Friday, July 11, 2008

அன்றாட மெய்யியல்

முழுமையின் முயக்கம் (Pretense of the whole )
=======================================


நேற்றைக்கு சில நண்பர்களுடன் செடிகொடிகள் சூழ்ந்த ஒரு இடத்தில் டீ குடித்துக்கொண்டு இருந்தோம். எதிர்பாராமல் ஒரு பட்டாம்பூச்சி படபடத்து முகத்துக்கு அருகில் பறந்தது.
"Here goes another tsunami generator " என்று நான் சொல்ல, சிரித்துக்கொண்டே நண்பன் உடனே
"Watch out, there may be a storm in your tea cup" என்றான். இப்படி நாம் எல்லோரும் கெயாஸ் தியரி பற்றி உளரிக்கொட்டிக்கொண்டு இருப்பதைப் போல கொஞ்சம் மெய்யியலையும் போட்டுப் பார்த்தால் என்ன தோன்றியது. இந்தியாவில் அதுவும் தமிழ் மொழிக்காரர்களுக்கு வாராத மெய்யியலா. அதனால்தான் இந்த அன்றாட மெய்யியல். வெறும் naive உரையாடல் மட்டும்தான். கறாராக வேண்டுமானால் வேறு எப்போதாவது.

ஆதி முதலில் ஆரம்பித்துப் பார்க்கலாம். இப்பொழுதெல்லாம் மதவாதிகள், கலை- இலக்கியக்காரர்கள், சுற்றுச்சூழல் ஆய்வாளர்கள் இவர்களில் ஆரம்பித்து தெருநாய் ஆர்வலர்கள் வரை அனைவருக்கும் இடைவிடாது மெல்லக்கிடைத்த அவல் அறிவியல் போல இருக்கிறது. ஏதேனும் ஒன்று என்றால் உடனே ரிடக் ஷனிஸம், விவிசெக் ஷன் என்று கிளப்பிவிடுகிறார்கள். நாங்கள் எல்லாம் பூரணத்தை பூரணத்துக்குள் திணித்து பூரணமான எங்கள் வாயில் லபக் என்று ஒரே முழுங்கு முழுங்கிவிடுவோம். அறிவியல் மட்டும்தான் பூரணத்தை பொடியாக்கி கால் தொடையெல்லாம் சிந்திக்கொண்டு தப்புத்தப்பாய் சாப்பிடுகிறது என்பது இவர்கள் முனகல். அப்படி என்னதான் அது, அறிவியலின் ரிடக் ஷனிஸப் பிரச்சினை?

இவர்கள் அனைவருக்கும் பொதுவான ஒரு நம்பிக்கை என்னவென்றால் அறிவியல் இயற்கையை அப்படியே முழுமையான ஒன்றாகப் பார்ப்பதில்லை. கூறுபோடுகிறது. அந்த குட்டிக் குட்டி கூறுகளை மட்டும் ஆராய்ந்து ஏதோ புரிந்துகொண்டு அதையெல்லாம் சேர்த்துக்கொள்கிறது. அப்புறம் அந்த முழுமைக்கு பதிலாக இந்தக் கூறுகளைப் பற்றி அறிந்ததையே சேர்த்து வைத்துக்கொண்டு முழுமையை அறிந்து விட்டதுபோல் பாவனை செய்கிறது. இந்தப் பாவனையை எங்களால் தாங்கமுடியவில்லை.
இதுதாங்க விஷயம். ஒரு எடுத்துக்காட்டைப் பார்ப்போம்.

ரசம் வைக்கவேண்டுமானால் என்ன செய்வது. பருப்பு வேகவைத்த தண்ணீர், கரைத்த புளி, உப்பு, பெருங்காயம், எண்ணெய், கருவேப்பிலை, மல்லித் தழை, சீரகம், மிளகு, மிளகாய் இப்படி பலதையும் எடுத்துக் கொள்கிறோம். ஒவ்வொன்றும் தனித்தனியே ஒவ்வொரு சுவை. ரசம் வைத்தாயிற்று. இப்போது ரசத்தின் சுவை என்ன? ரசம் என்பது முழுமை. நாம் பயன்படுத்தும் நானாவிதப் பொருள்களும் அதன் உள்ளுறை கூறுகள். அவற்றின் சுவைகளையெல்லாம் எப்படியாவது சேர்த்தால் ரசத்தின் சுவை வந்துவிடாது. அறிவியல் இப்படி ஒவ்வொரு கூறுகளின் குணங்களை அறிந்துகொண்டு அவற்றைச் சேர்த்தால் முழுமையின் குணங்களையும் முழுதாக அறிந்துவிடலாம் என கருதுகிறது, அது பிழை.

முழுமையின் குணங்களை இப்படி குறுக்கமுடியாது. இந்த குறுக்குப் பார்வைதான் ரிடக் ஷனிஸம். இதுதான் அறிவியலின் மாபெரும்
குறை. என்றைக்கும் அதனால் முழுமையை அறியமுடியாது. அதற்கு ஆன்மீகம் (சாமி?), கலை போன்ற முழுமையைத் தேடும் வழிவகைகள் இருக்கின்றன. சற்றே ஒதுங்கி இரும் பிள்ளாய். அதெல்லாம் நாங்க பாத்துக்கிறோம். சரி, அறிவியலும் கலையும் எப்படி முழுமையைப் பார்க்கின்றன?


-

20 comments:

Anonymous said...

நீங்கள் ஜெயமோகன் எழுதியதை
குறிப்பிடுவதனால், ரிடக்ஷனசம் என்று பேசும் அவருக்கு
அறிவியலும் தெரியாது, அதன் மெய்காண்முறையும் தெரியாது.
முழுமையான அறிதல் என்பது
சாத்தியமா என்று கூட அவர்
யோசிப்பதில்லை.முழுமை என்பதும்
ஒப்பீடளவில்லே இருக்கமுடியும்.
கிளையுடன் ஒப்பிடுகையில்
மரம் முழுமை, ஆனால் காட்டில்
மரமும் ஒரு பகுதிதான்.சூழலியல்
அமைப்புகளைப் (eco-system)பொருத்தவரை புரிதல் என்பது
அதன் உள் அமைப்புகளின் மொத்தமல்ல, ஆனால் உள்-அமைப்புகளை புரிந்து கொள்வதும்
தேவை. கட்டமைப்பிற்கும், செயலுக்கும் உள்ள தொடர்பு/உறவு,
புரியாமல் மருத்துவ அறிவு சாத்தியமில்லை.தமிழ் சூழலில்
எதையும் புரிந்து கொள்ளாமல்
பெயர்களைக் கூறியே அறிவுசீவியாகிவிடலாம், எழுத்தாளாராக இருந்தால்.
உங்களைப் போன்றவர்கள்
விளிம்பு நிலை மனிதர்கள்.

arulselvan said...

நண்பரே,

ஜெயமோகனை குறிப்பிட்டு இதை எழுதவில்லை. சில காலமாகவே சிறுபத்திரிக்கைகளிலும் இப்போது இணையத்திலும் பலரும் எழுதி பார்ப்பதுதான். உண்மையில் அறிவியலின் மெய்யியலை ஒழுங்காக புரிந்துகொள்ள தற்காலத்திய மெய்யியலில் சரியான அறிமுகம் இருந்தாலே கூடப்போதும். அங்கேதான் பிரச்சனையே. இந்திய மரபு மெய்யியலின் (குறிப்பாக பொளத்த, சமண ) கறார்தன்மையும் நிறுவுமுறைகளும் கொஞ்சம் பழையது. இந்து மெய்யியல் எங்கோ என்றோ உறந்து கிடக்கிறது. யாரும் இற்றைப்படுத்தவில்லை. அதனால் நவீன அறிவியலை உள்வாங்க வக்கற்றத்தாகவே நம் மரபுகள் உள்ளன. இதையெல்லாம் யாரும் பேசுவதில்லை. ஆறு தரிசனங்கள், ஆறு மதங்கள் என்று சும்மா மட்டையடியையே இன்னும் எத்தனை நாட்களுக்கு காண்பிக்கப்போகிறார்கள் எனத் தெரியவில்லை.

முழுமையான அறிதல் சாத்தியமா என்பதைப் பற்றி குறிப்பிடுகிறீர்கள்.
ஜெயராசி பட்டரின் பெயரைக் கூட எந்த தமிழ் சிறுபத்திரிக்கையிலும் பார்த்ததில்லை. இவர்கள் 'அறிதலைப்" பற்றிப் பேசுவார்கள். என்ன செய்ய.

Anonymous said...

/தமிழ் சூழலில்
எதையும் புரிந்து கொள்ளாமல்
பெயர்களைக் கூறியே அறிவுசீவியாகிவிடலாம், எழுத்தாளாராக இருந்தால்.
உங்களைப் போன்றவர்கள்
விளிம்பு நிலை மனிதர்கள்./

தம்பி நீங்கள் மிடில்க்ளாஸ் மாதவனா, கலாச்சார ரவுடியா?
அத சொல்லுங்க மொதல்லே. அப்புறம் மெய்யியல், உயிரியல், ஆவியியல் பத்தி பேசுவோம். விளிம்பு நிலை மனிதர்கள் என்பத ஸெல்ப் ஆப்பாயிண்டட் கலாச்சார ரவுடிங்க மாத்திரமே வைச்சுக்கும் அதிகாரம் நெட்டுல இருக்கு. தெரியுமில்லே? பாத்து பேசுங்க. பின்னூட்ட பெட்டிக்கு லுக்கு விட்டு வண்டி அனுப்பிடுவோம்.

சத்குருவோட சந்திப்புன்னு ஒரு செம வழ வழா எளனி சீவல் டிவி ப்ரோக்ராமு போவுது. பாருங்க. உய்யடா உய்ன்னு உஞ்சிடலாம். இதெல்லாம் ஒரு போஸ்டு. மானுடவிடுதலைக்கு சாத்தரையோ சாடேயையோ சாதா சிங்கள் டீயையோ போட்டுக்கிட்டுப் போவீங்களா? இல்லே அத விட்டுட்டு இந்த மாதிரி நெட்லெக்ஸர் பண்ணுவீங்களா?

arulselvan said...

ரெண்டு பேரும் அனானியா பின்னூட்டம் போட்டா என்ன செய்ய. :-)
>>>அனானி 1: உங்களைப் போன்றவர்கள்
விளிம்பு நிலை மனிதர்கள்.
>>>அனானி 2: விளிம்பு நிலை மனிதர்கள் என்பத ஸெல்ப் ஆப்பாயிண்டட் கலாச்சார ரவுடிங்க மாத்திரமே வைச்சுக்கும் அதிகாரம் நெட்டுல இருக்கு. தெரியுமில்லே?
------------
நான் எந்த விளிம்பிலையும் இல்லை அய்யா. அரசாங்க செலவிலே ஒழுங்கா படிச்சுட்டு சமுதாயத்துக்கு பயன்படறமாதிரி வேலை செய்யறவந்தான்.
நம்நாட்டு சனாதனப்படி சொன்னா ஏதோ வைசியனோ சூத்திரனோ செய்யற வேலை, வாழ்கை. அகில உலக சனாதனப்படி சொன்னா பூர்ஷுவா வாழ்க்கை. நானாவது விளிம்பில தொங்கறதாவது.

அருள் (நானாவது யாருன்னு சொல்லிடறேன்)

Anonymous said...

/அகில உலக சனாதனப்படி சொன்னா பூர்ஷுவா வாழ்க்கை. நானாவது விளிம்பில தொங்கறதாவது./

அட அப்போ நீங்கதான் அந்த மிடில்கிளாஸ் மாதவனா? ஒங்களுக்கெல்லாம் எலவச செக்ஸ் எஜுகேஷன், லிபிடோலிபரேஷன் க்ளாஸ் மதி வளந்தவுங்க குடுக்கிறாங்களே? இன்னும் ஜாண்ட் பண்ணலையா?

சரி விடுங்க. சீரியஸா பூர்சுவா ஆகிப் பேசுவோம். இந்த மெய்யியல் என்கிறதே ஒரு பாஷன் ஆகிப்போச்சுன்னு நெனைக்கிறேன். சர்மா கிளப் வடையிலயும் கலந்துக்கலாம். சதாம்பாய் பிரியாணிலயும் கலந்து கட்டி வெட்டிலாமுன்னு ஆகிப்போச்சு. ஒரு இருபத்தைஞ்சு வருஷம் சித்தே முன்னாடி பாத்தா, என்ன செஞ்சோம்? தாடியும் குர்த்தாவும் ரெண்டு வரி புரட்சி வெதைச்ச பாயட்ரியும் நெம்புகோலா ஒலக பொரட்டிமுன்னு நெனைக்கலயா? அது மாரித்தான். இப்போ எண்ட்வெயார்மெண்டலிலையும் கலந்துக்கிறாங்க. இதுக்கெல்லாம் ஒரு அடிப்படை அறிவியல் ஞானமே தேவப்படாது என்கிற மாதிரி ஒரு நம்பிக்கை. வேணுன்னா போயி பாருங்க. ஒங்களுக்கே பிஸிக்ஸ் சொல்லித் தருவானுங்க நம்ம மெட்டோபிசிஸ்ட்டுங்க. ஏன்னா மெட்டோபிசிக்ஸே மெய்யியல் பாதி, பிஸிக்ஸ் மீதி இல்லையா? ;-)

Anonymous said...

அண்ணாச்சி அருள் செல்வன் கந்தசுவாமி அவர்களே, சுந்தர் சருக்கை என்று ஒரு பேராசிரியர்
NIAS,IISC ல் இருக்கிறார்.ஒரு எட்டு
அவரைப் போய் பார்தது உரையாடினால் உங்களுக்கு
சில பிடிபடலாம்.அதற்கு முன்
அவர் என்ன எழுதியிருக்கிறார்
என்பதையும் பார்த்துக் கொள்ளுங்கள்.
NIASல் அண்மையில் அறிவியலின்
தத்துவத்தில் 3 வார வகுப்பு
நடத்தினார்கள்.என்னால் போக முடியவில்லை. நான் செய்யும்
ஆய்வு முற்றிலும் வேறொரு திசை.
ஆனால் அவர் பேசிக்
கேட்டிருக்கிறேன்,சிலவற்றை
வாசித்திருக்கிறேன்.

நான் மெய்யாலுமே ஒரு களிம்பு நிலை மனிதன், அதாவது தலைக்கு
ஜெல் தடவற ஆசாமி :)

arulselvan said...

அன்புள்ள களிம்பு நிலை அனானி,
ஏங்க இதப்பேசரதுக்கு ஏன் எல்லோரும் அனானியா வர்ராங்க? வெக்கப் படக்கூடிய விஷயமா இது?

>>>சுந்தர் சருக்கை என்று ஒரு பேராசிரியர்
NIAS,IISC ல் இருக்கிறார்.ஒரு எட்டு
அவரைப் போய் பார்தது உரையாடினால் உங்களுக்கு
சில பிடிபடலாம்.அதற்கு முன்
அவர் என்ன எழுதியிருக்கிறார்
என்பதையும் பார்த்துக் கொள்ளுங்கள்.
======
சுந்தரோட அப்பாவைப் பத்தி நான் எழுதுன பதிவைப் பாக்கலையா நீங்க? அவரைத் தெரிச்ச உங்களுக்கு அவர் அப்பாவைத் தெரியாதா :-)
சுந்தர் எழுதனப் பத்தியும் வேணா பேசலாம். ரெண்டு புக்கும் படிச்சிருக்கேன்.

அருள்

arulselvan said...

அனானி 2,
>>>
சரி விடுங்க. சீரியஸா பூர்சுவா ஆகிப் பேசுவோம். இந்த மெய்யியல் என்கிறதே ஒரு பாஷன் ஆகிப்போச்சுன்னு நெனைக்கிறேன். சர்மா கிளப் வடையிலயும் கலந்துக்கலாம். சதாம்பாய் பிரியாணிலயும் கலந்து கட்டி வெட்டிலாமுன்னு ஆகிப்போச்சு.
------------------------------
சில சொற்களை defang பண்ணவேண்டியிருக்கு. மெய்யியல் தான் முதல்ல லிஸ்ட். அடுத்தது நுண்ணுணர்வா, படைப்பு மனோநிலையான்னு பாக்கணும்
-------------.
>>>>>
இப்போ எண்ட்வெயார்மெண்டலிலையும் கலந்துக்கிறாங்க. இதுக்கெல்லாம் ஒரு அடிப்படை அறிவியல் ஞானமே தேவப்படாது என்கிற மாதிரி ஒரு நம்பிக்கை.
---------
இயற்கைன்னா போதும். அப்படியே ஒரெயடியா உருகறாங்களே அப்ப வாடிலால் ஐஸ்கிரீம்? அதுமட்டும் செயற்கையாக்கும். குரங்கு குரங்கை வேட்டையாடித் தின்னாலும் இயற்கை. மனுஷன் பால்பாயிண்ட் பேனா கண்டுபிடிச்சா அது செயற்கை. எந்த குரு பரம்பரை கொடுக்குற ஞானம் இது?
---------------
>>>நம்ம மெட்டோபிசிஸ்ட்டுங்க. ஏன்னா மெட்டோபிசிக்ஸே மெய்யியல் பாதி, பிஸிக்ஸ் மீதி இல்லையா? ;-)
--------------
அது சரி. இப்படியெல்லாம் பகுத்து, ரெட்யூஸ் பண்ணாம ஒரு யூனிஃபைடா பாக்கணும். வளருங்கப்பா.

அருள்

Anonymous said...

முழுமை, பூரணம் போன்ற வாகுக்கேற்ற ஜல்லியடிகள் சோம்பேறிகளின் கற்பிதம். இந்த 'larger picture' பெருந்தரிசன விபூதிப்பொட்டலங்களுடன் பேசுவதென்பது எந்த விதத்திலும் உபயோகமற்றது - குறிப்பாக நீங்கள் எழுதியுள்ள அறிவியல் சம்பந்தப்பட்ட விஷயங்களில்.

-சன்னாசி

arulselvan said...

>>>முழுமை, பூரணம் போன்ற வாகுக்கேற்ற ஜல்லியடிகள் சோம்பேறிகளின் கற்பிதம்.

சன்னாசி , இந்த அறிவுச்சோம்பல் துறை விலக்கில்லாமல் எங்கும் பரவிக்கிடக்கிறது. அறிவியலைப் பற்றி சொன்னாலாவது சரி, இதில் பயிற்சி இல்லாவிட்டால் புரியாது என்பதால் இவர்கள் சொல்வதை கண்டுக்காமல் விட்டுவிடலாம். ஆமா கலைத்துறையில் - ஓவியம், கவிதை, கதை இவற்றில் ரிடக் ஷனிஸிம் இல்லையாமா? முதலில் இவர்கள் தம் துறையை சரியாக புரிந்துகொள்ள முயற்சிக்கட்டும். அப்புறம் 'அறிவுப்புலங்கள்', 'அறிதல்' எபிஸ்டமாலஜி என முழு மானிட செயல்பாட்டை பற்றி கதைக்கலாம். ரொம்ப தாங்க முடியலங்க.

தற்கால உலகத்தை கொஞ்சம் கண் திறந்து பாருங்கப்பா எனக் கெஞ்சவா முடியும்.
அருள்

Badri Seshadri said...

ட்விட்டர் வாழ்க. இல்லாவிட்டால் அருள் பதிவுகள் எழுதுவது கவனத்திலிருந்து விருபட்டுப்போயிருக்கும்.

முழுமைவாதிகளை அல்லது முழுமை பற்றிப் பேசுபவர்களைத் திட்டவேண்டாம். அப்படிச் செய்வது அவர்களது பாணியைப் பின்பற்றுவதாகிவிடும்.

எனக்கு அறிவியல் ரிடக்‌ஷனிசம், மீண்டும் பூரணத்தை முழுமையாகப் புரிந்துகொள்ள உதவுகிறது. உடைத்து உடைத்து எலெக்ட்ரான் அளவுக்கு வந்து (அதற்கும் கீழே வேண்டுமானால் போகலாம்...) மீண்டும் அவற்றைச் சேர்த்து சேர்த்து ஹைட்ரஜனை முகர்ந்து பார்க்கமுடிகிறது. அங்கிருந்து ஆக்சிஜனாகி எனக்குள் உயிரைக் கொடுக்கும் வாயுவை அனுபவிக்கமுடிகிறது. உலகின் முதல் மூலக்கூறான தண்ணீரின் சுவையை ரசிக்கமுடிகிறது.

பகுத்துப் பகுத்துப் பார்ப்பதன்மூலம் பூரணத்துவம் காணாமல்போய்விடும் அல்லது பூரணத்துவத்தை உணரமுடியாது என்று இவர்கள் சொல்வது அறிவியல் ரீதியில் பகுத்தாயும் திறன் இல்லாததாலோ என்று தோன்றுகிறது.

***

கலையையும் பகுத்து (ரிடக்‌ஷனிசம் மூலம்) அழகியலைப் புரிந்துகொள்ளமுடியும் என்பதற்காக நீங்கள் இந்தத் தொடரை எழுதுகிறீர்கள் என்று நான் நினைக்கிறேன். சரியா?

அப்படியான உங்களது முதல் உதாரணத்தில் மேலும் சில பகுப்புகளைச் செய்திருக்கலாம். அந்தப் பாடலில் எந்த விதத்தில் இசையில் வடிவ மாறுதல்கள் செய்யப்பட்டுள்ளன, அதற்கான நடனக் காட்சி அமைப்பில் எந்தவிதத்தில் அழகுணர்ச்சி சேர்க்கப்பட்டுள்ளது என்பதை மேலும் விரிவாகச் சொல்லியிருக்கலாம். (அதே நேரம் நடு நடுவே குளோஸ்-அப்பில் கன்னாபின்னாவென்று முகத்தைக் காட்டி பயமுறுத்தி இரு பரிமாண வடிவ முறையை எடிட்டிங்கில் சீர்குலைத்ததையும் சேர்த்துச் சொல்லலாம்.)

எழுதுவதை நிறுத்திவிடாதீர்கள்:-)

Unknown said...

அன்புள்ள அருள் அவர்களுக்கு:

Reductionism has its uses. யூங்கின் MBTIல் இருந்து மருத்துவத் துறையில் ஏற்பட்டிருக்கும் வளர்ச்சிகள் வரை அனைத்துமே நாம் பகுப்பாய்ந்து தெரிந்து கொள்ள உத்தேசித்ததின் விளைவுகளே. reductionism அறிவியல் துறைகளில் மட்டும் மட்டும் இன்றி கலைஇலக்கியத்திலும் உண்டு. பொருளியலிலும் உண்டு. பிரச்சினை reductionism அல்ல. அதைத் தாண்டி எதுவும் இல்லை என்ற ஒரு பிடிவாதமே. முழுமைநோக்கு குறித்து என் பதிவில் எழுதி வருகிறேன். பின்னூட்ட விவாதத்தை
இங்கு இடுவது ஒரு நல்ல விவாதத் தளத்தை அளிக்கும் என்று நம்புகிறேன்.

***

ஒன்றன் தாக்கத்திற்கு ஏற்ப மூளையில் ஏற்படும் மாற்றங்கள் உண்மையாணவை. அவற்றை ‘மாயா' அதுஇது என்று நிராகரிப்பது தவறானது. மெல்லிசை கேட்டால் மூளையில் ஏதோ ஒரு லோப்ஸில், ஏதோ ஒரு விகிதத்தில் மாற்றங்கள் இருக்கும். ராக் இசைக்கு வேறு விகிதத்தில் இருக்கும். அவ்வகை புறவய மாற்றம் 100% உண்மையானதே. ஆனால் இசைக்கு ஏற்ப நம் மனதில் தோன்றும் "எண்ணங்களை" sensorimotor changesஐ மட்டும் கொண்டு விளக்க முடியாது. அப்படி விளக்க முற்பட்டால் அது ‘depthless' ஆகவே இருக்கும். மிகவும் உள்விரிவு கொண்ட அதை ஒற்றைப்படையாக சுருக்குவது போல். Mind-Brain problem உளவியலில் நெடிங்காலம் இருப்பது.வி.ஏஸ். ராமசந்திரனின் ”the science of Art"ல் வரும்
பிகாஸாவின் ஓவியங்கள் ஏன் நமக்கு பிடிக்கிறது' என்ற கட்டுரையை படித்து பாருங்கள். கலைஇலக்கியத்தை இவ்வகை புறவய அளவுகோள்களை மட்டும் வைத்து மதிப்பிட முடியுமா என்பதை பற்றி நாம் விவாதிப்போம்.

***

வரலாற்றின் பல காலகட்டங்களை புரிந்து கொள்வதின் மூலம் முழுமைநோக்கைப்(Integral Approach) அவசியத்தை நாம் மேலும் புரிந்து கொள்ளலாம்.

கற்பனாவதமும் (Romanticism), எதிர்கலாச்சாரமும, நவயுக ஆன்மீகமும் தருக்கத்தை தாண்ட நினைத்து தருக்கத்தையே உதாசீனப்படுத்தியது. பின்நவீனத்துவம் இதை ஒரு படி அதிகம் எடுத்துச் சென்று முழுமறுப்புவாத சுவற்றில் முடிவில்லாமல் முட்டிக்கொண்டிருக்கிறது.முழுமைநோக்கு தருக்கத்தின் போதாமைகளை உணர்ந்த போதும் அதை உதாசீனப்படுத்தவில்லை.

வரலாறென்னும் பெரும் நதியில் கற்பனாவாதமும், நவீனத்துவமும,பின்நவீனத்துவமும் முக்கிய காலகட்டங்கள். பல முக்கிய உண்மைகளை நமக்கு வழங்கியது. ஆனால் நதி ஓய்வில்லாமல் போய்க் கொண்டே இருப்பது. முழுமைநோக்கு அதன் இன்று வந்தடைந்துள்ள ஒரு போக்கு. அது தருக்கத்தின் போதாமைகளை உணர்ந்து கொள்கிறது. ஆனால் தருக்கத்தை உதாசீனப்படுத்தவில்லை. தருக்கத்தின் முக்கியத்துவத்தை அது குறைக்க முற்படவில்லை.

***

வில்பர் மிகவும் மதிக்கும் தத்துவ மற்றும் சமூகவியல் அறிஞர் ஹாபர்மாஸ்(Habermas). இவருக்கும் ஃபூக்கோவுக்கும் நடந்த விவாதம் முக்கியமானது. தருக்கம் குறித்தும், முழுமைநோக்கு குறித்தும் நமக்கு உள்ள சஞ்சலங்களை தெளிவுபடுத்திக் கொள்ள ஹாபர்மாஸ் ஒரு நல்ல துவக்கப் புள்ளி.

ஹாபர்மாஸின் 'Theory of Communicative Action' முக்கியமான ஒரு கோட்பாடு. 'Theory of Communicative Action' பற்றி மிகச் சுருக்கமாக - "it challenges the Marxist focus on economics (or alienated labour) as the main or sole determining factor of oppression. Habermas argues that the key to liberation is rather to be found in language and communication between people." சரியான உரையாடல் இல்லாததாலும், புரிந்துகொள்லாமையினாலும் தான் பல பிரச்சனைகள் தீர்வே இல்லாமல் இன்றூ போய்க்கொண்டே இருக்கிறது என்பதே ஹாபர்மாஸின் முக்கிய வாதம்.

உதாரணம் பல தரலாம். ரிச்சர்ட் டாகின்ஸின் புகழ்பெற்ற ஒரு quote -

"Show me a cultural relativist at thirty thousand feet and I'll show you a hypocrite. Airplanes are built according to scientific principles and they work. They stay aloft and they get you to a chosen destination. Airplanes built to tribal or mythological specifications such as the dummy planes of the Cargo cults in jungle clearings or the bees-waxed wings of Icarus don't"

"Show me a cultural relativist going on an airplane at thirty thousand feet and I'll show you a hypocrite." என்பதற்கு பதில் "Show me a transcendental scholar going to a religious conference on an airplane and I'll show you a hypocrite" அல்லது "Show me a hippie going to Marrakesh in Superfast train after getting pissed off and disillusioned with the system and I'll show you a hypocrite" என்பது போல் டாகின்ஸ் மாற்றி போட்டுக் கொண்டே போகலாம்.

டாகின்ஸின் கோபம் தருக்கத்தை மிக இயல்பாக உதறுபவர்கள், நக்கல்டிப்பவர்கள் மீது ஏற்படுவது. இந்த கோபமே அவரை இதன் மறுமுனைக்குக் கொண்டு செல்கிறது. தருக்கத்தை மீறிய ஒன்று கிடையவே கிடையாது, "trans-rational", "mysticism" போன்ற அனைத்துமே பஜனைகள் என்ற எல்லைக்குக் கொண்டு செல்கிறது.

இது அனைத்துமே புரிந்துகொள்லாமையினால் முடிவில்லாமல் போய்க்கொண்டிருக்கும் பிரச்சனைகள். இதை களைவதற்கே 'முழுமைநோக்கு'. தருக்கத்தின் தேவையும் இதற்கே. வகைப்படுத்துதலும் இதற்கே. இன்று பொருளியலில் இருந்து கலைஇலக்கியம் வரை இருக்கும் மனக்காழ்புகளுக்கு இவ்வகை புரிந்துகொள்ளாமையே முக்கிய காரணம்.

இன்றைய தேவை சில உரையாடல்கள் - அறிவியலுக்கும், லிபரலிஸம் மற்றும் பின்நவீனத்துக்கும் இடையே, அறிவியலுக்கும் ஆன்மீகத்துக்கும் இடையே மற்றும் ஆன்மீகத்துக்கும் லிபரலிஸம் மற்றும் பின்நவீனத்துக்கும் இடையே. மனக்காழ்புகளின்றி உரையாட, அவற்றை புரிந்து கொள்ள ஒரு "communication model" தேவை. இதற்கு தருக்கமும், வகைப்படுத்துதலும் இவற்றை ஒழுங்கினைத்து எழும் முழுமைநோக்கு போன்ற ஒரு முறைமையும் தேவை.

வில்பர் சொல்வது இதையே "Gaia's main problems are not industrialization, ozone depletion, overpopulation, or resource depletion. Gaia's main problem is the lack of mutual understanding and mutual agreement in the noosphere about how to proceed with those problems. We cannot rein in industry if we cannot reach mutual understanding and mutual agreement based on a worldcentric moral perspective concerning the global commons."

நாளை முழுமை நோக்க்கின் போதாமைகளும் சுட்டிக் காட்டப்படலாம். அவற்றையும் தாண்டியும் ஓடும் இந்த நதி.

“கென் வில்பரின் தத்துவத்தில் கடவுளின் தேவை என்ன?” என்று பத்ரி கேட்டிருந்தார்.

சுயம் தன்முனைப்போடு (ego) கொள்ளும் சுருங்கிய அடையாளத்தை விட்டு விலகு பயனிக்கும் பாதையை பற்றியே முழுமைநோக்கு கூறுகிறது. அதாவது pre-personal to personal to trans-personal. தாங்கள் கேட்ட ‘முழுமைநோக்குப் படி கடவுளின் தேவை என்ன?' என்பதை ”'personal' நிலையில் இருந்து ‘trans-personal' நிலை நோக்கி நகரத் தேவை தான் என்ன?” என்பதாக எடுத்துக் கொள்ளலாம். (முழுமைநோக்கும், கென் வில்பரும் ‘கடவுள்' என்பதை இவ்வாறான பயணத்தைக் கொண்டே விளக்க முற்படுகிறார்கள்).

”pre-personal to personal” என்பது தன்முனைப்பின், சுயத்தின், அளுமையின் முக்கிய வளர்ச்சிக் கட்டம். The Self increasingly identifies with the 'Intellect'. All the rapid growth we see in our modern world - science, tech nology, medicine, constitution, laws, economic systems etc. - are due to this. This is an extremely important stage, but the "New Age" tends to dumb this down.Dumbing down all this growth means rejecting our advanced economic and social systems,amazing growth in computation, communication and commutation, increasing access to sources of knowledge which opens the door to many people etc etc.

An Integral approach never tries to mindlessly 'reject' all of these. Richard Dawkins anger is predominantly due to this kind of mindless rejection which was built on top of overtly romantic arguments.

However, though the growth of 'intellect' is very important, a sound 'intellect' alone is not sufficient. Increasingly identifying oneself with one's intellect alone might crush the person and it might even be a huge baggage. This results in the narcissistic shrink of the ego, which fights to death to maintain its status-quo. And it is precisely for this reason that a move from the 'personal to the 'trans-personal' stage is essential. which means moving away from the narrow identification of one's Self with the 'Ego' and the 'Intellect' and embracing a larger whole. This doesn' mean 'rejecting' the 'intellect' but only 'not excusively identifying with it'. All the gory ideology wars is due to this 'narcissistic shrink of the ego'. As the saying goes, "Intellect is a good servant but could become a bad master".

வில்பர் மிகவும் மதிக்கும் ஹாபர்மாஸ் "rationality"ஐ தாண்டி, தன்முனைப்போடு சுயம் கொள்ளும் சுருங்கிய அடையாளம் போன்றவற்றைத் தாண்டி செல்லும் முறைகள் குறித்து எதுவும் கூறவில்லை
இங்கு புத்தரும், நாகார்சுனனும், சங்கரரும், ரமணரும் நமக்கு உதவுகிறார்கள்.

சுருங்கச் சொன்னால், pre-personal நிலையில் இருந்து personal நிலைவரையிலான ஒரு புரிதலை அடைய மேற்கத்திய மரபு - ஃப்ராய்டும், பியாஜேவும், மார்க்ஸும், ஹாபர்மாஸும் - நமக்கு உதவுகிறார்கள். இதற்கு தருக்கம் அவசியம். Mental Models அவசியம். முரணியக்கம் அவசியம். peronal நிலையில் இருந்து trans-personal நிலை குறித்த புரிதலை, அனுபவத்தை அடைய, நம் மரபு உதவுகிறது. வளர்ச்சி நிலைகள் pre-personal --> personal --> trans-personal என்றே விரிகின்றது. ஒன்றை உதாசீனித்து மற்றோன்றை மீட்க முயல்வது ஆபத்தானது. ரிச்சர்ட் டாகின்ஸின் கோபமும் இதனாலே.

Unknown said...

பத்ரி,

“பகுத்துப் பகுத்துப் பார்ப்பதன்மூலம் பூரணத்துவம் காணாமல்போய்விடும் அல்லது பூரணத்துவத்தை உணரமுடியாது என்று இவர்கள் சொல்வது அறிவியல் ரீதியில் பகுத்தாயும் திறன் இல்லாததாலோ என்று தோன்றுகிறது.”

பகுத்தலும் அறிதலின் ஒரு பகுதியே. ஆனால் அறிவியல் முறை பகுத்தல்களை மட்டும் கொண்டு பூரணத்தை உணரமுடியாது. ஒரு பாடலை கேட்கும் பொழுது எண்ணற்ற எண்ணங்கள் , படிமங்கள் தோன்றி மறைகின்றன. அவற்றை எல்லாம் dopamine, serotonin, neuro transmitterஐ மட்டும் கொண்டு விவரிக்க இயலாது. the experience is very dense and has lot of subtleties which can't be reduced just to exterior dimensions.

i don't think it is just a problem of 'inability to explain/reduce components' to its lowest factors. it is just that the 'depth dimension' is different from the 'surface changes'.

reductionism of the "scientism kind" rejects all the 'interior dimensions'. reductionism of the "arts/literature kind" rejects all the exterior dimensions. both are half-wrong and half-right.

both are right in what they assert and wrong in what they deny!

it is precisely due to this, we see lot of idealogical cold wars. one could see this happenning even in the sphere of tamil literature.

arulselvan said...

பராகா(பெயர் சரிதானா? ),
1. அருள் என்றே எழுதுங்கள். அவர்களுக்கு என்றெல்லாம் வேண்டாம். பல தளங்களைத் தொட்டுச் செல்லும் இப்பின்னூட்டத்துக்கு நன்றி. நான் பதிவில் குறிப்பிட்டது போல இதை ஒரு naive உரையாடலாகவே கொண்டுசெல்ல முயன்றேன்.
-----------------
>>>அருள் அவர்களுக்கு: 
Reductionism has its uses. பிரச்சினை reductionism அல்ல. அதைத் தாண்டி எதுவும் இல்லை என்ற ஒரு பிடிவாதமே. முழுமைநோக்கு குறித்து என் பதிவில் எழுதி வருகிறேன். பின்னூட்ட விவாதத்தை
இங்கு இடுவது ஒரு நல்ல விவாதத் தளத்தை அளிக்கும் என்று நம்புகிறேன்.
--------------------------------

ரிடக்ஷனிஸம் அறிவியலின் செயல்பாட்டில் ஒரு கூறுதான். அதே துறைக்குள்ளேயே எதைக் குறுக்குகிறோமோ அதை இன்னொரு அலகில் அறிவியல் அறிந்து கொள்ள அணுகுவதுதான் நடக்கிறது. செல் உயிரியல் படித்தால் மரபணுவியல்விட ஒரு அலகு மேலே. அதற்கும் மேலே அவயங்களைப் பயிலுதல், அவயங்களிலான முழு உயிரியைப் பயிலுதல் என அடுக்கடுக்காக குறுக்குதலும் விரித்தலும் நடக்கிறது. அறிவு மேலும் கீழுமாக இந்த அடுக்குகளில் கொடுக்கவும் வாங்கவும் இடையுறாது இயங்குகிறது. எனக்குத் தெரிந்து அனைத்து அறிவியலாளரும் இதை உணர்ந்து தான் இருக்கிறார்கள். மற்றவர்களுக்கு இதை தெரிவிக்கும் முகமாகவும், தமிழ் மெய்யியல், இலக்கியம் அரசியலில் இயங்குபவர்களின் சந்தேகங்களை எதிர்கொள்ளவும்தான் இதை எழுதுகிறேன். reducing is the first step to build the whole என்பதே அறிவியலாளரின் பொதுவான நிலைபாடு, இல்லையா. உங்கள் பதிவை இன்னும் முழுதாக படிக்கவில்லை. இத்தகைய மெய்யியல் விவாதங்களைத் தமிழில் எழுதுவதற்கு நன்றி.
--------------------
>>>வி.ஏஸ். ராமசந்திரனின் ”the science of Art"ல் வரும்
பிகாஸாவின் ஓவியங்கள் ஏன் நமக்கு பிடிக்கிறது' என்ற கட்டுரையை படித்து பாருங்கள். கலைஇலக்கியத்தை இவ்வகை புறவய அளவுகோள்களை மட்டும் வைத்து மதிப்பிட முடியுமா என்பதை பற்றி நாம் விவாதிப்போம்.


--------------
ராமச்சந்திரனின் கோட்பாடுகளைப் பற்றி விரிவாக பின்னர் எழுத உள்ளேன். முடிந்தவரை இதை எடுத்துச் சென்று mind-body இருமையை அணுகுவதுதான் எனது நோக்கம். ஒரு பொருள்முதல்வாதப் பார்வையில். அதற்கு முன்னால் கலையின் தன்மையைப் பற்றியும்.
----------
>>> முழுமைநோக்கு அதன் இன்று வந்தடைந்துள்ள ஒரு போக்கு. அது தருக்கத்தின் போதாமைகளை உணர்ந்து கொள்கிறது. ஆனால் தருக்கத்தை உதாசீனப்படுத்தவில்லை. தருக்கத்தின் முக்கியத்துவத்தை அது குறைக்க முற்படவில்லை.
-------
ஒரு மனிதன் என்ற வகையில் தர்கத்தின் போதாமையை அல்லது நம் வாழ்கணங்களில் தர்கத்தின் மிகச்சிறிதேயான பங்களிப்பை நாம் அனைவரும் உணர்ந்துதான் உள்ளோம். அது அல்ல இங்கே பிரச்சனை. அ-தர்க முறையில் அறிவை வெளிப்படுத்துவது அல்லது 'உரைப்பது' பற்றியதே பிரச்சினை. பின்னால் விரிவாகப் பேசுவோம். நீங்கள் சொல்லும் ஹாபர்மாஸ்-ஃபூக்கோவின் விவாதத்தையும் தொட்டு.
---------------------
>>> தருக்கத்தை மீறிய ஒன்று கிடையவே கிடையாது, "trans-rational", "mysticism" போன்ற அனைத்துமே பஜனைகள் என்ற எல்லைக்குக் கொண்டு செல்கிறது.


------
mysticism பற்றி அனேகமாக நான் பேசமாட்டேன் என நினைக்கிறேன். ஆனால் non rational பற்றி கண்டிப்பாக எழுதுவேன்.
-------
>>>
இன்றைய தேவை சில உரையாடல்கள் - அறிவியலுக்கும், லிபரலிஸம் மற்றும் பின்நவீனத்துக்கும் இடையே, அறிவியலுக்கும் ஆன்மீகத்துக்கும் இடையே மற்றும் ஆன்மீகத்துக்கும் லிபரலிஸம் மற்றும் பின்நவீனத்துக்கும் இடையே.


--
ஆம்
----


>>>நாளை முழுமை நோக்க்கின் போதாமைகளும் சுட்டிக் காட்டப்படலாம். அவற்றையும் தாண்டியும் ஓடும் இந்த நதி. 


------
இது சரியான அறிவியல் பார்வை.
-------------
>>>>
வில்பர் மிகவும் மதிக்கும் ஹாபர்மாஸ் "rationality"ஐ தாண்டி, தன்முனைப்போடு சுயம் கொள்ளும் சுருங்கிய அடையாளம் போன்றவற்றைத் தாண்டி செல்லும் முறைகள் குறித்து எதுவும் கூறவில்லை
இங்கு புத்தரும், நாகார்சுனனும், சங்கரரும், ரமணரும் நமக்கு உதவுகிறார்கள்.
--------------------------------
rationality, reductionism, objectivity மட்டுமே அறிவியலின் முழுக்கூறுகள் அல்ல. பொருள்முதல் வாதம் அதில் முதன்மையானது அல்லவா. அப்படி இருக்கும்போது புத்தரும் நாகார்ச்சுனரும் சங்கரரும் (ரமணரை விட்டுவிடுகிறேன்) இதில் எப்படி உதவுவார்கள் என்பதை சரியாக கறாராக சொல்ல நிறைய வேலை செய்யவேண்டும். இந்திய மெய்யியல்வாதிகள் இன்னும் இதில் எனக்குத் தெரிந்து துவங்கவில்லை. ஆதலால் எனக்கு இதிலும் அபிபிராயம் இல்லை.
----------------------------------
>>>
பத்ரி, 
“பகுத்துப் பகுத்துப் பார்ப்பதன்மூலம் பூரணத்துவம் காணாமல்போய்விடும் அல்லது பூரணத்துவத்தை உணரமுடியாது என்று இவர்கள் சொல்வது அறிவியல் ரீதியில் பகுத்தாயும் திறன் இல்லாததாலோ என்று தோன்றுகிறது.”
பகுத்தலும் அறிதலின் ஒரு பகுதியே. ஆனால் அறிவியல் முறை பகுத்தல்களை மட்டும் கொண்டு பூரணத்தை உணரமுடியாது. ஒரு பாடலை கேட்கும் பொழுது எண்ணற்ற எண்ணங்கள் , படிமங்கள் தோன்றி மறைகின்றன. அவற்றை எல்லாம் dopamine, serotonin, neuro transmitterஐ மட்டும் கொண்டு விவரிக்க இயலாது. the experience is very dense and has lot of subtleties which can't be reduced just to exterior dimensions. 
i don't think it is just a problem of 'inability to explain/reduce components' to its lowest factors. it is just that the 'depth dimension' is different from the 'surface changes'.
------------------
Badri, in my view, is talking about physical sciences here, and i would agree with him. In physical and biological sciences reductionism is the primary step in isolating and abstracting the model. You can engulf the whole step by step, model by model in a progressive fashion. Then the 'whole' ,for whatever its worth, is another 'part' in the bigger whole and so on. Presumably , art doesnot work like this and that is the source of confusion among non scientists who tend to think that Science misses the big picture. It doesnt. It knows when to treat something as a 'system' once it is done with the parts. You have mentioned Gia which looked as if it was the next big thing after relativity as it was flagged about by the new age kids when they first started to worry about whales and other life stuff. Earth, whether it is treated as 'mother' or not is still amenable to be treated as a system in the most classical way science is done. And that solves problems.
----------------------

Thanks a lot Baraka. I will certainly follow your posts.Please continue.
---arul

Unknown said...

அருள்:

ரிடக்ஸனிசத்தின் அடிப்படைகளை, அதன் இன்றியமையாத தேவையை நான் மறுக்கவேயில்லை. அதே போல் அறிவியல் அறிஞர்களுக்கு பிரித்து பிரித்து உதிறியாகத் தான் பார்க்கத்தெரிகிறது, முழுமையை பார்க்கத் தவறிவிட்டார்கள் போன்ற கருத்துக்களும் நகைப்புக்குறியதே.
அடாமிஸ முறைமையும் சரி, systems approachஉம் சரி, இரண்டுமே முக்கியமானவை. ஆனால் இரண்டிலுமே போதாமைகள் உண்டு. இதை மீறி அல்லது இதை அனைத்தயும் உள்ளடக்கிய புதிய ஆராய்ச்சி முறைமையை நோக்கி நாம் செல்ல முடியுமா? இதுவே எனது கேள்விகளின் அடிப்படை? A search towards a more embrasive, integral research methodology without denying the significance of all other previous methods.

இரண்டு பிரபலமான உளவியல் புஸ்தங்களை எடுத்துக் கொள்ளலாம். ஒன்று இப்பொழுது பிரபலமாக இருக்கும் 'stumbling on happiness' என்ற புத்தகம். போன வருடம் வெளியானது. daniel gilbert என்ற ஹாவர்ட் பேராசிரியர் எழுதியது. மற்றொன்று 'Flow: The psychology of optimal experience' . எழுதியது Mihaly Csikszentmihalyi. சிகாகோ பல்கலைக்கழக பேராசிரியர். 20 வருடங்கள் முன் வெளியானது என்று நினைக்கிறேன்.

இரண்டுமே positive psychology பற்றியது. மகிழ்ச்சி, உவகை குறித்த ஆராய்ச்சி முடிவுகளின் தொகுப்புகள்.
'Stumbling on Happiness' cognitive science, neurobiology, behavioural economics போன்றவைகளை அடிப்படையாகக் கொண்டது. 'Flow' வின் அடிப்படை ஆராய்ச்சி முறை ‘phenomenological model of consiousness' and 'information theory'. ஒன்று ‘exterior dimension'களைக் கொண்டு அளக்க முற்படுகிறது. மற்றோன்று ‘interior dimension'களைக் கொண்டு. both of these two approaches gives important truths about the happiness hypothesis but both have shortfalls as well. could we come up with a methodology which would embrace both of these? That is my fundamental question. but, nowadays such questions are skeptically dismissed because researchers are comfortable with this kind of compartmentalization. i am fine with that as well. but, i am uncomfortable with the gory ideology battles which arises everywhere, both within a particular field as well as in-between different fields, due to this compartmentalized method. somehow,it affects me. and it is precisely for this reason, an integral methodolgy - though it is in a very nascent stage - looks promising to me.

ALso, even I don't have much regard for the concepts like Gaia etc. I think this 'undivided, all-embrasive goodness of nature' is a retro-romantic notion. i do get upset when NewAge tries to elevate nature as divine and dumb down everything which is man -made as Evil. That very quote about Gaia was a response given by Ken Wilber to some eco-philosopher. However, I am equally uncomforable with Dawkins theories about selfishness-hardwired etc.
am hanging somewhere between Locke and Rousseau.

ரவி ஸ்ரீநிவாஸ் said...

அருள் செல்வன்
எனக்கும் இந்த விவாதத்தில் சொல்ல
சில உள்ளன.முடிந்தால் தனியாக
பதிவிடுகிறேன்.ஆனால் அது
பிள்ளையார் பிடிக்க டைனாசர்
ஆகிவிடுமோ என்று பயமாக
இருக்கிறது :)

arulselvan said...

பராகா

சற்று நெரம் கழித்து எழுதுகிறேன்

arulselvan said...

ரவி!
தவிர்க்காமல் எழுதவும். வலைப்பதிய மீண்டு வாருங்கள். நிறைய இருக்கிறது. பராகா போன்றவகள் இவ்வளவு விரிவாக எழுதுவது மகிழ்ச்சியாக இருக்கிரது. என்ன எழுதுவீர்கள் என யூகம் செய்து வைத்திருக்கிறேன். பார்ப்போம்.
ஐயையோ, பிள்ளையாரோஸாரஸ் என்ற ஒரு கண நாயகன் உருவாகிவிடப்போகிறான். :-)
அருள்

ரவி ஸ்ரீநிவாஸ் said...

அருள் செல்வன்
http://ravisrinivas.blogspot.com/2008/06/blog-post_30.html
இதைப் படித்தீர்களா.இல்லை எனில் படித்துவிட்டு உங்கள் கருத்துக்களைத்
தெரிவிக்கவும்

arulselvan said...

ரவி,
சுருக்கமாக இப்போதைக்கு:
பிரமீள் காப்ராவை முன்வைத்து எழுதியதைப் பற்றி முற்பாதியில் எழுதி இருக்கிறீர்கள்.
1. கீழைத்தேய ஆன்மீக மரபும் மெய்யியல் மரபும் மேலை மரபுகளிலும் தனியானவை.
2. முன்பு மேற்கிலும் அறிவியல் மெய்யியலின் ஒரு பகுதிதான். மெய்யியல் சிலநூற்றாண்டுகள் முயற்சியில் மேற்கத்தைய இறையியலில் (தியாலொஜி) இருந்து தனித்துவமானது. பின் அறிவியல் மெய்யியலில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டது. இந்த விடுதலை அறிவியல் தன்னை மிக உறுதியாக யதார்த்தத்தில் நிலை நிறுத்திக்கொள்ள பயன்பட்டது. எம்பிரிஸிஸம் எனும் புலனறித் தன்மையை தனக்காக மீட்டெடுத்ததே அறிவியலின் இம்மாபெரும் எழுச்சிக்கும் பாய்ச்சலுக்கும் காரணம். கடந்த மூன்று நூற்றாண்டுகளில் இது சாத்தியமாகி இருக்கிறது. அறிவியலின் இந்த விடுதலையின் பயனாக சென்ற நூற்றாண்டில் இயல்பியல் காட்டிய வளர்ச்சியை இன்னும் மெய்யியல் உள்வாங்க இயலாமலே இருக்கிறது. இதை விரிவாக்க முடியும். இது கறாராக தன்னையே வளர்த்துக்கொண்டு வந்த மேற்கத்தய மெய்யியலின் போதாமை நிலை. இன்னும் இப்போது நடந்த்துகொண்டிருக்கும் உயிரியல், அறிவு இயல் இவற்றின் வளர்போக்குகளை மேற்கத்திய மெய்யியல் 'பார்த்துக்"கொண்டுதான் இருக்கிறது. பேச இன்னும் சற்றுநாளாகும்.
3. இந்திய மெய்யியல் என்று பார்த்தால் அதில் ஆன்மீகத்தை நீக்கிய மெய்யியல் எனும் தனித்துறையை வளர்க்கத் தேவையான அனத்துச் சிந்தனைகளும் இருக்கின்றன. ஆனால் அவற்றை நாம் வளர்த்து எடுக்கவேண்டும். இற்றைப் படுத்தவேண்டும். அதைவிட்டு இங்கேயும் இருக்கிறது என்பது எந்தவிதமான உறுதியான கருத்தையும் நமக்குத் தருவதில்லை. அது ஒரு அபிப்பிராயம் அவ்வளவுதான்.
4. இந்தியாவில் சித்தர் மரபுகளைப் பற்றி குறிப்பிடுகிறீர்கள். உண்மையில் நானும் மிகவும் தீவிரமாகத் தேடும் ஒரு இழைதான் இது. மேற்கத்தைய அல்கமியிலிருந்து வேதியியல் பிரிந்ததைப் போல நமது நாட்டில் ஏன் ஏற்படவில்லை. அந்த நேரத்தில் சிலநூற்றாண்டுகளுக்கு நம்மை கட்டிப் போட்டது எது? இறையியலில் ஆன்மீகத்தை முன்னிருத்தி வெளிவந்த சங்கரர், ராமானுஜர், மாத்வர் ஆகியோரின் பரந்து பட்ட வெற்றிகரமான சிந்தனைச் செயல்பாடுகளே இந்தத் தடைக்கல்லாக இருக்க முடியுமா?. அவை கருத்துமுதல்வாதத்தில் நம்மை ஆழ ஊன்றச் செய்துவிட்டனவா?. இந்திய அறிவியல் என்று ஒரு பெரும் அறிவுக்கோட்பாடாக வளர்ந்திருக்க வேண்டிய ஒரு இயக்கம் வெறும் artisanship ஆக மாறிய அவலம் நாம் கூர்ந்து ஆராய்ந்து அறியவேண்டிய ஒன்று. நமது உலோகவியல், ஆடையியல், கட்டடவியல் எல்லாம் இப்போது பூம்புகார் போன்ற கலைக்கூடங்களில் பொம்மைகளாக குறுக்கிப் போன கதை அது. சிந்தனையும் செயலும் தனியாகப் பிரிந்ததால் ஏற்பட்ட முடக்கம்.
5. இதையெல்லாம் காப்ராக்களோ, கென் வில்பர்களோ நமக்குக் காட்ட முடியாது. அவர்களால் இந்திய மெய்யியல் எனும் கருத்துமுதல்வாத கட்டமைப்புகளின் ஆழ்ந்த தரிசனங்களை நவீன அறிவியலின் "போல்கள்" என analogical narratives மட்டுமே தரமுடியும். நமது கதையை நாம்தான் எழுத வேண்டும். அதற்குத்தேவை ஒரு முழு தலைமுறைக்கான உழைப்பு. நவீன அறிவியலும், இந்திய மக்களின் வாழ்முறையும், இந்திய மெய்யியலும் அறிந்த, அதேநேரம் இந்திய ஆன்மீகம் வழங்கும் அறிவுச் சுமைதாங்கிகளின் வசதிகளை ஒதுக்கி சிந்திக்கக் கூடிய தலைமுறை ஒன்று வேண்டும் . அது இன்னும் வரவில்லை. அவ்வளவுதான்.
6. மற்றபடி அறிவியலின் அதிகாரத்தை பற்றி என்ன சொல்ல? அனைத்து மனித செயல்பாடுகளையும் நாம் அதிகாரத்துக்கும் அழிவுக்கும் பயன்படுத்தமுடியும். அறிவியல் மட்டும் இதில் புனிதமாக தனியே நிற்கும் என எதிர்பார்ப்பது அறியாமை. நம் காலத்திலேயே (அணுசக்தி யை விடுங்கள், அதெல்லாம் பழசு) கண்முன்னால் நடக்கும் மானுட மரபியல், மருத்துவ இயல், வேளாண்மையியல் சுட்டும் போக்குகளைப் பார்த்தாலே தெரியும். அடுத்த மோதல்கள் இவற்றை முன்னிருத்தித்தான்.
7. பல தளங்களில் பார்க்கவேண்டியது இது. முடிந்தவரை தொடரலாம்.