தெளிவாகி விட்டது. இன முட்டைகளை விற்றாவது வாங்கக் கூடிய பொருள் ஒன்று இருப்பதாக அவளுக்குத் தோன்றியதை நம்பவே
முடியவில்லை. சம்பவங்கள் அடுத்தடுத்து யாரோ திட்டமிட்டதைப் போல் நடந்து விட்டன. கையின் பிசுக்குகளை பஞ்சுத் திரட்டில் துடைத்து
எழுந்தான். குறிப்பிகள் சரியாக இயங்காமல் இரு மிதவைகள் ஏறக்குறைய இடித்துச் சிதறும் நிலையில் நேற்று கடந்தன. மீகாமர் கழகம் அச்சுறுத்தும் தகவலறிக்கை ஒன்றை பணிமனைக்கு அனுப்பியது. வயதானாலும் தானே வரவேண்டியது என்ன விதி என்று நினைத்துக் கொண்டான்.
"நகரங்களில் போர் தொடர்கிறது. உணர்விகளை முற்றிலும் செயலிழக்கச் செய்த பெய்கதிர் வளையம் இன்னும் நீக்கப் படவில்லை. நாளை நிலமை தெளிவாகும் என காப்பமைச்சர் உதவியாளர் தெரிவித்தார் ".
வானொலியை அணைத்துப் பையில் போட்டுக் கொண்டான். நிகழ்கலனில் கிவிராவின் அலைவரிசையை சோதித்தான். கர்கர்ரென்று வெள்ளை இரைச்சல்தான் கேட்டது. மூன்று மணி நேரம் குறிப்பிகளுடன் போராடிய வலி கால்களில் உறைத்தது. ரத்தம் பாய்வதற்காக இருமுறை காற்றில் உதைத்தான். காலங்கியின் பையிலிருந்து கீழே விழுந்து காசு ஒன்று உருண்டோடியது. மன்னனின் தலை பதித்த தங்கக் காசு.
பிடிக்கத் தாவினான். நிகழ்கலன்தொடர்புக்கு அலறியது. காசில் பார்வையை வைத்துக்கொண்டே கலனை அமுக்கினான்.
"பெரோ?"
"ஆம்"
"உடனடியாக அங்கிருந்து விலகு. மிதவைகள் அனைத்தும் இறங்கியாயிற்றா?"
"எல்லாம் இறங்கி விட்டன. என்ன ஆச்சு மனோ"
"அகன்று விடு பெரோ. இது ஆணை."
தொடர்பு உடனடியாகத் துண்டிக்கப்பட்டது. சாதனங்களைத் திரட்டி அடப்பத்தில் அடைத்தான். நிகழ்கலனின் மின்தொடர்பை நீக்கினான். அடப்பத்தை முதுகில் மாட்டி இறுக்கினான். இடமிருந்த பாறையைக் குதித்துக் கடக்கத் தாவும் தாவலில் காசை கைப்பற்றினான். வளையை அடைய இன்னும் இருநூறு அடிகளே இருந்தன. மனிதர்களின் விரைப்பறப்பிகள் நான்கு தலைக்குமேல் அவனைச் சூழ்ந்தன. அவைகளின் வெடிப்பிகள் எளிதில் அவனைஉணர்ந்து குறிவைத்து இயங்கின. கலன்களை இறக்கி மனிதர் நால்வர் வெளிப்பட்டு பெரோவின் மிச்சங்களையும் அடப்பத்தையும் பற்றித் திரும்பினர்.
...
No comments:
Post a Comment