Wednesday, August 10, 2005
1984
இந்திரா காந்தி இறந்தவுடன் நாடு முழுவதும், முக்கியமாக டெல்லியிலும் சீக்கிய இன மக்களுக்கு எதிராக பெரும் கலவரங்கள் நிகழ்ந்தன. டெல்லியிலிருந்து வந்து எங்களுடன் படித்துக்கொண்டிருந்த தமிழ் நண்பன் கலவரம் நடந்த போது அங்கேதான் இருந்தான். அவன் திரும்பி வந்து தன் கண்ணால் கண்ட பல நிகழ்சிகளைச் சொன்னபோது எத்தகைய ஒரு நாடு நம்முடையது என திகைக்காமல் இருக்கமுடியவில்லை. சீக்கிய மத மக்களை கும்பல்கள் நடுத்தெருவில் எரித்துக் கொண்டிருந்தபோது நாட்டின் ராணுவம் கவசவாகனங்களில் வீதிகளில் சும்மாதான் நிறுத்தப் பட்டிருந்தது. செயல் பட ஆணை இல்லை. அரசு இயந்திரம் தனது தலை நகரிலேயே செயல்படாமல் முடக்கிவைக்கப்பட்ட காலம் அது. இப்போது நானாவதி விசாரணைக் கமிஷன் இத்தனை காலம் கடந்தாவது விசாரணை அறிக்கை என்ற பெயரில் ஒரு ஆவணம் கொடுத்திருக்கிறது. அதன் மேல் தக்க நடவடிக்கை எடுக்கும்படி எதிர்கட்சிகள் அரசை இரண்டு நாட்களாக வற்புறுத்துகின்றன. நாடாளுமன்றத்தில் விவாதம் தொடர்கிறது. இந்திய ஜனநாயகத்தின் பலம் சாதாரண மக்கள் அதில் கொண்ட நம்பிக்கைதான். நாள்கணக்கில் இனப் படுகொலைகள் நடந்தாலும் அதை அரசு பலவருடங்கள் கழித்தும் அலட்சியப்படுத்தும் என்பது அந்த நம்பிக்கையின் அஸ்திவாரத்தையே அசைப்பதாகும்.
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
>>இந்திய ஜனநாயகத்தின் பலம் சாதாரண மக்கள் அதில் கொண்ட நம்பிக்கைதான்>>
ஆட்களின் வசதி, பதவி, சமூகத்தின் நிலை இவையெல்லாம் கருதாமல் சட்டமும் சனநாயகமும் எல்லோருக்கும் சமம் என்று காட்டி நீங்கள் சொன்ன அந்த நம்பிக்கையை அதிகரிக்க இது போல் பல வாய்ப்புக்கள் வருகின்றன. இருந்தும் ஏமாற்றம் தான் மிஞ்சுகிறது.
tytler has regsigned
செல்வராஜ்:
பார்க்கலாம் இந்த முறை எவ்வளவு தூரம் இது போகுமென்று. இந்தியா தன் குறைகளை/குற்றங்களை எதிர்கொண்டு களைந்து முன்செல்லும் அளவுக்கு முதிர்சியடைந்து இருக்கிறதா இல்லையா என்பதற்கு இது ஒரு சோதனை கூட.
பிரகாஷ்:
இது வெறும் ஆரம்பம்தானே. பொறுத்திருந்து பார்ப்போம். பஜகவும், கம்யூனிஸ்டுகளும் இதை எவ்வளவு தூரம் தொடர்வார்கள் என. எல்லோருக்கும் எல்லைகள் உண்டு.
அவற்றை நம்மைப் போன்ற பொதுமக்கள் அறிய இது வாய்ப்பு.
அருள்
Post a Comment