கர்நாடகா-தமிழ்நாடு-பாண்டிச்சேரி-கேரளா மாநிலங்களுக்கான காவிரி நதிநீர்ப் பகிர்வு பற்றிய தீர்ப்பாயத்தின் தீர்ப்பு வெளியாகியிருக்கிறது.
தமிழ் நாடு 419 டிஎம்சி
கர்நாடகா 270 டிஎம்சி
கேரளா 30 டிஎம்சி
பாண்டிச்சேரி 9 டிஎம்சி
முதல் எதிர்வினகள் கர்நாடகத்திலிருந்து சற்றே கோபமாகவும், தமிழகத்திலிருந்து சற்றே சமாதனத்துடனும் இருக்கின்றன.
முக்கியமாக இந்த நேரத்தில் நோக்க வேண்டியது:
1. இந்த பகிர்வு மொத்த காவிரி நதிப் படுகை முழுக்க உள்ளடக்கியது. காவிரி நதியில் பாயும் நீர் *மட்டுமே* பற்றியதல்ல. இதில் இருக்கும மொத்த 719 டிஎம்சி காவிரியில் மட்டுமே இல்லை. கர்நாடகா 419 டி எம் சி நீரை தமிழகத்துக்கு 'தர' வேண்டியதில்லை. இருந்தால்தானே தருவதற்கு.
2. இதில் மழை பொய்த்த ஆண்டுகளில் மீண்டும் பற்றக்குறையையும் பகிர்ந்து கொள்ள வேண்டும்
3. இந்தத் தீர்ப்பை யார் அமல்படுத்துவார்கள். மத்திய அரசோ, நீதிமன்றங்களோ ஏதேனும் செய்யமுடியுமோ என குழப்பமில்லாமல் இல்லை. கர்நாடகா 110 டிஎம்சி தரவே மிகவும் பிணக்கும் என்பதே நிதரிசனம்.
4. இதில் விவசாய சங்கங்களும், அரசியல்வாதிகளும் முக்கிய பங்கு வகிப்பார்கள். 'காவிரி விவசாயக் குடும்பம்' இதை முதிர்ச்சியுடன் கையாளும் என எதிர்பார்க்கலாம்.
5. கர்நாடகாவில் இதுவரை வன்முறை ஏதும் இல்லை. பெங்களூர் அமைதியாகத்தான் இருக்கிறது.
பள்ளிகளில் இருந்து தொ்லைபேசி மானவர்களை வீட்டுக்கு அனுப்பிவிட்டார்கள். நிரலாளர்கள் பயந்துபோய் வீட்டில்தான் இருக்கிறார்கள்.
6. இன்னும் மேல்முறையீடுகள் மிச்சம் இருக்கின்றன.
1 comment:
அருள்
என்னைக்கு நமக்கு கோவை மக்களுக்கு கேரளாக்காரன் பெருசா ஆப்பு வைக்கபோறான்னு தெரியலைஇ..
சிறுவாணி அணை அவனோட கட்டுப்பாட்டில் இருக்கு...
மக்கா ஏதாவது சங்கடங்கள் நேர்ந்தால் கே.ஆர் பேக்கர்ஸ் தூள் தூள் ஆயிரும்போல.....
நீர் பிரச்சினையை சமாளிக்க சிறுதுளி போல மக்கள் ஒன்று படனும் இல்லியா...
குமரன்@முத்தமிழ்மன்றம்.கொம்
Post a Comment