ஆர்க்கஸ்ட்ராவிற்கு பாடுபவர்களின் குரல் பயிற்சி மிகவும் அபாரமானது. நம் இசைக்கலைஞர்கள் பலர் அதில் பாஸாகமாட்டார்கள். அப்படியே தேறும் ஒன்றிரண்டு பேரும் தமிழை சரியாக உச்சரிப்பார்களா? எனக்கு இது ரொம்ப முக்கியமாகப்படுகிறது. இதுதான் overriding factor. அதனால்தான் முதல் பதிலில் முதலாவதாக உச்சரிப்பையும் இரண்டாவதாக பாடும் பாவத்தையும் குறிப்பிட்டேன்.
----------------------------
>>>இல்லையென்றால், ராஜா ஜெயேந்திரரை வெளியீட்டுக்கு விழாவுக்கு அழைத்திருப்பார்.
------------------------------
எனக்கு இதைப்பற்றித் தெரியாது. ராஜாவின் ஆசைகள் அவருக்கு. நமக்கென்ன இதில்?
--------------------
ஒன்றுமட்டும் சொல்லுவேன். சென்னை சங்கீத மபியா ஒன்றும் இதைப் பெரிய விஷயமாகக் கருதியதாகத் தெரியவில்லை. நம்ம சங்கீதத்திலேயே இதைச் செய்திருக்கவேண்டும் என்றே சொல்லுகிறார்கள். இசைக்கு மொழியில்லை, இசை யுனிவார்ஸலாக்கும் என்று சொல்லிச் சொல்லி தமிழையே பாடாமல் இட ஒதுக்கீடு செய்துவிட்டு இன்றைக்கு நம்ம நாட்டு இசை, இன்னொரு நாட்டு இசை என்று பேச்சு. எப்படியோ இந்த டிசம்பரில் ரோஷம் வந்து நாலு தமிழ்ப்பாட்டு கூடப் பாடினால், அதற்கு இது தூண்டுக்கோலாக இருந்தால் சந்தோஷம். அதுவரைக்கும் நாம யுனிவார்ஸலா லெட் செப்லின், ப்ளாக் ஸப்பாத், வெதர் ரிப்போர்ட்ன்னு கேட்கவேண்டியதுதான்.

SnackDragon said...

/எனக்கு இதைப்பற்றித் தெரியாது. ராஜாவின் ஆசைகள் அவருக்கு. நமக்கென்ன இதில்?/
எனக்கும் ஒன்றும் இல்லை. அது அவர் சுதந்திரம். ஆனால் தலித்_இளையராஜா பற்றி பேச்சு வந்ததால் , பொதுவாக ராஜா சங்கரமடத்தை , சைவத்தின் ஒரே தலைமை பீடமாக சாட்டாங்கமாக நமஸ்கரித்து நடத்தியிருக்க வாய்புள்ளது என்று பொதுவாகத்தான் சொன்னேன். அதுவும் "ஐ அம் பியோன்ட் சச் கார்பேஜ்" என்று சொல்வதற்கான எதிர்கருத்தாக அவரது மட அபிமானத்தை குறிப்பிட்டேன். ஆனால், இளையராஜா "தலித்" என்பதை அவர் எதிர்கொள்வதற்கும், இங்கு சிலர் எதிர்கொள்வதற்கும், அதே இளையராஜாவின் இசையை எதிர்கொள்வதற்கும் பலத்த வித்தியாசங்கள் உண்டு.

பிசிறடிக்கிறது என்று சாதாரணமாக சொல்லிவிடுகிறீர்கள். அது பிரச்சினையல்ல . ஆனால் அது குறையே அல்ல என்பதுபோலவும், இளையராஜா செய்வதாலேயே அது சரி என்பதுமாக தோற்றமளிக்கிறது என்பதால் சொன்னேன். கலை /பெர்ஃக்ஷன் என்றால் "இசையிலே" பிசிறைப் போல பெரிய இம்பெர்ஃக்ஷன் இருக்கமுடியாது. உலகத்தரமுள்ள பொருளை செய்யவேண்டுமென்றால் உலகத்தரத்தைப் பற்றி பேசத்தான் வேண்டும். பிற கலைஞர் இளையராஜா முன் ஒன்றுமேஇல்லை என்பது பொன்ன்ற தோற்றமுள்ள கருத்து ஒரு முழுமையான கருத்தாகாது. அதே சமயத்தில், ஆர்கெஸ்ட்ராவில் பாட அவர்களால் முடியாது என்பதையும் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டியிருக்கிறது.

SnackDragon said...

தமிழையே பாடாமல் இட ஒதுக்கீடு செய்துவிட்டு இன்றைக்கு நம்ம நாட்டு இசை, இன்னொரு நாட்டு இசை என்று பேச்சு. எப்படியோ இந்த டிசம்பரில் ரோஷம் வந்து நாலு தமிழ்ப்பாட்டு கூடப் பாடினால், அதற்கு இது தூண்டுக்கோலாக இருந்தால் சந்தோஷம்.
இதோடு முழு உடன்பாடு. இளைராஜாவின் இசையோடும் எனக்கு கொஞ்சமும் நம்பிக்கை குறைவில்லை. அவரது சார்பை பற்றி பேச்சு வந்ததால் மட்டும் குறிப்பிட்டேன்.

/சென்னை சங்கீத மபியா ஒன்றும் இதைப் பெரிய விஷயமாகக் கருதியதாகத் தெரியவில்லை/
கூடிய சீக்கிரத்தில் இந்த மாபியாவின் அங்கீகாரம் , கடைக்கண் பார்வை எல்லாம் ஒன்ன்றிமில்லாமல் போகவேண்டும் எனப்துதான் அவா.

goinchami-8A said...

இளையராஜாவின் குரல் பற்றி அபிப்ராயம் சொல்லும் அன்பர்களுக்கு, ஒரு கேனத்தனமான உதாரணம் தருகிறேன். யாராவது லெமன் டீ சாப்பிட்டு இருக்கிறீர்களா? அதில் பால் சேர்க்க மாட்டார்கள். பால் சேர்த்தால் அது சாதா டீ. டீ என்றால் பால் இருந்தே ஆகவேண்டும் என்ற லாஜிக் படி பார்த்தால், லெமன் டீ என்ற ஒரு விசேஷமான வஸ்துவே இருக்காது. இளையராஜாவின் சாரீரம் , சிலருக்கு பிடிக்கும் சிலருக்குப் பிடிக்காது. அவர் குரல் ஏன் ஜேசுதாஸ் மாதிரி வெண்ணையாக இல்லை என்று கேட்க முடியுமோ?

இந்த ஆல்பம், முழுக்க முழுக்க, இளையராஜா என்ற இசைக்கலைஞனின் கற்பனையில் உருவான ஆக்கம். இந்த ஆக்கத்தில், யார் பாடினால் சரியாக இருக்கும் என்பதை, அவரைத் தவிர வேறு யார் சொல்லமுடியும்? ஒரு ஓவியத்தைப் பார்த்து, இந்த இடத்திலே பச்சை நிறம் இருந்தால் நன்றாக இருக்கும் என்றோ, வேற பிரஷ்ஷில் தீட்டியிருக்கலாம் என்றோ அபிப்ராயம் சொல்வொமா? அவ்வளவு ஏன், ஆல்பத்தின் இசைக் கோர்வை, பின்னணி இசை பற்றியும், இசை அறிவு இல்லாத, வெறுமனே கேட்டு ரசிக்கிற ஆர்வலர்களுக்கு ஏதாவது கருத்து இருக்குமா?

இளையராஜா இல்லாமல், வேற யாராவது நல்ல சாரீரம் கொண்டவர்கள் பாடியிருந்தால், நன்றாக இருக்கும் என்று நினைக்கலாம். ஆனால், பாடல் என்பது குரல் சம்மந்தப்பட்டது மட்டுமல்ல. நம் மூளையை முதலிலே வந்து தாக்குவது அந்தக் குரலும், சாகித்தியமும் தான். அதனால் உடனடியாக கருத்து சொல்லிவிடுகிறோம். அந்த இசைக்கோர்வையின் நுட்பங்களை அறிய சில காலம் பிடிக்கின்றன. சில சமயம் பிடிபடாமலேயேவும் போகின்றன. குரலைத் தாண்டியும், சில அம்சங்கள் இருக்கின்றன. அவற்றை, தேன்குரல் பாடகர்கள் சரியாகப் பாடியிருப்பார்கள் என்று எப்படிச் சொல்லிவிட முடியும்?

சமீபத்திலே, டி.கே.பட்டம்மாள், சென்னைத் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில், வந்த போது, குறையொன்றும் இல்லை என்ற பாட்டைப் பாடினார்கள். இதற்கு முன்பு, டி.கே.பி ஐ அறியாதவர்கள், ஏதோ கிழவி, நடுங்கும் குரலில் பாடுகின்றது என்று தான் நினைப்பார்கள். ஆனால், உண்மை அதுதானா? கண்ணுக்குத் தெரியாமல் நிற்கின்றாய்... கண்ணா... என்று நடுங்கும் குரலிலேயும், பாவத்தைக் கொண்டு வந்து , அந்த மூதாட்டி பாடுவதை, குரல் பிசிறடிக்கிறது என்று ஒதுக்கி விடுவோமா?

சாரீரம் என்பது, இந்தப் பாடலின் ஒரு அம்சம் மட்டுமே. composition ஐக் கவனியுங்கள். அதைப் பற்றி விரிவாகப் பேச வேண்டும் இப்போது அல்ல. மீண்டும் ஒரு முறை சொல்கிறேன். இசை/ தமிழ் பிரக்ஞை இருப்பவர்கள், டெம்பரவரியாக விவாதங்களில் இருந்து விலகி, பொல்லா விநயன் ( என் பரிந்துரை) ஐ, தனிமையில் உட்கார்ந்து கேளுங்கள். கண்ணில் ஒரு சொட்டுக் கண்ணீர் வரவில்லை என்றால், கோயிஞ்சாமி 8 A என்கிற என் பெயரை, கோயிஞ்சாமி 9 B என்று மாற்றி வைத்துக் கொள்கிறேன்.

SnackDragon said...

/இந்த ஆல்பம், முழுக்க முழுக்க, இளையராஜா என்ற இசைக்கலைஞனின் கற்பனையில் உருவான ஆக்கம்./
கோயிஞ்சாமி சொன்னது நல்லா விளங்கிச்சு. ஆனா கோயிஞ்சாமி மாணிக்கவாசகரை மறந்து போனதைத்தான் வன்மையாக கண்டிக்கிறேன். :-))
அய்யோ மாத்தறதுதான் மாத்துறீர் , "கண்ணமாபேட்ட கஸ்மாலம்னு" மாத்திக்ககூடாதா? :-)
நான் எந்த கோயிஞ்சாமின்னே தெரியாம பேசினா இப்படித்தான் பேசவேண்டியிருக்கு. ;-)

SnackDragon said...

/குரல் ஏன் ஜேசுதாஸ் மாதிரி வெண்ணையாக இல்லை என்று கேட்க முடியுமோ?/
முடியாது;ஜேசுதாஸ் குரலை மட்டும் ஏன் 'வெண்ணெய்' என்று சொல்கிறீர்கள் என்று கேட்கலாமில்லியோ? ;-)

arulselvan said...

-------------------------
>>>
பொல்லா விநயன் ( என் பரிந்துரை) ஐ, தனிமையில் உட்கார்ந்து கேளுங்கள். கண்ணில் ஒரு சொட்டுக் கண்ணீர் வரவில்லை என்றால், கோயிஞ்சாமி 8 A என்கிற என் பெயரை, கோயிஞ்சாமி 9 B என்று மாற்றி வைத்துக் கொள்கிறேன்.
-------------------------
மிக்க சரி. எந்தப் பாட்டையும் என்னால் நீர் திரளாமல் கேட்கமுடியவில்லை.
முதல் காரணம்:
---------------------
>>
ஆனா கோயிஞ்சாமி மாணிக்கவாசகரை மறந்து போனதைத்தான் வன்மையாக கண்டிக்கிறேன். :-))
---------------

SnackDragon said...

/பொல்லா விநயன் /
அது பொல்லா வினையேன் என்று நினைத்திருந்தேன்?

Mookku Sundar said...

இளையராஜா தலித் என்று அடையாளம் குறிக்கப்படுவதிலே எனக்கு ஒன்றும் ஆட்சேபம் இல்லை. அது ஆனந்த போன்றவர்களால் எனப்படும்போதுதான் அதன் நோக்கம் சந்தேகம் கொள்ள வைக்கிறது.

என்னுடைய நெருங்கிய நண்பர் ஒருவர், இளையராஜாவின் மரி மரி நின்னேவைப் பற்றி பேசிக் கொண்டிருக்கும்போது " தியாகராஜர் போட்ட ராகத்திலே பாடாமல் இந்தப் பறையன் என்ன புது ராகத்திலே பாடறது..??" என்று கேட்டார். இதையே வேற யாராணும் பண்ணினால், உங்க அங்கீகாரம் கிடைக்குமோ என்று கேட்டு வைத்தேன் அப்போது. எல்லோருக்கும் பொதுவாகவே இருந்து விடலாம் என்று ராஜா போன்றவர்கள் நினைத்தாலும், "தள்ளி" வைத்துப் பார்க்கிற பிரகிருதிகள் தன்னுடைய கண்ணோட்டத்தில் உறுதியாகத்தான் இருக்கின்றன.

இளையராஜாவின் பிசிறடிக்கிற குரல் தாண்டி அவருடைய குரலுக்கு ஒரு சக்தி இருக்கிறது என்பது எ.தா.அ. கார்த்திக் போன்ற நவீன சுப்புடுகள் அவரை இதற்காக மன்னிக்க வேணும்
;-)

Moorthi said...

ஆகா.. அந்த ஆனந்தத்தை எல்லோரும் அனுபவித்து இருக்கிறீர்கள். நான் மட்டும்தான் மீதியா? இதோ வரேன்.. கேட்டுவிட்டு வந்து கலந்து கொள்கிறேன்.

era.murukan said...

Arul,

This album undoutedly is IR's Magnum Opus. He establishes an instant rapport with the listener - especially with those who have no intro to classical western - with his 'idhu thaan orchestra-va' in a voice laced with assumed innocence but somehow sounding all sincere (like that he deploys for 'sonthame enralum' song from a Ramarajan movie).

All the songs are real gems as he sings straight from the heart.

IR should render Azhwar pasurams next.

Arvind Krish said...

//டீ என்றால் பால் இருந்தே ஆகவேண்டும் என்ற லாஜிக் படி பார்த்தால்,


அப்படியான என்ன ? அப்ப ப்ளாக் டீ என்ன லாஜிக்கில் வருது . இந்த லாஜிக் உங்களுக்குக்
மட்டும் தான் போல இருக்கு..
அதனால் தான் கேனதனமான உதாரணம் என்கிறீர்களோ ?

துளசி கோபால் said...

இன்னும் இதைக் கேக்கற ச்சான்ஸ் கிடைக்கலே. ஊருலே இருந்து யாராவது அனுப்புனாதான் உண்டு.

இளையராஜா பாடுனதைப் பத்தி விவாதம் வந்துக்கிட்டு இருக்கே, அதுவரைக்கும் சரி.
உதித் நாராயணனைப் பாடவச்சிருந்தா என்ன கதியாயிருக்கும்?

நல்லவேளை! நாம் பிழைச்சோம்.

துளசி

ஜெயந்தி சங்கர் (Jayanthi Sankar) said...

Hi everyone,
I am yet to buy/listen the album.

Just went through all the comments and felt very happy to note that there are some 'healthy' discussions going on in thamizmanam. Happy that tamil blogs are back to old forms.

anbudan, Jayanthi Sankar

arulselvan said...

>>>
உதித் நாராயணனைப் பாடவச்சிருந்தா என்ன கதியாயிருக்கும்?
------------
இதுக்கு கிருமிபோஜன தண்டனையே பரவாயில்லை. அவ்வளவா வலிக்காது

நந்தன் | Nandhan said...

1.இளையராஜாவின் குரலில் ஒரு விதமன Humbleness இருக்கு பாருங்க அதுக்கு ஏற்ற மாதிரியான பாடல்களை (பொல்லா வினையேன், பூவார் சென்னி) பாடியிருக்கலாம். மற்றதை இன்னும் பிசிறடிக்காத குரல்ல கொடுத்து இருக்கலாம்.
2.//"இந்த ஆல்பம், முழுக்க முழுக்க, இளையராஜா என்ற இசைக்கலைஞனின் கற்பனையில் உருவான ஆக்கம். இந்த ஆக்கத்தில், யார் பாடினால் சரியாக இருக்கும் என்பதை, அவரைத் தவிர வேறு யார் சொல்லமுடியும்? "//
இதை இன்னொருத்தர் பாடி இருக்கலாம்னு சொல்றது ஒரு விமர்சனம் தான். காசு கொடுத்து வாங்கற எல்லாரும் சொல்லலாம்.IR விமர்சனங்களுக்கு Opena இருப்பார்னு நம்பறோம் :)
3.பாடல்களை கொஞ்சம் மறந்து அந்த இசையை மட்டுமே பின் தொடர்ந்து பாருங்கோ - அருமையா பல 'மூட்'க்கு கொண்டு போறது,குறிபாக பொல்லா வினையேன். கடைசி பாடல்ல அந்த வசனங்கள் ஒரு மாஸ் கவ்ரேஜ் Stunt மாதிரி இருக்கு.தவிர்த்து இருக்கலாம்.

Anonymous said...

இந்த ஆல்பத்தை இன்னும் நான் கேட்கவில்லை. ஆனால் இந்தப் பெரும்பாலான பின்னூட்டங்கள் அபத்தமாக இருக்கிறது. நல்ல மியூசிக் சிஸ்டத்தில் கேட்டால்தான் அது சிறந்த இசை என்றால் அந்த இசையை தூக்கிப் போடுங்கள். அதற்கு திருவாசகத்தை வாய்விட்டே உரக்கப்படித்துக் கொண்டிருக்கலாம். மேலும் நல்ல இசைக்கு உதாரணமாக கண்ணீர் நீர் வருவதையெல்லாம் சொல்லும் போது சிரிப்பாக வருகிறது. என்னங்கப்பா.... இது ஜல்லி.

இளையராஜா ஒரு தமிழர் என்பதாலேயே தலையில் தூக்கி வைத்துக் கொண்டு ஆடத் தேவையில்லை. அவரை விட சிறந்த சலீல் செளத்ரி போன்ற இந்திய இசையமைப்பாளர்கள் சினிமாவிலும், வெளியிலும் உள்ளனர். நமக்கு லைம்லைட்டில் இருப்பவர்கள் மட்டும்தான் கண்ணுக்கு தெரிவார்கள். BACH, OLIVARES WATER, RICHARD WAGNER போன்ற சில சர்வதேச சங்கீதர்களை கேட்கும் போது இளையராஜா அவர்களுக்கு உறை போட கூடக் காண மாட்டார். எனவே தமிழ் சினிமாவில் நமக்கு தெரிந்த முகம் என்பதற்காகவே அள்ளிவிட வேண்டாம்.

- Ganesh

Anonymous said...

Is ur aim is a create a controversy?...

Anonymous said...

Pls ignore the last one...

Ganesh,
Its looks like u want to create a controversy...all the best

arulselvan said...

கணேஷ்

ஒண்ணே ஒண்ணு மட்டும். pardon me. can't resist.

>>>>
மேலும் நல்ல இசைக்கு உதாரணமாக கண்ணீர் நீர் வருவதையெல்லாம் சொல்லும் போது சிரிப்பாக வருகிறது. என்னங்கப்பா.... இது ஜல்லி.
-----------------------------------
அது சரி. நல்ல இசைக்கு உதாரணமாக சிரிப்பு வரும் இசையைச் சொன்னால் நமக்கு கண்ணீரல்லவா வரும்.
--------------------------------

SnackDragon said...

/இளையராஜாவின் பிசிறடிக்கிற குரல் தாண்டி அவருடைய குரலுக்கு ஒரு சக்தி இருக்கிறது என்பது எ.தா.அ. கார்த்திக் போன்ற நவீன சுப்புடுகள் அவரை இதற்காக மன்னிக்க வேணும் /
நிச்சயாமாக உள்ளது அதை மறுக்கமாட்டேன். உதாரணமாக 'நாயகனில்' 'தென்பாண்டிச் சீமையிலே"-வில் அவரது குரல் ஒரு மேலதிக சோகத்தை கொண்டுவரும். அது போன்ற தனித்தன்மையான இடங்களுக்கு இளையராஜவை ஒருவரால் புறக்கணிக்கமுடியாது.
ஆனால் , இளையராஜா திருவாசகம் செய்ததாலேயே இன்னும் சிவஞானபோதத்தையும்,திருமலையாண்டவர் குறவஞ்சியையும் அவர் செய்தால்தான் கண்ணீர்வரும் என்று சொன்னால்தான் சுப்புடுவுக்கு முட்டிக்கொள்ள்வேண்டும் போல் உள்ளது.:-) நன்றி

SnackDragon said...

கணேஷ்,
நீங்கள் கோயிலுக்கு போய் ஒரு முறை உங்களால் அழமுடிகிறதா என்று முயற்சித்துப் பார்க்கலாம்.

அருள், ஒரு விளக்கம். என் முந்தைய பதிவில் "கண்ணீர்வரும்" என்று முடித்தது கனேஷ் பின்னூட்டத்தை ஒட்டி அல்ல. யதார்த்தமாக சொன்னது.

arulselvan said...
This comment has been removed by a blog administrator.
arulselvan said...

Venkat
This is reasonable point of view about Raja's voice, which I mostly agree with . But this is not what I wanted to do when I finished hearing it a few times and did the blog entry. The title of the blog " puththi illAmal oru pathivu" means exactly that - a non rational approach to the music. I certainly donot know who has the same timbre as Raja's voice. I mentiontioned Maharajapuram for this reason as his voice has this too.
I am not sure about
-----
>>>
இது மேற்கத்திய இசையைத் திருவாசகத்திற்குக் கொண்டுவந்து நம் மக்களுக்கு மேற்கத்திய இசையை அறிமுகப்படுத்தும் உத்தியாகத்தான் நான் அறிகிறேன்.
----
I believe it is an honest attempt by Raja to score a WC piece with TV which he feels it deserves. I also think it is an act of love on his part and it shows. It is brilliant in many places, certainly moves most of the time and I am still wondering about the reach of even 'simpler' pieces like pUvEru. In my opinion this is bold, beautiful and very moving music that TV richly deserves. If someone can better this, it will be a great joy too.
I am skeptical though about,
"இதே திருவாசகப் பாடல்களை வருங்காலத்தில் அவர் பிற சிம்பொனி ஆர்கெஸ்ட்ராக்களுடன் பாட வேண்டும்".
Sadly, I guess this is going to be an one time affair. Grab and enjoy for whatever it gives you, is my thinking really.

arul

arulselvan said...

The above is the comment I made in Venkat's blog for the following post. Do read his take on this.

http://www.domesticatedonion.net/blog/?item=563

மு. சுந்தரமூர்த்தி said...

//Sadly, I guess this is going to be an one time affair. Grab and enjoy for whatever it gives you, is my thinking really.//

அருள்,
இந்த சிடியை வாங்கும் வாய்ப்பை தவறவிட்டேன். நான் வாங்குவதற்குள் ஆளுக்கு அரை டஜன், ஒரு டஜன் என்று கொத்திக்கொண்டு போய்விட்டார்கள் (Rev Fr காஸ்பர் ராஜ் கோரியபடி நண்பர்களுக்கு பரிசாகக் கொடுக்கவும், இன்னுமிருக்கும் ஒரு கோடி கடனை அடைக்கவும்). ஆகையால் இன்னும் இசையைக் கேட்கவில்லை. கேட்டாலும் மற்றவர்கள் போல் விமர்சிக்கும் அளவு என் ஞானமில்லை (அது உங்களுக்குத் தெரியும் தானே!).

இது எழுப்பிய ஆர்ப்பட்டத்தைப் பார்த்தபோது முழு திருவாசகமும் இசைக்கப்பட்டுள்ளதாகத் நினைத்து ஏதோவொரு பிரம்மாண்டமான திட்டமாக இருக்குமென்றெண்ணி பிறகு பார்த்தால் ஆறு பாடல்கள் மட்டும் தான் என்கிறார்கள். அதிலும் இரண்டு தான் தேறும் என்று பலர் கருத்து தெரிவித்திருக்கிறார்கள்.

இந்த திட்டத்தை ஆரம்பித்த காஸ்பர் ராஜ் இதே போல திருக்குறளுக்கும் செய்யவேண்டும் என்று இங்கு நடந்த திருக்குறள் மாநாட்டு உரையில் கூறினார். நீங்கள் அருணகிரி நாதருக்கும் செய்யவேண்டும் என்று உணர்ச்சிவசப்படுகிறீர்கள். சுஜாதா திவ்வியப்பிரபந்தத்திற்கு செய்யவேண்டுமென்பார். இப்படித் திருக்குறளில் ஆரம்பித்து இராமலிங்க வள்ளார் வரை எல்லோருக்கும் செய்யவேண்டுமென்றால் (ஆளுக்கு ஆறு மட்டும் இல்லை, மொத்தமும்) உலகில் உள்ள அனைத்து சராசரித் தமிழர்களின் சொத்துக்களைத் தான் அடமானம் வைக்கவேண்டும் (இதை சராசரித் தமிழர்களின் பங்களிப்பால் செயல்படுத்தப்பட்டதாகத் தானே சொல்கிறார்கள்). இந்த ஆறுபாடல் சிடி வெளியிட்டதிலேயே இன்னும் ஒரு கோடி கடன் இருப்பதாகச் சொல்கிறார்கள். மொத்தச் செலவு எவ்வளவு என்று தெரியவில்லை.

நீங்கள் சென்னையில் பியர் சிந்தி பெருமைப்படுத்திய ஞாநியின் 'தீம்தரிகிட' கட்டுரையில் உள்ள, இசைத் தவிர்த்த (நான் இசையைக் கேட்காததினாலும், ஞானமின்மையாலும்), விமர்சனங்கள் நியாயமானவையாகவே தெரிகின்றன (நாராயணும், வசந்தும் அதை உளறல் என்கிறார்கள்). ஞாநி தொட்டுக்காட்டியிருக்கும் G-8 கூட்டத்தின்போது நடந்த Live-8 கச்சேரிகளோடு இளையராஜாவின் முயற்சியை கொஞ்சம் ஒப்பிட்டால் 'குடல் கூழ் கேக்குதாம் கொண்டை பூ கேக்குதாம்' கதையாகத் தான் தெரிகிறது. இரண்டு செய்திகளும் கிட்டத்தட்ட ஓரே நேரத்தில் தான் வந்தன. இளையராஜாவின் egoவும், சமூக அக்கறைகளைப் பற்றியும் சொல்லத் தேவையில்லை.

இளையராஜா, மேற்கத்திய செவ்விசை உதவியில்லாமலேயே யாரோ ஒருவர் 'திருவாசத்திற்கு உருகார் ஒருவாசகத்திற்கும் உருகார்' என்று சொல்லிப்போயிருக்கிறார்.

நல்லவேளை உணர்ச்சிவசப்பட்டு கும்பலோடு சேர்ந்து நானும் 10 சிடி வாங்காமல் தப்பித்தேன். ஆர்ப்பாட்டங்கள் அடங்கியபிறகு ஒன்று மட்டும் வாங்கிக் கேட்கவேண்டும்.

arulselvan said...

சுந்து..!
எங்க ஆளையே காணோம். அப்பப்ப ஏதாவது நாலுவரி எழுதிட்டிருங்க. இப்பிடி ஒரேயடியா காணாம போன எப்படி.
---------------------
>>>>இப்படித் திருக்குறளில் ஆரம்பித்து இராமலிங்க வள்ளார் வரை எல்லோருக்கும் செய்யவேண்டுமென்றால் (ஆளுக்கு ஆறு மட்டும் இல்லை, மொத்தமும்) உலகில் உள்ள அனைத்து சராசரித் தமிழர்களின் சொத்துக்களைத் தான் அடமானம் வைக்கவேண்டும்
-------------------
அப்படித்தான் எனக்கும் தோன்றுகிறது. கோடிக்கணக்கில் திரும்பத்திரும்ப யார் பணம் திரட்டுவார்கள். பெரிய மியூசிக் கம்பெனிகள் வேண்டுமானால் செய்யலாம். ஆனால் எல்லாம் இந்த அளவாவது விற்குமா என்று தெரியவில்லை. அதனால்தான் இதுவே கடைசியோ என தோன்றுகிறது.
------------------------
>>>இளையராஜாவின் egoவும், சமூக அக்கறைகளைப் பற்றியும் சொல்லத் தேவையில்லை.
---------------
சில பேரை 'சமூக அக்கறை' மதிப்பீட்டு அளவுகோலிலிருந்து விடுவித்து விடலாம். ராஜாவுக்கு அதில் முதலிடம். மற்றபடி அவருடைய ஈகோ நல்ல இசைக்கு என்றுமே குறுக்கே வந்ததில்லை இல்லையா.
-----------------------
. >>>ஆர்ப்பாட்டங்கள் அடங்கியபிறகு ஒன்று மட்டும் வாங்கிக் கேட்கவேண்டும்.
-------------
இன்னும் TV கேட்பதை நிறுத்தவில்லை. வீட்டில் உன் பக்தியப் பத்தித் தெரியாதா. வேலை செய்யாமல் இருக்க ஹெட்போனை மாட்டிக்கொண்டு உட்கார்ந்து கொள்கிறாய் என்று மிரட்டலாக இருக்கிறது. நிச்சயம் ஒன்று வாங்குங்கள். நன்றாக இருக்கிறது.

மு. சுந்தரமூர்த்தி said...

//சுந்து..!
எங்க ஆளையே காணோம். அப்பப்ப ஏதாவது நாலுவரி எழுதிட்டிருங்க. இப்பிடி ஒரேயடியா காணாம போன எப்படி.//

அருள்,
ஒரு பிரகடனத்துடன் காணாமல் போயிருந்தால் 50-60 கண்ணீர் பின்னூட்டங்கள், உங்களிடமிருந்து ஒரு கார்ட்டூன் என்று கோலாகலமாக இருந்திருக்கும். இன்னும் அந்த அளவுக்கு பிரபலமாகவில்லையே, 'சரி போயிட்டு வா' என்று சொல்லிவிட்டால் சப்பென்று போய்விடுமே என்று நைசாக நழுவிவிட்டேன் (காணமல் போன காலத்தில் சிலரை நேரில் சந்தித்தேன்).

மு. சுந்தரமூர்த்தி said...

//சுந்து..!
எங்க ஆளையே காணோம். அப்பப்ப ஏதாவது நாலுவரி எழுதிட்டிருங்க. இப்பிடி ஒரேயடியா காணாம போன எப்படி.//

அருள்,
ஒரு பிரகடனத்துடன் காணாமல் போயிருந்தால் 50-60 கண்ணீர் பின்னூட்டங்கள், உங்களிடமிருந்து ஒரு கார்ட்டூன் என்று கோலாகலமாக இருந்திருக்கும். இன்னும் அந்த அளவுக்கு பிரபலமாகவில்லையே, 'சரி போயிட்டு வா' என்று சொல்லிவிட்டால் சப்பென்று போய்விடுமே என்று நைசாக நழுவிவிட்டேன் (காணமல் போன காலத்தில் சிலரை நேரில் சந்தித்தேன்).

மு. சுந்தரமூர்த்தி said...

//சுந்து..!
எங்க ஆளையே காணோம். அப்பப்ப ஏதாவது நாலுவரி எழுதிட்டிருங்க. இப்பிடி ஒரேயடியா காணாம போன எப்படி.//

அருள்,
ஒரு பிரகடனத்துடன் காணாமல் போயிருந்தால் 50-60 கண்ணீர் பின்னூட்டங்கள், உங்களிடமிருந்து ஒரு கார்ட்டூன் என்று கோலாகலமாக இருந்திருக்கும். இன்னும் அந்த அளவுக்கு பிரபலமாகவில்லையே, 'சரி போயிட்டு வா' என்று சொல்லிவிட்டால் சப்பென்று போய்விடுமே என்று நைசாக நழுவிவிட்டேன் (காணமல் போன காலத்தில் சிலரை நேரில் சந்தித்தேன்).

மு. சுந்தரமூர்த்தி said...

//சுந்து..!
எங்க ஆளையே காணோம். அப்பப்ப ஏதாவது நாலுவரி எழுதிட்டிருங்க. இப்பிடி ஒரேயடியா காணாம போன எப்படி.//

அருள்,
ஒரு பிரகடனத்துடன் காணாமல் போயிருந்தால் 50-60 கண்ணீர் பின்னூட்டங்கள், உங்களிடமிருந்து ஒரு கார்ட்டூன் என்று கோலாகலமாக இருந்திருக்கும். இன்னும் அந்த அளவுக்கு பிரபலமாகவில்லையே, 'சரி போயிட்டு வா' என்று சொல்லிவிட்டால் சப்பென்று போய்விடுமே என்று நைசாக நழுவிவிட்டேன் (காணமல் போன காலத்தில் சிலரை நேரில் சந்தித்தேன்).

Anonymous said...

Test

arunkumar said...

பாவம் ஏதோ அவருக்கு தெரிஞ்ச அளவுக்கு பாடி இருக்கின்றார் ...ஆனால் நம்மால் குறை மட்டுமே கூற முடியும் ..வேணும் என்றால் நீங்கள் அவருக்கு கற்று தாருங்கள் ...ஏதோ வைத்து விட்ட மாறி இருக்கு என்று சொல்லி இருக்கும் ஒருவன் தினமும் அதை சாப்பிடுவான் போல .அதுதான் இளையராஜாவின் குறளை அப்புடி இருக்கு என்று சொல்லுகின்றார் ..இவனுக்கு இளையராஜா குரலே இப்புடி இருக்கு என்றால் ...இவன் குரல் எப்புடி இருக்கும் .அங்கு எதை வைத்த மாறி இருக்கும் .அந்த வெறும் ஞானியை யாருக்கு தெரியும் ..ஆனால் இசை ஞானியை 10 வயசு முதல் சாகுற மனிதன் வரை தெரியும் ..அவன் சொன்னனாம். இங்க இவனுங்க இளையராஜாவை குறை சொல்ல வந்துட்டானுக ..மனசாட்சி இல்லாத மிருகங்கள் .அவரு போட்ட இசையை கேட்டுவிட்டு இப்ப அவரை பத்தி குறைசொல்லுறான்ங்க ..

Anonymous said...

பாவம் ஏதோ அவருக்கு தெரிஞ்ச அளவுக்கு பாடி இருக்கின்றார் ...ஆனால் நம்மால் குறை மட்டுமே கூற முடியும் ..வேணும் என்றால் நீங்கள் அவருக்கு கற்று தாருங்கள் ...ஏதோ வைத்து விட்ட மாறி இருக்கு என்று சொல்லி இருக்கும் ஒருவன் தினமும் அதை சாப்பிடுவான் போல .அதுதான் இளையராஜாவின் குறளை அப்புடி இருக்கு என்று சொல்லுகின்றார் ..இவனுக்கு இளையராஜா குரலே இப்புடி இருக்கு என்றால் ...இவன் குரல் எப்புடி இருக்கும் .அங்கு எதை வைத்த மாறி இருக்கும் .அந்த வெறும் ஞானியை யாருக்கு தெரியும் ..ஆனால் இசை ஞானியை 10 வயசு முதல் சாகுற மனிதன் வரை தெரியும் ..அவன் சொன்னனாம். இங்க இவனுங்க இளையராஜாவை குறை சொல்ல வந்துட்டானுக ..மனசாட்சி இல்லாத மிருகங்கள் .அவரு போட்ட இசையை கேட்டுவிட்டு இப்ப அவரை பத்தி குறைசொல்லுறான்ங்க ..