தமிழில் முதலில் வந்த மஹாபாரத மொழிபெயர்ப்பு நூல் பற்றி.
தெருக்களில் நடக்கும்போது நடைபாதையில் விரித்திருக்கும் பழம்புத்தகங்களை ஓரக்கண்ணால் மேய்ந்துகொண்டே நடக்கும் பருவம் அப்போது. நடக்கவும், நடைபாதை புத்தகங்களை கண்டெடுக்கவும் பெங்களூர் என்றுமே தோதான ஊர். அப்படி சுற்றிக்கொண்டிருக்கும்போது ஒருநாள் கண்டெடுத்ததுதான் இந்த நூல்.
-----------------------------------------------
ஸ்ரீ மஹாபாரதம்
.சல்ய ஸௌப்திக ஸ்த்ரீபர்வங்கள்.
திரிசிரபுரம்
ஸெண்ட் ஜோசப் காலேஜ் ஸமஸ்கிருத தலைமைப் பண்டிதர், மஹாவித்வான், ஸாரஸ்வதஸாரஜ்ஞர், கவிசிகாமணி,
ஸ்ரீ. உ.வே. T.V. ஸ்ரீநிவாஸாசார்யர் அவர்களால் மொழிபெயர்க்கப்பெற்று,
கும்பகோணம் காலேஜ் ரிடையர்ட் தமிழ்ப்பண்டிதர்
ம்.வீ.இராமானுஜாசாரியரால் பதிப்பிக்கப்பெற்றன.
சென்னை: கமர்ஷியல் பிரஸ்
விலை. ரூபா: ங-0-0: தபால்சார்ஜ் வேறு
1923
-------------------------------------------------------------------
ஆனால் இட்லிவடை பதிவில் மொழிபெயர்த்தது ம.வீ. இராமானுஜாசாரியார் என்கிறது.
என்னிடமுள்ள 1923ம் வருட இப்பதிப்போ மொழிபெயர்த்தவர் உ.வே.T.V. ஸ்ரீநிவாஸாசார்யர் பதிப்பித்ததுதான் இராமானுஜாசாரியார் என்கிறது. என்ன ஒரு குழப்பம்.
(பீஷ்ம பர்வம் முதல் ஸ்த்ரீ பர்வம் வரை ஆறு பர்வங்களை ஸ்ரீநிவாஸாசார்யார் மொழிபெயர்த்தார் என்று இராமானுஜாசாரியார் முகவுரையில் கூறியுள்ளார்)
1 comment:
Idlyvadai has added additional names in its update.
Post a Comment