நான் கடவுள் படத்தில் வரும் ஓம் சிவோஹம் பாடலைப் பற்றி டுவிட்டரில் அரட்டை அடிக்கும் போது நடுவில் ருத்ரம் வருகிறதா என்ற கேள்வி வந்தது.
வீட்டில் சளி பிடித்து தூக்கம் போட்ட நேரத்தில் புத்தகங்களைக் குடைந்ததில்
கண்டுபிடித்தேன். இருமலோடு பள்ளிக்குப்போகாமல் வீட்டில் இருந்த பையன் ஒலிப்பான்களை சரிப்படுத்தினான்.
வேதத்தில் சிவனின் மந்திரமான 'நம: சிவாய' இங்கேதான் வருகிறது. அந்த வரிவரை கொடுத்திருக்கிறார்கள்.
இந்த வரிகள் பாடலில் 1:51 இல் இருந்து வருகிறது.
(தைத்திரீய சம்ஹிதா 4.5.8)
நமஹ: சோமாய ச ருத்ராய ச
நமஸ் தாம்ராய சார்ணாய ச
நமஹ: ஷங்காய ச பஷுபதயே ச
நம உக்ராய ச பீமாய ச
நமோ அக்ரேவதாய ச தூரெவதாய ச
நமோ ஹந்த்ரே ச ஹனீயசெ ச
நமோ வ்ருக்ஷேப்யோ ஹரிகேஷேப்யோ
நமஸ் தாராய
நமஹ: ஷம்பவெ ச மயோபவே ச
நமஹ: ஷங்கராய ச மயஸ்கராய ச
நமஹ: ஷிவாய ச ஷிவதராய ச
----
முடிந்த அளவு எனது பெயர்ப்பு:
"
சோமா போற்றி ருத்ரா போற்றி
உதிக்கும் தாமிர, உதித்த செஞ்சூரியா போற்றி
வளப்பமும் அறிவும் தருபவனே போற்றி
உக்கிரமும் பயங்கரனு மானவனே போற்றி
அண்டை அயலில் அழிவதை செய்பவனே போற்றி
ஆழிப்பெருக்கில் உயிர் கோர்வனே போற்றி
பசுமைசூழ் மரங்களே போற்றி
கடைதேற்றுபவனே போற்றி
அமைதியின், ஆனந்த ஊற்றே போற்றி
அமைதியை ஆனந்தத்தை ஆக்குபவனே போற்றி
சிவனே போற்றி போற்றி "
(வெளிப்படையான பொருள் தவிர, உள்உறை பொருள் உண்டு என்பது மரபு. தவறு இருந்தால் சுட்டவும்)
-
No comments:
Post a Comment