மூன்று ஜப்பானிய இயல்பியலாளர்கள் இப்பரிசினை இவ்வாண்டு தமக்குள் பங்கிட்டுக்கொள்கிறார்கள்.
அவர்கள்:

1. அமெரிக்காவின் சிகாகோ பல்கலையைச் சார்ந்த யோஇசிரோ நம்பு (Yoichiro Nambu)
2. ட்சுகுபா, ஜப்பானின் உயர்சக்தி துகள்முடுக்கி ஆய்வகத்தைச் சேர்ந்த மகோடோ கொபயாஷி
(Makoto Kobayaashi)

3. கியோதோ பல்கலை, ஜப்பானைச் சார்ந்த தொஷிஹிதே மஸ்காவா (Toshihide Maskawa)

இவர்களுக்கு இப்பரிசினை பெற்றுத்தந்த ஆய்வு இயற்கையில் சீர்மை எப்படி தானாக பிளக்கிறது அல்லது உடைகிறது என்பதைப் பற்றியதாகும். சீர்மை என்பது நாம் எல்லோரும் அன்றாடம் உணர்வதுதான். ஒரு உதாரணமாக கடைகளில் அடுக்கடுக்காய் அடுக்கிவைக்கப் பட்ட ஆரஞ்சுப் பழங்கள், சூரியகாந்திப்பூவில் அழகாய் சீராய் அடுக்கப் பட்டுள்ள விதைகள் என்று நாம் அனுதினமும் காண்பவை சீர்மைக்கு காட்டுகளாக கொள்ளலாம். இத்தகைய சீர்மைகளை கணிதத்தில் குரூப் தியரி எனப்படும் தொகுதிகளை ஆய்ந்து அறிகிறோம். இயல்பியலின் பல சமன்பாடுகளை இத்தகைய தொகுதிகளின் அடிப்படையில் வகைப்படுத்த இயலும். அத்தகைய வகைப்படுத்தப் பட்ட சமன்பாடுகளின் சில மாறிலிகளை (invariants) கணிப்பது மிக அழகானதான ஒரு இயல்பியல் வகைபடுத்தலாகும்.
மேற்கண்ட மூவரும் துகள் இயல்பியலின் அடிப்படைச் சமன்பாடுகளில் இயற்கையாக இத்தகைய சீர்மை எப்படி தானாக முறிக்கின்றன என்பதைப் பற்றியதாகும். விவரமாக அடுத்த பதிவில் எழுதுகிறேன்.
2 comments:
நன்றி,
அறுமையான பதிவு, உங்களுடைய அடுட்த பதிவை ஆவலுடன் எதிர்ப்பார்க்கிரேன்...nobel பரிசு வென்றவர்களுக்கு எமது வாழ்த்துக்கள்.
எனக்கும் துகள் பௌதீகத்தில் அதிக ஆர்வம் உண்டு. உங்கள் அடுத்த கட்டுரையை எதிர்பார்க்கிறேன்.
Post a Comment