இப்படி தகவல் தொழில்நுட்பம் போன்று ஒரே துறையில் மட்டுமின்றி பரந்துபட்ட தொழில் வளர்ச்சி நாட்டின் பல பகுதிகளின் வளர்ச்சிச் சமநிலையைப் பேணுவதற்கு மிகவும் தேவையான் ஒன்றாகும். சென்னை, புனே, நோய்டா போன்ற நகரங்கள் இப்படி வளர்ச்சியில் முன்னணியில் இருக்கின்றன. இந்த சூழலில் பெங்களூர், ஹைதராபாத் போன்ற நகரங்கள் உயிரியல் சார்ந்த துறைகளில் தொழில் வளர்ச்சியுறுவதை ஒரு முக்கிய திட்டமாக செயல்படுத்துவதைக் காணமுடிகிறது. சென்னையில் உயிரியல்தொழிற் பூங்கா ஒன்று ஏற்படுத்தி பல வருடங்கள் ஆனாலும் இன்னும் அந்நகரம் முன்னணியில் வரவில்லை என்பதையே சொல்லவேண்டும். தமிழக அரசு செய்யவேண்டியது இத்துறையில் நிரம்ப இருக்கிறது. கோவை, மதுரை போன்ற அடுத்த மட்ட நகரங்களிலும் இத்துறை வளர இப்போதே திட்டமிட்டால் நன்றாக இருக்கும்.ு
பெங்களூரில் சென்ற வாரம் நடைபெற்ற பெங்களூர் பையோ 2007 என்ற ஒரு தொழிற்காட்சி மற்றும் கருத்தரங்கு சிறப்பாகவே நடைபெற்றது. கேட்ட சில உரைகளைப் பற்றிபின்னர் நேரம் கிடைக்கும் போது தொடர்கிறேன். முழு விவரம் இத்தளத்தில் : http://www.bangalorebio.in/
சில படங்கள்:
No comments:
Post a Comment