2006 ஆம் வருடத்திற்கான கணிதத் துறைப் பரிசுகள் அகிலஉலக கணித கூட்டமைப்பால் (International Mathematical Union) அறிவிக்கப்பட்டுள்ளன.
நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை உலக அளவில் தேர்வுசெய்யப்பட்டு அளிக்கப்படும், ஃபீல்ட்ஸ் மெடல் (Fields Medal) எனும் இப்பரிசு கணிதத்தின் நோபல் என கருதப்படுகிறது.
இதில் கிரிகோரி பெரல்மான் கணிதத்தில் மிகமுக்கியமாக கருதப்படும் நூறாண்டுகளுக்குமேல் தீர்க்கவியலாததாக இருந்த போன்காரெ யூகமுடிபு (Poincare Conjecture) க்கு தீர்வுகண்டவர் என போற்றப்படுகிறார். அவரைப்பற்றி ஒரு நல்ல கட்டுரையை இங்கே விக்கிபீடியாவில் காணலாம்.
கீழ்க்கண்டவர்கள் பரிசுபெறுவோர்:
1. அந்த்ரெய் ஒகுன்கோவ் (பெர்க்லி பல்கலை, அமெரிகா)
2. க்ரிகோரி பெரல்மான் (ஸ்டெக்லாவ் பல்கலை- தற்போது எப்பணியிலும் இல்லை, ரஷ்யா)
3. டெரன்ஸ் டஒ (யூக்லா, அமெரிகா)
4. வெண்டெலின் வெர்னெர் (பாரிஸ் பல்கலை, பிரான்சு)
பெரல்மான் பற்றி முன்னொருகாலத்தில் நான் எழுத ஆரம்பித்து தொடராமல் போனது இங்கே. அல்லது இங்கே :-( .
-----
-
10 comments:
தகவலகளுக்கு நன்றி...
நல்ல பயனுள்ள பதிவு,
பெரல்மான் பற்றி சமீபத்தில் படித்த போது, அவரைத் தமிழ் உலகிற்கு அறிமுகம் செய்துவைப்பது அவசியம் என்று நினைத்தேன். ஆனால் அதற்கான, நேரம் கிடைக்காமல் அப்படியே உறங்குகிறது அந்த நினைவுப்பறவை. எப்பொழுதாவது, மறுபடியும் சிறகு விரிக்கலாம்.
உங்களின் பெரல்மான் பற்றிய பதிவைப் படித்துவிட்டு மீண்டும் வருகிறேன்.
நல்ல பயனுள்ள பதிவு,
பெரல்மான் பற்றி சமீபத்தில் படித்த போது, அவரைத் தமிழ் உலகிற்கு அறிமுகம் செய்துவைப்பது அவசியம் என்று நினைத்தேன். ஆனால் அதற்கான, நேரம் கிடைக்காமல் அப்படியே உறங்குகிறது அந்த நினைவுப்பறவை. எப்பொழுதாவது, மறுபடியும் சிறகு விரிக்கலாம்.
உங்களின் பெரல்மான் பற்றிய பதிவைப் படித்துவிட்டு மீண்டும் வருகிறேன்.
Terence Tao is an Australian by birth and he is the first one in that :-)
அருள்,
பெரல்மான் இவ்விருதைப் பெற்றுக்கொள்ள மாநாட்டுக்கு வரவில்லை என்றும், அவருக்கு விருதில் ஆர்வமில்லை என்றும் நேற்று பிபிசி செய்தியில் சொன்னார்கள்.
குமரன் எண்ணம் : நன்றி
புதுமை விரும்பி: கட்டாயம் எழுதுங்கள். அனைவருக்கும் பயனாக இருக்கும்.
கார்த்திக் வேலு: ஆம். அவர் தளத்தில் பார்த்தேன். நீங்கள் ஆசுதிரேலியாவா?
சுந்து: அவருடைய கதை ஒரு சோக கதையாக இருக்கிறது. மனவருத்தத்தில் இருக்கிறார் என்று கருதுகிறார்கள்.
- அருள்
Nanri
அருள் நேற்று இந்த விருது வழங்கல் பற்றி பிபிஸ்யில் பார்த்துவிட்டு, இரவு சென்றிருந்த நண்பனின் வீட்டு புத்தக அலுமாரியைக் குடைந்துகொண்டிருந்தபோது தமிழில் மொழிபெயர்க்கப்ப்ட்டிருந்த பெரல்மானின் 'எண் கணித வித்தைகள் (?)' என்ற புத்தக்ம் கண்ணில்பட்டிருந்தது :-).
....
நீங்கள் முன்பு எழுதி -இணைப்புத்தந்த-அந்தத் தொடரும் எளிதாய் அனைவருக்கும் விளங்கும்படி எழுதப்பட்டிருக்கின்றது. தொடர்ந்து அந்தத் தொடரை எழுதி முடிக்கலாமே.
.....
கார்த்திக் வேலு, Terence Tao உங்கள் ஊர்க்காரர் என்றால், விருதின் பெயரில் உள்ளவர் எங்கள் ஊராக்கும் :-).
அருள் செல்வன்,
நீங்கள் கணிதத்துரையில் உள்ளீர்கள் என்றால் சில கட்டுரைகள மொழிபெயர்த்து விக்கியில் அளியுங்கள்...
நீங்கள் சொல்லும் பொன்கேர் யூக முடிபு, P vs NP பிரச்சனை போன்றவற்றை புரிந்தவர்கள் மொழிபெயர்ப்பு செய்தால் நலம்.
யாரேனும் இந்தியர் Fields Medal வாங்கியிருக்கிறாரா...?
டிசே:
>>தமிழில் மொழிபெயர்க்கப்ப்ட்டிருந்த பெரல்மானின் 'எண் கணித வித்தைகள் (?)' என்ற புத்தக்ம் கண்ணில்பட்டிருந்தது
-----
இந்தப் பெரல்மான் வேறே என்று நினைக்கிறேன். ரஷ்ய யூதர்களில் நிறையப் பெரல்மான்கள்.:-)
---
>>>அந்தத் தொடரை எழுதி முடிக்கலாமே
----
அடுத்த வாரம் முயற்சிக்கிறேன்.
----
வஜ்ரா:
>>>
நீங்கள் கணிதத்துரையில் உள்ளீர்கள் என்றால் சில கட்டுரைகள மொழிபெயர்த்து விக்கியில் அளியுங்கள
----------
நான் கணிதத்துறையில் இல்லை. பொறியியல். முடிந்தவரை முயற்சிக்கிறேன்.
நம் வலைப்பதிவர்களில் கணிதத்துறையில் உள்ளவர் எனக்குத்தெரிந்து ரேசா வசந்த் ஒருவர்தான். அவரால் சரியாக விளக்க முடியும்.
-----
>>>
யாரேனும் இந்தியர் Fields Medal வாங்கியிருக்கிறாரா...?
----------
இல்லை. எனக்குத்தெரிந்து இந்தியர்களின் பங்களிப்பு அல்ஜீப்ரை ஜியோமெதியில் தான் அதிகம். சற்றே ஸ்டொக்காஸ்டிக் அனாலிஸீஸிலும்.
அறிந்தவர்கள் சரியா இல்லையா என்று சொல்லலாம்.
-அருள்
Post a Comment