Friday, September 21, 2012

தமிழில் பாரதம்
          தமிழில் முதலில் வந்த மஹாபாரத மொழிபெயர்ப்பு நூல் பற்றி.
தெருக்களில் நடக்கும்போது  நடைபாதையில் விரித்திருக்கும் பழம்புத்தகங்களை ஓரக்கண்ணால் மேய்ந்துகொண்டே நடக்கும் பருவம் அப்போது.  நடக்கவும், நடைபாதை புத்தகங்களை கண்டெடுக்கவும்  பெங்களூர் என்றுமே தோதான ஊர். அப்படி சுற்றிக்கொண்டிருக்கும்போது ஒருநாள் கண்டெடுத்ததுதான் இந்த நூல்.


-----------------------------------------------
ஸ்ரீ மஹாபாரதம்

.சல்ய ஸௌப்திக ஸ்த்ரீபர்வங்கள்.


திரிசிரபுரம்
ஸெண்ட் ஜோசப் காலேஜ் ஸமஸ்கிருத தலைமைப் பண்டிதர், மஹாவித்வான், ஸாரஸ்வதஸாரஜ்ஞர், கவிசிகாமணி,
ஸ்ரீ. உ.வே. T.V. ஸ்ரீநிவாஸாசார்யர் அவர்களால் மொழிபெயர்க்கப்பெற்று,

கும்பகோணம் காலேஜ் ரிடையர்ட் தமிழ்ப்பண்டிதர்
ம்.வீ.இராமானுஜாசாரியரால் பதிப்பிக்கப்பெற்றன.

சென்னை: கமர்ஷியல் பிரஸ்
விலை. ரூபா: ங-0-0: தபால்சார்ஜ் வேறு
1923

-------------------------------------------------------------------


------------------------------------------------------------
ஆனால் இட்லிவடை பதிவில் மொழிபெயர்த்தது ம.வீ. இராமானுஜாசாரியார் என்கிறது.
என்னிடமுள்ள  1923ம் வருட இப்பதிப்போ மொழிபெயர்த்தவர் உ.வே.T.V. ஸ்ரீநிவாஸாசார்யர்  பதிப்பித்ததுதான் இராமானுஜாசாரியார் என்கிறது. என்ன  ஒரு குழப்பம்.
(பீஷ்ம பர்வம் முதல் ஸ்த்ரீ பர்வம் வரை ஆறு பர்வங்களை ஸ்ரீநிவாஸாசார்யார் மொழிபெயர்த்தார் என்று  இராமானுஜாசாரியார் முகவுரையில் கூறியுள்ளார்)


Monday, March 26, 2012

கூடங்குளம்: அரசும்,மக்களும்  முதலிலேயே ஒன்று சொல்லவேண்டும். நான் அணு உலைக்கு எதிரான நிலைப்பாட்டில்  இல்லை. தற்போதைய மனிதநலம், தொடர்ந்த அணுத்துறை ஆராய்ச்சியிலும் அணு உலை நுட்பத்தை இன்னும் சீராக்குவதிலும் தான் உள்ளது என்றே  நம்புகிறேன். அதற்கான காரணங்கள் எனக்கு உள்ளன. அதைப்பற்றியல்லாமல் இப்போது எழுதுவது இன்னும் பரந்த பார்வையில். ஒரு அரசின் கடமை, அறிவியலின் பயன்பாடு, மக்கள் ஜனநாயக உரிமை பற்றியது.

    கூடங்குளம் போராட்டப் பிரச்சினை உடனே முடிவடையும் போல் இல்லை. அரசுத் தரப்பில் உலையைத் துவங்க அனைத்து முயற்சிகளும் துவங்கி விட்டன. இனிமேல்  அந்த உலையை செயல் நிறுத்தம் செய்வது அல்லது மூடுவது என்ற பேச்சுக்கே இடம் இல்லை என்றே சொல்லவேண்டும். ஆனால் மக்கள் போராட்டமோ தொடர்கிறது. இத்தருணத்தில் சில அப்பட்டமான முகத்திலறையும் நிதரிசனங்களை நாம் உணரவேண்டும்.

1. கூடங்குளம் போராட்டம் போன்ற அமைதியான, சீரான, உறுதியான மக்கள் போராட்டத்தை கணிக்கவோ அதை அணுகவோ போராடும் மக்களைத் தவிர நாட்டில்  பிறர்க்கு ஒரு தேவையோ, நிர்பந்தமோ இல்லை. அந்தப்போராட்டத்தைப் புரிந்து கொள்ள முயற்சியைக்கூட பிற மக்கள் எடுக்க முன் வரவில்லை. இது எந்தப்போராட்டத்தையும் எல்லை சுருங்கிய ஒரு இடம்சார்  போராட்டமாகவே நம் நாட்டில்  மக்கள் காண்கிறார்கள் என்பதைத் தெளிவாக்குகிறது. நாடு தழுவிய பார்வை, 'நாட்டின்  நலன்  கருதி' என்றெல்லாம் நடுவண் அரசு சொல்லி எதைவேண்டுமானாலும் செய்யலாம், நாட்டில் பிற மக்கள் பெரும்பான்மையாக அதை அப்படியே ஏற்றுக்கொள்வார்கள். தேசியப் பார்வை என்று ஒன்று ஜனநாயக முறையில் எழுவதற்கான சாத்தியக்கூறே இங்கு கிடையாது என்றே இதைப் பார்க்கும்போது தெரிகின்றது.

2. மாநிலத்தைப் பொறுத்தவரை பெருகிவரும்  மின்தேவையும் முடக்கிப்போட்ட மின்வெட்டும்  பெரும்பான்மை மக்களை 'ஏதாவது' செய்து  இச்சூழ்நிலையை பொருத்துக்கொள்ளுமளவு ஆக்கும்படி மாநில அரசைக் கோருவதாகவே  உள்ளது. இந்த ஏதாவதில் அணுமின்நிலைய தொடக்கமும் செயல்பாடும் ஒரு வழியாகவே காணப்படும். தமிழக மக்கள் பொதுவாக உலையைத் திறப்பதிலும் அதிலிருந்து உடனடியாக மின்சாரம் பெறுவதிலுமே எதிர்ப்பார்ப்பை வைத்திருக்கிறார்கள்.

3. இப்படி மாநில அளவிலும், தேசிய அளவிலும் மக்களிடம் ஒரு விவாதப்போராட்டத்தைக்கூடத் துவக்க இயலாத ஒரு நிலைப்பாடாகவே அணு உலை எதிர்ப்பாளர்களின் நிலை உள்ளது. உலகம் முழுமையும் அணு உலைகளை மக்களும் அரசுகளும் மூடிக்கொண்டிருக்கையில் நாம் விரைவில்  துவக்கப்போகும் ஒன்றின் சாதக பாதகங்களைக்கூட பரந்துபட்ட அளவில் விவாதிக்காமல் இருப்பது அனைவருக்கும்   அவமானகரமானதாகும். இன்னும் எத்தனை உலைகளை அரசு அறிவிக்கும்? எங்கெல்லாம், எப்பொழுது என்ற அடுத்த 10,20 ஆண்டுகளுக்கான திட்டம் மக்கள் முன் வைக்கப்பட்டு விவாதத்துக்குள்ளாக வேண்டும். ஆனால் அதைப்போன்ற ஒரு செயல் திட்டத்தை நடுவண் அரசிடமிருந்தோ, அணுசக்திக் கமிஷனிடமிருந்தோ  பெறுவதற்கான வழிமுறைகளும் இல்லை. கொடுக்கும் தீர்மானத்துடன் அவர்களும் இல்லை.

4. மிகவேகமாக வளர்ந்து வரும் நாட்டின் பொருளாதாரப் பாய்ச்சல் இனி  வரும் ஆண்டுகளில் மிகப் பாரிய அளவிலான அதிரடி மாற்றங்களை வாழ்வியல்,தொழில்,சமூக,கலாச்சாரப் புலங்களில் பெரும் வீச்சாக  நிகழ்த்தப் போகிறது. அதை உள்வாங்கி ஏற்பதற்கான ஜனநாயக செயல்பாட்டு முறைகளையும் அவற்றை வலுப்படுத்தும் சட்ட வரைவுகளையும் நாம் இன்னும் பேசவே துவங்கவில்லை. எல்லாப்போராட்டங்களும் கூடங்குளம் போல அமைதியான போராட்டங்களாக அமையும் வாய்ப்பு குறைவு. மக்களிடம் தொடர்ந்து அரசுகள் உரையாடல் செய்வதன் மூலமும், தேவையான, போதுமான தெளிவான தரவுகளை அளிப்பதன் மூலமுமே மக்களின் பிரதிநிதிகளையும் பிற செயலார்வலர்களையும் ஊக்கம் கொடுத்து மக்களை அமைதியாக வழிநடத்தச் செய்ய முடியும். சிங்கூர் போன்ற வன்முறைக் களங்களையும் தவிர்க்க முடியும்.

5. கூடங்குளத்திலேயே இன்னும் விரிவான தரவுகளை அரசு மக்களிடம் சேர்ப்பிக்கவில்லை என்றே தெரிகிறது. அரசின் பல இலாக்காக் குழு ஒன்று போராடும் மக்களைச் சந்தித்து அவர்களின் அனைத்து ஐயங்களையும் போக்கச் செய்யும் கடமை அரசுக்கு உண்டு. ஆனால் அதைச்செய்ய நடுவண் அரசே முழுத்தகுதியானது. அதைச் செய்ய ஏன் தயக்கம் என்று புரியவில்லை.

6. அணு உலைகளில் முழுப்பாதுகாப்பு என்றெல்லாம் கிடையாது. இது எந்தப் பொறியியல் தொழில்நுட்ப வேலைக்கும் பொருந்தும். விபத்துகள் நடக்கத்தான் செய்யும். விபத்தே இல்லாத முழுவதும் பாதுகாப்பான பொறியியல் வடிவமைப்பு என்று ஒன்றும் இல்லை. இதை மக்களும் உணரவேண்டும். அரசும் உணர்த்தவேண்டும். இருக்கும் வடிவமைப்பு எப்படி அனைத்துப் பாதுகாப்பு அம்சங்களையும் அகத்தே கொண்டுள்ளது என்பதே மக்களுக்குத் தெரியப்படுத்த வேண்டியது. இதில் என்ன  பிரச்சினை  என்றே தெரியவில்லை.

7. இந்தச்சூழ்நிலையில் இறுதிவரை உண்ணாவிரதப் போராட்டம் என்பது எந்த அளவில் பயன் தருவது என்பது சந்தேகமானது. அதற்கு பதிலாக மாற்றுக்குடியேற்ற வழிமுறைகள், விபத்து பாதிப்பிற்கான நஷ்டஈடு, உலை இயக்க நடைமுறையில் வெளிப்படையான அணுகுமுறைக்கான சட்டகங்கள் போன்ற சட்ட ரீதியான கோரிக்கைகளை முன்நிலைப்படுத்துவது இப்போது விவேகமான செயல்பாடாக இருக்கும். உலை இயக்கம் தவிர்க்க இயலாதது என்றே நான் கருதுகிறேன். அதை முன்வைத்தே என் கருத்துகளைச் சொல்கிறேன்.Wednesday, February 15, 2012

இரண்டு


முந்தைய [அறி|புனை] பதிவிலிருந்து :


ஒன்று
இரண்டு டிசம்பர்,2005
Thursday, February 02, 2012

பையப்பனஹள்ளி மெட்றோ

பையப்பனஹள்ளி மெட்றோ

      எழுத்துகளுடன் என் முன் வந்து நிற்காதே
    அவற்றின் பழமைச்சுவாசம் நம்மை ஏளனம் செய்கிறது-