Thursday, July 27, 2006

இந்திய சிறார்களுக்கு கணினி ?

-

நடுவண் மனிதவள அமைச்சு நாட்டின் அனைத்துச் சிறார்களுக்கான கணினிப் பயிற்சியில் ஒரு முக்கியமான முடிவை சிலநாட்களுக்கு முன் எடுத்திருக்கிறது.
HRD rules out laptops for kids, says can result in ‘disembodied brains’
http://www.indianexpress.com/story/9192.html
அமெரிக்க எம் அய் டி பல்கலைக்கழக ஆதரவுடன் நிக்கலஸ் நிக்ரபோந்தே தலைமையில் அமைந்த வளரும் நாடுகளின் சிறாருக்காக வடிவமைக்கப் பட்டுவரும் 100 டாலர் (5000 ரூ) மடிக்கணினி திட்டத்தை இந்திய அரசின் மனிதவள அமைச்சு நிராகரித்து விட்டது. இத்திட்டத்தினால் மழையர் கற்றுக்கொள்வது என்பது கேள்விக்குறியதுதான் என்று அது தெரிவித்து இருக்கிறது. முக்கியமாக இந்திய கிராமத்து சிறார்கள் உடல், மனநலம் இதனால் பாதிக்கப் படலாம் எனவும் அது நம்புகிறது!
"Health problems of our rural children are well known; personalised intensity of computer-use could easily exacerbate some of these problems”.
அப்படி என்ன கிராமத்து சிறார்களின் உடல்நலன் நகரத்து சிறார்களின் உடல்நலனுக்கு குறைவானது என எனக்கு சரிவர விளங்கவில்லை.
அமெரிக்கா சென்ற மனிதவள அமைச்சின் அதிகாரி (யார் அது?) இன்னும் சில கண்டறிதல்களையும் விடுத்துள்ளார். இந்த மடிக்கணினிகள் உடலறுத்த மூளைகளையும், தனிமைப் போக்குகளையும், உடல்நலக் குறைகளையும் ஏற்படுத்திவிடும் என்றும் கண்டறிந்துள்ளனர்.
(“disembodied brains... isolationist tendencies... exacerbate (health) problems”).
ஆமாம் நமது நாடுதான் கணினித் துறையில் வல்லரசாகிற்றே என்று நமக்கு சந்தேகம் வந்துவிடாமல் காக்க இதே அமைச்சு வேறு ஒரு திட்டம் வைத்துள்ளது.

--------
இதற்கிடையில் சென்ற பிப்ரவரிமாதத்தில் மனிதவள அமைச்சு செய்தித்தொடர்பு அமைசுக்கு அனைத்து இடைநிலைப்பள்ளிகளுக்கும் அகலப்பட்டை இணைப்பு தரக்கோரி விண்ணப்பமிட்டுள்ளது.
இது
1. கற்பித்தலின் தரத்தை மேம்படுத்தவும்
2. ஆசிரியர்களுக்கு மேல்பயிற்சியளிக்கவும்
3. தன்முனைப்பாக மாணவர்கள் கற்றுக்கொள்ளவும்
உதவும் என மனிதவள அமைச்சு கூறுகிறது.
இதற்காக கீழ்கண்ட
1. இடம், பாதுகாப்பு அறை, கணினி சோதனைச்சாலை
2. கணினி, பிற வன்பொருள்கள் அவற்றின் கவனிப்பு
3. மென்பொருள்
4. இணைப்பு வசதிகள்
5. பாடங்கள், பயிற்சிப்பொருள்கள், இன்னபிற
6. ஆசிரியர் பயிற்சி
7. தொடர், மற்றும் தற்காலிக செலவினங்களுக்கு பண வசதி

இவற்றை விவாதிக்கவும், திட்டமிடவும் மாநில அரசுகளை கலந்து பேசவும் ஒரு பெரும் குழு ஒன்றையும் அமைத்து உள்ளது.(சுட்டியில் காண்க)
-------

இப்படி ஒரு நாடுதழுவிய திட்டம் இருக்கும்போது அதை செயல்படுத்த பயன்படுத்தப்படும் கணினி, இணைப்பான், இணையவழங்கிகள் போன்றவற்றின் வன்பொருள் மென்பொருள் ஊடுபொருள் இவற்றை தரப்படுத்தவேண்டும். நாடுதழுவிய பள்ளிகளுக்கான இந்த மாறுகடையின் அளவு எத்தனை கோடிகள்? வன்பொருள்களைப் பொருத்தமட்டில் வெறும் மேசைக்கணினி என முன் தீர்மானம் செய்தால் அதற்கு பல தனியார் நிறுவனங்களும் போட்டியிடலாம் (IBM, HP,Dell, Wipro என). ஆனால் இயங்குதள மென்பொருள்? இதற்கு மைக்ரோசாப்ட்டின் விண்டோஸ் அல்லது தளையறு மென்பொருளான லினக்ஸ் என இவற்றிலொன்றைத்தான் தேறவேண்டும். இதில் விண்டோஸ் என்றால் எது அது? இப்போதிருக்கும் xP? எதிர்வரும் என பயமுறுத்திக்கொண்டிருக்கும் விஸ்டா?. விஸ்டா ஓடவேண்டுமானானால் அதற்கு தேவையான கணினியின்
வன்பொருள் கட்டமைப்பு குலைநடுக்கத்தைத் தருகிறது.
இதில் குறைந்த பட்ச அளவைப்பார்காதீர்கள். குழந்தைகளுக்கு கணினியில் ஆர்வம் வரத்தூண்டுவது நோக்கமானால்
1. மிக நல்ல வரைவுப் பட்டை (topend graphics card)
2. உயர்திறன் கொண்ட பிராஸசர்
மற்றும் இவற்றை இயக்கும் கட்டமைப்பு கொண்ட உயர்மட்ட கணினிதான் முழு விஸ்டாவை ஓட்டமுடியும். ஒன்று-ஒன்றேகால் லட்ச

ரூபாய்களுக்கு குறையாமல் இந்தத் தேவை ஒரு கணினிக்கு மட்டும் இருக்கும் என்பது என் கணிப்பு. இப்படி எத்தனை கணினிகள் பள்ளிய்ல் இருக்கும்?
இல்லை UBUNTU போன்ற மக்கள் லினக்ஸ் பயன்படுத்த அரசு முடிவு செய்யுமா என்பது கேள்விக்குரியதுதான். மைக்ரோசாப்ட் போன்ற நிறுவனத்தின் முதலீடு வாய்ப்புகள், சில ஆயிரம் கணினித் தொழிலாளர்களின் வேலை வாய்ப்புகள், இவை போன்றவை அரசின் முடிவுகளை தீர்மானிக்காது என நாம் நம்ப இயலாது.

சரி இப்போது நிலவரம் என்ன?
இப்போதைக்கு அனைத்து நகரங்களிலும் தனியார் பள்ளிகளில் கணினி ஆய்வறை இருக்கிறது. பழைய புதிய கணினிகள் விண்டோஸ் 98, 2000 , xP என இயங்குதளங்களே பயன்படுத்துகின்றனர். CBSC, ICSC பாடத்திட்டங்களில் இரண்டாம் மூன்றாம் வகுப்புகளிலிருந்தே கணினி பாடம் தனியாக உள்ளது. மூன்றாம் வகுப்பில் LOGO போன்ற மாணவருக்கான பயில்நிரல்களின் பயன்பாடு காட்டப்படுகிறது, கற்றுத்தரப் படுகிறது. (ழான் பியாஜெ (Jean Piaget, ) என்ற சுவிஸ் நாட்டு மழலை மனவியல் ஆராய்சியாளரரின் கோட்பாடுகளுக்கு இயைந்து எம் ஐ டி யின் சேமூர் பாபெர்ட் (Seymour Papert) எனும் கணித அறிஞர்
அறுபதுகளில் வடிவமைத்த ஒரு நிரல் தளமாகும். இத்துடன் எம் ஐ டி யிம் மார்வின் மின்ஸ்கி (Marvin Minsky) எனும் மொழியியலாளரும் உடன் பங்கெடுத்தார்.)
ஆனால் இவை ஒரு பாடமாகத்தான் கற்றுத்தரப் படுகின்றனவே அன்றி குழந்தைகளுக்கு விளையாட்டின் மூலம் தாமே கண்டறிந்து கற்றுக்கொள்ளல் எனும் படியான சூழலை பள்ளிகள் தருவதில்லை. இது ஆசிரியர்களுக்கான சரியான நோக்குக்காட்டுதல் இல்லாமையே என்பதை தெளிவாக்குகிறது.
குழந்தைகள் வளர வளர ஐந்தாம் ஆறாம் வகுப்புகளில் MS Word, Powerpoint போன்ற மகாமட்டமான சிந்தனைக்கொல்லிகளை பாடங்களாக பயிற்றுவிக்கிறார்கள்.
இப்படி ஒருபுறம் தனியார் பள்ளிகளில் கணினிப் பயன்பாடு இருக்க அரசுப்பள்ளிகளில் ஒன்று அல்லது இரண்டு கணினிகள் இருந்தாலே அது பெரிய செய்திதான். இப்படி கணினிப் பயிற்சியின்றி வெளிவரும் அரசுப்பள்ளி மாணாக்கர்கள் சிந்தனைத் திறத்தில், ஓர்க்கும் திறத்தில் குறைந்து போய்விட்டார்களா?
எந்த வயதில் நம் மழலையருக்கு கணினியை விளையாடத் தர வேண்டும்? கணினி ஒரு விளையாட்டுப் பொருளா, பாடப்புத்தகங்களைப் போன்ற அறிவுதரும் ஊடகமா, தொலைக்காட்சியைப்போல நல்லதும் அல்லாததும் சேர்ந்தே அளிக்கும் காலம் தின்னியா, அல்லது நடுத்தரமக்கள் ஏதாவது ஒரு வேலை பிடிக்க முன்பு தட்டச்சு போல ஒரு பயிற்சியா?

நூறு டாலர் மடிக்கணினி நல்ல ஒரு செயல்திட்டம் என நான் நினைப்பதற்கு பல காரணங்கள் உள்ளன. இத்திட்டம் வெற்றி அடையுமா அல்லது தோல்வியில் முடியுமா என்பது முக்கியமல்ல. இப்படி ஒரு திட்டம் தேவையானது இதுபோன்று நாமே ஒன்று வடிவமைத்தாலும் சரி என்பதே என் நிலை.
1. எளிய இயக்கம். சிறாருக்கான பாதுகாப்பான கட்டமைப்பு. தேவையான அளவே இருக்கும் வன்பொருள் தரப்படுத்தல்.
2. கம்பியில்லாத் தொடர்பு வசதி.
3. இயல்பிலேயே கணினிவலை அமைப்பு வசதி
4. லினக்ஸ் இயங்குதளம்
5. பைதன் (Python) போன்ற நிரல்மொழி இடைமுகம்
6. மலிவு விலை.
7. பன்னாட்டு, தன்னாட்டு மொழியமைப்புகளுக்கான வசதி
8. இயல்பான பல்லூடக வசதி
இன்னும் பல.

சுட்டிகள்:

100 டாலர் மடிக்கணினி செயல்திட்டம்:

http://laptop.org/

இத்திட்டத்தின் விக்கி:
http://wiki.laptop.org/go/Home

நிரலாளர்களின் செயல்திட்ட விக்கி:

http://dev.laptop.org/wiki

இந்திய முனைப்பு பற்றிய பக்கம்(தமிழ்?)
http://wiki.laptop.org/go/OLPC_India

-

12 comments:

மணியன் said...

அருள்செல்வன், நல்ல கட்டுரை.
நமது அரசின் கொள்கைகள் அத்துறை வல்லுனர்களாலோ அல்லது கணினி சார்ந்த வல்லுனர்களாலோ இயற்றப் படுவதில்லை. மந்திரி மற்றும் உயர்நிலை அதிகாரிகளின் பொருளாதாரத்தினாலேயே தீர்மானிக்கப் படுகின்றன. அதிக செலவு அதிக கமிஷன் என்ற அளவிலேயே அவை தீர்மானிக்கப் படுகின்றன.

arulselvan said...

manian
thanks
(sorry no ekalappai here)
Another interesting current link:
http://wired.com/wired/archive/14.08/laptop.html
arul

மு. மயூரன் said...

சரியாக கணக்கிட்டுப்பார்த்தால் மைக்ரோசொஃப்டின் முதலீட்டைவிட அதிக பலனையும், வேலைவாய்ப்பையும், உற்பத்தியையும் திறந்தமூல இயங்குதளங்களை ஆதரிப்பதன் மூலம் உருவாக்கலாம்.

உபுண்டு போன்ற கட்டற்ற இயங்குதளங்களை அடிப்படையாகக்கொண்ட இயங்குதளம் ஒன்றினை அரசே உருவாக்கலாம். அதற்கான நிறுவனங்களை உருவாக்கி மென்பொருள் விருத்தியாளர்களை வேலைக்கமர்த்தி பெரும் தொழிற்றுறையாக நடத்தலாம்.

இவ்வாறான மாற்று இயங்குதள நிறுவனம் ஒன்றினை இந்தியாவில் உருவாக்குவது பெரிய கடினமான செயல் அல்ல. இந்தியா ஏராளமான மூளைசாலிகளை தன்னிடத்தே கொண்டிருக்கிறது. மைக்ரோசொஃப்ட் போன்ற பெரும் பல்தேசிய நிறுவனங்களின் சுரண்டலுக்கு அந்த மூளைகள் உள்ளாவதை இதன் மூலம் தடுக்கலாம்.

இந்திய திறந்த இயங்குதள தொழிற்றுறை எல்லா மாநிலங்களுக்கும் கிராமங்களும் விரியும்போது ஏராளமான வேலைவாய்ப்புகள் உண்டாகும்.
எவரிடமும் கைகட்டி நிற்கத்தேவையில்லை.

ஆதரவு வழங்குவது, பயிற்சி, சந்தைப்படுத்தல் என்று எல்லாப்பக்கத்தாலும் தொழில்கள் வளரும்.

இதே அணுகுமுறையை வன்பொருள் தொழிற்றுறையிலும் கடைப்பிடித்தால், எம்மை ஆள்வதற்கு மேற்குலக வல்லரசுகள் பயன்படுத்தும் மிக நவீன ஆய்தமான தகவற்தொழிநுட்பத்தை எமக்கு சாதகமாக மாற்றிக்கொள்ளலாம்.


எமது கொள்கை வகுப்பாளர்கள் சிந்திப்பார்களா?

தமிழீழம் மலர்ந்தால் நிச்சயம் மைக்ரோசொப்டை எட்டி உதைத்துவிட்டு எமது தகவற்தொழிநுட்பத்தை நாமே ஆளுவோம்.

(அழகிய கனவுகள் ) ;-)

மு. சுந்தரமூர்த்தி said...

Arul,
See this article in yesterday's Hindu by the Director of NCERT on the inability of the government to provide primary education to the rural and urban underprivileged children.

arulselvan said...

மயூரன்
இந்தியா இவ்வளவு தூரம் கணினித் துறையில் முன்னேறியதற்கு 70 களில் ஐபிஎம் கம்பனியை வெளியேற்றியதுதான் காரணம் என்று சிலர் சொல்வார்கள். நன்றாக யோசித்தால் அது ஒரு அளவு உண்மை. அப்போது பல இந்திய -Patni, TCS, ShivaPC போன்ற- கம்பெனிகள் தோன்றவும் வளரவும் அது ஒரு ஊக்கியாக இருந்தது எனக்கொள்ளலாம். சைனாவிடம் இப்போது இன்டெல் போன்ற பிராஸசர் தயாரிக்கும் நிறுவனங்களும் வளர்கின்றன. இன்று இந்தியாவின் மஹீந்திரா போன்ற கம்பெனிகள் எப்படி அமெரிக்க நிறுவனங்களுடன் அங்கேயே போட்டி போடுகின்றன என்பதை பார்க்கலாம்.(சென்ற வார பிஸினஸ் வீக்). இந்தியாவின் லைஸன்ஸ் ராஜ் என்றழைக்கப்படும் காலம் ஒருவிதத்தில் இந்திய சந்தையை மூடிவைத்திருந்தாலும் மறுபக்கம் இந்திய சுதேசி கம்பெனிகள் காலூன்றி வளர போதுமான காலமும், மூடிய சந்தையையும் கொடுத்தது மறுக்கமுடியாத உண்மை. இன்றைய இந்தியாவின் வளர்ச்சி 90 களில் ஆரம்பித்தது என்று சிறுவர்கள்தான் நினைப்பார்கள்.

சுந்து
அந்தக்கட்டுரையைப் படித்தேன். பல தளங்களைத் தொடுகிறது அது. விரிவாக விவாதிக்கவேண்டும். தொடக்கப்பள்ளிப் பரவல் என்பது இந்தியா முழுக்க நடப்பதற்கு பல காரணிகள் தடையாக உள்ளன.

அருள்

ரவி ஸ்ரீநிவாஸ் said...

I wonder whether the powers that be
ever think of users needs and the need for a range of open source products.I would support open source projects in educational
field at all levels.Imagine an
open source learning kit in Tamil
for students in Tamil Nadu.Such
products can be customized,upgraded
and used widely.Open Source is ideal for capacity building and
indigenous innovation.
Krishna Kumar has argued this before.He refers to an article
on chennai schools.The lack of
will and not funds that is the
stumbling block in providing
universal access to primary and secondary education.When it comes
to this funds seem to be a constraint but centre is willing
to spend thousands of crores of rupees in increasing seats in IITs, etc to implement the 27% reservation.Universal access to
secondary education is a fundamental right, according
to Supreme Court.

arulselvan said...

ரவி,
தளையறு செயலிகள், நிரல்கள் மூலம் நிறைய கற்றுக்கொள்ளலாம் என்பது உண்மை. கல்வித்துறையைப் பொருத்தவரை அது இந்தியா போன்ற நாடுகளுக்கு தவிர்க்கமுடியாததாகும்
இலவச டிவி திட்டத்துக்கு பதில் இந்த 100$ மடிக்கணினி திட்டத்துக்கு தமிழக அரசே அந்தப் பணத்தைக் அளித்து தமிழ் வளர்ச்சிக்கும் (ஏன் பிற இந்திய மொழிகளின் வளர்ச்சிக்கும்) பெரும் பங்காற்றலாம். ஒரு பள்ளிக்கு பத்து அல்லது இருபது கணினிகள் என்றால் கூட ஒருலட்ச ரூபாய்தான் வருகிறது. தமிழகம், குஜராத், மராட்டியம், கர்நாடகம் போன்ற எந்த ஒரு மாநிலமும் தனித்தே இந்த திட்டத்தை தமக்கு ஆதரவாக மாற்றி செயல்படுத்தலாம்.
அருள்

மு. சுந்தரமூர்த்தி said...

//When it comes
to this funds seem to be a constraint but centre is willing
to spend thousands of crores of rupees in increasing seats in IITs, etc to implement the 27% reservation.Universal access to
secondary education is a fundamental right, according
to Supreme Court.
//

Ravi,
What a logic? Even pro-reservationists call the move to increase the number of seats in IITs an attempt to appease forward castes. OBC reservations can be implemented without increasing the number of seats in IITs and the money can be better spent on primary education. Even better would be to close all IITs and use the money to open more primary schools. This will also solve the problem of reservations in IITs.

ரவி ஸ்ரீநிவாஸ் said...

Please read what Krishnakumar has written.The central governments and state governments are evading
their responsibility to provide
universal access to secondary education.Funds constraint is
an answer.But in the last few
months time and again it has
been stated that funds will
not be a constraint to increase
the number of seats and implement
the reservation.
Let me know how many agitations
have been launched by DK,PMK
and parties like RJD,SP for
universal access to education
till secondary level.How many
statements have been issued
by Veeramani on this vis a vis
statements on reservations in IITs
etc. Ramadoss makes some noise
once in a while but I am yet to
know what his party has done on
this although they are part of
the ruling coalitions right from
1998 except for about 6/7 months.
Krishna Kumar cites an article
about schooling in Chennai.
I will try to trace it.Some
articles in EPW and in indiatogether.org discuss
the increasing poor-rich divide
in New Delhi in access to education.

ரவி ஸ்ரீநிவாஸ் said...

http://www.indiatogether.org/2006/jan/edu-aser.htm

arulselvan said...

update:

நைஜீரியா, பிரேசில், தாய்லாந்து, அர்ஜன்டீனா என நான்கு நாடுகள்
ஒவ்வொன்றும் ஒரு மில்லியன் 100$ கணினிகளை வாங்க உறுதியளித்துள்ளன.

http://www.desktoplinux.com/news/NS7131519895.html

அருள்

Anonymous said...

why tamil typewriting keyboard not used in tamil computer? what are the difficulties in tamil typewriting keyboard?