கணினித் துறையில் பிரானின் பங்களிப்பு உயர் செயல்திறம் மிக்க கணினிகளை ஆக்க உதவியதாக கருதப்படுகிறது. கணினிகளில் செயல்திறம் என்பது குறிப்பிட்ட காலத்தில் எத்தனை கணிப்புகளை அவை நடத்திக் காட்டும் என்பதைப் பொறுத்தே அளவிடப்படுகிறது. அதற்கு ஏதுவாக நாம் ஏறக்குறைய மானுட மொழியில் எழுதும் நிரல்களை பொறிமொழிக்கு மாற்றக்கூடிய தனியங்கி நிரல்தொகுப்புகள் வேண்டும். இவற்றை கொம்பைலர் என்று அழைப்பர். இத்தகைய மொழிமாற்று நிரல்தொகுதிகளை வடிவமைப்பதில் பிரானின் ஆய்வுகளும் முயற்சிகளும் பெரிதளவும் துணை புரிந்தன. இத்தகைய திறம்மிக்க மொழிமாற்று நிரல்களின் உதவியுடனும், ஒரு தீர்வைத்தரும் பெரும் நிரல்தொகுதியை பல பகுதிகளாக்கி பல சில்லுகளில் ஒவ்வொன்றாக ஒரே வேளையில் ஓட்டும் இணைகணிப்பு நிரல்களின் உதவியுடனும், உயர்திறக்கணிப்புகள் இக்காலத்தில் எளிதாக செய்யப்படுகின்றன. இவற்றிற்கான பல ஆதார பங்களிப்புகளைச் செய்தவர் என்றமுறையில் அவருக்கு இவ்வாண்டின் பரிசு கிட்டியுள்ளது. இச்சமயத்தில் உலகின் முதல் நிரலாளரும் ஒரு பெண்தான் (அடா லவ்லேஸ்) என்பதை நினைவுகூர்வோம்.
இணைச்சொற்கள்:
டூரிங் பரிசு: Turing Prize
கணினிப் பொறி கூட்டமைப்பு: Association of Computing Machinery
உயர்திறக் கணினி : High Performance computer
செயல்திறம்: Performance
கணிப்புகள்: Computations
பொறிமொழி: machine language
நிரல்தொகுப்பு: program
இணைகணிப்பு: parallel computation
(நிழற்படம் உரிமம்: http://www.computerhistory.org)
-
3 comments:
அறியாத தகவல் கிடைத்தது
தகவலுக்கு நன்றி அண்ணா!!!
இதை எங்கள் முத்தமிழ்மன்றத்தில் பதிகிறேன்.
Arul,
See this news
http://sciencenow.sciencemag.org/cgi/content/full/2007/322/1
சுந்து,
தகவலுக்கு நன்றி. இது நம்ம ரோசா வசந்த் ஏரியா. அவர் எழுதினா நல்லா இருக்கும்.
அந்தக்காலத்திலிருந்து குராண்ட்-ல் இருக்கிறார் வரதன்.
அருள்
Post a Comment