-
உலோகாயதம் எனப்படும் இறையிலிக் கொள்கை இந்தியப் பரப்பில் மிகப்பழைய ஒரு கருத்தாகும். சார்வாகிகள், உலோகாயதவாதிகள், நம்பிக்கையறு வாதிகள் எனப் பல வகைக் கோட்பாடுகளுடன் இவ்விறையிலிக் கொள்கையர் இருந்தனர். வேதங்களை, யாகங்களை முன்னிறுத்தும் வைதிக மதத்தையும், கடவுளைப் பற்றிப் பேசாத ஆனால் ஊழ்/வினை பற்றி பேசும் அவைதீகர்களான சமணர், பௌத்தர், ஆசீவகர் என பிற மதங்களையும் இறையிலிக் கொள்கையினர் மறுதலித்தனர். ஆகையால் இவரது நூலகள் அனைத்தும் இவர் 'எதிரிகளால்' அழிக்கப் பட்டும், இவருடைய கொள்கைகள் பழிக்கப் பட்டும் மறக்கப்பட்டுமே வந்துள்ளன. இவற்றின் கூறுகளை நேரம் கிடைக்கும்போது சிறுசிறு பத்திகளாக எழுத முனைகிறேன்.
முதலில் தமிழில்:
"
பூத வாதியைப் புகனீ யென்னத்
தாதகிப் பூவுங் கட்டியு மிட்டு
மற்றுங் கூட்ட மதுக்களி பிறந்தாங்
குற்றிடும் பாதத் துணர்வு தோன்றிடும்
அவ்வுணர் வவ்வப் பூதத் தழிவுகலின்
வெவ்வேறு பிரியும் பறையோ சையிற்கெடும்
உயிரோடுங் கூட்டிய வுணர்வுடைப் பூதமும்
உயிரில் லாத உணர்வில் பூதமும்
அவ்வப் பூத வழியவை பிறக்கும்
மெய்வகை யிதுவே வேறுரை விகற்பமும்
உண்மைப் பொருமுலோ காயத் துணர்வே
கண்கூ டல்லாது கருத்தள வழியும்
இம்மையு மிம்மைப் பயனுமிப் பிறப்பே
பொய்ம்மை மறுமையுண் டாய்வினை துய்தல்
என்றலு மெல்லா மார்க்கமுங் கேட்டு
நன்றல வாயினு நான்மா றுரைக்கிலேன்
பிறந்தமுற் பிரப்பை யெய்தப் பெறுதலின்
அறிந்தோ ருண்டோ ...."
-மணிமேகலை
வடமொழியில்:
"
nanu yady upaplavas tattvAnAm kim AyA ...
athAtas tattvam vyAkhyAsyAmah.
prthivy Apas tejo vAyur iti tattvAni.
tatsamudAye sarIrendriyavisayasanjnetyAdi.... "
If all principles are anihilated, isn't [there a contradiction with what Brhaspati says. namely]
"Well now we are going to explain the principles: Earth, water, fire and wind are the principles. The term body sense and object apply to there aggregates ." and so on?
தத்துவம் என்ற முறையில் உலோகாயதம் கட்டமைக்கப் பெற்றால்தான் அறிவியல்த் தத்துவம் எனும் வகையில் கராறான, துல்லியமான அறிவியல் பார்வையை நாம் வளர்க்கமுடியும். அறிவியல் அறிஞருள் பல இறை நம்பிக்கையாளர் இருந்த்தாலும் அறிவியல் இன்னும் இறையைப் பற்றின கொள்கைகளை நிராகரிக்க முழுமூச்சுடன் உள்ளது. முறையான இந்திய அறிவியலின் வளர்ச்சியை/இன்மையை அறியவும் இதை நாம் செய்ய வேண்டி இருக்கிறது.
---
6 comments:
அருள், மிக்க நன்றி. இது போன்ற பதிவுகளை உங்களிடமிருந்து நான் எதிர்பார்த்திருக்கிறேன் என்பதை இதைப்பார்த்தவுடன் பலமாக உணர்ந்தேன்.
அருள் இந்தப்பாட்டுக்கு பொருளும் கொடுத்திருக்கலாம். எனக்கு பாதி புரியலை.
I understand that Dr.Neduncheziyan (recently released on bail by Supreme Court) had written books on
tamil philosophy and materialism and atheism.Have you seen them.
ரவி
இந்தப் புத்தகங்களைப் பார்க்கவில்லை. கிடைத்தால் ஒரு அறிமுகம் எழுதுகிறேன். தகவலுக்கு நன்றி.
அருள்
நெடுஞ்செழியன் 'தமிழர் தம் இயங்கியல்' என்பது போன்ற தலைப்புகளில் எழுதியுள்ளார் என்று நினைக்கிறேன் அருள். நான் ஏதோ புத்தகம் வாங்கி படிக்காமலேயே வந்துவிட்டேன் :). ரவி சொன்ன உடன்தான் நினைவுக்கு வருகிறது.
அருள் - கொஞ்ச நாட்களாக நீங்கள் எழுதவேயில்லை என்றுதான் நினைத்திருந்தேன். இன்றைக்குத்தான் நீங்கள் எழுதியிருக்கிறீர்கள். தமிழ்மண இரைச்சலில் இவை அடங்கிப்போய் என் பார்வையில் படவில்லை என்று தெரிகிறது.
சுவாரசியமான விஷயம். பூதங்கள் அனைத்தும் புலனின்பாற்பட்டவை என்பதான தருக்கத்தை அடிப்படையாகக் கொண்டவர்கள் லோகாயதர்கள் என்பார்கள். தமிழில் லோகாயதம் குறித்து எழுதப்பட்ட பல நூல்கள் தீக்கிரையாக்கப்பட்டுவிட்டன என்று சொல்கிறார்கள். (சிலவற்றை நம்மூர் ஆதீனங்களில் இன்னும் ஓலைச்சுவடிகளில் பதுக்கிவைத்திருப்பதாகவும் ஒரு வதந்தி).
நீங்கள் இதைத் தொடர்ந்து எழுதவேண்டும்.
Post a Comment