Friday, October 27, 2006
மீண்டும் மீண்டும் - 2
வெள்ளி அதிகாலையில் மைசூரில் நடந்த துப்பாக்கிச் சண்டைக்குப்பிறகு பாகிஸ்தானைச் சேர்ந்த அல்பாதர் அமைப்பின் இரு உறுப்பினர்களைப் பிடித்ததாக மைசூர் போலிஸ் அறிவித்துள்ளது. இவர்கள் சட்டமன்றத்தையும், இன்னபிற 'முக்கிய' இடங்களையும் தகர்க்கத் திட்டமிட்டதாகவும் போலிஸ் கூறுகிறது.
இச்செய்திகள் உண்மையானால் பெரும் சதியிலிருந்து பெங்களூர் தப்பியதாகவே கருதலாம். எல்லைகடந்த பயங்கரவாதம் தென்னிந்திய நகரங்களுக்கு நகர்வதன் மூலம் இந்தியாவின் இன்றைய பொருளாதார வளர்ச்சிக்கான காரணிகள் குலைக்கப்படுகின்றன. அரசு அமைப்புகள் எந்த அளவு முன்னெச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்பதையும் இத்தகைய நிகழ்வுகள் தீர்மானிக்கும்.
Tuesday, October 10, 2006
சொல், காட்சி, பொருள் - 2

எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே.?
இதேபோல் சொல்லுக்கும் சொல்லுக்கும் இடையிலான இணக்கமும் பிளவும் என்பதை எப்படி அணுகுவது?
---------------------------
ஒரு நாத்திகக் கவிதை
---------------------------
இரவெல்லாம் எலிமுகரும்
தெருப் பரப்பில்
பொறுக்கிய் இக்கணிதம்
கனல் சிவந்து
வெளிகடக்கப்
பாயும் இவ்வோடத்தின்
கலன் திருப்ப
உயிர் உறைக்க
உணவு வெதுக்கவென
அலையும் மின்துகளை
ஏவிச் சிரிக்கிறது
.....***
...***
மனம் பெற்றால் போதுமென
திரியும் கோள்குழுக்கள்
மதி அற்றால் கூடுமென
பதறும் உயிர்த் திரள்கள்
அழல் சுற்றி கணம் வற்றி
அதிர்வடங்கும் அப்போழ்தில்
எதுகற்று எம் இமைமூட
குன்றுறையும் வேலனே
குமார குருபரனே.
----------------------
Sunday, October 08, 2006
இ.தி. 57
Wednesday, October 04, 2006
physics nobel - 2006 :இயல்பியல் நொபல் பரிசு
விவரங்கள் பிபிசிதளத்தில் இங்கே.
நொபல் கமிட்டியின் வலைத்தளத்தில் மேலும் விரிவான விவரங்கள் இங்கே, இங்கே.

அண்டப் பின்புல நுண் அலைக்கதிவீச்சு பற்றி ஆராய 'கொபெ' எனும் செயற்கைக்கோளை நாசா விண்வெளியகம் 1989 இல் அனுப்பியது.
இச் செயற்கைக்கோள் மூலம் மாதெரும் ஸ்மூட்டும் செய்த பரிசோதனைகளில் இந்தக்கதிர் வீச்சு உண்மையில் அண்டம் எங்கும் அனத்துத் திசைகளிலும் ஒரே அளவில் சீராகப் பரவாமல் திசைச்சீரற்று பரவியிருப்பதைக் கண்டறிந்தார்கள்.
இதெல்லாம் என்ன என்று சிறிது பார்ப்போம்.
சென்ற நூற்றாண்டின் துவக்கத்துக்குப் போவோம். அப்போது நிகழ்ந்த சில இயல்பியல் கதைகள் தெரிந்தால்தான் இப்போதைய கதை புரியும்.
முதலில் கரும்பொதி கதிர்வீச்சு என்றால் என்ன என்று அறியலாம்.
ஒரு டென்னிஸ் பந்து போன்ற கோளம் ஒன்று இருப்பதாக எடுத்துக்கொள்வோம். இதன் சிறப்பு என்னவென்றால் இது இதன் பரப்பின் மீது படியும் அனைத்து ஒளிக் கதிர்களையும் விழுங்கி சாப்பிட்டு விடுகிறது என்று கொள்வோம். ஒரு டார்ச் இதன்மீது அடித்தால் ஒளியை அது விழுங்கி விடுகிறது. பகலில் வெளிச்சம் பட்டால் அதுவும் அதோகதிதான். இப்படி எல்லாவற்றையும்
விழுங்கிக்கொண்டிருக்கும் ஒரு கோளம் நமக்கு கருப்பாகத்தான் தோன்றும். ஏனெனில் நமக்கு பொருள்களின் வண்ணங்களாகத் தெரிவது எல்லாமே ஒளி பொருள்களின் மேற்பரப்பின் மீது பட்டு பிரதிபலிப்பாலும், சிதறலாலும் தான். பொருள்கள் ஒளியை விழுங்கிவிட்டால் அவை கருப்பாகவே தெரியும். இத்தகைய ஒரு பொருளை, பொதியை கரும்பொதி என்று இயல்பியலாளர்
அழைப்பர்.
இப்படி அனைத்து மின்காந்த அலைவரிசைகளிலும் கதிர்வீச்சை விழுக்கிக்கொண்டிருப்பவற்றை நாம் கரும்பொதி என்று அழைக்கிறோம். ஒளியும் ஒரு மின்காந்த கதிர்வீச்சுதான் என்பதை நாம் இங்கே நினைவில் கொள்வோம். இப்படி எதற்காக கரும்பொதி என்பதை இயல்பியலாளர் கற்பனை செய்யவேண்டும். பயன் இருக்கிறது. இப்படிப்பட்ட கரும்பொதிகள் எப்படி தம்மீது
படும் அனைத்து மின்காந்த அலைகளையும் விழுங்கிக் கொள்கின்றனவோ அதேபோன்று அனைத்து அலைவரிசைகளிலும் அவை கதிர்வீச்சு செய்துகொண்டும் இருக்கின்றன எனக்கொள்வோம். இப்படி ஒரு கரும்பொதி செய்யும் கதிர்வீச்சு அதன் வெப்பநிலைக்கு நேர்விகிதத்தில் இருக்கும். அதாவது இக்கரும்பொதியின் வெப்பநிலை 2 டிகிரியாக இருந்தால் அது ஒரு மின்காந்த
அலைவரிசையிலும் 200 டிகிரியாக இருந்தால் வேறு அலைவரிசையிலும் கதிர்வீசும்.
இப்படி வீசும் கதிர்கள் ஏறக்குறைய 425 டிகிரி சென்டிகிரேட் வரை நாம் காணும் ஒளி அலைவரிசைகளில் இருப்பதில்லை. அதனால்தான் அவை கருப்பாகத்தெரிகின்றன. இதற்குமேல் வெப்பமாக இருந்தால் சிகப்பு, நீலம் வெள்ளை என அவை பல ஒளிகளையும் வீசும். இக்கதிர்வீச்சை கரும்பொதி கதிர்வீச்சு என்பர். இதனால் என்ன பயன்?
இக்கரும்பொதி கதிர்வீச்சு இப்பொதி எதனால் ஆனது என்பதை சார்ந்தில்லை. அதன் மற்ற எந்த இயல்பியல் தமையிலும் சார்ந்தில்லை. அப்பொதியின் வெப்பத்தைமட்டுமே சார்ந்துள்ளது.
இப்படி வெப்பத்தை மட்டுமே சார்ந்த ஒரு கரும் பொதியின் கதிர்வீச்சின் அலைப் பரப்பை சரியாக கணக்கிட ஒரு கோட்பாடுதேவையாக இருந்தது. 1900 ஆம் ஆண்டில் மக்ஸ் ப்ளான்க் என்ற இயல்பியலாளர் முதன்முதலில் குவாண்டம்
கோட்பாட்டை இதை விளக்க பயன்படுத்தினார். பின்பு ஐன்ஸ்டைன் அக்கொள்கையை அனைத்து மின்காந்தகதிர்களுக்கும் பொதுமைப்படுத்தியதால் குவாண்டம் கோட்பாடு உதித்தது.
இதற்கும் நம் அண்டத்துக்கும் என்ன தொடர்பு?
அண்டம் என்பது ஆதியில் ஒரு கால-வெளி தனிப்புள்ளியாகத் தோன்றியது என்பது இயல்பியல் கருதுகோள். அப்புள்ளியில் அண்டத்தில் வெறும் சக்திதான் இருந்தது. பின்பு நடந்த பெருவெடிப்பில் அந்தப்புள்ளி விரிவடைந்து வெளியும் காலமும் பிரிந்தன. அப்போதும் அண்டத்தினுள்ளே வெறும் சக்திதான். ஒரு பலூன் போல ஊதிப் பெருகிய அண்டம் ஆதியில் இருந்த பெரும் வெப்பத்திலிருந்து பொருளாகவும், கதிர்வீச்சாகவும் பிரிந்தது. இப்படி விரிவடந்து கொண்டே வரும் அண்டத்தில் கதிர்வீச்சு குளிர்ந்து கொண்டே வருகிறது. பொருளோ எனில் வெளியில் புகையாகவும், விண்மீன்களாகவும், மீன்கூட்டங்களாகவும், மின்தொகுதிகளாகவும் மாறுகிறது.

விண்மீன் கள் உருவாகும் இந்த மாற்றம் பெரு வெடிப்பு நடந்து 200 மில்லியன் ஆண்டுகள் கழித்து நடக்கிறது. அதற்குமுன்னே பெருவெடிப்பின் பின் 380000 ஆண்டுகள் வரை குளிர்ந்துகொண்டே வரும் ஒரு கரும்பொதியப் போன்றே அண்டம் இருந்தது என்பது ஒரு கருதுகோள். (அப்பாடா, கரும்பொதிகளை கொண்டுவந்து சேர்த்தாச்சு) இப்படி அண்டம் ஒருகரும்பொதியாக மின்காந்த அலைகளில் இப்போதும் கதிர்வீச்சிக்கொண்டிருந்தால் நாம் அக்கதிர்வீச்சைப்பார்க்க
முடியவேண்டுமல்லவா? இப்போதும் பார்க்கலாம். விண்வெளியை நோக்கி ஒரு மின்காந்த கதிர்வீச்சு உணர்பொறியைத் திருப்பினால் நாம் இக்கதிர்வீச்சு எப்படி நம் அண்டத்தின் பின்புலத்தில் பரவி இருக்கிறது என்பதை அளக்கலாம்.
அப்படி அளந்தபோதுதான் இயல்பியலாளர்கள் ஒரு அதிசயத்தைக்கண்டார்கள். அதாவது அண்டம் இயல்பாக ஆதியிலிருந்து விரிவடைந்துகொண்டிருந்தால் இந்த கதிர்வீச்சு எல்லாத் திசைகளிலும் சமமான அளவுடன் இருக்கவேண்டுமல்லவா? இந்த கதிர்வீச்சு அண்டம் குளிர்ந்து உள்ளதால் நுண் அலை வரிசைகளில் வீசுகிறது. இந்த நுண் அலைவரிசை கதிர்வீச்சு அண்டத்தில்
திசைச் சீரற்று பரவி இருக்கிறது. இதை 'அண்டப் பின்புலத்தின் திசைச் சீரற்ற நுண் அலைப் பரவல்' என்று இயல்பியலாளர் அழைக்கிறார்கள். இது ஏன் இப்படி இருக்கிறது என்பதை விளக்க கருதுகோள்கள் உள்ளன.
இந்த கதிர்வீச்சை அளக்க ஒரு செயற்கைக்கோளை வடிவமைத்து ஏவி அண்டத்தில் கதிர்வீச்சுப்பரவலை சிறப்பாக அளந்து தேர்ந்ததால் இயல்பியலாளர்கள் இருவரும் இந்த வருடத்தின் நொபல் பரிசு பெறுகின்றனர்.
இயல்பியலின் சோதனை அளவிடல் வெற்றிபெறும் இன்னொரு காட்சி. கொண்டாடுவோம்.
அனைத்துப் படங்களுக்கும் நன்றி: நொபல் இணையத்தளம்.
(pictures copyright info @ nobelprize.org website )
ஆங்கில இணைச் சொற்கள்:
------------------------
ஜான் மாதெர்: John C. Mather
நாசா கோடார்ட் வெளிப்பறப்பு மைய்யம்: NASA Goddard Space Flight Center
Greenbelt, MD, USA
ஜோர்ஜ் ஸ்மூட்: George F. Smoot
கலிபோர்னியா பெர்க்கிலி பல்கலை: University of California
Berkeley, CA, USA
அண்டப் பின்புல நுண் அலைக்கதிவீச்சு: cosmic microwave background radiation
திசைச்சீரற்று: anisotropic
கரும்பொதி: blackbody
இயல்பியல் நொபல் பரிசு - 2006
விவரங்கள் பிபிசிதளத்தில் இங்கே.
நொபல் கமிட்டியின் வலைத்தளத்தில் மேலும் விரிவான விவரங்கள் இங்கே, இங்கே.

அண்டப் பின்புல நுண் அலைக்கதிவீச்சு பற்றி ஆராய 'கொபெ' எனும் செயற்கைக்கோளை நாசா விண்வெளியகம் 1989 இல் அனுப்பியது.
இச் செயற்கைக்கோள் மூலம் மாதெரும் ஸ்மூட்டும் செய்த பரிசோதனைகளில் இந்தக்கதிர் வீச்சு உண்மையில் அண்டம் எங்கும் அனத்துத் திசைகளிலும் ஒரே அளவில் சீராகப் பரவாமல் திசைச்சீரற்று பரவியிருப்பதைக் கண்டறிந்தார்கள்.
இதெல்லாம் என்ன என்று சிறிது பார்ப்போம்.
சென்ற நூற்றாண்டின் துவக்கத்துக்குப் போவோம். அப்போது நிகழ்ந்த சில இயல்பியல் கதைகள் தெரிந்தால்தான் இப்போதைய கதை புரியும்.
முதலில் கரும்பொதிவு கதிர்வீச்சு என்றால் என்ன என்று அறியலாம்.
ஒரு டென்னிஸ் பந்து போன்ற கோளம் ஒன்று இருப்பதாக எடுத்துக்கொள்வோம். இதன் சிறப்பு என்னவென்றால் இது இதன் பரப்பின் மீது படியும் அனைத்து ஒளிக் கதிர்களையும் விழுங்கி சாப்பிட்டு விடுகிறது என்று கொள்வோம். ஒரு டார்ச் இதன்மீது அடித்தால் ஒளியை அது விழுங்கி விடுகிறது. பகலில் வெளிச்சம் பட்டால் அதுவும் அதோகதிதான். இப்படி எல்லாவற்றையும்
விழுங்கிக்கொண்டிருக்கும் ஒரு கோளம் நமக்கு கருப்பாகத்தான் தோன்றும். ஏனெனில் நமக்கு பொருள்களின் வண்ணங்களாகத் தெரிவது எல்லாமே ஒளி பொருள்களின் மேற்பரப்பின் மீது பட்டு பிரதிபலிப்பாலும், சிதறலாலும் தான். பொருள்கள் ஒளியை விழுங்கிவிட்டால் அவை கருப்பாகவே தெரியும். இத்தகைய ஒரு பொருளை, பொதியை கரும்பொதி என்று இயல்பியலாளர்
அழைப்பர்.
இப்படி அனைத்து மின்காந்த அலைவரிசைகளிலும் கதிர்வீச்சை விழுக்கிக்கொண்டிருப்பவற்றை நாம் கரும்பொதி என்று அழைக்கிறோம். ஒளியும் ஒரு மின்காந்த கதிர்வீச்சுதான் என்பதை நாம் இங்கே நினைவில் கொள்வோம். இப்படி எதற்காக கரும்பொதி என்பதை இயல்பியலாளர் கற்பனை செய்யவேண்டும். பயன் இருக்கிறது. இப்படிப்பட்ட கரும்பொதிகள் எப்படி தம்மீது
படும் அனைத்து மின்காந்த அலைகளையும் விழுங்கிக் கொள்கின்றனவோ அதேபோன்று அனைத்து அலைவரிசைகளிலும் அவை கதிர்வீச்சு செய்துகொண்டும் இருக்கின்றன எனக்கொள்வோம். இப்படி ஒரு கரும்பொதி செய்யும் கதிர்வீச்சு அதன் வெப்பநிலைக்கு நேர்விகிதத்தில் இருக்கும். அதாவது இக்கரும்பொதியின் வெப்பநிலை 2 டிகிரியாக இருந்தால் அது ஒரு மின்காந்த
அலைவரிசையிலும் 200 டிகிரியாக இருந்தால் வேறு அலைவரிசையிலும் கதிர்வீசும்.
இப்படி வீசும் கதிர்கள் ஏறக்குறைய 425 டிகிரி சென்டிகிரேட் வரை நாம் காணும் ஒளி அலைவரிசைகளில் இருப்பதில்லை. அதனால்தான் அவை கருப்பாகத்தெரிகின்றன. இதற்குமேல் வெப்பமாக இருந்தால் சிகப்பு, நீலம் வெள்ளை என அவை பல ஒளிகளையும் வீசும். இக்கதிர்வீச்சை கரும்பொதி கதிர்வீச்சு என்பர். இதனால் என்ன பயன்?
இக்கரும்பொதி கதிர்வீச்சு இப்பொதி எதனால் ஆனது என்பதை சார்ந்தில்லை. அதன் மற்ற எந்த இயல்பியல் தமையிலும் சார்ந்தில்லை. அப்பொதியின் வெப்பத்தைமட்டுமே சார்ந்துள்ளது.
இப்படி வெப்பத்தை மட்டுமே சார்ந்த ஒரு கரும் பொதியின் கதிர்வீச்சின் அலைப் பரப்பை சரியாக கணக்கிட ஒரு கோட்பாடுதேவையாக இருந்தது. 1900 ஆம் ஆண்டில் மக்ஸ் ப்ளான்க் என்ற இயல்பியலாளர் முதன்முதலில் குவாண்டம்
கோட்பாட்டை இதை விளக்க பயன்படுத்தினார். பின்பு ஐன்ஸ்டைன் அக்கொள்கையை அனைத்து மின்காந்தகதிர்களுக்கும் பொதுமைப்படுத்தியதால் குவாண்டம் கோட்பாடு உதித்தது.
இதற்கும் நம் அண்டத்துக்கும் என்ன தொடர்பு?
அண்டம் என்பது ஆதியில் ஒரு கால-வெளி தனிப்புள்ளியாகத் தோன்றியது என்பது இயல்பியல் கருதுகோள். அப்புள்ளியில் அண்டத்தில் வெறும் சக்திதான் இருந்தது. பின்பு நடந்த பெருவெடிப்பில் அந்தப்புள்ளி விரிவடைந்து வெளியும் காலமும் பிரிந்தன. அப்போதும் அண்டத்தினுள்ளே வெறும் சக்திதான். ஒரு பலூன் போல ஊதிப் பெருகிய அண்டம் ஆதியில் இருந்த பெரும் வெப்பத்திலிருந்து பொருளாகவும், கதிர்வீச்சாகவும் பிரிந்தது. இப்படி விரிவடந்து கொண்டே வரும் அண்டத்தில் கதிர்வீச்சு குளிர்ந்து கொண்டே வருகிறது. பொருளோ எனில் வெளியில் புகையாகவும், விண்மீன்களாகவும், மீன்கூட்டங்களாகவும், மின்தொகுதிகளாகவும் மாறுகிறது.

விண்மீன் கள் உருவாகும் இந்த மாற்றம் பெரு வெடிப்பு நடந்து 200 மில்லியன் ஆண்டுகள் கழித்து நடக்கிறது. அதற்குமுன்னே பெருவெடிப்பின் பின் 380000 ஆண்டுகள் வரை குளிர்ந்துகொண்டே வரும் ஒரு கரும்பொதியப் போன்றே அண்டம் இருந்தது என்பது ஒரு கருதுகோள். (அப்பாடா, கரும்பொதிகளை கொண்டுவந்து சேர்த்தாச்சு) இப்படி அண்டம் ஒருகரும்பொதியாக மின்காந்த அலைகளில் இப்போதும் கதிர்வீச்சிக்கொண்டிருந்தால் நாம் அக்கதிர்வீச்சைப்பார்க்க
முடியவேண்டுமல்லவா? இப்போதும் பார்க்கலாம். விண்வெளியை நோக்கி ஒரு மின்காந்த கதிர்வீச்சு உணர்பொறியைத் திருப்பினால் நாம் இக்கதிர்வீச்சு எப்படி நம் அண்டத்தின் பின்புலத்தில் பரவி இருக்கிறது என்பதை அளக்கலாம்.
அப்படி அளந்தபோதுதான் இயல்பியலாளர்கள் ஒரு அதிசயத்தைக்கண்டார்கள். அதாவது அண்டம் இயல்பாக ஆதியிலிருந்து விரிவடைந்துகொண்டிருந்தால் இந்த கதிர்வீச்சு எல்லாத் திசைகளிலும் சமமான அளவுடன் இருக்கவேண்டுமல்லவா? இந்த கதிர்வீச்சு அண்டம் குளிர்ந்து உள்ளதால் நுண் அலை வரிசைகளில் வீசுகிறது. இந்த நுண் அலைவரிசை கதிர்வீச்சு அண்டத்தில்
திசைச் சீரற்று பரவி இருக்கிறது. இதை 'அண்டப் பின்புலத்தின் திசைச் சீரற்ற நுண் அலைப் பரவல்' என்று இயல்பியலாளர் அழைக்கிறார்கள். இது ஏன் இப்படி இருக்கிறது என்பதை விளக்க கருதுகோள்கள் உள்ளன.
இந்த கதிர்வீச்சை அளக்க ஒரு செயற்கைக்கோளை வடிவமைத்து ஏவி அண்டத்தில் கதிர்வீச்சுப்பரவலை சிறப்பாக அளந்து தேர்ந்ததால் இயல்பியலாளர்கள் இருவரும் இந்த வருடத்தின் நொபல் பரிசு பெறுகின்றனர்.
இயல்பியலின் சோதனை அளவிடல் வெற்றிபெறும் இன்னொரு காட்சி. கொண்டாடுவோம்.
அனைத்துப் படங்களுக்கும் நன்றி: நொபல் இணையத்தளம்.
(pictures copyright info @ nobelprize.org website )
ஆங்கில இணைச் சொற்கள்:
------------------------
ஜான் மாதெர்: John C. Mather
நாசா கோடார்ட் வெளிப்பறப்பு மைய்யம்: NASA Goddard Space Flight Center
Greenbelt, MD, USA
ஜோர்ஜ் ஸ்மூட்: George F. Smoot
கலிபோர்னியா பெர்க்கிலி பல்கலை: University of California
Berkeley, CA, USA
அண்டப் பின்புல நுண் அலைக்கதிவீச்சு: cosmic microwave background radiation
திசைச்சீரற்று: anisotropic
கரும்பொதிவு: blackbody
Wednesday, August 23, 2006
Fields Medal -2006
நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை உலக அளவில் தேர்வுசெய்யப்பட்டு அளிக்கப்படும், ஃபீல்ட்ஸ் மெடல் (Fields Medal) எனும் இப்பரிசு கணிதத்தின் நோபல் என கருதப்படுகிறது.
இதில் கிரிகோரி பெரல்மான் கணிதத்தில் மிகமுக்கியமாக கருதப்படும் நூறாண்டுகளுக்குமேல் தீர்க்கவியலாததாக இருந்த போன்காரெ யூகமுடிபு (Poincare Conjecture) க்கு தீர்வுகண்டவர் என போற்றப்படுகிறார். அவரைப்பற்றி ஒரு நல்ல கட்டுரையை இங்கே விக்கிபீடியாவில் காணலாம்.
கீழ்க்கண்டவர்கள் பரிசுபெறுவோர்:
1. அந்த்ரெய் ஒகுன்கோவ் (பெர்க்லி பல்கலை, அமெரிகா)
2. க்ரிகோரி பெரல்மான் (ஸ்டெக்லாவ் பல்கலை- தற்போது எப்பணியிலும் இல்லை, ரஷ்யா)
3. டெரன்ஸ் டஒ (யூக்லா, அமெரிகா)
4. வெண்டெலின் வெர்னெர் (பாரிஸ் பல்கலை, பிரான்சு)
பெரல்மான் பற்றி முன்னொருகாலத்தில் நான் எழுத ஆரம்பித்து தொடராமல் போனது இங்கே. அல்லது இங்கே :-( .
-----
-
Monday, August 21, 2006
கூகுள் செயலிகள் - 3
ஒருபக்கம் தேடுபொறி அமைப்பைச் செம்மைப்படுத்துவதிலும் மறுபுறம் மேலும் மேலும் பயன்படு செயலிகளை அனைவருக்கும் அளித்து அனைவரையும் பயனாளராக்கி அவர்களது தரவுகளை தன்வயமாக்குவதிலும் இன்னொருபுறம் மாபெரும் கணினிப்பண்ணைகள் நிறுவி இணையக் கட்டமைப்பின் இன்றியமையாப் பகுதியாக தன்னை ஆக்குவதிலும் இப்படி அனைத்து வழிகளிலும் கூகுள் தவிர்க்க இயலாத பொதுமக்கள் தரவுக் காவலனாக மாறிக்கொண்டிருக்கிறது. 'Dont be evil' என்பது கூகிளின் (மைக்ரோசாப்ட் நிறுவனத்தை திறமூல நிரலாளர்கள் அப்படித்தான் அழைப்பார்கள்) உயிர்மூச்சான மந்திரம். அப்படியா இல்லையா என்று சில வருடங்களில் தெரியும்.
Sunday, August 20, 2006
google apps
-----------------------
சென்ற இடுகையில் கூகுள் எழுதுசெயலி பற்றி பதித்ததைத் தொடர்ந்து இன்னும் சில எண்ணங்கள்.
கூகுள் இப்போது ஒரு இணையச் செயல்தளம் என்ற அளவில் வளர்ந்து வருகிறது. மைக்ரோசாப்ட் விண்டோஸ் ஒரு தனி கணினி செயல்தளம் மட்டும்தான். வலைச் செயல் தளங்கள் எனும் கருத்து தனிக்கணினிகளால் ஆன ஒரு வலையையே செயல்தளமாகப் பார்ப்பதும் அதன் பயனீட்டுக்கு உரியவகையில் நிரலாக்கம் மற்றும் நிரல் கட்டமைப்பாக்கம் இவற்றை அமைப்பதும் ஆகும். செயல்தளங்கள் மட்டுமே பயனர்களுக்குப் போதாது. உதாரணமாக வெறும் விண்டோஸ் கணினி மட்டும் இருந்தால் நமக்கு வலைப்பதிவிட முடியாது. அதற்கு ஒரு எழுதுசெயலியும் (பலருக்கு notepad, முரசு போன்றவை) தேவை. இத்தகைய செயலிகளையும் அதன் இடைமுகங்களையும் இணைய உலாவியிலேயே கிடைக்குமாறு செய்துவிட்டால் வெறும் தனிக்கணினிச் செயல்தளமான விண்டோஸ் மட்டும் போதும். மேலும் எழுதுவதை பக்கவடிவமைப்புச் செய்ய மைக்ரோஸாப்ட் வேர்ட் , ஓபன் ஆபீஸ் (தமிழ் இடைமுகமுள்ள 'தமிழா') போன்ற செயலிகளைப் பயன்படுத்துகிறோம். அதற்கு மாற்றாக இணையத்திலேயே இடைமுகமுள்ள இந்த கூகுள் ரைட்லி போன்றவை வந்துவிட்டால் இதற்கான தனிச்செயலிகளை வாங்கும் செலவு நமக்கில்லை. இதன் படி நிறுவனங்களின் (பல தனிப்பவர்கள் கூட) கணக்குவழக்குகளை கோர்த்துக்கொள்ள உதவும் மைக்ரோஸாப்ட்டின் எக்ஸெல் போன்ற செயலியையும் கூகுள் இணையத்திலேயே அளிக்கிறது. (spreadsheets.google.com) இதுவும் அனைவருக்கும் ஒரு பயனுள்ள செயலிதான். வீட்டுச் செலவுக்கணக்கு வைத்துக்கொள்ளவும் இது பயன்படும். அனால் இத்தகைய வலைபடு செயலிகள் நம் ரகசியங்களை உலகத்துக்கே சொல்லிவிடுமோ என்ற பயம்தான் நம் எல்லோருக்கும் இருக்கிறது. ஆனால் கூகுள் இப்போதே நம் பல ரகசியங்களையும் அறிந்துவைத்துள்ளது. நம் இமெயில் அனைத்தும் அதனிடம், நம் வலைத் தேடு களங்களைப்பற்றிய விவரங்களும் அதனிடம். நம் இணைய வலைப்பதிவு உளரல்கள், நாம் பிடித்த புகைப்படங்கள், சென்ற இடங்கள் இப்படி நம்மைப்பற்றி கூகுளுக்கு இப்போதே நிறையத்தெரியும். இன்னும் எவ்வளவு அதற்கு நாம் நம்மையே அறியத்தரப்போகிறோம் என்பது நாம் அதைப்பயன்படுத்துவதில் இருக்கிறது. மனதில் பாரமானவர்களே கூகுளிடத்தில் வாருங்கள். அது உங்களுக்கு இளைப்பாறுதல் தரலாம்.
google - writely
1. வலையிலேயே இருக்கும் நிரலியாதலால, வலையிலேயே முழு வடிவமைப்புக்கான இடைமுகம் இருக்கிறது.
எழுதும் எதையும் பக்க வடிவமைப்பு செய்து கொள்ள முடிகிறது.
2. மைக்ரோசாப்ட்-இன் வேர்ட் போன்ற செயலிகள் தேவையில்லை. அனைத்து வசதிகளும் இதிலேயே உள்ளன.
3. நேரடியாக இ-கலப்பைகொண்டு உலவியிலேயே தட்டச்சலாம்.
4. எளிதாக வலைப்பதிய நேரடியாக ப்ளாகர் கணக்குடன் இணைந்திருக்கிறது. அதைத்தான் முயற்சித்துக்கொண்டிருக்கிறேன்.
5. குறிச்சொற்கள் வசதி, பிடிஎஃப் சேமிப்பு வசதி என பல விதமான வசதிகள்.
6. எளிதாக எங்கிருந்தும் வலைப்பதிவிட வசதி.
7. எங்கோ இருக்கும் மற்றவரோடு இணைந்து சேர்ந்து உருவாக்கும் (collaboration) வசதி.
8. பல படிகளை சேமித்து ஒத்து நோக்கும் வசதி என பல உண்டு.
9. தேடு-மாற்றுச்சொல் இடு (search-replace) வேலை செய்கிறது.
முயற்சி செய்து பாருங்கள்.
Monday, August 07, 2006
இலக்கர் - 4
விடுதியின் தடம் சில வேப்பமரங்களூடே வளைந்தது. வெண்புகை மரங்களடியில் அடர்ந்து தேங்கியிருந்தது. ஊடே புகுந்து மெல்ல ஓடினான் பரன். மரங்களின் பின்னிருந்து ஒலியிலி வெடிப்பிகள் முனகின. ஒரு காலில் அடிபட்டு தரை வீழ்ந்து உருண்டான் பரன். இருபுறமும் இருந்து நான்கைந்து ஆட்கள் சூழ்ந்தார்கள்.
"துணைச் செயலர் பரன். சற்றே ஒத்துழையுங்கள்" பதிலிறுக்குமுன் கண்களில் மறைஆடிகளைப் பொருத்தினர். தடத்திலிருந்து விலகி நடந்தனர்.
"கைகளைப் பிணைக்கமாட்டோம். ஒருமணிப் பயணம்தான்".
"கூட்டாட்சிப் பேராண்மை என்னை எங்கும் தொடர முடியும் நண்பர்களே. யார் நீங்கள்"
"உடலில் அலைபரப்பி பொதித்துள்ளார்களா? தெரியும் பரன். கலத்திலும் இருப்பிலும் அலைகுழப்பிகள் உள. "
"யார் நீங்கள்?"
"நமது கூட்டாட்சியின் குடிமக்கள்" என்றவன் சிரித்தான். "பரன், இப்படி, மிதவையில் அமருங்கள்" கைபற்றி உதவினான் ஒருவன்.
புகையின் அடர்வு இன்னும் குறையவில்லை. மூச்சில் வேம்பின் பூவாசமும் புகையின் மெல்லிய கரிப்பும் உணர்ந்தான். மிதவையின் இருக்கைகளின் பட்டைகளை தடவினான். அதிமுடுக்கத்தில் மார்பில் பரவிப் பிணைக்கும் சவ்வின் குமிழ்கள் பட்டன. விரைகலன்களை வைத்துள்ளார்களா, யார் இவர்கள்?. ஒருவன் பரனின் காலின் காயத்தில் கிருமிக்கொல்லியைப் பீய்ச்சினான்.
"பரன், இது ஒரு விரைகலம். ஓர்த்திருப்பீர்கள்தானே. இப்போது உயர்த்துகிறோம். திடுக்கிடாதீர்கள்".
மிதவை சரக்கென உயர்ந்தது. காவல்நிலையத்திலிருந்து சில வெடிப்பிகள் மிதவையையைச் சுட்ட ஒலி விரைவில் தேய்ந்தது. கலம் ஓட்டி முடுக்கிகளை அமர்த்தி கலத்தை சீர் ஓட்டத்தில் செலுத்தினான்.
-
"நீர் அருந்துகிறீர்களா" என்ற ஒருவன் ஒரு தோல் குப்பியை கையில் திணித்தான்.
பரன் நீரை உறிஞ்சிக் கொண்டே, "இன்னும் எத்தனை நேரம்" எனக் கேட்டான்.
"பத்தே நிமிடங்கள். ஏன் கூட்டாட்சி வான்படை நம்மைத் துரத்தவில்லை என நினைக்கிறீர்கள் அல்லவா?"
"ஆம்"
"கீழே உங்களுக்கு விடை கிடைக்கும் பரன். உங்கள் காலில் குருதி உறைந்து விட்டது. கால்சட்டையை தாழ்த்துகிறேன்"
மிதவை தாழ வீழ்ந்தபோது வயிற்றின் குழிவை சவ்வு பரவி மூடியது. நால்வர் அமரும் வான்படை அல்லது எல்லைக்காவலரின் விரைகலன். மற்ற இருவர் கீழேயே தங்கியிருப்பர் என்பதை நினைத்தான். கவியின் நிலை பற்றித் தெரியவில்லை. இது தன்னைக் கடத்த மட்டும் நடக்கும் நிகழ்வு என அவன் கருதவில்லை.. இன்று மாலையிலிருந்து நிகழ்ந்தவை ஒன்றோடொன்று தொடர்பற்றே இருப்பது போல் தோன்றினாலும் அவற்றின் கூட்டுச் சுட்டி ஒரு பெரும் திட்டம் செயல் படுகிறது என்றே அவன் எண்ணினான். யார்?
மிதவை தரை தொட்டவுடன் ஒருவன் பரனை அணைத்து இறக்கினான். கால்களில் கோரை பட்டது. முறையான இறங்குதளமல்ல. ஆயின் அரசின் ஆட்கள் அல்லர். இல்லை இதுவரை தான் அறியாத ஒரு உளவுத் துறையா? வண்டுகளின் ஒலி பெரும் வனப்பகுதியில் இருக்கிறோம் என அவனுக்கு உணர்த்தியது. செயலர் ஒருமுறை "கூட்டாட்சியின் நிழல்கரங்கள் நாம் மட்டுமல்ல பரன். நாம் மட்டும்தான் என்று நம்மை நம்பவைக்க பகை அரசுகள்தான் முயலும்" என்றார். "அயல்புலன்அறிவுத்துறைக்கு அனைத்து உள்புலன் தரவுகளின் சுருக்கும் தவறாமல் வருகின்றன. நாம் அனைவரும் ஒரே துறைதானே என்று மயங்காதே".
செயலர் நாளை மணலடிக் கூட்டத்தை ஏன் ஒத்திவைத்தார். காவலூர் விண்நோக்கியின் துவக்கவிழா நாள் இன்னும் இரண்டே மாதத்தில். ஆசிய, அய்ரோப்பிய கூட்டாட்சிகளின் நிபுணர்கள் தென்னாசியாவைச் சுற்ற வாய்ப்பு. "மாசு அகற்றும்" திட்டக் கூட்டம் நாளை. உண்மையில் ஒத்திவைத்தாரா?
"மறைஆடிகளை கழற்றுகிறேன் பரன்"
கண்கள் முதலில் எதையும் காணவில்லை. இருட்டு எங்கும். தன் அருகில் இருவரே இருப்பதைக் கண்டான். சூழ புதர்களும் சிறு மரங்களும் நிறந்திருந்தன. தப்ப எளிது. கால்களையும் கைகளையும் தளர்த்திக்கொண்டான். ஐந்துமுறை மூச்சை சீராக்கினான். முதலில் இடதுபுறம் இருப்பவன்.
"பரன், வருக" என்றபடி எதிர்நின்ற ஒரு மரத்தின் பின்னிருந்து செயலர் வந்தார்.
Thursday, July 27, 2006
இந்திய சிறார்களுக்கு கணினி ?
நடுவண் மனிதவள அமைச்சு நாட்டின் அனைத்துச் சிறார்களுக்கான கணினிப் பயிற்சியில் ஒரு முக்கியமான முடிவை சிலநாட்களுக்கு முன் எடுத்திருக்கிறது.
HRD rules out laptops for kids, says can result in ‘disembodied brains’
http://www.indianexpress.com/story/9192.html
அமெரிக்க எம் அய் டி பல்கலைக்கழக ஆதரவுடன் நிக்கலஸ் நிக்ரபோந்தே தலைமையில் அமைந்த வளரும் நாடுகளின் சிறாருக்காக வடிவமைக்கப் பட்டுவரும் 100 டாலர் (5000 ரூ) மடிக்கணினி திட்டத்தை இந்திய அரசின் மனிதவள அமைச்சு நிராகரித்து விட்டது. இத்திட்டத்தினால் மழையர் கற்றுக்கொள்வது என்பது கேள்விக்குறியதுதான் என்று அது தெரிவித்து இருக்கிறது. முக்கியமாக இந்திய கிராமத்து சிறார்கள் உடல், மனநலம் இதனால் பாதிக்கப் படலாம் எனவும் அது நம்புகிறது!
"Health problems of our rural children are well known; personalised intensity of computer-use could easily exacerbate some of these problems”.
அப்படி என்ன கிராமத்து சிறார்களின் உடல்நலன் நகரத்து சிறார்களின் உடல்நலனுக்கு குறைவானது என எனக்கு சரிவர விளங்கவில்லை.
அமெரிக்கா சென்ற மனிதவள அமைச்சின் அதிகாரி (யார் அது?) இன்னும் சில கண்டறிதல்களையும் விடுத்துள்ளார். இந்த மடிக்கணினிகள் உடலறுத்த மூளைகளையும், தனிமைப் போக்குகளையும், உடல்நலக் குறைகளையும் ஏற்படுத்திவிடும் என்றும் கண்டறிந்துள்ளனர்.
(“disembodied brains... isolationist tendencies... exacerbate (health) problems”).
ஆமாம் நமது நாடுதான் கணினித் துறையில் வல்லரசாகிற்றே என்று நமக்கு சந்தேகம் வந்துவிடாமல் காக்க இதே அமைச்சு வேறு ஒரு திட்டம் வைத்துள்ளது.
--------
இதற்கிடையில் சென்ற பிப்ரவரிமாதத்தில் மனிதவள அமைச்சு செய்தித்தொடர்பு அமைசுக்கு அனைத்து இடைநிலைப்பள்ளிகளுக்கும் அகலப்பட்டை இணைப்பு தரக்கோரி விண்ணப்பமிட்டுள்ளது.
இது
1. கற்பித்தலின் தரத்தை மேம்படுத்தவும்
2. ஆசிரியர்களுக்கு மேல்பயிற்சியளிக்கவும்
3. தன்முனைப்பாக மாணவர்கள் கற்றுக்கொள்ளவும்
உதவும் என மனிதவள அமைச்சு கூறுகிறது.
இதற்காக கீழ்கண்ட
1. இடம், பாதுகாப்பு அறை, கணினி சோதனைச்சாலை
2. கணினி, பிற வன்பொருள்கள் அவற்றின் கவனிப்பு
3. மென்பொருள்
4. இணைப்பு வசதிகள்
5. பாடங்கள், பயிற்சிப்பொருள்கள், இன்னபிற
6. ஆசிரியர் பயிற்சி
7. தொடர், மற்றும் தற்காலிக செலவினங்களுக்கு பண வசதி
இவற்றை விவாதிக்கவும், திட்டமிடவும் மாநில அரசுகளை கலந்து பேசவும் ஒரு பெரும் குழு ஒன்றையும் அமைத்து உள்ளது.(சுட்டியில் காண்க)
-------
இப்படி ஒரு நாடுதழுவிய திட்டம் இருக்கும்போது அதை செயல்படுத்த பயன்படுத்தப்படும் கணினி, இணைப்பான், இணையவழங்கிகள் போன்றவற்றின் வன்பொருள் மென்பொருள் ஊடுபொருள் இவற்றை தரப்படுத்தவேண்டும். நாடுதழுவிய பள்ளிகளுக்கான இந்த மாறுகடையின் அளவு எத்தனை கோடிகள்? வன்பொருள்களைப் பொருத்தமட்டில் வெறும் மேசைக்கணினி என முன் தீர்மானம் செய்தால் அதற்கு பல தனியார் நிறுவனங்களும் போட்டியிடலாம் (IBM, HP,Dell, Wipro என). ஆனால் இயங்குதள மென்பொருள்? இதற்கு மைக்ரோசாப்ட்டின் விண்டோஸ் அல்லது தளையறு மென்பொருளான லினக்ஸ் என இவற்றிலொன்றைத்தான் தேறவேண்டும். இதில் விண்டோஸ் என்றால் எது அது? இப்போதிருக்கும் xP? எதிர்வரும் என பயமுறுத்திக்கொண்டிருக்கும் விஸ்டா?. விஸ்டா ஓடவேண்டுமானானால் அதற்கு தேவையான கணினியின்
வன்பொருள் கட்டமைப்பு குலைநடுக்கத்தைத் தருகிறது.
இதில் குறைந்த பட்ச அளவைப்பார்காதீர்கள். குழந்தைகளுக்கு கணினியில் ஆர்வம் வரத்தூண்டுவது நோக்கமானால்
1. மிக நல்ல வரைவுப் பட்டை (topend graphics card)
2. உயர்திறன் கொண்ட பிராஸசர்
மற்றும் இவற்றை இயக்கும் கட்டமைப்பு கொண்ட உயர்மட்ட கணினிதான் முழு விஸ்டாவை ஓட்டமுடியும். ஒன்று-ஒன்றேகால் லட்ச
ரூபாய்களுக்கு குறையாமல் இந்தத் தேவை ஒரு கணினிக்கு மட்டும் இருக்கும் என்பது என் கணிப்பு. இப்படி எத்தனை கணினிகள் பள்ளிய்ல் இருக்கும்?
இல்லை UBUNTU போன்ற மக்கள் லினக்ஸ் பயன்படுத்த அரசு முடிவு செய்யுமா என்பது கேள்விக்குரியதுதான். மைக்ரோசாப்ட் போன்ற நிறுவனத்தின் முதலீடு வாய்ப்புகள், சில ஆயிரம் கணினித் தொழிலாளர்களின் வேலை வாய்ப்புகள், இவை போன்றவை அரசின் முடிவுகளை தீர்மானிக்காது என நாம் நம்ப இயலாது.
சரி இப்போது நிலவரம் என்ன?
இப்போதைக்கு அனைத்து நகரங்களிலும் தனியார் பள்ளிகளில் கணினி ஆய்வறை இருக்கிறது. பழைய புதிய கணினிகள் விண்டோஸ் 98, 2000 , xP என இயங்குதளங்களே பயன்படுத்துகின்றனர். CBSC, ICSC பாடத்திட்டங்களில் இரண்டாம் மூன்றாம் வகுப்புகளிலிருந்தே கணினி பாடம் தனியாக உள்ளது. மூன்றாம் வகுப்பில் LOGO போன்ற மாணவருக்கான பயில்நிரல்களின் பயன்பாடு காட்டப்படுகிறது, கற்றுத்தரப் படுகிறது. (ழான் பியாஜெ (Jean Piaget, ) என்ற சுவிஸ் நாட்டு மழலை மனவியல் ஆராய்சியாளரரின் கோட்பாடுகளுக்கு இயைந்து எம் ஐ டி யின் சேமூர் பாபெர்ட் (Seymour Papert) எனும் கணித அறிஞர்
அறுபதுகளில் வடிவமைத்த ஒரு நிரல் தளமாகும். இத்துடன் எம் ஐ டி யிம் மார்வின் மின்ஸ்கி (Marvin Minsky) எனும் மொழியியலாளரும் உடன் பங்கெடுத்தார்.)
ஆனால் இவை ஒரு பாடமாகத்தான் கற்றுத்தரப் படுகின்றனவே அன்றி குழந்தைகளுக்கு விளையாட்டின் மூலம் தாமே கண்டறிந்து கற்றுக்கொள்ளல் எனும் படியான சூழலை பள்ளிகள் தருவதில்லை. இது ஆசிரியர்களுக்கான சரியான நோக்குக்காட்டுதல் இல்லாமையே என்பதை தெளிவாக்குகிறது.
குழந்தைகள் வளர வளர ஐந்தாம் ஆறாம் வகுப்புகளில் MS Word, Powerpoint போன்ற மகாமட்டமான சிந்தனைக்கொல்லிகளை பாடங்களாக பயிற்றுவிக்கிறார்கள்.
இப்படி ஒருபுறம் தனியார் பள்ளிகளில் கணினிப் பயன்பாடு இருக்க அரசுப்பள்ளிகளில் ஒன்று அல்லது இரண்டு கணினிகள் இருந்தாலே அது பெரிய செய்திதான். இப்படி கணினிப் பயிற்சியின்றி வெளிவரும் அரசுப்பள்ளி மாணாக்கர்கள் சிந்தனைத் திறத்தில், ஓர்க்கும் திறத்தில் குறைந்து போய்விட்டார்களா?
எந்த வயதில் நம் மழலையருக்கு கணினியை விளையாடத் தர வேண்டும்? கணினி ஒரு விளையாட்டுப் பொருளா, பாடப்புத்தகங்களைப் போன்ற அறிவுதரும் ஊடகமா, தொலைக்காட்சியைப்போல நல்லதும் அல்லாததும் சேர்ந்தே அளிக்கும் காலம் தின்னியா, அல்லது நடுத்தரமக்கள் ஏதாவது ஒரு வேலை பிடிக்க முன்பு தட்டச்சு போல ஒரு பயிற்சியா?
நூறு டாலர் மடிக்கணினி நல்ல ஒரு செயல்திட்டம் என நான் நினைப்பதற்கு பல காரணங்கள் உள்ளன. இத்திட்டம் வெற்றி அடையுமா அல்லது தோல்வியில் முடியுமா என்பது முக்கியமல்ல. இப்படி ஒரு திட்டம் தேவையானது இதுபோன்று நாமே ஒன்று வடிவமைத்தாலும் சரி என்பதே என் நிலை.
1. எளிய இயக்கம். சிறாருக்கான பாதுகாப்பான கட்டமைப்பு. தேவையான அளவே இருக்கும் வன்பொருள் தரப்படுத்தல்.
2. கம்பியில்லாத் தொடர்பு வசதி.
3. இயல்பிலேயே கணினிவலை அமைப்பு வசதி
4. லினக்ஸ் இயங்குதளம்
5. பைதன் (Python) போன்ற நிரல்மொழி இடைமுகம்
6. மலிவு விலை.
7. பன்னாட்டு, தன்னாட்டு மொழியமைப்புகளுக்கான வசதி
8. இயல்பான பல்லூடக வசதி
இன்னும் பல.
சுட்டிகள்:
100 டாலர் மடிக்கணினி செயல்திட்டம்:
http://laptop.org/
இத்திட்டத்தின் விக்கி:
http://wiki.laptop.org/go/Home
நிரலாளர்களின் செயல்திட்ட விக்கி:
http://dev.laptop.org/wiki
இந்திய முனைப்பு பற்றிய பக்கம்(தமிழ்?)
http://wiki.laptop.org/go/OLPC_India
-
Thursday, July 20, 2006
no gag 2
Wednesday, July 19, 2006
Thursday, June 29, 2006
இலக்கர் - 3
"வாங்க பரன். அப்படி வெளிச்சத்தில் அமரலாம்" என்ற
காவல் அலுவலர் எழுந்து நின்றார். ஆறரை அடிக்குமேல் இருந்தார். கூட்டாட்சியின் எப்பகுதி என்று கணிக்க முடியவில்லை.
"என் பெயர் குமார். நீங்கள் ஹோசூர்தானே."
"ஆம். பிறந்து வளர்ந்த ஊர்"
இருக்கை சூழ்ந்து பரனைத் தாங்கியது. காவல் அலுவலகத்தில் இத்தனை வசதி இருக்கும் என அவன் எதிர்பார்க்கவில்லை.
"தாய், தந்தை ஐந்தாண்டுப் போரில் மரித்தார்கள். அதைப்பற்றி வேண்டாம். உங்கள் தங்கை ..."
"தென்னாப்பிரிக்காவில். லெசோதொ"
"பணி நிமித்தமா?"
"இல்லை. அவள் இணைதேடிப்போன இடம்"
"எங்கே கல்விகற்றார்?"
"பூனா"
"என்ன பயின்றார்?"
"கோள்திருத்தம்"
நிறைய கேள்விகள் குடும்பத்தைச் சுற்றியே இருந்தன. அனைத்தும் கூட்டரசுத் தரவுகளில் இருக்கும். அதிலிருந்தே அவை முக்கியமானவை அல்ல என்று உணர்ந்து சரியான கேள்விக்குக் காத்திருந்தான் பரன்.
"கவியை எத்தனை நாட்களாகத் தெரியும்"
"இரண்டு மாதங்கள்" அவனுக்கே சந்தேகமாக இருந்தது.
இரண்டே மாதங்கள் தானா? அதற்குள்ளே எப்படி? சொன்னால் சீறுவாள்.
"கவியின் ஆசிரியரை சந்தித்திருக்கிறீரா பரன்"
"ஒரே ஒரு முறை"
அவன் மறக்க நினைத்த சந்திப்பு. மனிதன் உடல் என்றால் மூளையை பாதுகாப்பாக வைத்திருக்க இயற்கை வடிவமைத்த கொள்கலன் என்பதை நிறுவ இரண்டுமணிநேரம் செலவழித்தார். வெளியேறி கவியை ஒரு அரச மரத்தடியில் இழுத்து உட்காரச் செய்து
"இன்னும் ஐந்து நிமிடம் பேசியிருந்தால் அம்மனிதருக்கு கொள்கலனைப் பிரித்துக் காட்டியிருப்பேன்." என்றான்.
"கவலைப் படாதே. மூளையைப் பற்றி ஒரு நாள் கற்றுத்தருகிறேன்" சிரித்த கவிக்கு அன்று நாள் சரியிருக்கவில்லை.
"அவர் நேற்று இறந்துவிட்டார் தெரியுமா?" என்று பரனையே பார்த்துக்கொண்டிருந்தார் குமார்.
"என்னது? அப்படியா? " கவி ஏதும் சொல்லவில்லை என்பது வியப்பாக இருந்தது. அவளுக்கே தெரியாதா?
"பல்கலை நகர் வளாகத்திலேயே. கவியின் ஆய்வுக்கூடத்திலிருந்து நூறுமீட்டர் தொலைவில்"
பரன் பதிலிறுக்கவில்லை.
"கவியும் அவருடைய ஆய்வுத் தோழரும் இன்று முழுவதும் இதை அறிந்திருக்கவில்லை. என்று நினைக்கிறேன்" குமார் தன் சட்டைப் பையிலிருந்து ஒரு சிறு மரச் சதுரத்தை எடுத்தார்.
"அறிந்திருந்தால் கவி சொல்லியிருப்பாள்" என்ற பரன் இப்படி தேவையில்லாமல் தான் பேசுவதை உணர்ந்து நிறுத்தினான். மரச்சதுரத்தை பரனிடம் கொடுத்தார் குமார்.
"இது என்ன என்று நினைக்கிறீர்கள் பரன்"
தொடுவதற்கு வழவழப்பாக இருந்தது. கண்ணடிபோல் பரப்பு ஒளியை சிதறடித்தது.
கருஞ்சிவப்பாக இருந்தது. மெலிதான கோடுகள் குறுக்கே சென்றிருந்தன.
"இது என்ன மரம் பரன்?"
யாருக்குத் தெரியும். ஏதாவது அயல்நாட்டு மரமோ என்னவோ.
தலையை தெரியாது என அசைத்தான்.
"நம்ப மாட்டீர்கள். பனைமரம். பனை ஒரு சொரசொரப்பான மரம் பரன். இழைப்பது கடினம். நன்கு முதிர்ந்த பனையில் மிகத் திறைமையான ஒருவன் செய்தது"
"இருக்கலாம்"
"சரி. இது என்ன என்று நினைக்கிறீர்கள்"
"ஏதோ காட்டுவாசிகள் குழந்தைகளுக்கு விளையாட செய்திருப்பார்கள்."
"ம்ம். காட்டுவாசிகள் இப்போது யார் பரன். எல்லாம் பெருநகரிலிருந்து
வெளியேறிய நம் மக்கள்தானே" சிரித்தார் குமார்.
"இதை எதற்கு உங்களுக்கு காட்டுகிறேன் தெரியுமா? கவியின் ஆய்வுமேசை
இழுப்பறைகளில் ஒன்றில் இருந்தது இது"
"அதற்கென்ன?"
அறைக் கதவருகில் ஏதோ ஈரமான தடித்த கம்பளம் விழுவதுபோல் சத்தம் கேட்டது.
இருவரும் பாதி எழுந்து நகர முயற்சிக்கும்போது அறையில் வெண்புகை பரவியது.
கையிலிருந்த மரத்துண்டை கால்சட்டையில் சொருகிகொண்டு கதவை நோக்கி ஓடினான்
பரன். குமார் எங்கே என்று சரிவரத் தெரியவில்லை. அறைக்கு வெளியே மைதானத்தில் விளக்குகள் அனைத்தும் அணைந்தன. புகை அடர்ந்து எங்கும் பரவிக் கொண்டு இருந்தது. காவலர்களின் கைவிளக்குகள் அங்கிங்கும் அலைந்தன. கவி சென்ற விடுதியை நோக்கி விரைந்தான் பரன்.
Wednesday, June 28, 2006
இலக்கர்-2
" கவி. பயப்படாதே".
என்று சொல்லி அணைத்துக் கொண்டிருந்த பரனுக்கு கால்கள் மெல்ல நடுங்கின.
இலக்கர்கள் மூவரும் ஒரு முக்கோணத்தின் முனைகளில் இருந்து அனைவரையும் சுனைகளிலிருந்து விலக்கிச் சேர்த்துக்கொண்டிருந்தார்கள்.
திகைப்பியால் வீழ்ந்த இரு சீனர்களையும் அகற்ற சுனைக்காவலாளர் இருவர் இலக்கருக்கு குறிசெலுத்தினர்.
ஆரம்பவாகிலி எனக் கத்தியவன் எவன் என்பதை அறிய இலக்கர் கண்களை கூட்டத்தில் உழற்றிக்கொண்டிருந்தனர்.
பரன் அருகில் ஒரு காவலாளி விரைந்து வந்தான்.
"பரன் அவர்களே. உடன் வாருங்கள். இப்பெண் உங்கள் இணையா?."
"ஆமாம்.கவி. உடனே வெளியேற முடியுமா? இலக்கர்...? "
"குறி செலுத்தியிருக்கிறேன். உம்முடன் மிதவை ரயிலில் பேசின இலக்கன் அப்போதே உங்களை தனிமைப் படுத்த வேண்டினான்"
தனக்கு முன்பே சுட்டுத்தரவுகள் போவது பரனுக்கு உவப்பாக இல்லை. கூட்டரசின் அதிகாரியாக இருப்பதற்கான விலைகள் இயல்பானதாக இல்லை. இதற்குள் கவியின் அனைத்து சுட்டிகளும் தன்னுடையவற்றினுடன் கோர்க்கப்பட்டிருக்கும் என்பது நினைவுக்கு வந்தது. என்னவிதமான வாழ்வு இது என நினைத்து கவியின் தோளை இறுக்கினான்.
"போய்விடலாம் பரன்." கவியின் குரல் எங்கிருந்தோ வருவதுபோல் கேட்டது.
"பரன். உங்களை ஹெப்பால் அலுவலகத்தில் விடுகிறேன். செலுத்தி வெளியில் இருக்கிறது. " காவலாளி சைகையில் சுனைச்சுற்றுச் சுவருக்கு வெளியில் காண்பித்தான்.
"யார் முதன்மையில் அழைக்கிறீர்கள்?"
"எமக்கு கடமைகள் உண்டு பரன். உங்களைத் தவற விட்டால் இலக்கர் நிச்சயம் என்னை குறித்து விடுவார்கள் . "
அவனின் பேசி ஒலித்தது. கேட்கும்போது , கவியைக் கூர்ந்து நோக்கி தலையை ஆட்டினான. அமுக்கி உள்வைத்து, "கவி, மன்னியுங்கள். உம்மை எனக்குத் இதற்கு முன் தெரியாது" என்றான்.
கவி திகைத்து "என்ன சொல்லுகிறீர்கள். நான் ஆய்வு மாணவி"
"முதலில் நடவுங்கள். இரண்டு பேரையும் கொண்டு சேர்ப்பதற்குள் என் உயிர் போய்விடும்"
அவனுடன் செல்ல பரனும் கவியும் திரும்பியபோது அருகில் சூழும் மக்களில் இருந்த ஒருவன் மெல்ல பரனின் முழங்கையைத் தொட்டான். கையை விலக்கி பரன் யார் அவன் என்று பார்த்தான்.
"பரன்... " என்ற அவன் தென்னாசியனைப் போல இருந்தான்.
"பரன், ஒட்டுத்தாளைப் பாருங்கள்" என்று கையில் அமுக்கினான்.
காவலாளி அம்மனிதனின் முகத்தில் அடித்தான்.
"விலகு."
பரனையும் கவியையும் இழுத்தவாறு காவலாளி வேகமாக விரைய அவனைத் தொட்டவனை ஒரு இலக்கன் பிடித்து விட்டிருந்தான்.
காவலாளி தடுப்புக்கட்டையை விலக்கி அவர்களை வெளிப்படுத்தி காவலுந்து ஒன்றில் திணித்தான். உந்தை முடுக்கி இடப்புறம் வலித்து தரையில் இருந்து உயர்ந்தான்.
பரன் முழங்கையைத் தடவிப்பார்க்க ஒட்டுத்தாள் ஒன்றை உணர்ந்தான். மெதுவாக அதை உரித்துப் பார்த்தான்.
எதுவும் அதில் இருப்பதாகத் தெரியவில்லை. வீட்டில் உணர்வருடிகளில் படிக்கலாம் என்று பையில் வைத்தான்.
கவி பயந்து பேசாமல் அருகில் குறுகி அமர்ந்திருந்தாள்.
"பயப்படாதே கவி. காவல் அலுவலகத்தில் பதித்துவிட்டு உடனே ஹோசூர் போய்விடலாம்" என்றான்.
முதன் முறையாக தன் வீட்டுக்கு இப்படி பயந்த சூழ்நிலையில் தானா அவளை அழைக்க வேண்டும் என நினைத்தான்.
"எனக்கென்னவோ மிகவும் பயமாக இருக்கிறது பரன். அவனுக்கு என்னைப்பற்றி என்ன செய்தி வந்திருக்கும்?"
"பார்க்கலாம்" என்றபோது உந்து அலுவலக வாசலில் நின்றது.
இறங்கின உடன் "அம்மணி நீங்கள் இடதுபுறம் உள்ள விடுதிக்கு வாருங்கள்" என காவலாளி அவளை விலக்கி நடத்தினான்.
"பரன்... சீக்கிரம் வந்துவிடு "
"விரைவில் பதித்துவிட்டு வந்து விடுவேன்"
பரனை அமரச்செய்த அலுவலர் தன் கணியை இயக்கினார்.
"பரன். 29. அயல்புலன்அறிவுத் துறை. துணச் செயலர். ம். ஹோசூரில் இன்று மழையா பரன்"
"சற்றே தூரல்"
"உங்கள் செயலர் என் உடன் படித்தவர். இட்டாநகர் மைய காவல் பயிற்சி கல்லூரி"
"நல்ல ஊர். இரண்டுவருடம் இருந்தேன்"
"ஆமாம். செயலர் இப்போதுதான் அழைத்தார். உங்களுடைய நாளைய கூட்டம் ஒத்திவைக்கப் பட்டுள்ளது"
"உங்களிடம் இதை சொல்லச் சொன்னாரா?"
பரனுக்கு மெலிதாக கோபம் வந்தது.
"ஆமாம். நீங்கள் இங்கே இரவு தங்க வேண்டும். சில கேள்விகள் உள்ளன"
"என்னிடமா?"
"ஆமாம். கவியிடமும் கூட"
"கவி? அவள் ஆய்வு மாணவி"
"தெரியும் பரன். இலக்கர் அறிவுத் துறை"
பரன் மூச்சை இழுத்து சற்றே உள்ளடக்கி மெதுவாக வெளியே விட்டான்.
"கூட்டாட்சி அனுமதி பெற்றிருக்கிறீரா?"
"மையப் பேராண்மை ஒப்புதல் நீங்கள் உள்ளே நுழைந்த போதுதான் வந்தது"
"நான் கவியிடம் இப்போது பேசலாமா?"
"இரவு உணவின் போது சந்திப்பீர்கள். அப்போது பேசலாம். இன்னும் ஒருமணி நேரம் உள்ளது.இப்போது பொதுவாக
சில கேள்விகள் இப்போது கேட்கலாமா? "
நிகழ்வுகள் சிக்கலாவதை பரன் உணர்ந்தான். செயலர் அனுமதித்திருக்கிறார். பேராண்மை ஒப்புதல் அளித்துள்ளது.
இரவு உணவுக்கு இன்னும் ஒரு மணி நேரம். கவி?
Thursday, June 08, 2006
வாண்டா மக்கின்டாயரின் "of Mist and Grass and Sand"
அறுபதுகளின் இறுதியிலும் எழுபதுகளின் துவக்கத்திலும் பல பெண் எழுத்தாளர்கள் அறிபுனைவுகளை எழுத முனைந்தார்கள். முதலில் கோபமான பெண்ணியச் சார்பான கதைகள் எழுதப்பட்டன. 'இப்படி இருந்தால் எப்படி' எனும்படியான 'what if'கேள்விகளுக்கு தகுந்த களன்களை அறிபுனைவுகள் இயல்பாக தம்மில் சாத்தியப் படுத்துவன. எந்த ஒரு அதிகார மையம், கட்டுமானம் பற்றிய கேள்விகளயும் அதிர்வுதரும் வழிவகைகளை பதில்களாகவும் ஒரு அலட்சியத்துடன் அறிபுனைவுகளில் நிகழ்த்தலாம். ஒரு அளவுகடந்த எல்லையற்ற நினைப்புத் தளையறுத்தலையும் அறிபுனைவுகள் வழங்குகின்றன. உர்சுலா லெ கின், யோவான்னா ரஸ், சூசி மெக்கீ சார்னாஸ், ஆலிஸ் ஷெல்டன் என பல பெண் எழுத்தாளர்களுக்கு தம் பெண்ணியக் கருத்தாக்கங்களை வைத்து சமுதாயத்தின் ஆண் தன்மையைப்பற்றி, தேவையைப்பற்றி பாரியமான கேள்விகளை எழுப்ப அறிபுனைவுகள் சரியான தளமாக இருந்தன. கதைகள் என்றவகையில் பல நல்ல ஆக்கங்களையும் இம்முயற்சிகள் தந்தன என்பதை நினைவில் வைக்கலாம். இப்போது பாம்புக் கதை.
அறிபுனைவுகளில் பெண், ஆண் எழுதியது என்றெல்லாம் பிரித்துப்பார்க்காமல் எனக்குப் பிடித்த சிறந்த சிறுகதைகளில் ஒன்று 'பனி, புல், மணல் பற்றி...' என வாண்டா மக்கின்டாயர் எழுதிய கதை. 'பாம்பு' என்றே காரணப் பெயராக அழைக்கப்படும் ஒரு இளம் மருத்துவச்சியைப் பற்றிய கதை. பெரும் அணுச் சமர் கழிந்த காலத்தில் சிதிலமடந்த பூமியில் மிஞ்சிய இனக்குழுக்கள் ஆங்காங்கே பிரிந்து வாழ்கின்றனர். பயிற்சி முடிந்து நோய்தீர்க்கும் பனி, புல், மணல் எனும் பாம்புகளுடன் பெரும் பாலை ஒன்றைக் கடந்து வரும் மருத்துவச்சி 'பாம்பு'. அவளை ஒரு சிறு கிராமத்தினர் தம் குழுவின் நோயுற்ற பிள்ளை ஒன்றைக் காப்பாற்ற அழைத்துச் செல்கின்றனர். இதில் துவங்குகிறது கதை.
பிள்ளை மிகவும் நோயில் வருந்தி இறப்பின் வாயிலில் கிடக்கிறான். குழுவினருக்கு பாம்புகளின் மருத்துவம் செய்ய மிக அச்சமாகவும் தயக்கமாகவும் இருக்கிறது. ஒரு கையறு நிலையிலேயே பாம்பை அழைத்திருக்கிறார்கள். குழுவினர் சூழ நிற்க தன் பாம்புகளை பிள்ளையின் மீது படர விடுகிறாள். பனி பிள்ளையை நாவால் தீண்டி நோயை உணர்கிறது. பின்பு அது நோய்க்கான மருந்தை தன்னுள்ளே மறுநாள் சுரந்து நச்சுடன் பிள்ளையைக் கொத்தி உள்ளேற்றும். பிள்ளையுடன் தூங்க புல்லை விட்டுப் போகிறாள் பாம்பு. இதில் புல் இப்புவியின் உயிரி அல்ல. வேறொரு கோளிலிருந்து வந்த அயலுயிரி (alien). அதை இறக்கும் தறுவாயிலுள்ளவர்க்கு, நோயற்ற அமைதியான பிரிதலை தர பயன்படுத்துவாள் பாம்பு. அவ்வகையில் அச்சிறுவனின் முடிவை அமைதிப்படுத்த புல்லை அவனுடன் விட்டு இரவில் கூடாரத்தின் வெளியே போகிறாள் பாம்பு. இரவில் பனி உருவாக்கும் நச்சு மருந்தை காப்பாற்றும் பணி அவளுக்கு. பனி நச்சை உருவாக்கியவுடன் சிறுவனைக் கொத்தவிட கூடாரத்தினுள் நுழைபவளுக்கு பெரும் அதிர்ச்சி காத்திருக்கிறது. தன் நச்சுப் பற்களைக்காட்டி சிறுவனின் முகத்தருகில் சுருண்டு அவனுக்கு நிம்மதியான வலியற்ற உறக்கத்தையும் இன்பக்கனாக்களையும் அளித்துக் கொண்டிருந்த புல்லைப் பார்த்த உறவினர்கள் பயந்து போய் அதை வெட்டித்தூக்கி விலக்கிவிடுகிறார்கள். அளவற்ற துக்கத்துடன் பனியை சிறுவனின் மீது விடுகிறாள் பாம்பு...
தான், தம் நம்பிக்கைகள், வழக்கங்கள் இவற்றைத் தாண்டி அயலவரையும், அவர்தம் இயல்புகளையும் மருண்டு கண்டு அணுகும் ஒரு இனக்குழுவின் தற்காப்புச் செயல்கள் விளைவிக்கும் அளவீடற்ற சோகங்களைச் சொல்லும் இச்சிறுகதை அதை முதலில் படித்தபோது எனக்கு அறிபுனைவுகளின் வீச்சைக் காட்டியது. வாண்டா மக்கின்டாயர் இச்சிறுகதையை பின்னர் ஒரு பெரும்கதையாக்கி Dreamsnake எனும் நாவலாக வெளியிட்டார். அதுவும் நல்லதொரு கதை. பின்னொரு நாளில் அதைப்பற்றி எழுதுவேன். வாண்டா இச்சிறுகதையினாலும், நாவலினாலும் புகழ் பெற்றார். பின்னர் அக்கால ஸ்டார் ட்ரெக் பகுதிகளுக்கு கதை எழுதினார். பிற்காலத்தில் அவர் எழுதிய 'the moon and the sun'மற்றொரு சிறப்பான கதை என்று கூறுகிறார்கள். நான் படித்ததிலை.
Monday, May 29, 2006
இலக்கர் -1
இலக்கமிட்டு இருக்குதோ? '
-
"இப்போ நாலரைக்கு கெம்பு கெரெ க்கு வந்துடு. விட்டா ஆறுமாசம் கழிச்சு வியன்னாவிலதான்" என்றாள். அணைத்து விட்டாள். மணி இப்பவே மூணரை. அலுவலகத்திலிருந்து ஓசூர் மிதவை ரயிலுக்கு ஓடி பெருநகரில் புகுந்து அறிவுச்சுனையை அடைவதற்குள் வந்து காத்திருந்து சண்டைபிடிப்பாள். கைக்குக் கிடைத்த அலுவல் சுவடிகளை பையில் திணித்துக்கொண்டான்.பிரிக்காமல் வைத்திருந்த மீன்முட்டை வதக்கல் பொட்டலத்தை ஓரத்தில் அமுக்கினான். மிகவும் பிடிக்கும் என்று ஒன்றுகூட தராமல் தானே சாப்பிட்டுவிட்டு முடிந்தபிறகு.
"சே. மறந்தே போச்சு. வா பழச்சாறுகுடிக்கலாம்" என்று இயல்பாக கேட்பாள்.
-
-
வரவேற்பில் பிருந்தா இன்னிக்குமா என்பதுபோல் கைக்கடிகாரத்தைப் பார்த்தாள். "பரன்.." அவள் முடிக்குமுன்னே டாட்டா என்று நகர்ந்தான். கதவு உணர்ந்து ஒதுங்கியது. வேகநடைபோல் ஓடி நிலையத்தில் கைவிரலைப்பதித்து
கெகெ க்கு சீட்டை உருவிக்கொண்டு நடைபாதையில் ஓடி 3:57 மிதவையைப் பிடித்தான். பையைப்போட்டு அமர்ந்தபோதுதான் கவனித்தான். பக்கத்தில் இலக்கன். உடனே பின்னால் திரும்பிப் பார்த்தான். மிதவைப் பெட்டி முழுவதும் நிரம்பியிருந்தது. ஐந்தாறு இலக்கன்கள் ஆங்காங்கே அமர்ந்திருந்தனர். மிதவை ஆனேகல் நிலையத்தில் நிற்காமல் கடந்து விட்டது. ஏதோ சரியாக இல்லை என்று நினைத்தான். பக்கத்தில் இருந்தவனை ஓரக்கண்ணால் பார்த்தான். இலக்கன் ஐந்தடி உயரம்தான் இருந்தான். உடையில் சில இடங்களில் இருந்த பொறிகள் என்னசெய்ய என்று ஊகிக்கவே இயலவில்லை. கையில் ஒரே ஒரு ஆயுதம் வைத்திருந்தான். திகைப்புக் குச்சியாக இருக்கலாம். அவனே ஒரு ஆயுதம்தான் என்பதை உணர்வானா அவன் என்று தோன்றியது.
இலக்கன் அவன் பக்கம் திரும்பி மெல்லச் சிரித்தான். "தொட்டபெலாபூர் நிலையமா" என்று கேட்டான்.
பரன் ஒரு கணம் அதிர்ந்தான். இலக்கர்கள் இப்படி வெட்டியாக பேசுவார்கள் என அறியான். குரல் கனமாக, ஆழமாக இருந்தது இன்னொரு காரணமாக இருக்கலாம்.
"இல்லை கெம்பு கெரெ. நீங்கள்?"
"நாங்களும் அங்கேதான்" என்றான் இலக்கன்.
நாங்கள். ஆறுபேருமா. அச்சம் விர்ரென உடம்பில் பரவியது.
"ஏதேனும் இடைஞ்சலா அங்கே?"
இலக்கன் பதில் தரவில்லை. நேராக திரும்பி அமர்ந்த கொண்டான்.ஜெயநகரிலும் மிதவை நிற்கவில்லை. பரன் தன்னிச்சையாக பாதஅணிக் கயறுகளை இறுக்கிக் கட்டிக்கொண்டான். எதிலிருந்து ஓடித்தப்ப எனத்தெரியவில்லை.
இருநூறு அடி ஓடினாலும் இலக்கன் திகைப்பியால் இங்கிருந்தே வீழ்த்திவிடுவான் என்று தெரியும். பையை இறுக்கிப்பிடித்து எழுந்து நின்றான். கெம்பு கெரெ நிலையம் பரந்து விரிந்திருந்தது. மிதவை நின்று கதவுகள்
திறந்தவுடன் அவசரமாய் வெளியில் குதித்தான். சொரசொரப்பு ஊட்டப்பட்ட தரை ஏனோ வழுக்கியது. கீழே விழுந்தவனை நொடியில் தோளைப்பற்றி இழுத்து தலை அடிபடாமல் நிறுத்தினான் இலக்கன். எப்போது இறங்கினான் எப்படி தான் விழும் வேகத்தில் குனிந்தான் என்று பரன் இலக்கனைப் பார்த்தான். அவன் தோளைப் பிடித்த இடம் கல்லில் பட்டாற்போல் வலித்தது.
"பார்த்து." என்றான் இலக்கன் சிரித்துக்கொண்டே.
"நன்றி" என்று பதற்றமாய் கூறிவிட்டு இறங்கு சுழற்படிகளுக்கு நகர்ந்தான். நிலையத்தின் வெளியில் வந்து இலக்கர்கள் தன்னைப் பின்தொடர்கிறார்களா என்று பார்த்தான். தன்னை ஏன் அவர்கள் பின்தொடரவேண்டும் என்று தன் அசட்டுத்தனத்திற்கு தானே இகழ்வாய் தலை அசைத்து சாலையில் இறங்கினான். சனிக்கிழமை கூட்டம் எங்கும் நிறைந்திருந்தது.
பேசி ஒலித்தது.
"கவி? இங்கதான் இருக்கேன். வந்தாச்சு"
"பரன். வந்தியா? மணி நாலரை ஆயாச்சு.இங்க கிழக்குச் சுனையில இருக்கேன்."
சுனையில் எப்போதும்போல் எங்கும் சீனர்களும், அமெரிக்க அய்ரோப்பிய வெள்ளைக்காரர்களும் குவிந்து அலைந்துகொண்டிருந்தார்கள்.
வார இறுதி தரவுச் சுருக்கங்கள் சுனையின் ஐநூறு ஊற்றுகளிலும் மின்கதிர்களாக சுரந்துகொண்டிருந்தன. சுனைக்கு அடியில் இருக்கும் உலகின் ஆகப்பெரிய கணினி மந்தைகளின் திரட்டுகள் பில்லியன் கணக்கில் தரவுச்சரடுகளைக் கோர்த்துப் பொருள் ஆய்ந்து சுரப்பிகளுக்கு அனுப்பிக் கொண்டிருந்தன. தென்னாசியக் கூட்டரசின் குடிமக்கள் எண்ணும் படியாக ஆங்காங்கே சிலரே இருந்தார்கள். உலகின் பெரிய அறிவுச்சுனையைக் கட்டிமுடித்துவிட்டு அனைத்துப் பழுப்புமனிதர்களும் பெருநகரின் வெளியே சூழ்காடுகளுக்குள் அகன்றுவிட்டனர். சில தென்னாசிய உயரதிகாரிகளும்
அவர்தம் குடும்பங்களுமே நகரில் இன்னும் இருந்தனர்.
"பரன். முட்டாள். இந்த மஞ்சள் மனிதர்களை சுற்றிலும் பார்த்துப் பார்த்து அலுத்துப்போய் விட்டது. இப்ப எங்கதான் இருக்கிறே?"
"ஆச்சு. அஞ்சு நிமிஷம்"
பெரும் கிரிக்கட் மைதானம் போலிருந்த பரப்பில் நடுவில் வட்டமாக நூற்றுக்கணக்கில் சுனைகளும் அவற்றில் மொய்த்துக்கொண்டு அயலவர்களும் நிறைந்த கூட்டத்தில் கவி எங்கே இருப்பாளோ என பட்டிக் கதவை திறந்தான்.
ஒரு காவலாளி ஆள் உணர்பொறியைக் காட்டினான். பரன் அருகில் சென்றதும் அவன் ஒருதுளி வியர்வையை தடவி எடுத்துக்கொண்டு உடனே தடுப்புக் கட்டையை விலக்கி வழிவிட்டது பொறி.
"வணக்கம். பரன் அவர்களே" காவலாளி வெடிப்பியைத் தாழ்த்தி கூட்டரசின் உயரதிகாரிக்குறிய மரியாதையைக் காட்டினான்.
பரன் கவனிக்காது உள்ளே புகுந்த வேகத்தில் தூரத்தில் கவி கையசைப்பதைக் கண்டான். திருப்பிக் கையசைத்ததும் அவள் கூவுவது இங்கே கேட்டது. இத்தனை சின்னப் பெண்ணாக இருக்கும் இவளை எப்படி பல்கலைக்கழகத்திலன் ஆய்வுக்கூட்த்தில் சேர்த்தார்கள் என்று அவனுக்கு விளங்கியதே இல்லை.
அவளுக்கு பின்புறம் ஐநூறு அடி தூரத்தில் ஒரு இலக்கன் நிற்பதையும் பார்த்தான்.
வலது புறம் திரும்பினால் சுனைச் சதுக்கத்தின் எல்லையில் இன்னொரு இலக்கன் நகர்வதையும் இடது புற எல்லையில் இன்னொருவன் கூட்டத்தை துருவிப்பார்ப்பதையும் கண்டான்.
அவளை நோக்கி விரைந்தபோது கூட்டத்தில் ஒருவன் " ஆயித்து குரு. ஆரம்பவாகிலி" என்பது கேட்டது. இலக்கன் திகைப்புக் குச்சியை குறிபார்த்து இயக்கினான். கூட்டதில் இரு சீனர்கள் சரிந்தனர். பிறர் விலகி ஓடத் துவங்கினார்கள்.
கவி அவன் கைகளில் வந்து விழுந்தாள். இலக்கன் கூட்டத்தை பிளந்து புகுந்து விரைந்தான். சுற்றிலும் த்டுப்புக் கட்டைகள் மின்னேற்றப்பட்டன. இலக்கர் மூவரும் முக்கோணத்தின் மூன்று முனைகளிலிருந்து அனைவரையும் பத்திச் சேர்த்தார்கள்.
--
Wednesday, May 24, 2006
தாயுமாகி நின்றாள் ...
எங்கோ ஒரு கோளில் மனிதர் குடியேறி பலநாள் ஆகிவிட்டன. நடந்த ஒரு பேரழிவில் ஆண்கள் அனைவரும் இறந்து விடுகிறார்கள். பெண்கள் தமக்குள்ளே முட்டைகளைச் சேர்த்து மரபணுக்களைக் கலந்து இனவிருத்தி செய்து வாழ்கிறார்கள். முப்பது தலைமுறைகளாக! பெண்களே கணவன் மனைவியாக பங்குபற்றி நடத்தும் குடும்பங்கள். இனக்குழுக்கள். ஆண்கள் இல்லை மற்றபடி மனிதரின் பழைய சமூகஅலகுகளும் அடுக்குகளும் அப்படியே. அப்போது ஒருநாள் பூமியிலிருந்து நான்கு ஆண்கள் அந்தக் கோளில் வந்து இறங்குகிறார்கள். கதிர்வீச்சு, போதை, மயக்கநிலை வாழ்வு என புவியில் சிதிலமடைந்துகொண்டிருக்கும் தம் மரபணுக்களின் வீரியம் கூட்டி இனத்தைக்காப்பாற்ற எப்போதோ மறந்துபோன அந்த காலனிக்கு வந்து பார்த்தால் ... ஆண்களே இல்லாத சமுதாயத்தை நம்ப இயலாமல் பார்க்கிறார்கள். கூடியிருக்கும் பெணளைப் பார்த்து அடிக்கடி 'எல்லோரும்' எங்கே என்று கேட்கிறார்கள். 'எல்லோரும்' என்பது ஆண்களை என்பது பெண்களுக்குப் புரிய சற்று நேரமாகிறது.
ஆண்களின் அனைத்துக் காரியங்களையும்,(ஒற்றைக்கொற்றை டூயல் கூட) ஆளுமைச் சாயல்களையும் தாமே வரித்து தம்பகுதியாய் ஆக்கியிருக்கும் அப்பெண்களுக்கு புவியின் ஆட்கள் சொல்லும் நாம் சேர்ந்து மறுபடியும் மனித இனத்தை உரமாக்கவேண்டும் என்பது உவப்பானதாக இல்லை. 'இங்கே இருப்பது அரை மானுடம்தான்' என்கிறான் ஒருவன் பேசும்போது. அப்படியா? கதையைக் கட்டாயம் படியுங்கள்.
ரஸ்ஸின் 'The female man' இன்னொரு புகழ்பெற்ற நாவல். 'தோழியர்' படித்து அனுபவித்து விட்டு விமரிசனம் செய்தால் சரியாக இருக்கும்.
-
ஜூன் 2007ல் இடஒதுக்கீடு
2007 ஜூன் மாதத்திலிருந்து உயர் கல்வியில் பிற்பட்டோர் இடஒதுக்கீடு வருகிறது.
மழைக்காலத் தொடரில் நாடாளுமன்றத்தில் சட்டமாக்கல் நடைபெரும் என முடிவாகியுள்ளது.
93ஆம் அரசியல்சட்டத் திருத்தம் அமலாக்கப்படும்.
27% பிற்படுத்தப்பட்டோர்க்கு எனவும், அனைத்து மாணவர் நலன் கருதி அரசுக் கல்லூரிகளில் இடங்கள் அதிகரிக்கப்படும் எனவும் முடிவாகியுள்ளது.
நாளை எதிர்வினைகள் கடுமையாக இருக்கக்கூடும்
-
Tuesday, May 23, 2006
ஒரு மாலை கடும் வெய்யில் நேரம் ...
கிடைத்த முத்துக்களில் சில:
Immortality, Inc.: Robet Sheckley- 40 ரூ. எப்போதோ படித்தது. 58-இல் எழுதிய ஷெக்லியின் முதல் நாவல். அப்போதே அறிபுனைவுகள் பெரும் ஆதரவுபெற்று எதிர்கால அண்டம்கொள்ளும் அளவுக்கு அறிவியல் சாதனைகளின் எதிர்பார்போடு boy meets spaceship வகை புனைவுகள் பரவிக்கொண்டிருந்தன. அழகான எதிர்கால மேய்ச்சல் வெளிகளில் அலைந்து கொண்டிருந்த புனிதப்பசுக்களின் மீது ஷெக்லி 'எருமை' என்று கிராஃபிட்டி சாயவீச்சுக்குப்பி கிறுக்கல்களாக தன் கதைகளை துவக்கிய காலம்.
The World of Null-A: A.E. van Vogt - 20 ரூ.
என்ன சொல்ல. 1948. வான் வாக்ட் எழுதியவற்றை ஆனானப்பட்ட கேம்பல்லே நிராகரிக்கமுடியாமல் அஸ்டௌண்டிங்கில் பதிக்கவேண்டியதாகப் போயிற்று. இவரால் பாதிக்கப்பட்ட பிற்கால எழுத்தாளர்கள்தான் எத்தனைபேர்.
Transition : Vonda McIntyre - 40 ரூ. மக்கின் டாயரின் பிற்கால ஒரு முத்தொடர் நாவல்களில் மத்திய நாவல். முதலாவது மட்டும் படித்திருந்ததால் தொடர்ச்சிக்காக வாங்கியது.
The flight of the Horse: Larry Niven- 20 ரூ. நிவென் எழுதிய hardsf நிறைய உள்ளதால் அவரின் fantasy சேகரிக்க வாங்கியது. நல்ல சிறுகதைகள் சில உள்ளன.
இன்னும் பல.
அறிபுனைவுகளில் ஆர்வமுள்ள சென்னை நண்பர்கள் தவற விடவேண்டாம்.
-
Wednesday, May 17, 2006
இட ஒதுக்கீடு - இன்று
1. பிற்படுத்தப் பட்டோரில் முன்னேறியகுடும்பத்தாரை இடஒதுக்குத் திட்டத்திலிருந்து விலக்குதல்
2. தற்போது இருக்கும் இடங்கள் போதாமையால், இன்னும் எச்சு இடங்களை அனைத்துப் புலங்களிலும் ஏற்படுத்துதல்
3. முன்னேறிய வகுப்புகளில் மிகஏழை மாணவருக்கும் சில சதவீதம் இட ஒதுக்கீடு செய்தல்
என்னைப் பொருத்தவரை இவை சரியான அறிவுறுத்தல்களாகவே படுகின்றன.
1. ஒரு சரியான வெளியேறு வகைமுறை (exit criteria) இல்லாததாலே பிற்பட்டோருக்கான இடஒதுக்கீடு காலவரையற்றுப் போவதாக பொதுவில் உணரப்படுகிறது. இது தமிழகம் போன்ற மாநிலங்களைப்பொறுத்தவரை ஓரளவு உண்மையும் கூட.
தமிழகத்தின் தற்போதைய நிலைமையில் சில சாதிகளையாவது பிற்படுத்தப் பட்டோர் பட்டியலில் இருந்து நீக்க வேண்டும். இப்பட்டியல் கல்வித்துறை பயன்படுத்தலுக்கு மட்டுமாவது மாற்றப்படவேண்டும்.
மிச்சமாகும் இடங்களை பொது இடங்களாக அறிவிக்காமல் மிகப்பிற்படுத்தப் பட்டோருக்கும், அட்டவணை சாதிகளுக்கும் பிரித்துக்கொடுக்கலாம். அதன்மூலம் இன்னும் சில ஆண்டுகளுக்கு இட ஒதுக்கீடு இருந்தாலே பெரும் சதவீதத்தில் மிகப்பிற்படுத்தப் பட்டோரும் அட்டவணை சாதியினரும் பயன்பெற முடியும். ஓரிரு பத்தாண்டுகளில் தமிழகத்தில் இட ஒதுக்கு தேவைப்படாத நிலைக்குக்கூட இது வழிசெய்யலாம். த்மிழகம், கேரளம், ஆந்திரம், கருநாடகம், குஜராத், மகாராஷ்ட்டிரா போன்ற மாநிலங்களுக்கு இது ஒரு தீர்வாக இருக்கலாம்.
ஆனால் இது போன்ற தீர்வு வட இந்திய மாநிலங்களுக்கு சொல்ல முடியுமா எனத்தெரியவில்லை. அவர்கள்தாம் இதைச் சொல்ல முடியும்
2. இடங்களை கூட்டுவது என்பதை செய்தே ஆகவேண்டிய கட்டாயக் காலம் இது. வளரும் பொருளாதாரத்தில் வேலையிடங்களை நிரப்ப ஆட்கள் போதவில்லை என்பதே இப்போதைய நிலைமை. அரசு தாராளமாக இடங்களை இன்னும் 50% கூட்டியும் ஐஐடி போன்ற புது தேசியக் கல்லூரிகளை நிறுவியும் இதை நடத்தலாம்
3. முற்பட்டவருக்கும் பிற மதத்தினருக்கும் சேர்ந்து பொருளாதார அடிப்படையில் சுமார் 10 % வரை ஒதுக்கு கொடுக்கப்பட்டால் தவறு இல்லை என்றே தோன்றுகிறது. ஆனால் நீதிமன்றம் இடையில் புகுந்து 70% இடஒதுக்கீடு ஆகிவிட்டதே என்று கதறக்கூடாது. 100% ஒதிக்கீடு- அவரவர் சாதி விகிதப்படி என்று நடத்தினாலும் ஒன்றும் குடி முழுகிவிடாது.மெரிட் ஒன்றும் குறைவுபடாது. அது நியாயமா இல்லையா என்பதை வேண்டுமானால் விவாதிக்கலாம்.
இடது சாரிகளின் இந்த முயற்சி இப்போதைய வெறி பிடித்து அலையும் கும்பல்களை சற்றே சிந்திக்கவைத்தால் நன்றாக இருக்கும்.
Nuff, sed t he buffalo man
I am fed up and giving up on the educated elite. I thought a sense of fair play, a hint of decency and a shred of sympathy for a fellow citizen will be attributes you may exhibit as a result of a well rounded education you are gifted with- subsidised totally by the people of the country. A sense of gratitude perhaps for the others who take pride in these institutions even though none in their families have ever enjoyed the privileged life you have in one of the II*s. And these guys think they deserve them. It is a gift the nation gave you man, and you know the so called intellect is as abundant as oxygen in this planet among the animals that chose to walk on their hind legs. Merit! Gosh, is it like say, 'achtung'? These are a bunch of selfish, clannish and racist neuron assemblies. No hope. Welcome to naya bharat.
Friday, May 05, 2006
மைசூர்
1
அந்நாளைய நினைவு -1
2
அந்நாளைய நினைவு - 2
3
மன்னர்கள் நாற் சந்தியில்
4
இன்போஸிஸ் நுழைந்துவிட்டது. ஐந்து வருடம் போனால் இதெல்லாம் இருக்காது.
5
எத்தனை எம்ஜியார் படங்களில் பார்த்திருப்போம்
நஞ்சுண்டேஸ்வரர் ஆலயம். நஞ்சைய்யன் எனும் நாட்டார் கடவுளுக்கு நஞ்சுண்ட ஈஸ்வரராக ஏறக்குறைய ஆயிரம் ஆண்டுகள் முன்பு கங்க மன்னர்களால் திராவிட மரபில் கட்டப்பட்ட,அருமையான, அழகான கோயில். கபினி நதிக்கரையில் அமைந்துள்ளது. மைசூரிலிருந்து இருபத்தைந்து கல் தொலைவில்.
6
நஞ்சுண்டேஸ்வரர் ஆலயம்-1
7
நஞ்சுண்டேஸ்வரர் ஆலயம்-2
8
நஞ்சுண்டேஸ்வரர் ஆலயம்-3
9
நஞ்சுண்டேஸ்வரர் ஆலயம் -4
10
நஞ்சுண்டேஸ்வரர் ஆலயம்- 4
(தேர்களைப்பற்றி ஒரு 'கலாச்சார' பதிவு போட்டே ஆகவேணும். உத்துப் பாக்காதீங்க)
Wednesday, May 03, 2006
இ.தி. 54
Tuesday, April 04, 2006
ஆக்டேவியா பட்லர் - Octavia Butler
சென்ற பதிவில் ஸ்டானிஸ்லா லெம்மைப் பற்றி எழுதிய பிறகு வெகுநாளாய் தள்ளிப் போட்டுக்கொண்டிருந்த 'அறிபுனைவுகளில் பெண்ணியம்?' என்ற இடுகையை எழுதலாம் என்று நினைத்து முதலில் பெண்கள் எழுதிய எனக்குப் பிடித்த கதைகளான வாண்டா மெகின்டாயர் - இன் "Of Mist, Grass and Sand " என்ற கதையைப் பற்றியும் ஆக்டேவியா பட்லர்- இன் "BloodChild " என்ற கதையைப் பற்றியும் எழுதலாம் என்று இணையத்தில் அவர்கள் புகைப்படம் தேடப்போனேன்.
ஆக்டேவியா பட்லர் சென்ற பிப்ரவரிமாதம் கீழே விழுந்து தலையில் அடிபட்டு இறந்தார் என்ற செய்தியைப் பார்த்ததும் சற்று நேரம் ஏதும் எழுதத் தோன்றவில்லை.
ஆக்டேவியா பட்லரின் கதைகளுள் அவரின் Bloodchild ஐத்தான் முதலில் படித்தேன். பெரும் தேள்கள் போன்ற ட்லிக் என்று அழைக்கப்படும் உயிரிகள் வாழும் ஒரு கோளில் மனிதர் இறங்கிவிடுகிறார்கள். மனிதர் தோற்றுப்போய் ட்லிக்களிடம் அடிமைகளாக பிழைக்கிறார்கள். அதுவும் எப்படி? ட்லிக்குகள் இனவிருத்திக்கு நன்கு வளர்ந்த திடகாத்திரமான மனித ஆண்களின் உடம்புக்குள் முட்டைகளை யிடுகின்றன. முட்டைகள் பொறித்து உடம்பைக்கிழித்து வெளியேறும்போது நிச்சயம் அம்மனிதன் இறந்துவிடுவான். மனிதப் பெண்கள் மனிதர்களின் இனப்பெருக்கத்துக்கே உள்ளனர். பலதலைமுறைகளுக்குப் பிறகு இப்போது இவ்வாறு முட்டையிடப்பட்ட ஆண்களில் பேறுகாலத்தின்போது சிலரை யாவது காப்பாற்ற வழிகள் கண்டுபிடிக்கிறார்கள். மனிதர்களிலிருந்தே பிறப்பதால் ட்லிக்குகள் மனிதர்களைத் தாம் ஒரு குடும்ப உறுப்பினராகவே கருதுகின்றன. ஒரு ஆண் தன் மனைவிமூலம் பெற்ற மனிதக்குழந்தையும், அவனைக்கிழித்து வெளிவரும் ட்லிக் குழந்தை உயிரியும் சகோதர உறவுடனேயே வளர்கின்றனர். இப்படி ஒன்றுக்குள் ஒன்றாய் பிணைந்து போன சார்பு வாழ்கையில் சில மனிதர்களுக்கு அதிலும் ஆண்களுக்கு உவப்பில்லை. பதுக்கிய துப்பாக்கிகளை ட்லிக்குகள் மிகுந்த மன விசனத்துடன் இப்படி தவறான பாதக்குச் செல்வதாக வருத்தப்பட்டு பறிமுதல் செய்கின்றன....
விரும்பி ஏற்கும் அடிமைத்தனம், ஆண் பெண் உறவு, பலகாலம் இணைந்து சார்ந்து வாழ்வதாலேயே நியாயப் படுத்தப் படும் ஏற்றத்தாழ்வுகள் ... இப்படி பல தளங்களில் பொருள்காணக்கூடிய கதை இது. ஒரு அமெரிக்க கருப்பின பெண் என்றே அடையாளம் காணப்படும் ஆக்டேவியா பட்லர் எழுதிய அருமையான கதை . Genre materials என்பார்கள் - அதை வைத்தே சமுதாயக் கட்டுமானங்களை அறிபுனைவுகள் எப்படி பலமாக அசைக்க முடியும் என்பதற்காக இந்தக் கதையைக் காட்டலாம்.
அவரது wild seed ஐப்பற்றித்தான் விரிவாக எழுத நினைத்திருந்தேன். ஆனால் அவரின் அகால மரணச் செய்தியில் ஏதோ இதை இடுகிறேன்.
1.http://www.boingboing.net/2006/02/26/rip_octavia_butler_g.html
2.http://www.salon.com/books/feature/2006/03/17/butler/index_np.html
(salon நினைவஞ்சலி)
3.(kindred பற்றி ஒரு உரையாடல்)
http://www.wab.org/events/allofrochester/2003/interview.shtml
4.http://www.locusmag.com/2000/Issues/06/Butler.html
(லோகஸ் மகஸீன்னில் வந்த பேட்டியின் துணுக்குகள்)
Tuesday, March 28, 2006
ஸ்டானிஸ்லா லெம் - Stanislaw Lem
sf - அறிவியல் புனைகதைகள் (அறிபுனைவுகள்) என்றால் இன்றும் அமெரிக்கப் புனைவுகளே பலருக்கும் நினைவுக்கு வரலாம். ஹாலிவுட் வேறு பிளாஸ்டிக் வினைல் விலங்குப் பதுமைகளிலிருந்து முன்னேறி cg என்றழைக்கப்படும் கம்ப்யூட்டர் க்ராபிக்ஸ் வந்தபிறகு (Tron வந்தபோது அதைப்பார்த்த மக்கள் யாராவது இருந்தால், ஒரு ஹலோ- அப்புறம் தனிமடல் போடுகிறேன். :-) ) பல படிகளாக உருமாறி இப்போது டெமி மூருக்கு பதிலாக ஒரு ஏலியன் நாயகியே பரவாயில்லை எனும்படி வளர்ந்து விட்டது. எழுபதுகளில்(லேயே) அமெரிக்க sf பெருங்குவியலை kitsch என ஒரு போலந்து நாட்டு அறிபுனைக் கதையாசிரியர் இடதுகையால் விலக்க அவரை அமெரிக்கக் கூட்டம் ஜாதிப்பிரஷ்டம் செய்தாலும் அவரது கதைகளை படிக்காமல் யாராலும் தப்பிக்க இயலவில்லை. அவர் Stanislaw Lem . நேற்று இறந்து விட்டார்.
முதலில் படித்தது அவருடைய நாவலான சோலரிஸ் ( Solaris) தான். இதைப்போன்ற ஒரு கதையை அதற்கு முன்னும் பின்னும் நான் படித்ததில்லை. பல அறிபுனைவுகளைப்படிக்கும் போது நமது புராணக்கதைகளையே சற்றே தூசிதட்டி மெருகேற்றி இற்றை-அற்றை-எற்றைப் படுத்திச் சொன்னால் இதுபோல இருக்கும் எனத் தோன்றலாம். ஆனால் சோலாரிஸ் வேறுவகையானது.
நம் உள்மனதின் இருப்பையே அசைக்கக் கூடியது. அறிவு என்றால் என்ன? உயிர் என்றால் என்ன? உணர்விப்பதுவே என்றார் அருணகிரிநாதர். பிற/அயல் உயிரிகளுக்கு உணர்விப்பது என்றால் என்ன? ஒரு Jacobian Monad ஆக உள்வாங்கியிருக்கும், முழுதும் கடலால் ஆன பெரும் புவிக்கோள் ஒன்றை விண்கலத்தில் சென்றடையும் மனிதர்களின் உள மாற்றங்களை, சிதைவுகளைப் பற்றியது இக்கதை. நண்பர்களே, ஒரே ஒரு அறிபுனைவைத்தான் படிப்பேன் என்றால் இதைப் படியுங்கள் என்று மட்டும் சொல்லிக்கொள்கிறேன். லெம்மைப் பற்றியும் பிறரது அறிபுனைவுகளை பற்றியும் நிறையப் பேசலாம்.
முன்னொரு இடுகையில் அவரைப்பற்றியும் அவரது நண்பரைப் பற்றியும் சிறு சுட்டி ஒன்று கொடுத்தேன். இங்கே. இதே சோலரிஸ் கதையை எனக்குப் பிடித்தமான இயக்குநர் அந்ரை டார்கோவ்ஸ்கி (Andrei Tarkovski) மாஸ்கோவில் திரைப்படமாக எடுத்தார். (ஹாலிவுட் இதே கதையை சமீபத்தில் எடுத்தது. அதை நான் பார்க்கவில்லை. ரவி சீனிவாஸ் ஹாலிவுட் படத்துக்கு ஒரு விமரிசனம் எழுதினார் என நினைக்கிறேன்) இத்திரைப்படத்தை அவருடைய மற்றொரு படமான ஸ்டாக்கர் (stalker) உடன் சேர்த்துப் பார்க்கவும்.
டார்கோவ்ஸ்கியின் வீச்சு புலப்படும். லெம்மின் பல சிறுகதைகளையும் படித்தால் உயிர், அறிவு, மனிதத்துவம், இருப்பு இவற்றின் அண்டப் பரிமாணங்களில் ஆன பொருள் என்பதைப்பற்றிய ஓயாத கேள்விகளைக் காணலாம். அறிபுனைவுகளின் முழு வீச்சு என்பது பிற மைய இலக்கியப் பாடுபொருள்களிலிருந்து மாறுபட்டது என்பதையும் அறிபுனைவுகள் தொட்டுச் செல்லும் பல விதயங்களை மைய இலக்கியத்தால் அணுக்முடியாது என்பதையும் குறித்தும் விரிவாக கருத்துப் பறிமாற்றமும் செய்யலாம். தமிழில் மொழிபெயர்க்க Lem, Philip K Dick, Ray Bradbury போன்றவர்களிலிருந்து ஆரம்பிக்கலாம்.வெங்கட் சமீபத்தில் ஒரு லெம் கதையை பெயர்த்தார். அது என்ன ஆச்சு? பிலிப் கே டிக் -கின் பல கதைகள் இப்போது சினிமாவாக வர ஆரம்பித்து விட்டன. அவர் தமிழ் எழுத்தாளர்களில் புதுமைப் பித்தன் போன்றவர் என்று முன்பு ஒருமுறை எழுதிய ஞாபகம். லெம் முக்கு இணையாக எந்த தமிழ் எழுத்தாளரக் கூறலாம்? யாருமில்லை.
Sunday, March 26, 2006
நம் மொழிகள்
ஓரு தலைமுறைக்கு முன், சென்ற நூற்றாண்டின் பாதி வரை கூட தமிழ் 'வித்வான்களில்' பலருக்கு தமிழ்தவிர பிற திராவிட மொழிகளிலும், வட மொழியிலும் சிறிதேனும் பயிற்சி இருந்தது. இப்போது அது அருகிக்கொண்டு
வருகிறது என்பது தற்போதைய பல்கலை தமிழ்த்துறை ஆய்வேடுகளைப் பார்த்தால் தெரிகிறது. பிற இந்திய மொழிகளை விட ஆங்கிலமே பெரும்பாலோனோர்க்கு இரண்டாம் மொழியாக இருப்பதால் அண்டையிலிருப்போரைக் கூட சரிவர பரிவுடன் பார்க்க இயலாது போய்விட்டது.
இது தமிழ் மொழி, பண்பாடு இவற்றில் ஆர்வம் இருப்போருக்கு இவை வந்த, வளர்ந்த முறையை சரியாக பல்நோக்குடன் பார்க்க இயலாததாக ஆக்கி இருக்கிறது. வரலாற்று நோக்கில் தமிழின் பண்பாட்டு நிலப் பரப்புதான் எது ?
சிலமாதங்களுக்கு முன் பெங்களூர் பழைய புத்தகக் கடையொன்றில் வாங்கிய திரு R Narasimhacharya எழுதிய "History of Kannada Language" எனும் பல்கலைப் பேருரைத் தொகுப்பு நூலை படித்துக்கொண்டிருந்தேன். 1934 ஆம் வருடத்தில் எழுதப்பட்டு 1969 இல் இரண்டாம் பதிப்பு பெற்ற சிறு நூல். பல சுவையான விதயங்கள் இருந்தாலும் ஒரு மேற்கோளை குறிப்பிடலாம். தமிழுக்கும் வடமொழிக்கும் என்றும் பகை என நாம் இன்று அநிச்சையாக சிந்திக்க பயிற்றுவிக்கப் பட்டிருந்தாலும் இந்தக் கதையைப் பார்க்கவும்.
சிவன் - சுப்பிரமணியன் இவருக்கிடையே நடக்கும் உரையாடலாக எழுதப்பட்ட சம்புரஹஸ்ய எனும் ஒரு வடமொழி நூலில் சிவன் கூறுவது:
" என்னால் அளிக்கப்பட்ட ஞானத்தால் அகத்தியன் தமிழ் இலக்கணத்தை எழுதினான். இப்படி ஒரு ரிஷி படைத்த ஆர்ஷ மொழியாக தமிழ் இருக்கிறது. ஆந்திர, கர்நாட, கௌர்ஜார மொழிகள் இப்படி ஒரு ரிஷியால் படைக்கப் பட்டவை அல்ல. எனவே அவை குறைபாடுடைய (அபபிரம்ஸ) மொழிகளாகும். தமிழைப்போல அவை ஆர்ஷ மொழிகள் அல்ல."(நரசிம்மாச்சார்யாவின் ஆங்கில பெயர்ப்பின் தமிழ் வடிவம்)
mAmuddisya tapascakre purAgasthyo mahAmunih
mayA pradattavijnAnO drAmidIm vyAkrtim vyAdhAt
nApabhramSatvadOsosti drAmidInAm girAm tatah
anArsamAndhrakArnAta ghaurjarAdyam hi bhAsitam
apabhramsam vijAnIyAt
மற்ற திராவிட மொழிகளினின்றும் தமிழை ஏன் பிரித்து சற்றேனும் உயர்த்திச் சொல்லப்பட்டிருக்கிறது?
சற்றே கூர்ந்து ஓர்க்கத்தக்கது இது என்றே படுகிறது. யாரிடமேனும் விளக்கம் இருக்கிறதா?
Sunday, March 12, 2006
ஏன்றி ஐகாரஸு ...
ஏனு குரு தும்பா பேஜாராகி காணிஸ்தீரா.
இல்லி ஹோகி. எஞ்ஜாய் மாடி.
நம்ம அம்மவரு சக்காபிட்டா சிங்கரு ஏனு கேளித்தீரா?
நாகாணே, நாகாணே, நன்ன தேவராணே!
சத்யவாகலே ...
(மியூசிக் யாரு நோடி. சர்ப்ரைஸ்!!!)
-
இறையிலிக் கொள்கை
உலோகாயதம் எனப்படும் இறையிலிக் கொள்கை இந்தியப் பரப்பில் மிகப்பழைய ஒரு கருத்தாகும். சார்வாகிகள், உலோகாயதவாதிகள், நம்பிக்கையறு வாதிகள் எனப் பல வகைக் கோட்பாடுகளுடன் இவ்விறையிலிக் கொள்கையர் இருந்தனர். வேதங்களை, யாகங்களை முன்னிறுத்தும் வைதிக மதத்தையும், கடவுளைப் பற்றிப் பேசாத ஆனால் ஊழ்/வினை பற்றி பேசும் அவைதீகர்களான சமணர், பௌத்தர், ஆசீவகர் என பிற மதங்களையும் இறையிலிக் கொள்கையினர் மறுதலித்தனர். ஆகையால் இவரது நூலகள் அனைத்தும் இவர் 'எதிரிகளால்' அழிக்கப் பட்டும், இவருடைய கொள்கைகள் பழிக்கப் பட்டும் மறக்கப்பட்டுமே வந்துள்ளன. இவற்றின் கூறுகளை நேரம் கிடைக்கும்போது சிறுசிறு பத்திகளாக எழுத முனைகிறேன்.
முதலில் தமிழில்:
"
பூத வாதியைப் புகனீ யென்னத்
தாதகிப் பூவுங் கட்டியு மிட்டு
மற்றுங் கூட்ட மதுக்களி பிறந்தாங்
குற்றிடும் பாதத் துணர்வு தோன்றிடும்
அவ்வுணர் வவ்வப் பூதத் தழிவுகலின்
வெவ்வேறு பிரியும் பறையோ சையிற்கெடும்
உயிரோடுங் கூட்டிய வுணர்வுடைப் பூதமும்
உயிரில் லாத உணர்வில் பூதமும்
அவ்வப் பூத வழியவை பிறக்கும்
மெய்வகை யிதுவே வேறுரை விகற்பமும்
உண்மைப் பொருமுலோ காயத் துணர்வே
கண்கூ டல்லாது கருத்தள வழியும்
இம்மையு மிம்மைப் பயனுமிப் பிறப்பே
பொய்ம்மை மறுமையுண் டாய்வினை துய்தல்
என்றலு மெல்லா மார்க்கமுங் கேட்டு
நன்றல வாயினு நான்மா றுரைக்கிலேன்
பிறந்தமுற் பிரப்பை யெய்தப் பெறுதலின்
அறிந்தோ ருண்டோ ...."
-மணிமேகலை
வடமொழியில்:
"
nanu yady upaplavas tattvAnAm kim AyA ...
athAtas tattvam vyAkhyAsyAmah.
prthivy Apas tejo vAyur iti tattvAni.
tatsamudAye sarIrendriyavisayasanjnetyAdi.... "
If all principles are anihilated, isn't [there a contradiction with what Brhaspati says. namely]
"Well now we are going to explain the principles: Earth, water, fire and wind are the principles. The term body sense and object apply to there aggregates ." and so on?
தத்துவம் என்ற முறையில் உலோகாயதம் கட்டமைக்கப் பெற்றால்தான் அறிவியல்த் தத்துவம் எனும் வகையில் கராறான, துல்லியமான அறிவியல் பார்வையை நாம் வளர்க்கமுடியும். அறிவியல் அறிஞருள் பல இறை நம்பிக்கையாளர் இருந்த்தாலும் அறிவியல் இன்னும் இறையைப் பற்றின கொள்கைகளை நிராகரிக்க முழுமூச்சுடன் உள்ளது. முறையான இந்திய அறிவியலின் வளர்ச்சியை/இன்மையை அறியவும் இதை நாம் செய்ய வேண்டி இருக்கிறது.
---
Friday, March 10, 2006
just beat it
1982 ல் மைக்கேல் ஜாக்ஸன் காட்டிய த்ரில்லர் ஒரு அசுரத்தனமான ஆல்பம். அழகான 'ஹுயூமன் நேச்சர்', பால் மெக்காட்னியுடன் சேர்ந்த டூயட் 'கேர்ள் ஈஸ் மைன்' ஆளை நெருக்கும் 'வான்னா பீ ஸ்டார்ட்டிங் ஸம்திங்' இவற்றுடன் அசத்தலான 'பில்லீ ஜீன்' மக்களை உண்டு இல்லை என்று ஆக்கியது. என் நண்பன் 'வெ' தரையில் படுத்துக் கொண்டு இரவு இரண்டு மணிக்கு வீக் கன்வர்ஜன்ஸ் என ஏதோ புரட்டிக்கொண்டே 'ஜஸ்ட் பீட் இட் ' என கூவுவது இன்னும் காதில் அறைகிறது. அந்த ஜாக்ஸன் வேறே. அந்த வெட்டிக் குழையும் நிலாநடையும் வேறே. என்ன கொடுத்தாலும் வராது.
அது செரி, இப்பென்ன இதுக்கு? கொஞ்ச நாள் முன்னால ஹாரிஸ் ஜெயராஜ் இசையிலே, பரவாயில்லையே எழுபதுகளின் csny சாயல் எல்லாம் தெரியுதே என எழுதிய ஞாபகம். அய்யா எண்பதுகளுக்கு வந்து விட்டார் போல இருக்கிறது.
பாடல்: மஞ்சள் வெய்யில் மாலை ...
படம்: வேட்டையாடு விளையாடு.
நிச்சயம் நல்லா படம் பிடித்திருப்பார்கள் என எதிர் பாக்கலாம்.
ஆமா தமிழகத்தின் எட்டீ வான் ஹேலன் யாரப்பா?
-
Wednesday, March 01, 2006
stuff like this ... 2
thedivarum ...
-
stuff like this ....
starts with the congo and bongo slaps and blending guitar plucks, a trumpet blow carried forward with violins and a flute. even as the rich rhythm guitar is answered with mild riffs in the acoustic lead, an accordian gathers you back in a hurry. a display of unforgettable piano rolls in the ragtime style stride you up and down the notes. there is the ever resourceful, rich voice of tms - hear him blowing throughout the song like a wind instrument - no one can do this act like him. boy this was years ahead of its time. current even today.
a very innovative and top drawer composotion from msv. enjoy!
http://www.musicindiaonline.com/p/x/mq2g53r6ld.As1NMvHdW/
Tuesday, February 07, 2006
Tuesday, January 31, 2006
2005 ஆண்டின் அறிவியல் -2
7. இதே பெருஅலகுப் பண்புகளில் முக்கிய இடம் வகிக்கும் இடைப்பரப்பு, வெளிப்பரப்பு அறிவியலும் சில முக்கியமான கண்டுபிடிப்புகளைச்செய்தது. அனைத்து இறுகுநிலைப் பொருள்களும் மேற்பரப்பைக் கொண்டுள்ளன. தம் புறத்துடன் அவை ஒருவித இயங்குசமச்சீர் நிலையில் இருக்கின்றன. புறப்பொருள், வளி இவற்றுடன் அவை வெப்பம், ஒளி, பொருள்மாற்றம்
போல பல செயல்கள்மூலம் இடைவினைபுரிகின்றன. காட்டாக அப்பளம் பொரிக்கும்போது என்ன நடக்கிறது எனப்பார்ப்போம். புறத்திலுள்ள எண்ணெயிலிருந்து அப்பளத்தின் புறப்பரப்பு மூலம் வெப்பம் உள்புகுகிறது. அப்பளத்தை பொள்ள வைக்கிறது. அப்போது உள்ளே ஊடுருவியிருக்கும் காற்று விரிவடந்து மீண்டும் அப்பளத்தின் பரப்பிலிருக்கும் நிறு
துளைகள் வழியே வெளியேறுகிறது. அப்பளத்தின் புறப்பரப்பின் பரப்பளவு, அதன் கடினத்தன்மை, அதன் பொருகுத்தன்மை, ஈரத்தன்மை என பல காரணிகள் எவ்வாறு அப்பளம் பொரிகிறது என்பதை கட்டுப்படுத்துகின்றன. இயற்கையில் நடைபெறும்
பல நிகழ்வுகளும், தொழில்நுட்பத்துக்கு தேவையான பல வினைகளும் இத்தகைய புறப்பரப்பின் தன்மைகளால் கட்டுப்படுத்தப்படுவதால் இத்துறை மிகவும் செயலூக்கம் நிறைந்ததாக உள்ளது. குறைக்கடத்திகள் வடிவமைப்பில், சிலிக்கான் சில்லுகள் மீது அடையவைக்கும் வேதி அணுக்களும், அணுத்தளங்களும், அவற்றின் ஒட்டும்தன்மையும், குறையில்லா கட்டுமானமும் சில்லுவின் புரப்பரப்பின் சுத்தம், சீர்தள அமைப்பு, திசைமுகம் ஆகியவற்றைப் பொறுத்தே
அமையும். இது சில பத்தாண்டுகளாகவே நன்கு ஆராயப்பட்ட துறையானாலும் இப்போது நானோ அலகுகளில் அணுத்தொகுதிகலைக் கட்டுப்படுத்தி வடிவமைப்பது இயலுமாகிறது. இதன்மூலம் நேனோ வடிவங்களில் சேர் அணுத் தீவுகள், குவாண்டப் புள்ளிகள் இவற்றின் இயல்புகளைக் கட்டுப்படுத்த முடிகிறது. பல திசைகளில் இத்துறை முன்னேற்றம்
கண்டது. மேலும் உயிரியலிலும் இடைப்பரப்புகள் மிகவும் கவனம் பெற்றன. செல்லின் வெளிப்பரப்பின் தன்மையே ஒரு செல்லின் பல செயல்பாடுகளில் பங்குபெறுவதால் இப்பரப்பு மிககவனம் பெற்றது. இத்தகைய பரப்புகளை ஆராய்வதில் இப்போது கணிதமும், கணினித்துறையும், இயல்பியலும் சேர்ந்த பல்துறை அறிஞர்கள் செயல்படுகின்றனர்.
---------------------------------------
8. மனிதனென்பவன்..
8.1. மனித ஜினோம் முற்றிலுமாக கோர்க்கப்பட்டுவிட்டது என்று ஓரளவு நிறைவாக இருந்தாலும் அதை வைத்துக்கொண்டு நோய்நாடி, நோய்முதல் நாடி தீர்வுகாணலாம் என்பது தற்போதைய கண்டுபிடிப்புகளால் சற்றே ஆட்டம் கண்டுள்ளது. சிறு அளவுகளில் மட்டுமே தனிநபர்களிடையே மாற்றங்கள் இருக்கும் என கருதப்பட்டதற்கு மாறாக பெரும் அளவைகளில் டி என் ஏ தொகுதிகளில் இக்கோர்ப்புகள் மாறவும், இடவல மாற்றமாகவும், முற்றிலும் காணாமல் போவதும், இடைசொருகி இருப்பதும் கண்டதால் இன்னும் மனிதர் அனைவருக்குமான அடிப்படைக் கதைக்கு ஒரே 'வாசிப்பு' இல்லை என்பதே தெளிவாகி இருக்கிறது.
8.2. நமது செல்களில் ஆற்றலை உருவாக்ககூடியவை மைடொகாண்றியா எனப்படும் இழைகள். இவை அம்மாவிடமிருந்து குழந்தைக்கு குரோமோசோம்களிலுள்ள ஜீன்களைப் போல மாறாமல் அப்படியே வருகின்றன. செயற்கை கருத்தரித்தல் முறையில் ஒரு ஒருபெண்ணின் சினைமுட்டையில் இன்னொரு பெண்ணின் மைடோ காண்ட்றியாவை இணைப்பதன் மூலம் அம்மூட்டை ஊக்கத்துடன் வளர்வதாகவும், முன்னிருந்த மைடோ காண்ட்றியாவில் ஏதோனும் குறகள் இருந்தாள் அவை களையப்படுவதாகவும் ஒரு சோதனை மூலம் நிறுவமுயன்றுள்ளனர். இப்படி கருத்தரித்த குழந்தைக்கு நிஜமாகவே மூன்று பெற்றோர்கள் (இரண்டு தாய் , ஒரு தகப்பன்) என ஆகிவிடும் என்பதால் இதன் மூலம் வரும் அறச்சிக்கல்கலை எப்படி சமூகம் எதிர்கொள்ளும் என்பது கேள்விக்குறியாக உள்ளது.
---------------------------
9.
இன்றைய உயிரியல், அடிப்படைக் கட்டுமானப் பொருள்களாகிய, புரதங்கள், டிஎன் ஏ,ஆர் என் ஏ, பெப்டைடுகள் போன்றவற்றில் அதிக அளவில் கவனத்துடன் ஆராய்ச்சிகள் செய்யப்பட்டாலும், இவற்றின் கூட்டாகிய செல்கள், திசுக்கள், அவயங்கள் போல அவை உயிரிகளின் கட்டமைப்புகளாக தொகுத்து இயங்கும்போது அவற்றின் இயக்கம் சரிவரப் புரிந்து
கொள்ளப்படவில்லை. அதாவது ஒரு காரில் சக்கரங்கள், செலுத்துக் கருவிகள், கதவுகள், என்ஜின் என தனித்தனியாக ஒவ்வொரு உருப்பின் செயலும் நன்றாக விளங்கிக்கொள்ளப்பட்டாலும் முழுதுமாக கார் எனும் பொருள் வேகமாக சென்று இடித்தால் என்ன ஆகும் என்பதற்கு அத்தகைய தனித்தனியான அறிவு உதவாது. அதேபோல் அடிப்படிஅக்கட்டுமானப்
பொருள்களின் அறிவும் தொகுப்பாக ஒரு கட்டமைப்பின் இயல்பை அறிவதற்கு முழுமையாக போதாது. இவ்வகையில் கட்டமைப்பு உயிரியல் ஒரு துறையாக வளர்ந்து வருகிறது. சேகரிக்கப்பட்ட லட்சக்கணக்கான தரவுகள், அவற்றின் தரவுத்தளங்கள், அவற்றின் தேடு பொறிகள் என ஒரு முழு நுட்பவியல்துறையாக அது வளர்கிறது. இத்தகைய கட்டமைப்புகளின் தொகுப்பு இயக்க விதிகளை மாதிரிகளாக சமைப்பதற்கு பல்துறைப் பயிற்சியும் தேவைப்படுகிறது. பல்துறை அறிஞர்களிடையே கருத்துப் பறிமாற்றம் குழப்பமின்றி நிகழ உரைக்குறி மொழிச்சட்டகங்களை ஒழுங்குபடுத்தபவேண்டும். இதற்கான முயற்சிகளும் துவங்கப்பட்டிறுக்கின்றன.
--------------------------
10. வேதியியல் பல திடப்பொருட்களை படிகங்களாகவும், சீரற்ற திண்பொருள்களாகவும் வகைப்படுத்துகிறது. படிகங்கள் முப்பரிமாணத்தில் ஒழுங்குபடுத்தப் பட்ட வெளிச் சட்டகங்களில் அணுக்கள் அல்லது மூலக்கூறுகளைக் கொண்டவை என்பதை அறிவோம். மாறாக சீரற்ற திண்பொருள்கள் என்பனவற்றின் அணு அல்லது மூலக்கூறு அடிப்படை அலகுகள் வெளிச்சட்டகமில்லாமல் சீரற்ற முறையில் அமைந்துள்ளன. இவற்றில் 'கண்ணாடிகள்' எனப்படும் திடப்பொருள்கள் (நமக்குத்தெரிந்த கண்ணாடிகளைத் தவிர, பீங்கான் பாண்டங்கள் போன்றவையும் கண்ணாடிகள் தாம்) தம்முள் அணு அல்லது மூலக்கூறு அலகுகளில் ஒழுங்கான சட்டகத்தில் அமைந்தும் அதற்கு மேற்பட்ட அலகுகளில் சீரற்றும் காணப்படுகின்றன.
சிலகாலம் முன்பு உலோகங்களின் கூட்டுப் பொருள்களின் மூலமும் இத்தகைய கண்ணாடிகள்
வடிவமைக்கப்பட்டு உலோகக் கண்ணாடிகள் என ஆராயப்பட்டது நமக்குத்தெரியும். இப்படி சிறு
மூலக்கூறு அலகுகளில் ஒழுங்கைக்கட்டுப்படுத்தி, வேதியியல் பல முன்னேற்றங்களை கடந்த
முப்பதாண்டுகளாக நிகழ்த்திக்கொண்டிருக்கிறது. திண்மப்பொருள்களாகவும், மெல்லிய படலங்களாகவும் பல ஆயிரக்கணக்கான வேதிக்கூட்டுப் பொருள்கள் இம்முறைகளைப் பயன்படுத்தி வடிவமைக்கப் பட்டுள்ளன. அவற்றின் மூலம் உருவக்கப் பட்ட பல பொறிகள் நம் அன்றாட பயன்பாட்டில் உள்ளன நாம் அறியாமலேயே. இவ்வகையான கூட்டுப்பொருள்களில் நுண்துளைகளடங்கிய திண்மங்களும் படலங்களும் சிறப்பாக வினையூக்கிகளாகவும், சுத்திகரிப்பான்களாகவும் பயனுடையவை. காட்டாக, ஜியோலைட்டுகள் சாதாரண குடிநீர்ச் சுத்திகரிப்பில்கூட பயன்படுத்தப் படுகின்றன. இன்நுண்துளைத் திண்மங்களுள்,
குறு, சிறு, பெரு துளைத்திண்மங்கள் எனப் பலவகை உண்டு. அவற்றின் பயன்பாடுகளும் வேறாகும். சென்ற ஆண்டு புதிதாக வடிவமைக்கப் பட்ட சிறுதுளைத் திண்மமாகிய ஜெர்மானியம் ஆக்ஸைடு இவற்றுள் முக்கியமாக கருதப்படுகிறது. அதன் துளை அமைப்பினாலும், அதன் படிகக் கட்டமைப்பினாலும், வளைப் பரப்பினாலும் நூதனமாகிய திண்மமாக கருதப் படிகிறது. செய்முறைகளும், பயன் படுத்துதலும் வரும் ஆண்டுகளில் தொடரும் நுட்பவியலாக மாறும்..
--------------------------------------
11. இயல்பியல், வேதியியல், இவைகளை அடுத்து இப்போது உயிரியல் ஒரு தொழில்நுட்பமாக மாறிவருகிறது. இதில் எவ்வாறு புது உயிர்ப்பொறியியலாளர்கள் செயல்படுகிறார்கள் என்பது வரும் ஆண்டுகளில் தெரியவரும். இவர்கள் மூலக்கூறு அளவில் அடிப்படைக் கட்டுமானங்களை வடிவமைத்தல், புது ஜீன்களை வடிவமைத்தல் என்பதிலிருந்து ஆரம்பித்து உயிர்-உயிரற்ற இடைவெளிகளில் சில செயற்கைக் கட்டுமானங்களை ஆக்குவதிலும்
செயல்பாடுகள் இருக்கலாம். இதனால் வரும் பல்வேறு கேள்விகள் வருமாண்டுகளில் பெரும் விவாதங்களை துவக்க இருக்கின்றன. மற்றும் சில அடிப்படை அறிவியல் அறம் சார்ந்த கேள்விகளும் சென்ற வருடத்தில் எழுந்தன. மனித ஸ்டெம் செல்களுக்கான ஆராய்ச்சியில் தம் ஆய்வகத்தைச் சார்ந்த இளைய உறுப்பினர்களின் சினைமுட்டைகள் உபயோகப்படுத்தப்பட்டன என்பதை முன்னிட்டு தென்கொரிய நாட்டு உயிரியல் நிபுணர் வூ சுக் வாங் விசாரனைக்குட்படுத்தப் பட்டிருக்கிறார். அவருடைய ஆய்வு சட்டஅளவில் முறையானதுதான் என்றாலும் தம் உதவியாளர்களைப் பயன்படுத்தியது தவறு என்றே அறிவியல் சமுதாயம் கருதுகிறது. மேலும் வூ சுக் வாங் தாம் பதிப்பித்த அறிவியல் கட்டுரைகளை திரும்பப் பெருவதாக அறிவித்திருக்கிறார்.
இக்கட்டுரைகள் ஒரு நோயாளியின் தன் படிச் செல்களிலிருந்து வளர்த்த திசுக்களைக்கொண்டு அவரின் நோயை குணப்படுத்தும் முறபற்றியதாகும். இதே வூ தான் சில வாரங்களுக்கு முன் தன் ஆய்வகத்தின் இளம் உறுப்பினர்கள்களின் சினைமுட்டைகளை ஆய்வுக்குப் பயன் படுத்தியதற்காக தம் வேலையிலிருந்து சுயவிடுப்பு பெற்று விலகினார். இது உயிரியல் துறையில் பெரும் சர்ச்சையாக தற்போது உருவாகி வருகிறது.
--------------------------------------
12. இத்தொகுப்பு ஒரு முழுமையடையாத ஒன்றாகவே கருதப்பட வேண்டும். மானுடவியல், மருத்துவம், சூழியல், வேளாண்மை, மொழியியல் என பல துறைகளிலும் நடக்கும் ஆய்வுகளைத் தொகுத்தால் இன்னும் பெருகும்
--------------------------------------------------
தமிழ் - ஆங்கில இணைச்சொற்கள்
------------------------------------
அண்டவியல்: cosmology
நிரையீர்ப்பு இடைவினை:: gravitational interaction
மின்காந்த இடைவினை: electromagnetic interaction
வல்வினை: strong interaction
மெல்வினை: weak interaction
மறைப்பரிமாணங்கள்: hidden dimensions
ஒருங்குமயமாக்கல்: unification
துகள்முடுக்கி: particle accelerator
குவாண்டநிறையங்கியல்: quantum chromodynamics
வளிமண்டலம்: atmosphere
கோளிறங்கு பொறி: lander
நானோ குழல்கள்: nano tubes
அணுச்சிதைவு: atomic fission
அணுச்சேர்ப்பு: atomic fusion
குளீர் அணுச்சேர்ப்பு: cold fusion
அணுத்தளங்கள்: atomic layers
பெருஅலகுப் பண்புகள்: macroscopic properties
இறுகுநிலை இயல்பியல்: condensed matter physics
இடைப்பரப்பு: interface
வெளிப்பரப்பு: surface
சமச்சீர் நிலை: equilibrium
திசைமுகம்: orientation
மாதிரிகளாக: models
உரைக்குறி மொழிச்சட்டகங்களை: markup languages
உயிரிகளின் கட்டமைப்புகளாக: biological systems
சீரற்றதிண்பொருள்கள்: amorphous materials
கண்ணாடிகள்: glass; vitreous
படலங்கள்: membranes, surfaces
படிச் செல்கள்: cloned cells
2005 ஆண்டின் அறிவியல் -1
-----------------------------------
1. சென்ற ஆண்டில் (2005) அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறைகளில் காணப்பட்ட சில முக்கியப் போக்குகள், கண்டுபிடிப்புகள் மற்றும் மாறுதல்கள் இவற்றை சுருக்கமாக அளிப்பதே இக்கட்டுரையின் நோக்கம். அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் புலங்களில் அனைத்து இயல்களிலும் கடந்த ஓராண்டு வளர்ச்சியைப் பற்றி சுருக்கமாகவேனும் அறிந்துகொள்ள நூற்றுக்கணக்கான பக்கங்கள் தேவையாக இருக்கும். ஆகவே இங்கு மிகச் சுருக்கிய வரைவையே தரமுடிகிறது. இவ்வரைவில் பல துறைகளும் விடுபட்டுப் போயுள்ளன என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.
முதலில் அறிவியலில் இயல்பியல், வானியல் மற்றும் அண்டஇயல் துறைகளைப் பார்ப்போம். இருபதாம் நூற்றாண்டின் துவக்கப் பத்தாண்டுகளில் நடந்ததைப்போன்ற துறையையே புரட்டிப்போடும் மிகப்பெரும் தாக்கம் நிறைந்த கருத்தாக்கங்களும், சோதனைகளும் நிகழ்காலங்களில் நடக்கவில்லை. கடந்த நூற்றாண்டின் தொடர்சியாகவே இப்போதும் இத்துறைகள் வளர்ந்து வருகின்றன. பொதுவான போக்குகளாகப் பார்த்தால், இயல்பியலில் இரண்டு போக்குகள் தென்படுகின்றன. ஒன்று ஆகப்பெரிய இடைவெளி அலகாகிய அண்டஅளவைவைகளிலும், மீச்சிறு இடைவெளி அலகாகிய குவாண்டம் அளவைகளிலும் வெளித்தோன்றும் இயல்பியல் கோட்பாடுகளை ஒரே கணித-இயல்பியல் சட்டகத்துள் அடக்குவது. மற்றது நம் அன்றாட வாழ்கையில் உணரப்படும் இடைவெளி அலகுகளில் காணும் இயற்கைச் செயல்பாடுகளுக்கான விதிமுறைகளை கோட்பாடுகளை புது கணித மற்றும் இயல்பியல் கோட்பாடுகளால் மீள்பார்வை செய்து அறிவை ஆழமாக்குவது. இவ்விரண்டையும் பார்ப்போம்.
----------------------
1.1 இயற்கையின் நான்கு அடிப்படை இடைவினைகளான நிறையீர்ப்பு இடைவினை, மின்காந்த
இடைவினை, வல்இடைவினை, மெல்இடைவினை என்பவற்றில், நிறையீர்ப்பு இடைவினை தவிர பிற
மூன்று இடைவினைகளையும் இணத்து கணித மயமாக்கப் பட்ட கருதுகோள்கள் உள்ளன. அவை
ஓரளவு பரிசோதனைகளிலும் நிரூபிக்கப்பட்டுள்ளன. ஆனால் இவ்வினைகளில் தூர அலகுகளில் இயங்கும் நிறையீர்ப்பு இடைவினையினை உள்ளிட்ட ஒருங்குமயப்படுத்திய கருதுகோள் ஒன்று வேண்டும், அப்போதுதான் இயல்பியலின் இடைவினைகளைப்பற்றிய அறிதல் முழுமையாகும் என்பது ஐன்ஸ்டைன் காலத்திலிருந்தே இருக்கும் ஒரு தேடலாகும். இவ்வொருங்கு மயப்படுத்தலுக்கு பல வித கோட்பாடுகள் முன்வைக்கப்பட்டாலும் கடந்த இருபத்தைந்தாண்டுகளாக இம்முயற்சியில் இயல்பியலாளரின் கருத்தில் இழைக்கோட்பாடு முன்னிற்கிறது. அத்துறையில் இவ்வாண்டும் பல கட்டுரைகள் ஆதார பங்களிப்புகளைச்செய்யும் அளவில் வெளிவந்துள்ளன. அவற்றில் முக்கியமாக "மறைப் பரிமாணங்கள்" பற்றிய ஒரு கருதுகோள் முக்கிய இடம் வகிக்கிறது. குவாண்டம் விதிகள் மீச்சிறு தூர அலகுகளில், அளவைகளில் இயங்குவது நாம் அறிந்ததே. அவ்வலகுகளில் இயங்கும் மின்காந்தவினை, வல்வினை, மெல்வினை இவற்றுடன் ஒப்பீடளவில் பார்க்க நிறையீர்ப்பு வினை மிக ஆற்றல் அருகியதாகவே காணப்படுகிறது. இது ஏன் என்ற கேள்விக்கு கணித வாய்பாடுகள் கொண்டு பதிலிறுத்தால் அதில் இன்நான்கு வினைகளையும் இணைக்கும் கோட்பாடு முழுமைபெறும் என்பதே கணிப்பு. இதை நோக்கிய சில நல்ல முயற்சிகள் இவ்வாண்டு இயல்பியலில் நடந்தன.
------------------------
2. இயல்பியலில் கணித-கோட்பாட்டு முயற்சிகளை எந்த அளவுக்கு தன்னம்பிக்கையுடன் செயல்படுத்த இயலும் என்பதற்கு குவாண்டநிறஇயங்கியலில் கிளாஸ்கோ-ஒஹையோ பல்கலைக்கழகங்களின் அறிவியலாளர் சார்ம்-பாட்டம் எனப்படும் குவார்க் துகளின் நிறையை அளவிட்ட கணிப்பு சிலநாட்களிலேயே இல்லினாய் துகள்முடுக்கியில் சோதனை முறையில் சரிபார்க்கப் பட்டது ஒரு சான்றாகும். இவ்விரு முயற்சிகளுக்கும் அதிவேக கணிணிகள் பயன்படுத்தப் பட்டமை மற்றொரு சிறப்பாகும். அறிவியலின் கணித்தல் - அளத்தல் - நிறுவுதல் எனும் துல்லியச் செயல்பாடு மீண்டும் நிரூபணமாகும் நிகழ்ச்சி இது.
------------------------------
3. சனி நீராடு:
இவ்வாண்டின் துவக்கமே கோளியலுக்கு இனிமையான அதிர்ச்சியுடன் துவங்கியது. கஸ்ஸீனி-ஹைஜென்ஸ் விண்கலம் சனிக் கோளின் நிலவுகளில் ஒன்றாகிய டைடன் இல் இறங்கியதுதான் அது. நம் ஞாயிறு மண்டலத்தில் உள்ள கோள்கள் மற்றும் துணைக்கோள்களில் அடர்த்தியான வானவளிமண்டலம் உள்ளவை நாம் இருக்கும் பூமியும், டைட்டனும் தான். பூமியில் நைட்ரஜன்-ஆக்ஸிஜன்- ஹைட்ரஜன் கலந்த வளிமண்டலம் இருப்பதைப்போல, டைட்டனுக்கு ஹைடிரோகார்பன்ஸ் என்றழைக்கப்படும் கரிம வாயுக்களால் சூழப்பட்டுள்ளது. ஹைஜன்ஸ் கோளிறங்கு பொறி டைட்டனில் இறங்கி நிறையப் புகைப்படங்களை எடுத்து அனுப்பியுள்ளது. டைட்டனில் கரிம மூலக்கூறுகளால் ஆன மழை, கடல், நீரோட்டம், ஆறு, கடல் என புவியைப்போலவே ஒரு அமைப்பு இருப்பதாக இப்போது அறிகிறோம். இத்தகைய சூழலில் ஏதேனு சிறு அளவிலாவாது 'உயிர்' அங்கும் தோன்றி இருக்குமா என்பது முக்கியக் கேள்வி. வெகு தூரத்திலிருந்த்து வரும் சூரிய ஒளி மெல்லக் கசிந்து தரையை அடையுமுன் வளிமண்டலத்தின் அடர்தளங்களில் நம்மால் இதுவரை நினைத்துப் பார்க்கவியலாத பல்வேறு வேதி வினைகளை ஊக்குவிக்கக் கூடும் என்பதால் ஆர்வத்துடன் மேலும் இது ஆராயப்படுகிறது. இப்போது புவியிலிருந்து செலுத்தினால் இன்னொமொரு ஒன்பதாண்டுகளில் அடுத்த டைட்டன் கோளிறக்கம் நடைபெறலாம். அடுத்த சனிக் கரிம மழையில் குளியல் அப்போதுதான்.
----------------------------------
4.பல்லி விழாப் பலன்
பல்லி விழுந்தால் பலன். விழாமல் இருந்தால் தொழில்நுட்பம். பல்லிகள் தலைகீழாய் உத்தரத்தில் நடப்பது அவற்றின் கால்களில் உள்ள ஆயிரக்கணக்கான் சிறு முடித்தொகுதிகளால் என்று நமக்குத்தெரியும். ஒவ்வொருமுடியும் சிறுசிறு அலகுகளில் விசை செலுத்துவதால் எல்லாம் சேர்ந்து தேவையான விசையாகி ஒட்டுமொத்தமாக பல்லியை விழாமல் நம்மைக் காப்பாற்றுகிறது. அதேபோல் நுண்ணிய ஒட்டும் சக்தியுடைய இழைமப் பரப்புகளை நானோ குழல்களால் வடிவமைத்திருக்கிறார்கள். இப்பரப்புகள் நீர்விலக்குத்தன்மையும் பெற்றிருப்பதால் நீர்த்துளிகள் அவற்றில் ஒட்டியும் ஒட்டாமல் இருக்கமுடிகிறது. பரப்பை செங்குத்தாக வைத்தாலும் நீர்த்துளி உருண்டடீடுவதில்லை. ஆனால் ஒட்டாமல் இருப்பதால் நீர் ஒட்டும் பரப்புக்கு இதை முழுதுமாக மாற்றிக் கொடுத்துவிட முடியும். இத்தகைய சிறுவிசைகளைக் கட்டுப்படுத்துவதன் மூலம் வேதிநுட்பம் பல மாயங்களை சமீப காலங்களில் நடத்திக்கொண்டுள்ளது. அவற்றில் ஒன்று இது.
-----------------------------------
5.
அணுச்சிதைவு மூலமே அணுசக்தி இப்போது அணு உலைகளில் உருவாக்கப்படுகிறது. ஆனால் சூரியனில் நடப்பதுபோல அணுச்சேர்ப்பு மூலம் பெரும் சக்தி இன்னும் பன்மடங்கு அதிகமானதும் குறைவான கதிரியக்கப் பின்விளைவுகள் கொண்டதுமாகும். நம்மால் இப்போது அணுத்தொகுப்பை நடத்தமுடியும் என்றாலும் அதற்க்கு பெரும் செலவினாலான சக்திவாய்ந்த துகள்முடுக்கிகள் தேவை. இதனால் எப்படியாவது அணுச்சேர்ப்பு குறைந்த செலவில் நடத்திக்காட்டமுடிந்தால் அறிவியல்-தொழில்நுட்பத்தில் அது மிகப்பயனுள்ள கண்டுபிடிப்பாகவே இருக்கும். சில ஆண்டுகள் முன்பு வேதியிலாளர்கள் ஆய்வகத்தில் 'குளீர் அணுச்சேர்ப்பு' என்று காட்டிய சோதனைகள் போலிகள் என இனம்காணப்பட்டன. தற்போது ஒரு இயல்பியலாளர் ஒரு படிகத்துண்டின் மின்னேற்றத்தை டங்ஸ்டன் ஊசிகளால் குவியச்செய்து அதிவேக டியூற்றியம் அணுக்களை பாயச்செய்துள்ளார். இவ்வணுக்களின் தாக்கும் சக்தியால் அணுக்கருக்கள் சேர்ந்து நியூற்றான் கற்றயைத் தோற்றுவித்திருக்கின்றன. இது மேசை மேல் அமைக்கக்கூடிய அணுச்சேர்ப்புக் கருவியாக உருமாறுமா என்பது சிலவருடங்களில் தெரியும்.
-----------------------------------
6. மணல் கயிறு
---------------
இயல்பியலில் அதிக கவனத்தைப் பெற்று வரும் மற்றொரு துறை திட,திரவ பொருள்களை ஆராயும் இறுகுநிலை இயல்பியல் ஆகும். சென்ற நூற்றாண்டின் முன் ஐம்பதாண்டுகளில் இத்துறையிலும் குவாண்டம் இயங்கியல் தொடர்பான கோட்பாடுகளே முன்னுரிமை பெற்று விளங்கின. அக்கோட்பாடுகள் இறுகுப்பொருட்களின் குறைக்கடத்தி, மிகுகடத்திப்பண்புகள், மின்காந்தப்பண்புகள், ஒளிமப்பண்புகள் போன்றவற்றை விளங்கச்செய்தன. நூற்றாண்டின் பின்பகுதியில் கடந்த இருபது வருடங்களாக முன்னர் பொறியியல் மட்டுமே பாவித்துக்கொண்டிருந்த உராய்வு, பாகு, இழைமப் பண்புகள் போன்ற குவாண்டம் பார்வையில் பெருஅலகுப் பண்புகளை இயல்பியளாளர் புது கணித, கோட்பாட்டு உதவிகொண்டு மீள்பார்வை செய்ய ஆரம்பித்தனர். பெருஅலகு இயல்பியலுக்கு இது மறு வசந்த காலம் என்றே சொல்லலாம். அதன் தொடர்ச்சியாக இவ்வாண்டு பல சோதனைகள் செய்யப்பட்டன. முக்கியமாக மணற்குவியல்களின் சரிதல்-நிற்றல் பற்றிய சோதனைகள், மணல்த் தொகுதிகளின் ஒட்டும், உராயும், கடினமாகும் நெகிழும் பண்புகளைப்பற்றிய சோதனைகள், கோட்பாடுகள் இவற்றைச்சொல்லலாம். மேலே நடந்தால் கடினமாக இருக்கும் மணல் எப்படி மணல் கடிகாரத்தில் ஒழுகுகிறது, புதைமணல்களில் பதற்றத்துடன் கைகாலை அசைத்தால் மேலும் முழுகுவதும், நிதானமாக மேலே இழுக்க முனைந்தால் அதுவே இறுகிக் காண்பதும் ஏன் போன்ற பல கேள்விகள்.
-------------------------------------
தமிழ் - ஆங்கில இணைச்சொற்கள்
------------------------------------
அண்டவியல்: cosmology
நிரையீர்ப்பு இடைவினை:: gravitational interaction
மின்காந்த இடைவினை: electromagnetic interaction
வல்வினை: strong interaction
மெல்வினை: weak interaction
மறைப்பரிமாணங்கள்: hidden dimensions
ஒருங்குமயமாக்கல்: unification
துகள்முடுக்கி: particle accelerator
குவாண்டநிறையங்கியல்: quantum chromodynamics
வளிமண்டலம்: atmosphere
கோளிறங்கு பொறி: lander
நானோ குழல்கள்: nano tubes
அணுச்சிதைவு: atomic fission
அணுச்சேர்ப்பு: atomic fusion
குளீர் அணுச்சேர்ப்பு: cold fusion
அணுத்தளங்கள்: atomic layers
பெருஅலகுப் பண்புகள்: macroscopic properties
இறுகுநிலை இயல்பியல்: condensed matter physics
இடைப்பரப்பு: interface
வெளிப்பரப்பு: surface
சமச்சீர் நிலை: equilibrium
திசைமுகம்: orientation
மாதிரிகளாக: models
உரைக்குறி மொழிச்சட்டகங்களை: markup languages
உயிரிகளின் கட்டமைப்புகளாக: biological systems
சீரற்றதிண்பொருள்கள்: amorphous materials
கண்ணாடிகள்: glass; vitreous
படலங்கள்: membranes, surfaces
படிச் செல்கள்: cloned cells
(--------more )