Friday, March 10, 2006

just beat it

-


1982 ல் மைக்கேல் ஜாக்ஸன் காட்டிய த்ரில்லர் ஒரு அசுரத்தனமான ஆல்பம். அழகான 'ஹுயூமன் நேச்சர்', பால் மெக்காட்னியுடன் சேர்ந்த டூயட் 'கேர்ள் ஈஸ் மைன்' ஆளை நெருக்கும் 'வான்னா பீ ஸ்டார்ட்டிங் ஸம்திங்' இவற்றுடன் அசத்தலான 'பில்லீ ஜீன்' மக்களை உண்டு இல்லை என்று ஆக்கியது. என் நண்பன் 'வெ' தரையில் படுத்துக் கொண்டு இரவு இரண்டு மணிக்கு வீக் கன்வர்ஜன்ஸ் என ஏதோ புரட்டிக்கொண்டே 'ஜஸ்ட் பீட் இட் ' என கூவுவது இன்னும் காதில் அறைகிறது. அந்த ஜாக்ஸன் வேறே. அந்த வெட்டிக் குழையும் நிலாநடையும் வேறே. என்ன கொடுத்தாலும் வராது.

அது செரி, இப்பென்ன இதுக்கு? கொஞ்ச நாள் முன்னால ஹாரிஸ் ஜெயராஜ் இசையிலே, பரவாயில்லையே எழுபதுகளின் csny சாயல் எல்லாம் தெரியுதே என எழுதிய ஞாபகம். அய்யா எண்பதுகளுக்கு வந்து விட்டார் போல இருக்கிறது.

பாடல்: மஞ்சள் வெய்யில் மாலை ...
படம்: வேட்டையாடு விளையாடு.

நிச்சயம் நல்லா படம் பிடித்திருப்பார்கள் என எதிர் பாக்கலாம்.

ஆமா தமிழகத்தின் எட்டீ வான் ஹேலன் யாரப்பா?-

5 comments:

இளங்கோ-டிசே said...

//தமிழகத்தின் எட்டீ வான் ஹேலன் யாரப்பா?//
அருள் என்னைப்பொறுத்தவரை அஸின் இப்போதைக்கு :-).

சன்னாசி said...

டிஜே - ஆம்பளையைப் பொம்பளையாக்கின பாவத்துக்கு வான் ஹேலன் கித்தாராலயே சாத்தப் போறாரு ஜாக்கிரதை ;-)

arulselvan said...

அம்மணிதான் இப்போதைக்கு தமிழ்த் திரையில் சகலமும் என்றே நானும் நினைக்கிறேன். :-)
அதுக்காக அவங்களை ஹெவி மெட்டல் கிடாரெல்லாம் வாசிக்க கேக்கக்கூடாது. பாவம்.
வான் ஹேலன் எல்லாம் ஜிமி ஹெண்ட்ரிக்ஸ், லெட் செப்பலின், பாய்ஸ்ன் போல அசுரகண ஆசாமிகள். தேவதைகளை விட்டுடுங்கோ.
அருள்

இளங்கோ-டிசே said...

transamerica பார்த்ததின் பாதிப்பு போகவில்லைப் போல (விழுந்தாலும் மீசையில் மண்படவில்லை என்ற ப்லீங்கில் வாசிக்கவும்). கெலன் என்று முடிந்தால் பெண்ணாய்தான் இருக்க்கவேண்டும் என்ற என் அறிவை விளக்குமாற்றால் அடிக்க.

Venkat said...

அருள், ஹாரிஸ் சார் (தேவா சாருக்கு அடுத்தபடியா நாம்ம சார் போட்றது ஹாரிஸ் சாருக்குத்தான்). முன்னாடியே எண்பதுல இருந்தவருதான. எளுபதுக்கும் எம்ளதுக்குமா அல்லாட்றாருன்னுதான் தோணுது. ஸும்மா ஸொல்லப்டாது. எல்லா எட்டத்துலயும் வேட்டையாடி நல்லாவே வெளயாடிருக்காரு.

உன்னி மேனன், ஹரிஹரன்னு நுணி நாக்குக்காரங்களுக்கெல்லாம் மெலோடியஸா தலையாட்டி இந்த வயசுல கமலஹாசன் படுத்தப்போவதை நெனச்சால் வவுத்துல புளியக் கரைக்குது.

பாம்பேகாரம்மாவ தமிழ் சினிமால கொஞ்ச நாளைக்குப் பாட வேண்டாம்னு யாராவது சொன்னா தேவலை. தமிழ் மெல்லவே செத்துட்டுப் போகட்டும்.