Friday, August 12, 2005

pick me up

எல். ஆர். ஈஸ்வரி, டி எம் எஸ் கூட்டணியில் இன்னொரு கலக்கல் பாடல். அருமையான ரிதம் கிடார். ஆரம்பித்ததில் இருந்து முடியும் வரை வேகம் குறையாமல் தெறிக்கும் பாட்டு.
வாரக்கடைசியில் சோர்ந்துபோய் வந்து காலையில் விட்டுப்போன தினத்தாளைப் படிக்கும்போது கேட்க ஏதுவான படலாக இருக்கிறது. Enjoy.
http://www.musicindiaonline.com/p/x/H5fgG-vV2dNvwrOupt7D/

31 comments:

Jayaprakash Sampath said...

திவ்யம்

-/பெயரிலி. said...

அண்ணே, இஃது அருமையான கூட்டணி. அதுக்குமேலே ஒரு சொல் சொல்லப்போனாலுங்கூட, இன்றைக்கு முழுக்க இங்கே எழுதிக்கொண்டேயிருப்பேன். என் & உங்கள் எதிர்காலத்தை எண்ணி விட்டுவிடுகிறேன்.

arulselvan said...

ரமணி,
எதிர்காலமாவது இன்னொண்ணாவது, உருப்பட விட்டுவிடுவோமா? இதோ:

1. பத்துப் பதினாறு முத்தம் முத்தம்,
2. எந்தன் நெஞ்சம் யாரைக் கண்டு ஏங்குமோ ...
.3. இது மாலை நேரத்து மயக்கம் ...
4. அவளுக்கென்ன அழகிய முகம்
5. பார்வை ஒன்றே போதுமே ...
6. ர்ர்ர்ருக்குமணியே ....
7. எங்கே எங்கே என் மனது ..
8. கோட்டை மதில் மேலே ஒரு வெள்ளைப் பூனை...

போச். இன்னும் ரெண்டுமணிநேரம்.

-/பெயரிலி. said...

இது மாலை நேரத்து மயக்கம் தமிழ்ப்பாடல்களிலே எனது முதலாவது தேர்வு.

'ஆலயமணி' படத்திலே "கல்லெல்லாம் மாணிக்கக்கல்லாகுமா?" [ http://www.musicindiaonline.com/p/x/h4OgMp7hT-GfHDfOBitZ/ ] , 'யார் நீ'யிலே "பார்வை ஒன்றே போதுமே?" [ http://www.musicindiaonline.com/p/x/prxgktVjngGfHDfOBitZ/ ], 'பச்சை விளக்கு' இலே, "பவளக்கொடியிலே முத்துகள் பூத்தால்" [ http://www.musicindiaonline.com/p/x/OrfgQ4NJ6wGfHDfOBitZ/ ], "வானம்பாடி" இல் "ஏட்டில் எழுதி வைத்தேன்" [ http://www.musicindiaonline.com/p/x/kVCgymama-GfHDfOBitZ/ ], 'சிந்து நதியின் மிசை நிலவினிலே' [ http://www.musicindiaonline.com/p/x/TUxg5c33N-GfHDfOBitZ/ ]

எதேச்சையாக, நேற்றைக்கிரவு "யார் நீ?" பார்த்தேன். இன்றைய படங்களுக்கு எத்தனையோ மேல்... வலுவற்ற கதையென்றாலுங்கூட.

-/பெயரிலி. said...

"அவளுக்கென்ன அழகிய முகம்" அருமை... குறிப்பாக, நாகேஷின் ஆட்டம் (ஜெர்ரி உலூயிஸின் கோணங்கித்தனம் அதிலும் இருந்தாலுங்கூட).. அப்பன் ஆடும்போது, நகைச்சுவையாகத் தென்பட்ட அதே ஆட்டம், இருபதாண்டுகள் பின்னால், மகன் பாடும் வானம்பாடியிலே ஆடியபோது, "ஆஹா ஊஹூ! டிஸ்கோ டான்ஸர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்" :-(

பத்மா அர்விந்த் said...

பவளக்கொடியிலே பட்டியலில் இல்லையே னெறு பார்த்தேன். முத்துக்குளிக்க வாரீயளா என்ற பாடலும் கூட எனக்கு பிடிக்கும்.பாலாபற்றி எல்லோரும் எழுதியதை பார்த்து எனக்குமட்டும் வயசாகிவிட்டதோ என்று தோன்றியது. ஏதோ இவர்களை நினைவில் உள்ள ஒருசிலராவது இருக்கிறீர்களே.

Jayaprakash Sampath said...

arul,

பளிங்கினால் ஒரு மாளிகையை மறந்ததைக் கூட விட்றலாம்...

பேசும் விழிகள் பேச வரலாம்
பிஞ்ச்சு முகத்தை கொஞ்ச வரலாம்
ஆசை நதியில் நீந்த வரலாம்
அல்லிப் பூவில் மணம் பெறலாம்...

உட்டிங்களே...

-/பெயரிலி. said...

ஆடவரெல்லாம் ஆட வரலாம்....ஆட்டுக்குட்டியும் ஓடவரலாம்...

தேன்துளி, கையிலே அந்நியன் கிடைத்து நான்கு நாட்கள் கிடந்தும் பார்க்கச் சோர்வு கொண்டு, திருவிளையாடல், திருவருட்செல்வர், சரஸ்வதி சபதத்திலே பாட்டும் பகிடியும் பார்த்திருந்தேன் போன கிழமை. நமக்கும் வயதுபோய்விட்டது மெய்யே!

arulselvan said...

தம்பியுடையான் பாட்டுக்கஞ்சான். :-)
ஒரு ரகசியம் சொல்லிடரேனே:
தமிழ் சினிமாப் பாட்டு பாடரவங்கள்லே மிக அதிகமாக பிடிச்ச ஆண், பெண் பாடகர்கள் இவர்கள் தான். இவர்களின் குரல் செய்யும் சாகசங்கள் ....

பத்மா..
இதுக்கே வயசாச்சா. அப்பா சொல்லிச்சொல்லி கேட்ட தியாராஜபாகவதரும், மகாலிங்கமும் பிடிக்கும்.
ஆனா யாரும் டி எம் எஸ் + எல். ஆர். ஈஸ்வரி + எம். எஸ். விஸ்வனாதன் கூட்டணி கிட்ட வர முடியாது. அது தனி. இணையில்லாதது. அந்தக் காலத்து பனாமா சிகரெட்டு விளம்பரம் போலே "இழுக்க இழுக்க இன்பம் இறுதி வரை."

Jayaprakash Sampath said...

// -/பெயரிலி. said...
இது மாலை நேரத்து மயக்கம் தமிழ்ப்பாடல்களிலே எனது முதலாவது தேர்வு.//

http://groups.yahoo.com/group/Maraththadi/message/26604

http://groups.yahoo.com/group/Maraththadi/message/26616

-/பெயரிலி. said...

/தமிழ் சினிமாப் பாட்டு பாடரவங்கள்லே மிக அதிகமாக பிடிச்ச ஆண், பெண் பாடகர்கள் இவர்கள் தான். இவர்களின் குரல் செய்யும் சாகசங்கள் ....

ஆனா யாரும் டி எம் எஸ் + எல். ஆர். ஈஸ்வரி + எம். எஸ். விஸ்வனாதன் கூட்டணி கிட்ட வர முடியாது./

YahOOOOOOOOOOOO!

arulselvan said...

மன்னிச்சுக்கோங்க பிரகாஷ். அதெல்லாம் இல்லாமயா ...அது ஒரு sf பாட்டாச்சே.
"
தேயும் நிலவு
தேயும் வரைக்கும்
தென்றல் அடித்து
ஓயும் வரைக்கும் ..."

நாலு மில்லியன் வருஷம் கழித்து பூமியப் பத்தின பாட்டு அது ....
அப்புறமா இதைப்பற்றி....

-/பெயரிலி. said...

/http://groups.yahoo.com/group/Maraththadi/message/26616/

இசை சூலமங்கலம் இராசலெச்சுமி. அந்த அம்மா அதிகம் போடாவிட்டாலும், இது போடு

பத்மா அர்விந்த் said...

பெயரிலி, அருள்
/ஆனா யாரும் டி எம் எஸ் + எல். ஆர். ஈஸ்வரி + எம். எஸ். விஸ்வனாதன் கூட்டணி கிட்ட வர முடியாது/உண்மை.
நீங்களும் நம் போல்தான். சமீப கால படங்களைவிட பழைய திரைப்படங்கள் எனக்கும் பிடித்தமானவை. திருவருட்செல்வர், திருவிளையாடல் போன்ற படங்கள் என் னிடம் உண்டு, எப்போதுவேண்Dஉமானாலும் பார்க்க.
பழைய பாடல்களும் நிறைய உண்டு.மகாலிங்கம் குரல் தனி அழகு.

-/பெயரிலி. said...

/மகாலிங்கம் குரல் தனி அழகு/
சொட்டுது சொட்டுது பாரு இங்கே! ஒன்றே போதும்....
ஏன் அகத்தியர், ராஜராஜசோழன் வரைக்கும் அவர் குரல் அருமையாகத்தான் இருந்தது.

இளங்கோ-டிசே said...

பிழையான இடத்துக்கு வந்துவிட்டேன் போல. YAHOOO என்று எல்லாம் சின்னபிள்ளைகள் இங்கே கும்மாளமடித்துக்கொண்டிருக்கின்றார்கள். அவ்வவ்போது பழைய பாட்டுக்கள் கேட்டாலும் உங்களைமாதிரி 'பித்துப்பிடித்த நிலை' மாதிரி இல்லை :-). பெயரிலி 'மாலை நேரத்து மயக்கம்' இணைப்புப்போட்டபோது இரசித்திருக்கின்றேன். வாண்டுகளே, அவ்வப்போது ஏஆர்.ரகுமான், யுவன் சங்கர் ராஜா என்றும் கொஞ்சம் பதிவு போடுங்களேன், நானும் இரண்டு வரி சொல்லமுடியும் :-).

Anonymous said...

DJ, as a teenager, forgive those grandpas and grandmas and let them live in their 'good old days' :-)

arulselvan said...

anony
:-)
we do grunge, dancehall, and riffraff too. but then... then, there is always heavymetal and acid rock the oldies know that is a step further down the cool road. whatdya think? kick in dude and join the party.

Jayaprakash Sampath said...

//we do grunge, dancehall, and riffraff too. but then... then, there is always heavymetal and acid rock the oldies know that is a step further down the cool road. whatdya think? kick in dude and join the party. //

விசிலடிக்க ஏதாச்சும் emoticon இருக்குதா?

SnackDragon said...

yahoooo

Anonymous said...

பழையபாடல்போல புதியபாடலில்லை

பத்மா அர்விந்த் said...

இசைத்தமிழ் நீ செய்த அரியாசனம் பாடல் நினைவிருக்கிறதா?

Anonymous said...

isaithamizh nee seytha arumsathanai
ariyasanam alla

or did u mean

yaar tharuvar intha ariyasanam ?

முகமூடி said...

அருள், ஐகாரஸ், பெயரிலி, ரமணி, தேன் துளி, பத்மா, கார்த்திக்

வாழ்த்த வயதில்லை... வணங்குகிறேன்

Double Agent 007 said...

தவறான பதிவுக்கு வந்து விட்டேனோ ?

//kick in dude and join the party. //

எங்கே Party?


முகமூடி
உங்களை வாழ்த்த எனக்கும் வயதில்லை..
வணங்குகிறேன்..

பத்மா அர்விந்த் said...

anonymous: It should be arumsaathanai. I typed an dgot songs mixed up. The other one is TMS's

Narain Rajagopalan said...

ஆஹா ஆஹா இந்த கூட்டத்தினை எப்படி நான் விட்டேன். போட்டு தாக்குங்களுய்யா, போட்டு தாக்குங்க.

ROSAVASANTH said...

அய்யகோ, எல்லாம் சொன்னிர்கள் எப்படி அய்யா, "நாம் ஒருவரை ஒருவர் சந்திப்போம் என.."வை மறந்து போனிர்கள். அது கிட்ட எதுவும் வரமுடியாது, சொல்லிட்டேன்.

Jayaprakash Sampath said...

// "நாம் ஒருவரை ஒருவர் சந்திப்போம் என.."வை மறந்து போனிர்கள். அது கிட்ட எதுவும் வரமுடியாது, சொல்லிட்டேன். //

நிச்சயமா...

"....பால் கொடுத்த வெண்மை
என் பளிங்கு போன்ற மேனி
வெண்பளிங்கு போன்ற மேனி
அதில் பங்கு கொள்ள வா நீ

வட்டக் கருவிழி வரவழைக்க
அந்த வரவினில் உறவிருக்க......"

ஒண்ணு கெவனிச்சீங்களா? LRE, அம்மாவுக்கு பாடின எல்லா பாட்டும் சூப்பர் டூப்பர் ஹிட். நான் கருமாரியம்மா வை மட்டும் சொல்லலை :-)

arulselvan said...

ரோவா, பிரகாஷ்

அதுசரி.

"உன் விழியும், என் வாளும் சந்தித்தால் ...."

?

Jayaprakash Sampath said...

"....வளர்ந்தாலும் நான் இன்னும் சிறுபிள்ளைதான்
நான் அறிந்தாலும் அது கூட நீ சொல்லித்தான்
உனக்கேற்ற துணையாக எனை மாற்றவா
குலவிளக்காக நான் வாழ வழி காட்டவா

காதோடு தான் நான் பாடுவேன்...
மனதோடு தான் நான் பேசுவேன்...
விழியோடுதான் விளையாடுவேன்..
உன் மடிமீதுதான் கண் மூடுவேன்.."

இந்தப் பாட்டை கேக்கிறதும் ரெஸிடன்ஸி டவர்ஸிலே ஒரு பிட்சர் சாப்பிடறதும் ஒண்ணு...

அது சரிங்க அருள்...... ஆ·பீஸ் லீவா இன்னிக்கி...? சாயங்காலம் எஸ்.ரா மீட்டிங் வரீங்க இல்லியா...