1
அந்நாளைய நினைவு -1
2
அந்நாளைய நினைவு - 2
3
மன்னர்கள் நாற் சந்தியில்
4
இன்போஸிஸ் நுழைந்துவிட்டது. ஐந்து வருடம் போனால் இதெல்லாம் இருக்காது.
5
எத்தனை எம்ஜியார் படங்களில் பார்த்திருப்போம்
நஞ்சுண்டேஸ்வரர் ஆலயம். நஞ்சைய்யன் எனும் நாட்டார் கடவுளுக்கு நஞ்சுண்ட ஈஸ்வரராக ஏறக்குறைய ஆயிரம் ஆண்டுகள் முன்பு கங்க மன்னர்களால் திராவிட மரபில் கட்டப்பட்ட,அருமையான, அழகான கோயில். கபினி நதிக்கரையில் அமைந்துள்ளது. மைசூரிலிருந்து இருபத்தைந்து கல் தொலைவில்.
6
நஞ்சுண்டேஸ்வரர் ஆலயம்-1
7
நஞ்சுண்டேஸ்வரர் ஆலயம்-2
8
நஞ்சுண்டேஸ்வரர் ஆலயம்-3
9
நஞ்சுண்டேஸ்வரர் ஆலயம் -4
10
நஞ்சுண்டேஸ்வரர் ஆலயம்- 4
(தேர்களைப்பற்றி ஒரு 'கலாச்சார' பதிவு போட்டே ஆகவேணும். உத்துப் பாக்காதீங்க)
5 comments:
அருமையான படங்கள்.
//(தேர்களைப்பற்றி ஒரு \'கலாச்சார\' பதிவு போட்டே ஆகவேணும். உத்துப் பாக்காதீங்க)//
நிச்சயம் போடவும்! ஸ்ரீவில்லிபுத்தூரில் ஒருமுறை பலகாலம் அசையாமல் நின்றிருந்து கீறல் விட்டுக் கிடந்த தேரைப் பார்க்கையில் என்னென்னவோ தோன்றியது - சில தருணங்கள் கடந்துவிட்டாலும் அவை உண்டாக்கும் அதிர்வுகள் மட்டும் அப்படியே மிச்சமிருக்கின்றன!
அருள்,
புகைப்படங்களுக்கு நன்றி.
//
(தேர்களைப்பற்றி ஒரு 'கலாச்சார' பதிவு போட்டே ஆகவேணும். உத்துப் பாக்காதீங்க)//
கட்டாயம் போடணும். சில கோயில் தேர்களைப் பார்க்கும்போது நம்ம மூதாதையர் + இன்றைய நாம நினைச்சு ஆச்சரியம் வந்ததுண்டு.
-மதி
மைசூரை இவ்வளவு அழகா காட்டியிருக்கீங்க... ரொம்ப நல்லா இருக்கு.
நல்ல படங்கள். பதிவுக்கு நன்றி.
சன்னாசி:
கோயில்கள்கள் ஓரிடத்தில் காலங்காலமாய் நின்றுகொண்டே ஆயிரம் ஆண்டுகளின் குமுகாயக் கதைகளைச் சொன்னால், தேர்கள் நூற்றாண்டுகளின் உருசிதை மாற்றத்தைச் சொல்லுகின்றன. மூன்று தற்காலத் தேர்களும், ஒரு பழைய, நிற்குமிடத்திலேயே உதிர்ந்து கொண்டிருக்கும் தேரும் இருந்தன. கதையாடல் உரு மொழி அலகுகளையே மாற்றியிருந்தது அவைகளில்.
மதி:
நாம் இழுத்தால் பழைய தேர்கள் நகருமா என்பதே எனக்குத்தோன்றியது.
அனுசூயா:
மைசூர் நல்ல அழகான இன்னும் சுத்தமான ஊராகத்தான் இருந்தது. இப்போதும் கூட புகைப்படத்தில் இருப்பதை விட ஊர் அழகுதான்.
தேசாந்திரி:
நன்றி.
அருள்
Post a Comment