Tuesday, March 28, 2006

ஸ்டானிஸ்லா லெம் - Stanislaw Lemsf - அறிவியல் புனைகதைகள் (அறிபுனைவுகள்) என்றால் இன்றும் அமெரிக்கப் புனைவுகளே பலருக்கும் நினைவுக்கு வரலாம். ஹாலிவுட் வேறு பிளாஸ்டிக் வினைல் விலங்குப் பதுமைகளிலிருந்து முன்னேறி cg என்றழைக்கப்படும் கம்ப்யூட்டர் க்ராபிக்ஸ் வந்தபிறகு (Tron வந்தபோது அதைப்பார்த்த மக்கள் யாராவது இருந்தால், ஒரு ஹலோ- அப்புறம் தனிமடல் போடுகிறேன். :-) ) பல படிகளாக உருமாறி இப்போது டெமி மூருக்கு பதிலாக ஒரு ஏலியன் நாயகியே பரவாயில்லை எனும்படி வளர்ந்து விட்டது. எழுபதுகளில்(லேயே) அமெரிக்க sf பெருங்குவியலை kitsch என ஒரு போலந்து நாட்டு அறிபுனைக் கதையாசிரியர் இடதுகையால் விலக்க அவரை அமெரிக்கக் கூட்டம் ஜாதிப்பிரஷ்டம் செய்தாலும் அவரது கதைகளை படிக்காமல் யாராலும் தப்பிக்க இயலவில்லை. அவர் Stanislaw Lem . நேற்று இறந்து விட்டார்.

முதலில் படித்தது அவருடைய நாவலான சோலரிஸ் ( Solaris) தான். இதைப்போன்ற ஒரு கதையை அதற்கு முன்னும் பின்னும் நான் படித்ததில்லை. பல அறிபுனைவுகளைப்படிக்கும் போது நமது புராணக்கதைகளையே சற்றே தூசிதட்டி மெருகேற்றி இற்றை-அற்றை-எற்றைப் படுத்திச் சொன்னால் இதுபோல இருக்கும் எனத் தோன்றலாம். ஆனால் சோலாரிஸ் வேறுவகையானது.


நம் உள்மனதின் இருப்பையே அசைக்கக் கூடியது. அறிவு என்றால் என்ன? உயிர் என்றால் என்ன? உணர்விப்பதுவே என்றார் அருணகிரிநாதர். பிற/அயல் உயிரிகளுக்கு உணர்விப்பது என்றால் என்ன? ஒரு Jacobian Monad ஆக உள்வாங்கியிருக்கும், முழுதும் கடலால் ஆன பெரும் புவிக்கோள் ஒன்றை விண்கலத்தில் சென்றடையும் மனிதர்களின் உள மாற்றங்களை, சிதைவுகளைப் பற்றியது இக்கதை. நண்பர்களே, ஒரே ஒரு அறிபுனைவைத்தான் படிப்பேன் என்றால் இதைப் படியுங்கள் என்று மட்டும் சொல்லிக்கொள்கிறேன். லெம்மைப் பற்றியும் பிறரது அறிபுனைவுகளை பற்றியும் நிறையப் பேசலாம்.

முன்னொரு இடுகையில் அவரைப்பற்றியும் அவரது நண்பரைப் பற்றியும் சிறு சுட்டி ஒன்று கொடுத்தேன். இங்கே. இதே சோலரிஸ் கதையை எனக்குப் பிடித்தமான இயக்குநர் அந்ரை டார்கோவ்ஸ்கி (Andrei Tarkovski) மாஸ்கோவில் திரைப்படமாக எடுத்தார். (ஹாலிவுட் இதே கதையை சமீபத்தில் எடுத்தது. அதை நான் பார்க்கவில்லை. ரவி சீனிவாஸ் ஹாலிவுட் படத்துக்கு ஒரு விமரிசனம் எழுதினார் என நினைக்கிறேன்) இத்திரைப்படத்தை அவருடைய மற்றொரு படமான ஸ்டாக்கர் (stalker) உடன் சேர்த்துப் பார்க்கவும்.டார்கோவ்ஸ்கியின் வீச்சு புலப்படும். லெம்மின் பல சிறுகதைகளையும் படித்தால் உயிர், அறிவு, மனிதத்துவம், இருப்பு இவற்றின் அண்டப் பரிமாணங்களில் ஆன பொருள் என்பதைப்பற்றிய ஓயாத கேள்விகளைக் காணலாம். அறிபுனைவுகளின் முழு வீச்சு என்பது பிற மைய இலக்கியப் பாடுபொருள்களிலிருந்து மாறுபட்டது என்பதையும் அறிபுனைவுகள் தொட்டுச் செல்லும் பல விதயங்களை மைய இலக்கியத்தால் அணுக்முடியாது என்பதையும் குறித்தும் விரிவாக கருத்துப் பறிமாற்றமும் செய்யலாம். தமிழில் மொழிபெயர்க்க Lem, Philip K Dick, Ray Bradbury போன்றவர்களிலிருந்து ஆரம்பிக்கலாம்.வெங்கட் சமீபத்தில் ஒரு லெம் கதையை பெயர்த்தார். அது என்ன ஆச்சு? பிலிப் கே டிக் -கின் பல கதைகள் இப்போது சினிமாவாக வர ஆரம்பித்து விட்டன. அவர் தமிழ் எழுத்தாளர்களில் புதுமைப் பித்தன் போன்றவர் என்று முன்பு ஒருமுறை எழுதிய ஞாபகம். லெம் முக்கு இணையாக எந்த தமிழ் எழுத்தாளரக் கூறலாம்? யாருமில்லை.

15 comments:

kavi said...

Arul,
Thx for the intro. I have read "UBIK" by philp K dick and other novels by him. I thought he was the best but looks like now i have to reasses.

arulselvan said...

kavi
thanks for dropping by. pkd is one of the very best in sf. there is really no equivalent for him in the literary world in terms of sheer ingenuity. just happens that lem is another giant who chose to die yesterday :-). i love them bothe and ofcourse there is whole mad bunch out there.
arul

மு. சுந்தரமூர்த்தி said...
This comment has been removed by a blog administrator.
arulselvan said...

ஆமாம் சுந்து,

டார்கொவ்ஸ்கியின் அனைத்துப் படங்களின் ரெட்ராஸ்பெக்ட்வ் அது இல்லையா.
விஷ்ணு காமத்தை பார்த்து ஒரு வருடம் இருக்கும். ஆமாம் நம்ம ஸ்ரீகாந்த் எங்கே போனார்? சிங்கப்பூர் போனதுதான் தெரியும்.
"
those were the days my friend
we thought would never end..."

அருள்

சன்னாசி said...

அருள்: இப்போதுதான் இந்த விவரம் குறித்து அறிகிறேன். லெம் பற்றிய குறிப்புக்கு நன்றி. தார்க்கோவ்ஸ்கியின் 'சோலாரிஸ்'ஸையும், சமீபத்தில் ஸ்டீவன் சோடர்பர்க் எடுத்த 'சோலாரிஸ்'ஸையும் பார்த்திருக்கிறேன். தார்க்கோவ்ஸ்கியின் படத்துக்கு முன் சமீபத்தைய படம் பைசா பெறாதது. ஜார்ஜ் க்ளூனி, நடாஷா மெக்எல்ஹோன் என்று படு பிளாஸ்டிக்கான நடிகர்கள் சமீபத்தைய படத்தில்.

மொழிபெயர்க்கப்படவேண்டிய அறிவியல் புனைகதையாளர்கள் பட்டியலில் ஜே.ஜி.பல்லார்ட் போன்றவர்களையும் சேர்த்துக்கொள்ளவும் :-).

உங்கள் முதல் பத்தியில் கூறியிருப்பது அப்பட்டமான நிஜம். பெரும்பாலும், வெறும் gizmo overload!! Conceptual schematics ஏதும் மாறினாற்போல அறிகுறி இல்லை. தமிழில் அறிவியல் புனைவுப் படங்களாக எடுக்க முயலும் 'அசுரன்' போன்ற படங்களும்கூட, வெறுமனே ஷ்வார்ஸெனெகரின் Predator போன்ற மசாலா படங்களை ஒத்தியெடுத்து (நாலைந்து பாட்டுக்களையும் சேர்த்து ;-)) எடுக்கப்படுபவையாகத்தான் இருக்கின்றன! மெதுவாக முன்னேறும் என்று நினைத்துக்கொள்ளவேண்டியதுதான். நமது புராணக் கதைகளில் இல்லாததா!!

திருநெல்வேலியிலும் ஒருமுறை சின்னதாக ஒரு தார்க்கோவ்ஸ்கி retrospective போட்டார்கள். ஸ்டாக்கர், ஆந்த்ரே ருபலேவ், சோலாரிஸ் போன்றவற்றை அங்கேதான் பார்த்தேன்.

மு. சுந்தரமூர்த்தி said...
This comment has been removed by a blog administrator.
arulselvan said...

சன்னாசி,

>>>
மொழிபெயர்க்கப்படவேண்டிய அறிவியல் புனைகதையாளர்கள் பட்டியலில் ஜே.ஜி.பல்லார்ட் போன்றவர்களையும் சேர்த்துக்கொள்ளவும் :-).
------------------
ஆகா. JJB இல்லாத தொகுப்பா. எனக்குப் பிடித்தது crystal world. நண்பர்களுக்கு waterworld தான் பிடித்தது. ஆனால் கிரிஸ்டல் வொர்ல்ட் காட்டிய நிறப்பிரிகை அலையும் காடு பிரதிபலிக்கும் தொழுநோய் பரவும் அண்டத்தின் அயற்சிச் சாவு மிகவும் அபாரமானது.
>>>
ஸ்டாக்கர், ஆந்த்ரே ருபலேவ், சோலாரிஸ் போன்றவற்றை அங்கேதான் பார்த்தேன்
---
ருபலேவ் பற்றிய திரைவிமரிசனம் நிச்சயமாக என்றாவது நீங்கள் எழுதவேண்டியது. திரையில் அந்த வண்ணச் சேர்க்கைகளும் மாற்றங்களும் ...

அருள்

Venkat said...

அருள் :)

நான் இன்னிக்கு ஆபீஸ் வர்ற வழில ட்ரெயின்ல ஒக்காந்து எழுதிகிட்டு வந்து பிளாக்ல போட்டுட்டு தமிழ்மணத்துல வகைப்படுத்தப் போன உங்களோடது இருக்கு!

பரவாயில்லை. கொஞ்சம் வித்தியாசமாத்தான் எளுதியிருக்கோம். தமிழ்ல ஒன்னுக்கு ரெண்டா இருந்தா தப்பில்லை. என்னோடது இங்கே;

அஞ்சலி : ஸ்டானிஸ்லா லெம்

அருள்! வறட்டு நகைச்சுவையில் முதலிடம் யாருக்கு - லெம்மா, குர்ட் வானகுட்டா?

arulselvan said...

வெங்கட்
நல்ல பதிவு. பெயர்ப்புக்கு சுட்டி இணைத்துவிட்டேன்.
----
>>>
அருள்! வறட்டு நகைச்சுவையில் முதலிடம் யாருக்கு - லெம்மா, குர்ட் வானகுட்டா?
------------
லெம்தான்.
ஆனாலும் யாரும் ராபர்ட் ஷெக்லி-யை மறந்துடாதீங்கப்பா. Robert Sheckley எதிர்கால அபத்ததில் மன்னன்.
அருள்

arulselvan said...

மேலே பதிவிலும் இங்கே பதில்களிலும் நிறைய spello-s விட்டிருக்கிறேன். அவசரம். நண்பர்கள் பொறுத்துக்கொள்ளவும்.
JJB -> JGB
waterworld -> drownedworld (நண்பர்களோடு பேசும்போது வாட்டர்நொர்ல்ட் என்று சொல்லிச்சொல்லி அதுவே வந்துவிட்டது)

அருள்

இரா. செல்வராசு (R.Selvaraj) said...

ஒன்றிரண்டு அஸிமோவ் கதைகளைத் தவிர அறிபுனைகள் பக்கம் தலைவைத்தே படுக்காதவனுக்கு 'என்னவோ வேறு உலகத்தப் பத்திப் பேசுற' மாதிரி இருக்கிறது. சோலாரிஸ் என்னிக்காவது படிக்க முயல்கிறேன்.

kavi said...

Arul,
I request u to write more about science fiction as this genre is largely unexplored :) here.
It is really surprising to know that Lem, strugatsky brothers wrote gud SF under communist rule.
I also wud like to know about Ray bradbury. Any particular book to start with?.I was never tempted to take any of his books probably cos his books were next to PKD in the lending library. What to say
"katrathu kai maNNaLavu kallaathathu ulagaLavu"

arulselvan said...

Kavi:
Ray Bradbury:
Start with "The Illustrated Man" if you can find it.
Or "Something Wicked this way comes"
These are my favs as I read them first. Ok, No need to start with any thing specific. Whatever short story collection of his you can lay your hands on should be good enough. He is that good. I envy you. :-)
I want my old days, I want my sunday afternoon, I want my rain, I want my radio ceylon, I want my Ray Bradbury and Theodore Sturgeon. Now. Now. Now.
arul.


செல்வராஜ்:
நானும் அசிமாவில்தான் ஆரம்பித்தேன். பிறகு மற்றவர்களையெல்லாம் படித்தேன். நண்பர்கள் இரண்டுபேர்+ நான் ஒரு காலத்தில் ஆங்கிலத்தில் sf மட்டுமே சில வருடங்கள் படிப்பது என கொள்கை வைத்திருந்தோம். அந்த சுவாரசியமான நாட்களைப் பற்றி அப்புறம் எழுதுகிறேன்.
அருள்

Jayaprakash Sampath said...

//I want my old days, I want my sunday afternoon, I want my rain, I want my radio ceylon, I want my Ray Bradbury and Theodore Sturgeon. Now. Now. Now.
//

arul : ctrl + alt + del ங்கறது வாழ்க்கையிலே கிடையாது. உங்க பி சி யிலே மட்டும் தான் :-)

arulselvan said...

prakash,
what on earth is ctrl+alt+del ?
i know only

reboot -dl -- -rv

:-)
arul